ADDED : ஆக 03, 2012 03:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'அவன் ரொம்ப திமிர் பிடிச்சவன்' என்று கோபத்தில் திட்டுவதுண்டு. திமிருக்கான காரணத்தை புரிந்து கொண்டால் அது நம்மை விட்டுக் காணாமல் போய்விடும். கண்ணை இருள் மறைப்பது போல, அறிவை மறைப்பது ஆணவம். இதனை பேச்சுவழக்கில்,'திமிர்' என்பர். இதற்கு 'இருள்' என்றும் பொருளுண்டு. யாரிடம் 'நான்' என்னும் எண்ணம் வளர்கிறதோ, அவரிடம் ஆணவம் இருக்கும். இருள் இருக்குமிடத்தில் அருள் இருப்பதில்லை. ஆணவம் வளர வளர கடவுள் நம்மை விட்டு விலகிவிடுவார் என்பதை உணர்வது அவசியம்.

