நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளம் தலைமுறையினர் பெற்றோரை அலட்சியப்படுத்துகின்றனர். அதிலும் சிலர் பெற்றோரை முதுமையில் பாதுகாப்பதால் பலன் ஏதுமில்லை எனக் கருதுகிறார்கள். இது தவறான விஷயம். பெற்றோரை அக்கறையுடன் பாதுகாப்போருக்கு சுவனம் காத்திருக்கிறது.
'பெற்றோருக்கு நன்றியுடன் இருங்கள் என இறைவன் கட்டளையிட்டிருக்கிறான். அவர்கள் முதுமை அடைந்த காலத்தில் அவர்களை அச்சுறுத்தவோ, நிந்திக்கவோ கூடாது. அவர்களிடம் எதைப் பேசினாலும் தலை தாழ்த்தி மதிப்புடனும் அன்புடனும் பேசுங்கள்' என்கிறது குர்ஆன்.