
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* வீட்டைத் தேர்வு செய்யும்முன் உனது அண்டை வீட்டுக்காரனைத் தேர்வு செய்
* நண்பர்களின்றி வாழலாம். ஆனால் அண்டை வீட்டினர் இல்லாமல் வாழமுடியாது.
இந்தப் பழமொழிகள் எதை உணர்த்துகின்றன? மனிதனுக்கு உலகில் கிட்டும் வளங்களில் நல்ல அண்டை வீட்டினரும் ஒன்று. நற்பேறு பெற்றவர் என்பதற்கு மூன்று அடையாளங்கள் உள்ளன.
1. விசாலமான வீடு
2. நல்ல அண்டை வீட்டினர்
3. ஏற்றமிகு வாகனம்

