நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நல்லறிவை போதிக்கும் குருநாதர்களை நாயன்மார்கள், ஆழ்வார்கள், சித்தர்கள் என சொல்கிறோம் எல்லா நாளும் இனிய நாளாக அமைய இப்பாடலை பாடுவோம்.
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவின் திருவுரு சிந்தித்தல் தானே.
பூழியர்கோன் வெப்பொழித்த
புகலியர்கோன் கழல் போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பின் அணைந்த பிரானடி போற்றி
வாழிதிரு நாவலுார் வன் தொண்டர்பதம் போற்றி
ஊழிமலி திருவாதவூர் திருத்தாள் போற்றி.