
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இறைவனிடம் தேவையைச் சொல்லி பிரார்த்தனை செய்தால் பலன் கிடைக்கும். கிடைக்காவிட்டாலும் மரணத்திற்கு பின் மறுமை நாளன்று அதன் பலன் கிடைக்கும். அதனால் பிரார்த்தனை நிறைவேறாவிட்டால் வருந்தாதீர்கள். ஏதோ ஒரு நன்மைக்காகத் தான் கேட்டது கிடைக்கவில்லை.
'ஒன்றை நீங்கள் வெறுக்கலாம்; அது உங்களுக்கு நன்மையானதாக இருக்கும். ஒன்றை நீங்கள் விரும்பலாம்; அது உங்களுக்கு கெட்டதாக இருக்கும். அதனால் இறைவன் கொடுப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்'
என்றும், 'அடியார்களின் அருகில் நான் இருக்கிறேன்; பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு பலன் கிடைக்காமல் போகாது. என்னை நம்புபவர் நேர்வழியில் செல்வார்கள்' என்கிறது குர்ஆன்.