ADDED : ஏப் 29, 2014 12:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பகைவர்கள் நமக்கு வெளியில் இல்லை. பலவீனமான எண்ணங்களே நம் உண்மையான எதிரிகள்.
* அன்றாடப் பணிகளில் அர்ப்பணிப்பு உணர்வோடு ஈடுபடுங்கள். அதுவே சிறந்த தியானம்.
* மனம் எப்போதும் அமைதியில் லயிக்கட்டும். வலிமை, ஞானம், மகிழ்ச்சி அனைத்தும் அந்த அமைதியில் இருந்து வெளிப்படும்.
* பனையளவு பாவம் செய்தவனும், தினையளவு நன்மை செய்தால் கடவுளின் அன்புக்கு பாத்திரமாகி விடலாம்.
- அரவிந்தர்