ADDED : அக் 19, 2009 04:34 PM

* தியானம் செய்வதாக சொல்லிக் கொண்டு பலர் வெறுமனே கண்ணை மூடிக் கொண்டு அமர்ந்திருக்கின்றனர். மனதைப் பலவிதமான எண்ணங்களில் செலுத்துகின்றனர். இப்படிப்பட்ட தியானம் எவ்வித பலனையும் தராது என்பதை உணருங்கள்.

* தியானம் என்பது நாம் செய்யும் எல்லாப் பணிகளிலுமே தேவை. தியானம் செய்ய முடியவில்லையே, வழிபாடு செய்ய முடியவில்லையே என்று வருந்தாதீர்கள். செய்யும் ஒவ்வொரு செயலையும் கடவுளுக்கு செய்யும் வழிபாடாகக் கருதுங்கள்.
* நம்முடைய தேசத்தின் பெருமையே அதன் சிறப்பான நாகரிகத்திலும், கலாச்சாரத்திலும் தான் அடங்கி இருக்கிறது. உடை என்பது நம் அங்கலட்சணத்தை மட்டுமல்ல, நம் மதிப்பை காட்டும் அடையாளமாகவும் இருக்கிறது. நாகரீகம் என்ற பெயரில் கண்ட கண்ட உடைகளை <உடுத்தக்கூடாது. எளிய ஆடைகளையே அணியுங்கள்.
* நான் ஒரு கருவியாக இருக்கிறேன். தெய்வம் என் மூலமாகப் பணியைச் செய்கிறது. உயிரையும், உள்ளத்தையும், உடலையும் இயக்குவது கடவுளே என்று நம்புங்கள். இப்படி நம்புபவர்கள், ஆனந்தமயமாக இருக்கும் கடவுளைப் போல எப்போதும் ஆனந்தமாக இருப்பார்கள்.
-சாய்பாபா