sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 13, 2026 ,மாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

/

09

முந்தைய பதிப்புகள்

இன்றுநேற்று
இன்றுநேற்று

To type in English

 (or) 

Press CTRL+G 

To type in English

மொத்த செய்திகள்: 1027

பாகிஸ்தானுக்கு அடுத்தகட்ட பதிலடி பற்றி ஆலோசனை | India - Pakistan conflict | PM Modi chairs meeting

வீடியோ: பொது

09-May-2025

அசுவினி; குருபார்வையால் நன்மை.. செவ்வாய், கேது அம்சத்தில் பிறந்து நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, மே 11 முதல் உங்கள் ராசிக்கு 3ம் இடமான மிதுனத்தில் சஞ்சரிக்கிறார். ஜூன் 6ல் மிதுனத்தில் அஸ்தமனம் அடைந்து ஜூலை 6ல் உதயம் ஆகிறார். அக்.8ல் அதிசாரமாக கடகத்திற்கு செல்பவர் நவ.18ல் கடகத்தில் வக்ரமாகி, வக்ர கதியிலேயே டிச.21ல் மிதுனத்திற்கு வந்து 2026, மார்ச் 17ல் வக்ர நிவர்த்தியடைபவர், மே 26ல் கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார்.கிரகங்களில் குரு பகவான் வக்ரமடையும்போது அவர் முன்பிருந்த ராசியின் பலன்களையே ஜாதகருக்கு வழங்குபவர் என்பதால், கடகத்திற்கு அதிசாரமாக செல்லும் 40 நாட்களில் வக்ரமடைவதால் அதன்பிறகு 3 ம் இடத்தின் பலன்களையே வழங்குவார். இக்காலத்தில் ஒவ்வொரு வேலைக்கும் அதிகபட்ச முயற்சி மேற்கோள்ள வேண்டியதாக இருக்கும். வருமானத்திலும் பின்னடைவு ஏற்படும். வேலைப்பளு கூடும்.பார்வை பலன்குரு சஞ்சாரம் எதிர்மறையாக இருந்தாலும், குரு பார்வை இக்காலத்தில் உங்களுக்கு சாதகமான பலன்களை உண்டாக்கும். குரு பார்க்க கோடி புண்ணியம் என்ற வார்த்தையை இக்காலத்தில் உணர்வீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். சொத்து, சுகம் என்ற நிலை உண்டாகும். வேலைக்காக முயற்சித்து வந்தவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். தொழிலில் வருமானம் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும். நெருக்கடிகள் விலகும்.சனி சஞ்சாரம்2026 மார்ச் 6 வரை, லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் உயரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். மார்ச் 6 முதல் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் செலவு அதிகரிக்கும். வருவாயில் தடை உண்டாகும். உடல்பாதிப்பும் மருத்துவச் செலவும் ஏற்படும்.ராகு, கேது சஞ்சாரம்லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் வருமானம் உயரும்.  தொழிலில் லாபம் அடையும். புதிய சொத்து சேரும். பணப்புழக்கம் இருக்கும் என்றாலும், 5ம் இட கேதுவால் உறவுகளுடன் பகை, பிள்ளைகளால் நெருக்கடி, பூர்வீக சொத்தில் பிரச்னை என்ற நிலை உண்டாகும்.சூரிய சஞ்சாரம்ஜூன் 15 – ஜூலை 16, செப்.17 – அக்.17, 2026, ஜன.15 – மார்ச் 14 காலங்களில் சூரியன் 3,6,10,11ம் இடங்களில் சஞ்சரிப்பதால் தடைபட்ட வேலைகள் நடந்தேறும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். வழக்கு சாதகமாகும். தொழில் முன்னேற்றம் பெறும்.  புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். அரசு வழி வேலைகள் சாதகமாகும். வருமானம் உயரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும்.செவ்வாய் சஞ்சாரம்ஜூலை 30 – செப்.14, 2026, பிப்.21 – ஏப்.1 காலங்களில் செவ்வாய் 6,11 ம் இடங்களில் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களில் வேகம் இருக்கும். எடுத்த வேலைகளை முடிக்க முடியும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட போட்டி, எதிர்ப்பு விலகும். எதிரிகள் உங்களிடம் சரண் அடைவர். வருமானம் அதிகரிக்கும். இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும்.பொதுப்பலன்குருவின் பார்வைகள், லாப ஸ்தான ராகு, சூரியன் 120 நாட்கள், செவ்வாய் 85 நாட்கள் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். தொழில், குடும்பம், வேலை என்று அனைத்திலும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். எடுத்த வேலைகளை வெற்றியாக்குவர். செல்வாக்கை உயர்த்துவர்.தொழில்தொழிலில் இருந்த தடை விலகும். வருமானம் அதிகரிக்கும். சிலர் வெளியூரிலும் தங்கள் வியாபாரத்தை விரிவு செய்வர். போட்டியாளர்கள் பலம் இழப்பர். வாடகை, லீஸ் இடங்களில் தொழில் செய்தவர்கள் அந்த இடத்தை சொந்தமாக வாங்கும் அளவிற்கு முன்னேறுவர்.பணியாளர்கள்கடந்த கால நெருக்கடிகள் விலகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பொறுப்பும், சலுகைகளும் கிடைக்கும். பணியாளர்களுக்கு மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். வேலையில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.பெண்கள்குருபார்வையால் நீண்டநாள் கனவு நனவாகும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணம் நடக்கும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மறுமணம் நடக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னை இல்லாமல் போகும். வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். எந்த ஒன்றிலும் தனித்து நின்று சாதிக்க முடியும். கணவரின் ஆதரவு பலம் தரும்.கல்விபடிப்பில் ஏற்பட்ட தடைகள் விலகும். ஆசிரியர்கள் ஆலோசனை நன்மை தரும். மேற்படிப்பிற்காக மேற்கோள்ளும் முயற்சி வெற்றியாகும். சிலர் வெளிநாட்டிற்கு செல்வர்.  உடல்நிலை2026 மார்ச் 6 வரை சனியின் பார்வை உங்கள் ராசியிலும், அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் உடல்நிலையில் கவனமாக இருப்பது அவசியம். ஒன்றுவிட்டு ஒன்று என ஏதாவது பாதிப்பு உண்டாகும். மருத்துவச் செலவு ஏற்படும்.குடும்பம்குடும்பத்தில் இருந்த பிரச்னை, நெருக்கடிகள் இருந்த இடம் தெரியாமல் போகும். தம்பதிகளுக்குள் இணக்கம் உண்டாகும். வீடு, வாகனம்  வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்.பரிகாரம்; கற்பக விநாயகரை வழிபட நினைத்த வேலைகள் நடந்தேறும்.பரணி: தொழிலில் முன்னேற்றம்..; செவ்வாயை ராசி அதிபதியாகவும், சுக்கிரனை நட்சத்திர அதிபதியாகவும் கொண்ட உங்களுக்கு, மறைவு ஸ்தானமான 3ம் இடத்தில் மே11 முதல் மங்கள காரகனான குரு பகவான் சஞ்சரித்து 2026 மே 26ல் கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார்.மிதுனத்தில் சஞ்சரிக்கும் குரு, அஸ்தமனம், அதிசாரம், வக்ரம் என்ற நிலைக்கு ஆளாவதால் அவர் வழங்கும் பலன்களில் மாற்றங்கள் இருக்கும். ஜூன் 6 முதல் ஜூலை 6 வரை அவர் அஸ்தமனம் ஆவதால் சஞ்சாரப் பலனையே அவரால் வழங்க முடியாமல் போகும். அக். 8 முதல் நவ. 18 வரை கடகத்தில் நேர்கதியில் சஞ்சரிப்பதால் அந்த 40 நாட்களும் அந்த ஸ்தானத்திற்குரிய பலன்களை வழங்குவார்.மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, பார்த்து வரும் வேலையில் போராட்டம், செய்து வரும் தொழிலில் நெருக்கடி, நட்பு வட்டத்தில் விரிசல், உறவுகளுடன் பகை, வருமானத்தில் தடை என்ற நிலைகளை உண்டாக்குவார். கடக குரு, உழைப்பை அதிகரிப்பார், வருமானத்திற்காக அலைச்சலை ஏற்படுத்துவார். உடல்நிலையில் பாதிப்பை உண்டாக்குவார்.பார்வைகளின் பலன்குரு சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக இல்லை என்றாலும், அவருடைய பார்வைகள் உங்களை நிமிர வைக்கும். நினைத்ததை சாதிக்க வைக்கும். செய்து வரும் தொழிலை வளர்ச்சியாக்கும்.  உடல்நிலையை சீராக்கும். அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். கூட்டுத் தொழிலில் லாபம் காண வைக்கும். திருமண வயதினரை மணமேடை ஏற வைக்கும். பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்பை அளிக்கும். விவசாயிகளுக்கு நன்மையை உண்டாக்கும். சொத்து, சுகம், வசதி, வாய்ப்பு என்று வாழ வைக்கும்.சனி சஞ்சாரம்2026 மார்ச் 6 வரை சனி பகவான் லாப ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் முடங்கிக் கிடந்த தொழில் முன்னேற்றம் பெறும். மூடி வைத்த தொழிற் கூடங்கள் இயங்க ஆரம்பிக்கும். வருமானம் உயரும். புதிய தொழில் முயற்சி வெற்றியாகும். மார்ச் 6 முதல் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் அதுவரை இருந்த நிம்மதியான நிலை மாறும். வரவை விட செலவு அதிகரிக்கும். நேரத்திற்கு உணவு, உறக்கம் என்பது இல்லாமல் போகும். பிறரைப் போல் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் வீடு, வாகனம், நவீன பொருளுக்காக கடன்படுவீர்கள். அதை அடைப்பதற்காக நிறைய சிரமப் படுவீர்கள். உடல்நிலையிலும் பாதிப்பு ஏற்படும். மருத்துவச் செலவு உண்டாகும். வருமானத்தில் தடை ஏற்படும். ராகு, கேது சஞ்சாரம்லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு எல்லா நிலையிலும் உங்களைப் பாதுகாப்பார். உங்கள் ஆசைகளை நிறைவேற்றுவார். செலவிற்கேற்ற வருமானத்தை வழங்கி சந்தோஷமாக வாழ வைப்பார். தொழில், வியாபாரத்தை முன்னேற்றுவார். சொத்து, சுகம் என மகிழ்ச்சிப் படுத்துவார். ஆனாலும் 5 ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேது குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்குவார். பிள்ளைகளால் சங்கடத்தை ஏற்படுத்துவார். மனதில் காதலை உண்டாக்குவார். பூர்வீக சொத்தில் வம்பு, வழக்கு என்ற நிலையை ஏற்படுத்துவார்.சூரிய சஞ்சாரம்ஜூன் 15 – ஜூலை 16, செப்.17 – அக்.17, 2026, ஜன.15 – மார்ச் 14 காலங்களில் சூரியன் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிப்பதால், இக்காலங்கள் உங்களுக்கு யோக காலமாகும். மற்றவரால் முடியாத வேலைகளையும் நீங்கள் செய்து முடிப்பீர்கள். எந்த வித பிரச்னைகள் எதிர் வந்தாலும் அவற்றையெல்லாம் இல்லாமல் செய்வீர்கள். செல்வாக்கு உயரும். உடல்நிலை சீராகும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர். அரசுவழி முயற்சிகள் சாதகமாகும். எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். எதிர்பார்த்த வேலை கிடைக்கும். வருமானம் உயரும்.செவ்வாய் சஞ்சாரம்ஜூலை 30 – செப்.14, 2026, பிப்.21 – ஏப்.1 காலங்களில் 6,11 ம் இடங்களில் சஞ்சரிப்பதால் நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிப்பீர்கள். எடுத்த வேலைகளை முடித்து விட்டுதான் அடுத்த வேலையில் ஈடுபடுவீர்கள். அந்த அளவிற்கு உங்களிடம் ஆற்றல் இருக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். தொழிலில் வருமானம் அதிகரிக்கும். வங்கியில் கேட்ட கடன் கிடைக்கும். இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும்.பொதுப்பலன்உங்கள் வாழ்க்கையில் இக்காலம் யோகமான காலமாகும். நீண்டநாள் கனவு நனவாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். குடும்பம், தொழில், வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். கலைஞர்களுக்கு புதிய பாதை தெரியும். முயற்சிக்கேற்ற ஆதாயம் உண்டாகும்.தொழில்தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். நவீன இயந்திரங்கள் வாங்குவீர்கள். பணியாளர்களும் உதவியாக இருப்பர். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். தொழிற்கூடங்கள், வாகன உற்பத்தி விற்பனை, ஸ்பேர் பார்ட்ஸ், டிரான்ஸ்போர்ட், டிராவல்ஸ், ஏற்றுமதி இறக்குமதி, ஆன்லைன் வர்த்தகம், சின்னத்திரை துறையினர் வளர்ச்சி காண்பர். பணியாளர்கள்ராகு, சனி சாதகமாக சஞ்சரிப்பதால் உழைப்பாளர்களின் நிலை உயரும். சிலருக்கு பெரிய நிறுவனங்களின் வாய்ப்பு கதவைத் தட்டும். திறமைக்கு மரியாதை உண்டாகும். புதிய பொறுப்பும், சலுகைகளும் கிடைக்கும்.  பணியாளர்களுக்கு மெமோ, வழக்கு என்ற நிலைகள் முடிவிற்கு வரும். தடைபட்ட பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும்.பெண்கள்கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட இடைவெளி விலகும். வேலையின் காரணமாக பிரிந்தவர்கள் இப்போது ஒன்று சேர்வர். உடல்நிலை சீராகும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் அமையும். குடும்பத்தினரின் ஆதரவு கூடும். படிப்பு, வேலை என்ற கனவு நனவாகும்.கல்விதிறமை வெளிப்படும். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைத்து முதல் இடத்திற்கு வருவீர்கள். உயர் கல்விக் கனவு நனவாகும். சிலர் மேற்கல்விக்காக கடல் கடந்து வெளிநாட்டுக்குச் செல்வர். உடல்நிலைஇக்காலத்தில்  உடல்நிலையில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். சிலர் விபத்தையும் சந்திக்க  நேரும் என்பதால் உடல்நிலையில் கவனமாக இருப்பது அவசியம். உணவிலும் கட்டுப்பாடு அவசியம்.குடும்பம்குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவுகள் ஆச்சரியப்படும் வகையில் முன்னேறுவீர்கள். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். சிலர், வசிக்கும் வீட்டை உங்கள் வசதிக்கேற்ப புதுப்பிப்பர். தம்பதிக்குள் புரிதல் உண்டாகும். பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள். பரிகாரம்: துர்கையை வழிபட நன்மை பன்மடங்கு அதிகரிக்கும். கார்த்திகை.. நல்ல நேரம் வந்தாச்சு; ஆத்ம காரகனான சூரியனை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும், 1ம் பாதமான மேஷத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசி நாதனாகவும், 2,3,4 ம் பாதங்களான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர்.கார்த்திகை 1ம் பாதத்தினருக்கு, மே 11 முதல் 3ம் வீட்டில் சஞ்சரித்து முயற்சியில் தடை,  வாழ்க்கையில் நெருக்கடி, தனித்து நிற்க வேண்டிய நிலையை உண்டாக்குவார் குருபகவான். 2,3,4 ம் பாதத்தினருக்கு 2ம் வீட்டில் குடும்ப குருவாக சஞ்சரித்து பண வரவையும், குடும்பத்தில் முன்னேற்றத்தையும், தொழில், வேலையில் ஏற்றத்தையும் தருவார்.பார்வைகளின் பலன்குருவின் சஞ்சார நிலையை விட அவர் பார்க்கும் இடங்கள் பலம் பெறும் என்பது பொது விதி. 1 ம் பாதத்தினருக்கு, குருவின் பார்வை 7,9,11 ம் இடங்களுக்கு உண்டாவதால் உங்களுடைய நீண்டநாள் கனவுகள் நனவாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். செல்வாக்கு உயரும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். சொந்த வீடு, வாகனம் அமையும், வருமானம் அதிகரிக்கும். சங்கடங்கள் விலகும். 2,3,4 ம் பாதத்தினருக்கு, 6,8,10 ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால் நோய்கள் தீரும். உடல்நிலை சீராகும், எதிர்ப்பு இல்லாமல் போகும், வழக்கு சாதகமாகும். செல்வாக்கு உயரும், மனதில் இருந்த பயம் விலகும். தொழில் முன்னேற்றம் பெறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும்.சனி சஞ்சாரம்1ம் பாதத்தினருக்கு, 2026 மார்ச் 6 வரை லாப சனியால் வருமானம் அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். மார்ச்6 முதல் விரயச் சனியால் வரவை விட செலவு அதிகரிக்கும். கடன் தொல்லையால் மனம் பாதிக்கும். மருத்துவச் செலவு உண்டாகும். 2,3,4 ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை பத்தாமிட சனியால் தொழிலில் தடைகள் ஏற்படும். பணியாளர்களுக்கு வேலைப்பளுவும் நெருக்கடியும் அதிகரிக்கும். மார்ச் 6 முதல் தொட்டதெல்லாம் பொன்னாகும். வேலையில் நிம்மதி ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.ராகு, கேது சஞ்சாரம்1ம் பாதத்தினருக்கு லாப ராகுவால், பல வழிகளிலும் வருமானம் வர ஆரம்பிக்கும். புதிய வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். பொருளாதார நிலை உயரும். 2,3,4 ம் பாதத்தினருக்கு ராகு 10ல், கேது 4 ல் சஞ்சரிப்பதால் உழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் முதலீட்டிற்கேற்ற லாபம் இல்லாமல் போகும். வேலையில் பிரச்னைகளை சந்திக்க நேரிடும். தாயாரின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும்.சூரிய சஞ்சாரம்1ம் பாதத்தினருக்கு, ஜூன் 15 – ஜூலை 16, செப்.17 – அக்.17, 2026, ஜன.15 – மார்ச் 14 காலங்களிலும், 2,3,4ம் பாதத்தினருக்கு, ஜூலை17 – ஆக.16, அக்.18 – நவ.16, 2026 பிப்.13 – ஏப்.13 காலங்களிலும் தன் 3,6,10,11ம் இட சஞ்சாரங்களால் முயற்சிகளை வெற்றியாக்குவார். உடல்நிலையை முன்னேற்றுவார். வழக்கை சாதகமாக்குவார். தொழிலில் லாபத்தையும் பணியில்  முன்னேற்றத்தையும் உண்டாக்குவார். வேலைக்காக முயற்சித்து வந்தவர்களை தகுதியான இடத்தில் அமர வைப்பார். புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு வழியமைப்பார். வாழ்வில் நிம்மதி, மகிழ்ச்சியை அதிகரிப்பார்.செவ்வாய் சஞ்சாரம்1 ம் பாதத்தினருக்கு, ஜூலை 30 – செப்.14, 2026, பிப்.21 – ஏப்.1 காலங்களிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு, ஏப்.14 – ஜூன்8, செப்.14 – அக். 27, 2026 ஏப். 1 – மே 26 காலங்களிலும், தன் 3,6,11 ம் இட சஞ்சாரங்களால், எடுத்த வேலைகளை முடிக்க வைப்பார். எண்ணியதை நடத்தி வைப்பார். ஆரோக்கியத்தை அதிகரிப்பார். ஆற்றலை உண்டாக்குவார். வியாபாரம், தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். வருமானத்தை அதிகரிப்பார். வீடு, நிலம் வாங்க வைப்பார்.பொதுப்பலன்குருபகவான் சஞ்சாரத்தில், ஜூன் 6 முதல் ஜூலை 6 வரை அஸ்தமனம் அடைவதால் அவரால் இக்காலத்தில் பலன்கள் வழங்க முடியாமல் போகும். அக்.8 முதல் நவ.18 வரை கடகத்தில் உச்சமடையும் காலத்தில் அவருடைய பார்வைகளால் பலன் கிடைக்கும். ராகு, சனி, சூரியன், செவ்வாய் என்று இக்காலத்தில் உங்கள் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர்.  நீண்டநாள் கனவுகளை நனவாக்குவர்.தொழில்தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும்.கலைஞர்களுக்கும், வியாபாரிகளுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். அரசுவழி முயற்சிகள் சாதகமாகும். ஏற்றுமதி இறக்குமதி, ஆட்டோ மொபைல்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ், ஹார்டுவேர்ஸ் தொழில்கள், ஆன்லைன் வர்த்தகம் முன்னேற்றம் பெறும். பணியாளர்கள்வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த சலுகை, ஊதியம் கிடைக்கும். சிலருக்கு புதிய பொறுப்பு உண்டாகும். பார்த்து வரும் வேலையை விட்டு விட்டு வெளிநாட்டிற்கு செல்லும் யோகம் சிலருக்கு ஏற்படும். அரசு பணியாளர்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். தடைபட்ட பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும்.பெண்கள்இதுவரை இருந்த போராட்டங்கள் விலகும். உடல் பாதிப்புகள் நீங்கும். கல்வி, திருமணம், வேலை போன்ற கனவுகள் நனவாகும். கணவன், மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். குடும்பத்தினரின் ஆதரவு கூடும். பொன், பொருள் சேரும்.கல்விபொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய பாடப்பிரிவில், விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும்.உடல்நிலைஇக்காலத்தில் உடல்நிலையில் கவனமாக இருப்பது அவசியம், விபத்து, அல்சர், சுவாச பிரச்னை, அஜீரணக்கோளாறு, ரத்த அழுத்தம், சர்க்கரை என ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். ஆனாலும் அவற்றில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும்.குடும்பம்குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வேலை, வருமானம், தொழில் என்ற நிலைகளால் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடைபெறும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர்.  பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். வசதி, வாய்ப்புகள் கூடும்.பரிகாரம்: அதிகாலையில் சூரிய பகவானை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

கார்த்திகை.. நல்ல நேரம் வந்தாச்சு; ஆத்ம காரகனான சூரியனை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும், 1ம் பாதமான மேஷத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசி நாதனாகவும், 2,3,4 ம் பாதங்களான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர்.கார்த்திகை 1ம் பாதத்தினருக்கு, மே 11 முதல் 3ம் வீட்டில் சஞ்சரித்து முயற்சியில் தடை,  வாழ்க்கையில் நெருக்கடி, தனித்து நிற்க வேண்டிய நிலையை உண்டாக்குவார் குருபகவான். 2,3,4 ம் பாதத்தினருக்கு 2ம் வீட்டில் குடும்ப குருவாக சஞ்சரித்து பண வரவையும், குடும்பத்தில் முன்னேற்றத்தையும், தொழில், வேலையில் ஏற்றத்தையும் தருவார்.பார்வைகளின் பலன்குருவின் சஞ்சார நிலையை விட அவர் பார்க்கும் இடங்கள் பலம் பெறும் என்பது பொது விதி. 1 ம் பாதத்தினருக்கு, குருவின் பார்வை 7,9,11 ம் இடங்களுக்கு உண்டாவதால் உங்களுடைய நீண்டநாள் கனவுகள் நனவாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். செல்வாக்கு உயரும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். சொந்த வீடு, வாகனம் அமையும், வருமானம் அதிகரிக்கும். சங்கடங்கள் விலகும். 2,3,4 ம் பாதத்தினருக்கு, 6,8,10 ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால் நோய்கள் தீரும். உடல்நிலை சீராகும், எதிர்ப்பு இல்லாமல் போகும், வழக்கு சாதகமாகும். செல்வாக்கு உயரும், மனதில் இருந்த பயம் விலகும். தொழில் முன்னேற்றம் பெறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும்.சனி சஞ்சாரம்1ம் பாதத்தினருக்கு, 2026 மார்ச் 6 வரை லாப சனியால் வருமானம் அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். மார்ச்6 முதல் விரயச் சனியால் வரவை விட செலவு அதிகரிக்கும். கடன் தொல்லையால் மனம் பாதிக்கும். மருத்துவச் செலவு உண்டாகும். 2,3,4 ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை பத்தாமிட சனியால் தொழிலில் தடைகள் ஏற்படும். பணியாளர்களுக்கு வேலைப்பளுவும் நெருக்கடியும் அதிகரிக்கும். மார்ச் 6 முதல் தொட்டதெல்லாம் பொன்னாகும். வேலையில் நிம்மதி ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.ராகு, கேது சஞ்சாரம்1ம் பாதத்தினருக்கு லாப ராகுவால், பல வழிகளிலும் வருமானம் வர ஆரம்பிக்கும். புதிய வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். பொருளாதார நிலை உயரும். 2,3,4 ம் பாதத்தினருக்கு ராகு 10ல், கேது 4 ல் சஞ்சரிப்பதால் உழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் முதலீட்டிற்கேற்ற லாபம் இல்லாமல் போகும். வேலையில் பிரச்னைகளை சந்திக்க நேரிடும். தாயாரின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும்.சூரிய சஞ்சாரம்1ம் பாதத்தினருக்கு, ஜூன் 15 – ஜூலை 16, செப்.17 – அக்.17, 2026, ஜன.15 – மார்ச் 14 காலங்களிலும், 2,3,4ம் பாதத்தினருக்கு, ஜூலை17 – ஆக.16, அக்.18 – நவ.16, 2026 பிப்.13 – ஏப்.13 காலங்களிலும் தன் 3,6,10,11ம் இட சஞ்சாரங்களால் முயற்சிகளை வெற்றியாக்குவார். உடல்நிலையை முன்னேற்றுவார். வழக்கை சாதகமாக்குவார். தொழிலில் லாபத்தையும் பணியில்  முன்னேற்றத்தையும் உண்டாக்குவார். வேலைக்காக முயற்சித்து வந்தவர்களை தகுதியான இடத்தில் அமர வைப்பார். புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு வழியமைப்பார். வாழ்வில் நிம்மதி, மகிழ்ச்சியை அதிகரிப்பார்.செவ்வாய் சஞ்சாரம்1 ம் பாதத்தினருக்கு, ஜூலை 30 – செப்.14, 2026, பிப்.21 – ஏப்.1 காலங்களிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு, ஏப்.14 – ஜூன்8, செப்.14 – அக். 27, 2026 ஏப். 1 – மே 26 காலங்களிலும், தன் 3,6,11 ம் இட சஞ்சாரங்களால், எடுத்த வேலைகளை முடிக்க வைப்பார். எண்ணியதை நடத்தி வைப்பார். ஆரோக்கியத்தை அதிகரிப்பார். ஆற்றலை உண்டாக்குவார். வியாபாரம், தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். வருமானத்தை அதிகரிப்பார். வீடு, நிலம் வாங்க வைப்பார்.பொதுப்பலன்குருபகவான் சஞ்சாரத்தில், ஜூன் 6 முதல் ஜூலை 6 வரை அஸ்தமனம் அடைவதால் அவரால் இக்காலத்தில் பலன்கள் வழங்க முடியாமல் போகும். அக்.8 முதல் நவ.18 வரை கடகத்தில் உச்சமடையும் காலத்தில் அவருடைய பார்வைகளால் பலன் கிடைக்கும். ராகு, சனி, சூரியன், செவ்வாய் என்று இக்காலத்தில் உங்கள் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர்.  நீண்டநாள் கனவுகளை நனவாக்குவர்.தொழில்தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும்.கலைஞர்களுக்கும், வியாபாரிகளுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். அரசுவழி முயற்சிகள் சாதகமாகும். ஏற்றுமதி இறக்குமதி, ஆட்டோ மொபைல்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ், ஹார்டுவேர்ஸ் தொழில்கள், ஆன்லைன் வர்த்தகம் முன்னேற்றம் பெறும். பணியாளர்கள்வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த சலுகை, ஊதியம் கிடைக்கும். சிலருக்கு புதிய பொறுப்பு உண்டாகும். பார்த்து வரும் வேலையை விட்டு விட்டு வெளிநாட்டிற்கு செல்லும் யோகம் சிலருக்கு ஏற்படும். அரசு பணியாளர்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். தடைபட்ட பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும்.பெண்கள்இதுவரை இருந்த போராட்டங்கள் விலகும். உடல் பாதிப்புகள் நீங்கும். கல்வி, திருமணம், வேலை போன்ற கனவுகள் நனவாகும். கணவன், மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். குடும்பத்தினரின் ஆதரவு கூடும். பொன், பொருள் சேரும்.கல்விபொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய பாடப்பிரிவில், விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும்.உடல்நிலைஇக்காலத்தில் உடல்நிலையில் கவனமாக இருப்பது அவசியம், விபத்து, அல்சர், சுவாச பிரச்னை, அஜீரணக்கோளாறு, ரத்த அழுத்தம், சர்க்கரை என ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். ஆனாலும் அவற்றில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும்.குடும்பம்குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வேலை, வருமானம், தொழில் என்ற நிலைகளால் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடைபெறும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர்.  பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். வசதி, வாய்ப்புகள் கூடும்.பரிகாரம்: அதிகாலையில் சூரிய பகவானை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.ரோகிணி..அதிர்ஷ்ட காலம்; சந்திரனை நட்சத்திர அதிபதியாகவும், சுக்கிரனை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள், எந்த ஒன்றிலும் முன்னேற்றத்தை நோக்கியே செயல்படக் கூடியவர்கள். உங்களுக்கு லாபாதிபதியான குருபகவான், மே11 முதல் தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.இதனால் உங்களுக்கிருந்த நெருக்கடிகள் விலகும். பணவரவு அதிகரிக்கும். நினைப்பதை நினைத்தபடி செய்து முடிக்க முடியும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். உங்கள் வார்த்தைகளை மற்றவர்கள் கேட்கும் நிலை உருவாகும்.பார்வைகளின் பலன்குருபகவான் 2,5,7,9,11ம் இடங்களில் சஞ்சரிக்கும் போது ஜாதகருக்கு யோகப்பலன்களை வழங்குவார். ஆனாலும், எங்கு சஞ்சரித்தாலும் தன் 5,7,9 ம் பார்வைகளால் ஜாதகருக்கு யோகத்தை வழங்குவார் என்பது பொது விதி, மிதுன குருவின் பார்வைகள் உங்கள் ராசிக்கு 6, 8, 10 ம் இடங்களுக்கு உண்டாவதால் தொழில் முன்னேற்றம் பெறும். வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்னைகளும், மறைமுக எதிர்ப்புகளும் இருந்த இடம் தெரியாமல் போகும். நோய்நொடிகள் விலகும். ஆரோக்கியம் சீராகும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். செல்வாக்கு உயரும், மனதில் இருந்த பயம் விலகும். தொழில் முன்னேற்றம் பெறும். புதிய தொழில் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வேலை தேடி வந்தவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும்.சனி சஞ்சாரம் 2026 மார்ச்6 வரை ஜீவன ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் சனியால், வேலைப்பளு அதிகரிக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு தள்ளிப் போகும். சிலருக்கு மெமோ, வழக்கு என்ற நிலை உண்டாகும். செய்து வரும் தொழிலில் தடைகளும் முன்னேற்றமில்லாத நிலையும் ஏற்படும். மார்ச்6 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால், வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். வேலையில் நிம்மதி ஏற்படும். தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். அரசியல்வாதிகளின் நிலை உயரும்.ராகு, கேது சஞ்சாரம் 10ல் ராகு, 4ல் கேது சஞ்சரிப்பதால், தொழில் வளர்ச்சி அடையும். வியாபாரத்தில் அக்கறை அதிகரிக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு உண்டாகும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். அதே நேரத்தில் கடின உழைப்பும், உடல்நிலையில் சின்னச் சின்ன பிரச்னைகள் தோன்றி சந்தோஷத்திற்கு தடை போடும். தாயாரின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும்.சூரிய சஞ்சாரம்ஜூலை 17 – ஆக.16, அக்.18 – நவ.16, 2026 பிப்.13 – ஏப்.13 காலங்களில் தன் 3,6,10,11 ம் இட சஞ்சாரங்களால் எடுக்கும் வேலைகளை வெற்றியாக்குவார். செல்வாக்கை அதிகரிப்பார். எதிரிகளை பலமிழக்கச் செய்வார். ஆரோக்கியத்தை மேம்படுத்துவார். இழுபறியாக இருந்த வழக்கை சாதகமாக்குவார். தொழிலில் லாபம், வேலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். வேலைக்காக முயற்சிப்பவர்களை தகுதியான இடத்தில் அமர வைப்பார். அரசு வழி முயற்சிகளை வெற்றியாக்குவார்.செவ்வாய் சஞ்சாரம்ஏப்.14 – ஜூன்8, செப்.14 – அக்.27, 2026 ஏப்.1 – மே 26 காலங்களில் தன் 3,6,11 ம் இட சஞ்சாரங்களால் தைரியத்தை அதிகரிப்பார். முயற்சிகளை வெற்றியாக்குவார். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகளை இல்லாமல் செய்வார். வியாபாரம், தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். வருமானத்தை அதிகரிப்பார்.பொதுப்பலன் குருபகவான் இரண்டாமிடத்தில் சஞ்சரித்தாலும், ஜூன் 6 முதல் ஜூலை 6 வரை அஸ்தமனம் அடைவதால் அவரால் இக்காலத்தில் பலன்கள் வழங்க முடியாமல் போகும். அக்.8 முதல் நவ. 18 வரை கடகத்தில் உச்சமடையும் காலத்தில் அவருடைய பார்வைகளால் பலன் கிடைக்கும். சனி, சூரியன், செவ்வாய் என மூவரும் இக்காலத்தில் உங்கள் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். யோகப் பலன்களை வழங்குவர்.தொழில்தொழில் முன்னேற்றம் பெறும். லாபாதிபதி தன, குடும்ப, ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். சிலர் தொழிலை விரிவு செய்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேளாண்துறை வளர்ச்சி அடையும். கலைஞர்கள், வியாபாரிகளுக்கு முன்னேற்றம் உண்டாகும். வாகன உற்பத்தி, ஸ்பேர் பார்ட்ஸ், இண்டஸ்ட்ரீஸ், ஹார்டுவேர், கம்ப்யூட்டர், அழகு சாதனம், மின்சாதனம் தயாரிப்பு, எலக்ட்ரானிக்ஸ், ஸ்டேஷனரி, ஜூவல்லரி, சினிமா, டிவி, பங்கு வர்த்தகம் வளர்ச்சி அடையும்.பணியாளர்கள்பணிபுரியும் இடத்தில் அனுபவித்த நெருக்கடி, தொல்லைகள் இல்லாமல் போகும். வேலை பார்க்கும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த சலுகைகளும் ஊதியமும் கிடைக்கும். உங்கள் திறமையை அறிந்து வேறு நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு வேலையில் ஏற்பட்ட வழக்குகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும்.பெண்கள் இக்காலம் யோக காலமாகும். குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு உங்களுக்கு நிம்மதியை அளிப்பார். உங்கள் வார்த்தைக்கு குடும்பத்தில் மதிப்புண்டாகும். உடல் பாதிப்புகள் நீங்கும். கல்வி, திருமணம், வேலை என்ற கனவுகள் நனவாகும். பணிபுரியும் இடத்தில் முக்கிய பொறுப்பு கிடைக்கும். கணவன், மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். சிலர் சுயமாக தொழில் தொடங்கி லாபம் காண்பர். பொன், பொருள் சேரும். உறவுகளுடன் சுமூகமான நிலை ஏற்படும்.கல்வி வாக்கு ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் படிப்பில் அக்கறை அதிகரிக்கும். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். நீங்கள் விரும்பும் பாடப்பிரிவில் சேர முடியும்.உடல்நிலை நீண்ட நாளாக தொந்தரவு செய்த நோய்கள் மருத்துவத்தால் குணமாகும். சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பம்குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். விலகிச் சென்ற உறவினர்கள் மீண்டும் சொந்தம் கொண்டாடுவர். இக்காலம் உங்களுக்கு யோக காலமாக அமையும். பொன் பொருள், வீடு, மனை, வாகனம் என வாங்கி மகிழ்வீர்கள். வேலையின் காரணமாக பிரிந்த தம்பதி ஒன்று சேர்வர். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.பரிகாரம்: திருப்பதி ஏழுமலையானை வழிபட வாழ்வில் வளம் கூடும்.மிருகசீரிடம்.. தொட்டது துலங்கும்: தைரிய, வீரிய காரகனான செவ்வாயை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2 ம் பாதமான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசி நாதனாகவும், 3,4ம் பாதங்களான மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு புதன் ராசி நாதனாகவும் உள்ளனர்.மிருகசீரிடம் 1, 2 ம் பாதத்தினருக்கு மே11 முதல் 2ம் வீட்டில் சஞ்சரித்து, குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலையையும்,  செயலில் வேகத்தையும், எதிர்பார்த்த வரவையும்,  முயற்சியில் வெற்றியையும், வேலையில் முன்னேற்றத்தையும்,  வாழ்வில் யோகத்தையும் உண்டாக்க இருக்கிறார் குருபகவான். 3,4ம் பாதத்தினருக்கு ஜென்ம குருவாக சஞ்சரித்து  குடும்பத்தை விட்டு வெளியூர் சென்று வசிக்கும் நிலையையும்,  மனதில் குழப்பத்தையும் உண்டாக்குவார் குருபகவான்.பார்வைகளின் பலன்குரு சஞ்சரிக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்களை பலப்படுத்துவார் என்பது பொது விதி. 1,2 ம் பாதத்தினருக்கு, 6,8,10ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால், இதுவரை இருந்த மந்தநிலை மாறும். மனதில் இருந்த பயம் போகும். உடல்நிலையில் சங்கடத்தை ஏற்படுத்தி வந்த நோய் நொடிகள் விலகும், தொழில், வேலையில் இருந்த எதிர்ப்பு, மறைமுகத் தொல்லைகள் நீங்கும். இழுபறியாக இருந்த வழக்கு விவகாரம் முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் பெறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். 3, 4ம் பாதத்தினருக்கு, 5,7,9 ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால் குடும்பத்தில் இருந்த குழப்பம், விவகாரம், ரத்த உறவுக்குள் ஏற்பட்ட பிரச்னைகள், சொத்து விவகாரம் முடிவிற்கு வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். தம்பதிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். கூட்டுத்தொழில் லாபம் தரும். புதிய வீடு என்ற கனவு நனவாகும். சனி சஞ்சாரம்1, 2 ம் பாதத்தினருக்கு 2026 வரை ஜீவன  ஸ்தான சனியால்  வேலையில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடும். நெருக்கடி அதிகரிக்கும். செய்யாத தவறுக்கு பதில் சொல்லும் நிலை உண்டாகும். செய்து வரும் தொழிலில் தடைகள் இருக்கும். முதலீட்டிற்கேற்ற லாபம் இல்லாமல் போகும். மார்ச் 6 முதல் சனி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வருமானத்தில் இருந்த தடைகள் விலகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். வேலை பார்க்கும் இடத்தில் நிம்மதி ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும். 3, 4ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை எடுக்கும் முயற்சிகள் லாபமாகும். நினைத்த செயல்கள் நடந்தேறும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். வம்பு, வழக்குகள் முடிவிற்கு வரும். உடல்நிலை சீராகும். வருமானம் அதிகரிக்கும். மார்ச் 6 முதல் பத்தாமிட சனியால் வேலை, தொழிலில் பிரச்னைகள், வருமானக்குறைவு, போராட்டம், முன்னேற்றமில்லாத நிலை ஏற்படும்.ராகு, கேது சஞ்சாரம்1, 2 ம் பாதத்தினருக்கு ராகு 10லும், கேது 4 லும் சஞ்சரிப்பதால் முயற்சிகள் வெற்றியாகும். உழைப்பிற்கேற்ப வருமானம் வரும். வியாபாரத்தில் முதலீடு செய்வதற்கு முன் சந்தை நிலவரம் அறிந்து செயல்படுவது அவசியம். வேலைப்பளு கூடும். தாயாரின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். 3, 4ம் பாதத்தினருக்கு ராகு 9ல், கேது 3ல் சஞ்சரிப்பதால் தெய்வ அருள் கிடைக்கும். நீண்ட நாளாக தள்ளிப்போன வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். நினைத்த வேலைகள் நடந்தேறும்.சூரிய சஞ்சாரம்1, 2 ம் பாதத்தினருக்கு ஜூலை17 – ஆக.16, அக்.18 – நவ.16, 2026 பிப்.13 – ஏப்.13 காலங்களிலும், 3, 4ம் பாதத்தினருக்கு ஏப்.14 – மே14, ஆக.17 – செப்.16, நவ.11 – டிச.15, 2026 மார்ச்15 – ஏப்.13 காலங்களிலும் தன் 3,6,10,11ம் இட சஞ்சாரத்தால் முன்னேற்றத்தை உண்டாக்குவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். உடல்நிலையை சீராக்குவார். வழக்குகளை சாதகமாக்குவார். தொழிலில் லாபம், பணியில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். வேலைக்காக முயற்சித்து வந்தவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்க வைப்பார். புதிய தொழில் தொடங்கும் முயற்சியை வெற்றியாக்குவார்.செவ்வாய் சஞ்சாரம்1, 2ம் பாதத்தினருக்கு, ஏப்.14 – ஜூன்8, செப்.14 – அக்.27, 2026 ஏப்.1 – மே 26 காலங்களிலும், 3, 4 ம் பாதத்தினருக்கு ஜூன் 8 – ஜூலை 30, அக்.27 – டிச.6 காலங்களிலும் தன் 3,6,11ம் இட சஞ்சாரங்களால் ஜெயத்தை உண்டாக்குவார்.  தடைபட்ட வேலைகளை நடத்தி வைப்பார். எடுத்த வேலைகளை முடித்து வைப்பார். ஆரோக்கியத்தையும் ஆற்றலையும் அதிகரிப்பார். வியாபாரம், தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் ஆதரவை உண்டாக்குவார். செல்வாக்கோடு வாழ வைப்பார்.பொதுப்பலன் குரு பகவான் சஞ்சாரத்தில் ஜூன் 6 முதல் ஜூலை 6 வரை அஸ்தமனம் அடைவதால் இக்காலத்தில் அவர் வழங்க வேண்டிய பலன்களை வழங்க முடியாமல் போகும். அக்.8 முதல் நவ.18 வரை கடகத்தில் உச்சமடையும் காலத்தில் 3, 4 ம் பாதத்தினருக்கு யோகப் பலன்களை வழங்குவார். 1, 2 ம் பாதத்தினருக்கு பார்வைகளால் பலன் கிடைக்கும். சூரியனும், செவ்வாயும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். வசதி வாய்ப்புகளை அதிகரிப்பர். தொழில் செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். அரசுவழி முயற்சிகள் சாதகமாகும். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், மருத்துவம், கெமிக்கல், பெட்ரோல், உணவகம், நிதி, இண்டஸ்ட்ரீஸ், பங்கு வர்த்தகம், ஆன்லைன் வர்த்தகம், வேளாண்மை லாபம் அடையும்.பணியாளர்கள் அரசு பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.பெண்கள்குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி, பிரச்னைகள் விலகும். செல்வாக்கு உயரும். பணிபுரியும் இடத்தில் சந்தித்த போராட்டங்கள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். சுய தொழில் செய்பவருக்கு முன்னேற்றம் உண்டாகும். கணவருடன் இணக்கம் உண்டாகும். இளம் பெண்களுக்கு திருமணம், குழந்தை பாக்கியம் என்ற கனவு நனவாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும்.கல்வி குரு பார்வைகள் சாதகமாக இருப்பதால் படிப்பில் ஆர்வம் கூடும். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். போட்டித் தேர்விலும் வெற்றி உண்டாகும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும்.உடல்நிலைஉடல்நிலையில் இருந்த பாதிப்புகள் விலகும். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர்கள் வீடு திரும்புவர். பரம்பரை நோய், தொற்று நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.குடும்பம்குடும்பத்தில் தோன்றிய பிரச்னைகள் முடிவிற்கு வரும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவர். பிள்ளைகளுக்கு திருமணம், குழந்தைப்பேறு என சந்தோஷம் அதிகரிக்கும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். சொத்து சுகம், வசதி வாய்ப்பு அதிகரிக்கும்.பரிகாரம்: திருச்செந்துார் முருகனை வழிபட வாழ்வில் வளம் பெருகும்.

மிருகசீரிடம்.. தொட்டது துலங்கும்: தைரிய, வீரிய காரகனான செவ்வாயை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2 ம் பாதமான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசி நாதனாகவும், 3,4ம் பாதங்களான மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு புதன் ராசி நாதனாகவும் உள்ளனர்.மிருகசீரிடம் 1, 2 ம் பாதத்தினருக்கு மே11 முதல் 2ம் வீட்டில் சஞ்சரித்து, குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலையையும்,  செயலில் வேகத்தையும், எதிர்பார்த்த வரவையும்,  முயற்சியில் வெற்றியையும், வேலையில் முன்னேற்றத்தையும்,  வாழ்வில் யோகத்தையும் உண்டாக்க இருக்கிறார் குருபகவான். 3,4ம் பாதத்தினருக்கு ஜென்ம குருவாக சஞ்சரித்து  குடும்பத்தை விட்டு வெளியூர் சென்று வசிக்கும் நிலையையும்,  மனதில் குழப்பத்தையும் உண்டாக்குவார் குருபகவான்.பார்வைகளின் பலன்குரு சஞ்சரிக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்களை பலப்படுத்துவார் என்பது பொது விதி. 1,2 ம் பாதத்தினருக்கு, 6,8,10ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால், இதுவரை இருந்த மந்தநிலை மாறும். மனதில் இருந்த பயம் போகும். உடல்நிலையில் சங்கடத்தை ஏற்படுத்தி வந்த நோய் நொடிகள் விலகும், தொழில், வேலையில் இருந்த எதிர்ப்பு, மறைமுகத் தொல்லைகள் நீங்கும். இழுபறியாக இருந்த வழக்கு விவகாரம் முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் பெறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். 3, 4ம் பாதத்தினருக்கு, 5,7,9 ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால் குடும்பத்தில் இருந்த குழப்பம், விவகாரம், ரத்த உறவுக்குள் ஏற்பட்ட பிரச்னைகள், சொத்து விவகாரம் முடிவிற்கு வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். தம்பதிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். கூட்டுத்தொழில் லாபம் தரும். புதிய வீடு என்ற கனவு நனவாகும். சனி சஞ்சாரம்1, 2 ம் பாதத்தினருக்கு 2026 வரை ஜீவன  ஸ்தான சனியால்  வேலையில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடும். நெருக்கடி அதிகரிக்கும். செய்யாத தவறுக்கு பதில் சொல்லும் நிலை உண்டாகும். செய்து வரும் தொழிலில் தடைகள் இருக்கும். முதலீட்டிற்கேற்ற லாபம் இல்லாமல் போகும். மார்ச் 6 முதல் சனி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வருமானத்தில் இருந்த தடைகள் விலகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். வேலை பார்க்கும் இடத்தில் நிம்மதி ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும். 3, 4ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை எடுக்கும் முயற்சிகள் லாபமாகும். நினைத்த செயல்கள் நடந்தேறும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். வம்பு, வழக்குகள் முடிவிற்கு வரும். உடல்நிலை சீராகும். வருமானம் அதிகரிக்கும். மார்ச் 6 முதல் பத்தாமிட சனியால் வேலை, தொழிலில் பிரச்னைகள், வருமானக்குறைவு, போராட்டம், முன்னேற்றமில்லாத நிலை ஏற்படும்.ராகு, கேது சஞ்சாரம்1, 2 ம் பாதத்தினருக்கு ராகு 10லும், கேது 4 லும் சஞ்சரிப்பதால் முயற்சிகள் வெற்றியாகும். உழைப்பிற்கேற்ப வருமானம் வரும். வியாபாரத்தில் முதலீடு செய்வதற்கு முன் சந்தை நிலவரம் அறிந்து செயல்படுவது அவசியம். வேலைப்பளு கூடும். தாயாரின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். 3, 4ம் பாதத்தினருக்கு ராகு 9ல், கேது 3ல் சஞ்சரிப்பதால் தெய்வ அருள் கிடைக்கும். நீண்ட நாளாக தள்ளிப்போன வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். நினைத்த வேலைகள் நடந்தேறும்.சூரிய சஞ்சாரம்1, 2 ம் பாதத்தினருக்கு ஜூலை17 – ஆக.16, அக்.18 – நவ.16, 2026 பிப்.13 – ஏப்.13 காலங்களிலும், 3, 4ம் பாதத்தினருக்கு ஏப்.14 – மே14, ஆக.17 – செப்.16, நவ.11 – டிச.15, 2026 மார்ச்15 – ஏப்.13 காலங்களிலும் தன் 3,6,10,11ம் இட சஞ்சாரத்தால் முன்னேற்றத்தை உண்டாக்குவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். உடல்நிலையை சீராக்குவார். வழக்குகளை சாதகமாக்குவார். தொழிலில் லாபம், பணியில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். வேலைக்காக முயற்சித்து வந்தவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்க வைப்பார். புதிய தொழில் தொடங்கும் முயற்சியை வெற்றியாக்குவார்.செவ்வாய் சஞ்சாரம்1, 2ம் பாதத்தினருக்கு, ஏப்.14 – ஜூன்8, செப்.14 – அக்.27, 2026 ஏப்.1 – மே 26 காலங்களிலும், 3, 4 ம் பாதத்தினருக்கு ஜூன் 8 – ஜூலை 30, அக்.27 – டிச.6 காலங்களிலும் தன் 3,6,11ம் இட சஞ்சாரங்களால் ஜெயத்தை உண்டாக்குவார்.  தடைபட்ட வேலைகளை நடத்தி வைப்பார். எடுத்த வேலைகளை முடித்து வைப்பார். ஆரோக்கியத்தையும் ஆற்றலையும் அதிகரிப்பார். வியாபாரம், தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் ஆதரவை உண்டாக்குவார். செல்வாக்கோடு வாழ வைப்பார்.பொதுப்பலன் குரு பகவான் சஞ்சாரத்தில் ஜூன் 6 முதல் ஜூலை 6 வரை அஸ்தமனம் அடைவதால் இக்காலத்தில் அவர் வழங்க வேண்டிய பலன்களை வழங்க முடியாமல் போகும். அக்.8 முதல் நவ.18 வரை கடகத்தில் உச்சமடையும் காலத்தில் 3, 4 ம் பாதத்தினருக்கு யோகப் பலன்களை வழங்குவார். 1, 2 ம் பாதத்தினருக்கு பார்வைகளால் பலன் கிடைக்கும். சூரியனும், செவ்வாயும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். வசதி வாய்ப்புகளை அதிகரிப்பர். தொழில் செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். அரசுவழி முயற்சிகள் சாதகமாகும். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், மருத்துவம், கெமிக்கல், பெட்ரோல், உணவகம், நிதி, இண்டஸ்ட்ரீஸ், பங்கு வர்த்தகம், ஆன்லைன் வர்த்தகம், வேளாண்மை லாபம் அடையும்.பணியாளர்கள் அரசு பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.பெண்கள்குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி, பிரச்னைகள் விலகும். செல்வாக்கு உயரும். பணிபுரியும் இடத்தில் சந்தித்த போராட்டங்கள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். சுய தொழில் செய்பவருக்கு முன்னேற்றம் உண்டாகும். கணவருடன் இணக்கம் உண்டாகும். இளம் பெண்களுக்கு திருமணம், குழந்தை பாக்கியம் என்ற கனவு நனவாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும்.கல்வி குரு பார்வைகள் சாதகமாக இருப்பதால் படிப்பில் ஆர்வம் கூடும். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். போட்டித் தேர்விலும் வெற்றி உண்டாகும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும்.உடல்நிலைஉடல்நிலையில் இருந்த பாதிப்புகள் விலகும். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர்கள் வீடு திரும்புவர். பரம்பரை நோய், தொற்று நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.குடும்பம்குடும்பத்தில் தோன்றிய பிரச்னைகள் முடிவிற்கு வரும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவர். பிள்ளைகளுக்கு திருமணம், குழந்தைப்பேறு என சந்தோஷம் அதிகரிக்கும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். சொத்து சுகம், வசதி வாய்ப்பு அதிகரிக்கும்.பரிகாரம்: திருச்செந்துார் முருகனை வழிபட வாழ்வில் வளம் பெருகும்.திருவாதிரை: வருமானம் அதிகரிக்கும்ராகுவை நட்சத்திர அதிபதியாகவும், புதனை ராசி நாதனாகவும் கொண்ட நீங்கள் அதிர்ஷ்ட வாய்ப்புகள் நிரம்பப் பெற்றவர். சாதுரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கக் கூடியவர். உங்களுக்கு சப்தமாதிபதியும், ஜீவனாதிபதியுமான குரு பகவான் மே11 முதல் உங்கள் ராசிக்குள் ஜென்ம குருவாக சஞ்சரிக்கிறார். ஜென்ம குரு அலைச்சலை அதிகரிப்பார் என்றாலும் ஏழுக்குரியவன் ஏழாம் வீட்டில் சஞ்சரிப்பது பெரும் யோகமாகும். இக்காலத்தில் எல்லா விதமான பாக்கியங்களும் உங்களுக்கு உண்டாகும். இடம், வீடு, வாசல், திருமணம், குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு என வாழ்க்கையின் தேவைகள் யாவும் நிறைவேறும். பார்வைகளின் பலன்குரு சஞ்சரிக்கும் இடத்தை விட, அவர் பார்க்கும் இடங்கள் சுபத்துவப்படும் என்பதால் 5, 7, 9 ம் இடங்களுக்கு உண்டாகும் குருபார்வைகளால்,  குடும்பத்தில் நெருக்கடி விலகும். உறவுக்குள் ஏற்பட்ட பிரச்னைகள், சொத்து விவகாரம் முடிவிற்கு வரும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தோரின் வேண்டுதல் நிறைவேறும். திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு திருமண யோகம் உண்டாகும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரும் நிலை ஏற்படும். கூட்டுத்தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். புதிய வீடு, வாகனம், செல்வாக்கு, அந்தஸ்து என்ற கனவு நனவாகும். தந்தைவழி சொத்துகள் கைக்கு வரும். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.சனி சஞ்சாரம்2026 மார்ச் 6 வரை பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் அந்தஸ்து உயரும். தந்தை வழி சொத்துகள் கைக்கு வரும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். நினைத்த வேலைகள் நடந்தேறும். உடல்நிலை சீராகும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். வம்பு வழக்குகள் முடிவிற்கு வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். மார்ச் 6 முதல், ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால், தொழிலில் தடைகளும், முன்னேற்றமில்லாத நிலையும் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளும் பலன் தராமல் போகும். பார்த்து வரும் வேலையில் பிரச்னைகள், தடைகள், அவமானம், போராட்டம், முன்னேற்றமில்லாத நிலை  ஏற்படும்.ராகு, கேது சஞ்சாரம் ராகு 9 ல், கேது 3 ல் சஞ்சரிப்பது யோகமாகும். பெரிய மனிதர்களுடன் தொடர்பும், அவர்களுடைய ஆதரவும் உண்டாகும். குல தெய்வ, இஷ்ட தெய்வ அருள் கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். எந்த நிலை வந்தாலும் அதையெல்லாம் சமாளிக்கும் வலிமை உண்டாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.சூரிய சஞ்சாரம்ஏப். 14 – மே14, ஆக.17 – செப்.16, நவ.11 – டிச.15, 2026 மார்ச்15 – ஏப்.13 காலங்களில் தன் 3,6,10,11 ம் இட சஞ்சாரங்களால் உங்களுக்கிருந்த நெருக்கடிகளை இல்லாமல் செய்வார். செல்வாக்கை அதிகரிப்பார். எதிர்பார்த்த முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். முயற்சிகளை லாபமாக்குவார். உடல்நிலையை சீராக்குவார். வழக்குகளை இல்லாமல் செய்வார். அரசியல்வாதிகளின் செல்வாக்கை அதிகரிப்பார்.செவ்வாய் சஞ்சாரம்ஜூன் 8 – ஜூலை 30, அக். 27 – டிச.6 காலங்களில் தன் 3, 6, ம் இட சஞ்சாரங்களால், தொழில், வேலையில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். எதிர்ப்பு இல்லாமல் போகும். நோய்நொடி விலகும். செல்வாக்கு உயரும்.பொதுப்பலன் குரு பகவான் சஞ்சாரத்தில், ஜூன் 6 முதல் ஜூலை 6 வரை அஸ்தமனம் அடைவதால் இக்காலத்தில் அவர் வழங்க வேண்டிய பலன்களை வழங்க முடியாமல் போகும். அக்.8 முதல் நவ.18 வரை கடகத்தில் உச்சமடையும் காலத்தில் உங்களுக்கு தனவரவை அதிகரிப்பார். குடும்பத்தில் சுபிட்சத்தை ஏற்படுத்துவார். கேதுவும், சூரியனும், செவ்வாயும் உங்கள் நிலையை உயர்த்துவர். சங்கடங்களைப் போக்குவர்.தொழில் தொழில் வளர்ச்சி அடையும். அதன் முன்னேற்றத்தில் அக்கறை உண்டாகும். சிலர் வசதியான இடத்திற்கு தொழிலை மாற்றம் செய்வீர்கள். எதிர்பார்த்த லாபம் வரும். ரியல் எஸ்டேட், குவாரி, பிரிக்ஸ், பில்டர்ஸ், நிதி நிறுவனம், இண்டஸ்ட்ரீஸ், ஆன்லைன் வர்த்தகம், வாகனம், டிராவல்ஸ், பதிப்பகம், கல்வி நிறுவனம், கமிஷன் ஏஜன்சி, சின்னத்திரை, வேளாண்மை வளர்ச்சி அடையும். கலைஞர்களின் நிலை உயரும்.பணியாளர்கள்வேலையின் காரணமாக சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். சிலர் பார்க்கும் வேலையில் முன்னேற்றமில்லை என வேறு இடத்திற்கு செல்வர். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். தற்காலிகமாக பணியாளர்கள் நிரந்தரம் பெறுவர்.  பெண்கள் நீண்ட நாள் கனவு நனவாகும். குருபலம் வந்து விட்டதால் திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு மாங்கல்யம் ஏறும். பொன், பொருள் சேரும். உறவுகளுடன் இணக்கம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவருடன் இருந்த பிரச்னை விலகும். சொந்த வீடு, அசையா சொத்து என உங்கள் நிலை உயரும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.கல்வி குரு பகவான் ராசிக்குள் சஞ்சரிப்பதால் படிப்பில் ஆர்வம் கூடும். நினைவுத்திறன் அதிகரிக்கும். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். போட்டித் தேர்விலும் வெற்றி உண்டாகும். விரும்பிய கல்லுாரியில், விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.உடல்நிலைஅலைச்சலும் உழைப்பும் அதிகரித்திட வாய்ப்பிருப்பதால் இக்காலத்தில் உடல்நிலையில் கவனம் தேவை. ரத்த அழுத்தம், வீசிங், அல்சர், கேஸ்ட்ரிக், நரம்பு கோளாறு என ஏதாவது ஒன்று உங்களை வாட்டிக் கொண்டிருக்கும். மருத்துவச் செலவு கூடும். குடும்பம்நெருக்கடிகள் விலகும். கடன் தொல்லையால் அவதிப்பட்ட நிலை மாறும். பண வரவு அதிகரிக்கும்.  இடம், வீடு, வாகனம், பொன், பொருள் சேரும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம் என குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். புதிய வீட்டில் பால் காய்ச்சுவீர்கள்.பரிகாரம்: பகவதி அம்மனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.புனர்பூசம்.. யோக காலம்: ஞானக் காரகனான குருவை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும், 1,2,3ம் பாதங்களான மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு, புதன் ராசிநாதனாகவும், 4ம் பாதமான கடகத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் ராசிநாதனாகவும் உள்ளனர்புனர்பூசம் 1,2,3ம் பாதத்தினருக்கு மே11 முதல் ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்து, தொழில், பணிக்காக வெளியூர் செல்லும் நிலை சிலருக்கு ஏற்படும். மனதில் குழப்பம் அதிகரிக்கும் என்றாலும் இக்காலத்தில்தான் அனைத்திலும் முன்னேற்றத்தையும் வழங்கப் போகிறார் குரு பகவான். 4ம் பாதத்தினருக்கு விரய குருவாக சஞ்சரித்து பல வகையில் செலவுகளை உண்டாக்கினாலும், அக்.8 முதல் நவ.18 வரை கடகத்தில் உச்சமாக சஞ்சரித்து குடும்பத்தில் முன்னேற்றம், வசதி வாய்ப்பை அதிகரிப்பார் குருபகவான்.பார்வைகளின் பலன்குரு சஞ்சரிக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்களை பலப்படுத்துவார் என்பது விதி. 1,2,3 ம் பாதத்தினருக்கு, 5,7,9 ம் இடங்களுக்கு மே11 முதல் குரு பார்வை உண்டாவதால் குடும்பத்தில் சுபிட்சநிலை உண்டாகும். கடன், வம்பு என்றிருந்த நிலை மாறும். உறவுகள் பலப்படும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். தந்தையின் சொத்துகள் கைக்கு வரும். சிலருக்கு வாரிசு அடிப்படையில் தந்தையின் வேலை கிடைக்கும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களின் வேண்டுதல் பலிக்கும். சிலருக்கு இரண்டாவது குழந்தையும் சுபமாக பிறக்கும். திருமண வயதினருக்கு மணமேடை அமையும். தம்பதிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். புதிய வீடு, சொத்து என்ற கனவு நனவாகும். 4ம் பாதத்தினருக்கு, 4, 6, 8 ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால், உடல் பாதிப்பு விலகும். தொழிலிலும், வேலையிலும் இருந்த எதிர்ப்பு, மறைமுகத் தொல்லை இருந்த இடம் தெரியாமல் போகும். இழுபறி வழக்கு சாதகமாகும். உங்கள் செல்வாக்கை மறைக்க எதிரிகள் மேற்கொண்ட முயற்சி நிறைவேறாமல் போகும். தாய்வழி உறவுகளின் ஆதரவு உங்களைப் பாதுகாக்கும்.சனி சஞ்சாரம்1,2,3 ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் ஆதாய நிலை உண்டாகும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். வம்பு வழக்கு முடிவிற்கு வரும். வருமானம் அதிகரிக்கும். மார்ச் 6 முதல் பத்தாமிட சனியால்,  வேலை, தொழிலில் நெருக்கடி உண்டாகும். வியாபாரம் மந்தமாகும். செலவு அதிகரிக்கும். கடன் வாங்கி சமாளிக்கும் நிலை உண்டாகும்.4ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை அஷ்டம சனியின் காலம் என்பதால் வாழ்க்கை போராட்டமாக இருக்கும். சிலருக்கு மருத்துவ செலவு அதிகரிக்கும். இல்லையெனில் அவமானத்திற்கு ஆளாகும் நிலை உருவாகும். மார்ச் 6க்கு மேல் புதிய பாதை தெரியும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். கடன்கள் அடைபடும். வருமானம் அதிகரிக்கும், சொத்து சுகம் உண்டாகும்.ராகு, கேது சஞ்சாரம்1, 2, 3 ம் பாதத்தினருக்கு ராகு 9ல், கேது3 ல் சஞ்சரிப்பதால் நினைத்த வேலைகள் நடந்தேறும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். 4ம் பாதத்தினருக்கு, ராகு 8ல் கேது2 ல் சஞ்சரிப்பதால் உடல் பாதிப்பு, சிலருக்கு விபத்து ஏற்படும். கீழோரால் அவமானங்களை சந்திக்க நேரும். குடும்பத்தில் பிரச்னை, வருமானத்தில் நெருக்கடி ஏற்படும்.சூரிய சஞ்சாரம்1, 2, 3 ம் பாதத்தினருக்கு, ஏப். 14 – மே 14, ஆக. 17 – செப். 16, நவ. 11 – டிச. 15, 2026 மார்ச் 15 – ஏப். 13 காலங்களிலும், 4 ம் பாதத்தினருக்கு, ஏப்.14 – ஜூன் 16, செப். 17 – அக். 17, டிச. 16 – 2026 ஜன. 14 காலங்களிலும், தன் 3,6,10,11 ம் இட சஞ்சாரங்களால்  முயற்சிகளை வெற்றியாக்குவார். முன்னேற்றத்தை உண்டாக்குவார். செல்வாக்கை அதிகரிப்பார். ஆரோக்கியத்தை சீராக்குவார். வழக்குகளை சாதகமாக்குவார். வேலை வாய்ப்பை உண்டாக்குவார். தொழிலில் லாபம், வேலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார்.செவ்வாய் சஞ்சாரம்1, 2, 3 ம் பாதத்தினருக்கு ஜூன் 8 – ஜூலை 30, அக். 27 – டிச. 6 காலங்களிலும், 4 ம் பாதத்தினருக்கு ஜூலை 30 – செப்.14, டிச.6 – 2026 ஜன.14 காலங்களிலும் தன் 3, 6, ம் இட சஞ்சாரங்களால் எடுக்கும் வேலைகளில் வெற்றியை உண்டாக்குவார். நினைத்த வேலைகளை நடத்தி வைப்பார். தன்னம்பிக்கை, தைரியத்தை அதிகரிப்பார். சுறுசுறுப்பாக செயல்பட வைப்பார். வியாபாரம், தொழிலில் லாபத்தை ஏற்படுத்துவார்.பொதுப்பலன் குரு பகவான் சஞ்சாரத்தில், ஜூன் 6 முதல் ஜூலை 6 வரை அஸ்தமனம் அடைவதால் இக்காலத்தில் அவர்  பலன்களை வழங்க முடியாமல் போகும். அக்.8 முதல் நவ.18 வரை கடகத்தில் உச்சமடையும் காலத்தில் 4ம் பாதத்தினருக்கு யோகப் பலன் வழங்குவார். 1, 2, 3ம் பாதத்தினருக்கு பார்வைகளால் பலன் கிடைக்கும். சூரியன், செவ்வாய் சஞ்சாரம் பெருமளவில் நன்மைகளை உண்டாக்கும். வசதி வாய்ப்பை அதிகரிக்கும்.தொழில்இக்காலத்தில் தொழிலில் கூடுதல் அக்கறை தேவை. முதலீட்டிலும் உற்பத்தியிலும் கவனம் தேவை. எந்த ஒன்றையும் உங்கள் பார்வையிலேயே செய்வதால் எதிர்பார்த்த லாபம் வரும். ஏற்றுமதி, இறக்குமதி, இன்டஸ்ட்ரீஸ், ஹார்ட்வேர், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர், குடிநீர், ஜுவல்லரி, பங்கு வர்த்தகம், பதிப்பகம், கமிஷன் ஏஜன்சி, வேளாண்மைத் தொழிலில் லாபம் கூடும்.பணியாளர்கள்வேலைப்பளு அதிகரிக்கும். அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். இருக்கும் வேலையை விட்டு விடலாமா என்றும் யோசிப்பீர்கள். வேறு வேலைக்கும் முயற்சி செய்வீர்கள். இக்காலத்தில் யோசித்து செயல்படுவது நல்லது. நிர்வாகத்தின் விருப்பப்படி செயல்படுவதால் நெருக்கடி இல்லாமல் போகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். அதற்காக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடும். பெண்கள் படிப்பு, வேலை, திருமணம் என்ற கனவு நனவாகும்.சிலருக்கு குழந்தை பாக்கியமும் ஏற்படும். கணவரிடம் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும். பொன், பொருள் சேரும். பணியாளர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும்.கல்விமாணவர்களுக்கு படிப்பின் அவசியம் தெரியவரும். ஆர்வமும் அக்கறையும் உண்டாகும். ஆசிரியர்களின் ஆலோசனைகளை  ஏற்று நடப்பர். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் வரும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும்.உடல்நிலைஉடல்நிலையில் கவனமாக இருப்பது நல்லது.  வாகனப் பயணத்தில் இக்காலத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.  தொற்று நோய், பரம்பரை நோய்கள் வர வாய்ப்பிருப்பதால் உடல்நிலையில் அக்கறை அவசியம்.குடும்பம்குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வசதி வாய்ப்பு கூடும். சேமிப்பு உயரும். சுபநிகழ்ச்சிகள்  நடந்தேறும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவீர்கள். சொந்த வீடு, வாகனம் அமையும். பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். பரிகாரம்: ஆலங்குடி குருபகவானை வழிபட நன்மை அதிகரிக்கும்.

புனர்பூசம்.. யோக காலம்: ஞானக் காரகனான குருவை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும், 1,2,3ம் பாதங்களான மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு, புதன் ராசிநாதனாகவும், 4ம் பாதமான கடகத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் ராசிநாதனாகவும் உள்ளனர்புனர்பூசம் 1,2,3ம் பாதத்தினருக்கு மே11 முதல் ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்து, தொழில், பணிக்காக வெளியூர் செல்லும் நிலை சிலருக்கு ஏற்படும். மனதில் குழப்பம் அதிகரிக்கும் என்றாலும் இக்காலத்தில்தான் அனைத்திலும் முன்னேற்றத்தையும் வழங்கப் போகிறார் குரு பகவான். 4ம் பாதத்தினருக்கு விரய குருவாக சஞ்சரித்து பல வகையில் செலவுகளை உண்டாக்கினாலும், அக்.8 முதல் நவ.18 வரை கடகத்தில் உச்சமாக சஞ்சரித்து குடும்பத்தில் முன்னேற்றம், வசதி வாய்ப்பை அதிகரிப்பார் குருபகவான்.பார்வைகளின் பலன்குரு சஞ்சரிக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்களை பலப்படுத்துவார் என்பது விதி. 1,2,3 ம் பாதத்தினருக்கு, 5,7,9 ம் இடங்களுக்கு மே11 முதல் குரு பார்வை உண்டாவதால் குடும்பத்தில் சுபிட்சநிலை உண்டாகும். கடன், வம்பு என்றிருந்த நிலை மாறும். உறவுகள் பலப்படும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். தந்தையின் சொத்துகள் கைக்கு வரும். சிலருக்கு வாரிசு அடிப்படையில் தந்தையின் வேலை கிடைக்கும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களின் வேண்டுதல் பலிக்கும். சிலருக்கு இரண்டாவது குழந்தையும் சுபமாக பிறக்கும். திருமண வயதினருக்கு மணமேடை அமையும். தம்பதிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். புதிய வீடு, சொத்து என்ற கனவு நனவாகும். 4ம் பாதத்தினருக்கு, 4, 6, 8 ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால், உடல் பாதிப்பு விலகும். தொழிலிலும், வேலையிலும் இருந்த எதிர்ப்பு, மறைமுகத் தொல்லை இருந்த இடம் தெரியாமல் போகும். இழுபறி வழக்கு சாதகமாகும். உங்கள் செல்வாக்கை மறைக்க எதிரிகள் மேற்கொண்ட முயற்சி நிறைவேறாமல் போகும். தாய்வழி உறவுகளின் ஆதரவு உங்களைப் பாதுகாக்கும்.சனி சஞ்சாரம்1,2,3 ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் ஆதாய நிலை உண்டாகும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். வம்பு வழக்கு முடிவிற்கு வரும். வருமானம் அதிகரிக்கும். மார்ச் 6 முதல் பத்தாமிட சனியால்,  வேலை, தொழிலில் நெருக்கடி உண்டாகும். வியாபாரம் மந்தமாகும். செலவு அதிகரிக்கும். கடன் வாங்கி சமாளிக்கும் நிலை உண்டாகும்.4ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை அஷ்டம சனியின் காலம் என்பதால் வாழ்க்கை போராட்டமாக இருக்கும். சிலருக்கு மருத்துவ செலவு அதிகரிக்கும். இல்லையெனில் அவமானத்திற்கு ஆளாகும் நிலை உருவாகும். மார்ச் 6க்கு மேல் புதிய பாதை தெரியும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். கடன்கள் அடைபடும். வருமானம் அதிகரிக்கும், சொத்து சுகம் உண்டாகும்.ராகு, கேது சஞ்சாரம்1, 2, 3 ம் பாதத்தினருக்கு ராகு 9ல், கேது3 ல் சஞ்சரிப்பதால் நினைத்த வேலைகள் நடந்தேறும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். 4ம் பாதத்தினருக்கு, ராகு 8ல் கேது2 ல் சஞ்சரிப்பதால் உடல் பாதிப்பு, சிலருக்கு விபத்து ஏற்படும். கீழோரால் அவமானங்களை சந்திக்க நேரும். குடும்பத்தில் பிரச்னை, வருமானத்தில் நெருக்கடி ஏற்படும்.சூரிய சஞ்சாரம்1, 2, 3 ம் பாதத்தினருக்கு, ஏப். 14 – மே 14, ஆக. 17 – செப். 16, நவ. 11 – டிச. 15, 2026 மார்ச் 15 – ஏப். 13 காலங்களிலும், 4 ம் பாதத்தினருக்கு, ஏப்.14 – ஜூன் 16, செப். 17 – அக். 17, டிச. 16 – 2026 ஜன. 14 காலங்களிலும், தன் 3,6,10,11 ம் இட சஞ்சாரங்களால்  முயற்சிகளை வெற்றியாக்குவார். முன்னேற்றத்தை உண்டாக்குவார். செல்வாக்கை அதிகரிப்பார். ஆரோக்கியத்தை சீராக்குவார். வழக்குகளை சாதகமாக்குவார். வேலை வாய்ப்பை உண்டாக்குவார். தொழிலில் லாபம், வேலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார்.செவ்வாய் சஞ்சாரம்1, 2, 3 ம் பாதத்தினருக்கு ஜூன் 8 – ஜூலை 30, அக். 27 – டிச. 6 காலங்களிலும், 4 ம் பாதத்தினருக்கு ஜூலை 30 – செப்.14, டிச.6 – 2026 ஜன.14 காலங்களிலும் தன் 3, 6, ம் இட சஞ்சாரங்களால் எடுக்கும் வேலைகளில் வெற்றியை உண்டாக்குவார். நினைத்த வேலைகளை நடத்தி வைப்பார். தன்னம்பிக்கை, தைரியத்தை அதிகரிப்பார். சுறுசுறுப்பாக செயல்பட வைப்பார். வியாபாரம், தொழிலில் லாபத்தை ஏற்படுத்துவார்.பொதுப்பலன் குரு பகவான் சஞ்சாரத்தில், ஜூன் 6 முதல் ஜூலை 6 வரை அஸ்தமனம் அடைவதால் இக்காலத்தில் அவர்  பலன்களை வழங்க முடியாமல் போகும். அக்.8 முதல் நவ.18 வரை கடகத்தில் உச்சமடையும் காலத்தில் 4ம் பாதத்தினருக்கு யோகப் பலன் வழங்குவார். 1, 2, 3ம் பாதத்தினருக்கு பார்வைகளால் பலன் கிடைக்கும். சூரியன், செவ்வாய் சஞ்சாரம் பெருமளவில் நன்மைகளை உண்டாக்கும். வசதி வாய்ப்பை அதிகரிக்கும்.தொழில்இக்காலத்தில் தொழிலில் கூடுதல் அக்கறை தேவை. முதலீட்டிலும் உற்பத்தியிலும் கவனம் தேவை. எந்த ஒன்றையும் உங்கள் பார்வையிலேயே செய்வதால் எதிர்பார்த்த லாபம் வரும். ஏற்றுமதி, இறக்குமதி, இன்டஸ்ட்ரீஸ், ஹார்ட்வேர், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர், குடிநீர், ஜுவல்லரி, பங்கு வர்த்தகம், பதிப்பகம், கமிஷன் ஏஜன்சி, வேளாண்மைத் தொழிலில் லாபம் கூடும்.பணியாளர்கள்வேலைப்பளு அதிகரிக்கும். அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். இருக்கும் வேலையை விட்டு விடலாமா என்றும் யோசிப்பீர்கள். வேறு வேலைக்கும் முயற்சி செய்வீர்கள். இக்காலத்தில் யோசித்து செயல்படுவது நல்லது. நிர்வாகத்தின் விருப்பப்படி செயல்படுவதால் நெருக்கடி இல்லாமல் போகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். அதற்காக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடும். பெண்கள் படிப்பு, வேலை, திருமணம் என்ற கனவு நனவாகும்.சிலருக்கு குழந்தை பாக்கியமும் ஏற்படும். கணவரிடம் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும். பொன், பொருள் சேரும். பணியாளர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும்.கல்விமாணவர்களுக்கு படிப்பின் அவசியம் தெரியவரும். ஆர்வமும் அக்கறையும் உண்டாகும். ஆசிரியர்களின் ஆலோசனைகளை  ஏற்று நடப்பர். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் வரும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும்.உடல்நிலைஉடல்நிலையில் கவனமாக இருப்பது நல்லது.  வாகனப் பயணத்தில் இக்காலத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.  தொற்று நோய், பரம்பரை நோய்கள் வர வாய்ப்பிருப்பதால் உடல்நிலையில் அக்கறை அவசியம்.குடும்பம்குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வசதி வாய்ப்பு கூடும். சேமிப்பு உயரும். சுபநிகழ்ச்சிகள்  நடந்தேறும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவீர்கள். சொந்த வீடு, வாகனம் அமையும். பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். பரிகாரம்: ஆலங்குடி குருபகவானை வழிபட நன்மை அதிகரிக்கும்.பூசம்.. திருமணம் நடக்கும் கர்மக்காரகன் சனி பகவானை நட்சத்திர அதிபதியாகவும், மனக் காரகன் சந்திரனை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் நினைத்ததை சாதிப்பதில் வல்லவர். ஆனாலும், சில நேரங்களில் உங்கள் வாழ்க்கைத்துணையால் போராட்டத்தை சந்திக்கலாம். உங்களுக்கு பாக்யாதிபதியான குரு பகவான் மே11 முதல் உங்கள் ராசிக்கு 12 ம் இடத்தில் விரய குருவாக சஞ்சரிக்கிறார். விரய குரு பல வகையிலும் செலவுகளை உண்டாக்குவார். அலைச்சலை ஏற்படுத்துவார். தொழிலில் போராட்டத்தை உண்டாக்குவார். வேலையில் நெருக்கடிகளை அதிகரிப்பார். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். அதனால் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை ஏற்படும் என்றாலும், அக். 8 முதல் நவ. 18 வரை உங்கள் ராசிக்குள் உச்சமாக  சஞ்சரிப்பவர் வசதி வாய்ப்பு, குடும்பத்தில் முன்னேற்றத்தை அதிகரிப்பார். திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற கனவுகள் நடந்தேறும். பார்வைகளின் பலன்குரு சஞ்சரிக்கும் இடத்தை விட அவர் பார்க்கும் இடங்களை பலப்படுத்துவார் என்பது விதி. இக்காலத்தில் 4, 6, 8 ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால் சொந்த வீடு, வாகனம் அமையும். வரவை விட செலவு அதிகரிக்கும். அடுத்தவருக்கு உதவி செய்வதற்காக ஜாமீன் கையெழுத்திட்டால் சட்ட சிக்கல்களுக்கு ஆளாக நேரும்.  இக்காலத்தில் ஒரு கடனை அடைக்க தைரியமாக வேறு இடத்தில் கடன் வாங்குவீர்கள். அதை அடைக்க முடியாமல் திணறுவீர்கள். பணிபுரியும் இடத்தில் வேலைப்பளு உண்டாகும். அதற்கேற்ற முன்னேற்றம் இல்லாமல் போகும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். எதிர் வரும் பிரச்னைகளை துணிச்சலாக எதிர்கொள்வீர்கள்.  சனி சஞ்சாரம் 2026 மார்ச் 6 வரை அஷ்டம சனியின் காலம் என்பதால் எந்த ஒன்றிலும் நிம்மதி இல்லாமல் போகும். எடுக்கும் முயற்சியில் பின்னடைவு ஏற்படும். வாழ்வில் இதுவரை இப்படி சோதனைகளைக் கண்டதில்லை என்று நினைக்கும் அளவிற்கு நிலைமைகள் இருக்கும். ஒரு சிலருக்கு மருத்துவச் செலவு அதிகரிக்கும். இல்லையெனில் கடன் கொடுத்தவர்களால் அவமானத்திற்கு ஆளாக வேண்டிய நிலை உருவாகும். மார்ச் 6 க்கு மேல் சனி பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இதுவரை அனுபவித்த சங்கடங்கள் மாறும். வருமானத்திற்குரிய முயற்சிகள் வெற்றியாகும். தொழில், வியாபாரம் முன்னேற்றமடையும். கடன்கள் அடைபடும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும்.ராகு, கேது சஞ்சாரம்  8 ல் ராகு, 2 ல் கேது  சஞ்சரிப்பதால், ஒன்று போய் ஒன்று என்று நெருக்கடிக்கு ஆளாவீர்கள். வெளியில்தான் பிரச்னை என்றால் வீட்டிற்குள் நிம்மதி இல்லாமல் போகும். வருமானத்தில் தடைகள் உண்டாகும். உடல் பாதிப்பு, சிலருக்கு விபத்தும் ஏற்படும். தவறான பழக்க வழக்கங்களால் அவமானத்தை சந்திக்க நேரும். வியாபாரத்தில் செய்யும் முதலீடு காணாமல் போகும். சூரிய சஞ்சாரம் ஏப்.14 – ஜூன்16, செப்.17 – அக்.17, டிச.16 – 2026 ஜன. 14 காலங்களில் தன் 3,6,10,11 ம் இட சஞ்சாரங்களால் உங்கள் நிலையில் இருக்கும் சங்கடங்களை இல்லாமல் செய்வார். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார். பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். அக்கம் பக்கத்தினர், உறவினர் மத்தியில் செல்வாக்கை அதிகரிப்பார். ஆரோக்கிய குறைபாட்டை சீராக்குவார். இழுபறியாக இருந்த வழக்குகளை சாதகமாக்குவார்.  தொழிலில் லாபம், வேலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். இக்காலத்தில் உங்களுக்கிருந்த  பாதிப்பு, பிரச்னை இல்லாமல் போகும்.செவ்வாய் சஞ்சாரம்ஜூலை 30 – செப். 14, டிச. 6 – 2026 ஜன.14 காலங்களில் தன் 3, 6, ம் இட சஞ்சாரங்களால், உங்கள் நிலையை உயர்த்துவார். கடுமையான நெருக்கடிகளில் இருந்து விடுவிப்பார். எடுக்கும் வேலைகளை வெற்றியாக்குவார். தைரியமாக செயல்பட வைப்பார். தன்னம்பிக்கையை அதிகரிப்பார். முடியாது என நீங்கள் விட்டு விட்ட முயற்சிகளை மீண்டும் கையில் எடுத்து வெற்றி காண வைப்பார். வியாபாரம், தொழிலில் இருந்த பாதிப்பை நீக்குவார்.பொதுப்பலன் குருபகவான் சஞ்சாரத்தில் ஜூன் 6 முதல் ஜூலை 6 வரை அஸ்தமனம் அடைவதால் இக்காலத்தில் அவர் வழங்க வேண்டிய பலன்களை தர முடியாமல் போகும். அக்.8 முதல் நவ.18 வரை உங்கள் ராசிக்குள் உச்சமடையும் காலத்தில் நினைத்த வேலைகள் நடந்தேறும். தொடர்ந்து பார்வைகளால் பலன் கிடைப்பதுடன், சூரியன், செவ்வாய் சஞ்சாரமும் பெருமளவில் நன்மை தரும்.  தொழில்இக்காலத்தில் தொழிலில் புதிய முயற்சி, முதலீடுகளை தவிர்க்கவும். கடன் வாங்கி தொழிலை விரிவு செய்யலாம் என்ற எண்ணம் இருந்தால் அதைத் தவிர்ப்பது நல்லது. எந்த ஒன்றையும் உங்கள் பார்வையிலேயே செய்வது அவசியம். ஏற்றுமதி இறக்குமதி, டிரான்ஸ்போர்ட், வேளாண்மை, ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், உணவகம், மருத்துவம், கம்ப்யூட்டர், குடிநீர், பங்கு வர்த்தகம், கமிஷன் ஏஜன்சி வளர்ச்சி அடையும்.பணியாளர்கள் சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். புதிய வேலை, வேறு இடத்திற்கு முயற்சி செய்வதெல்லாம் இக்காலத்தில் வேண்டாம். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வதும், வேலையில் கவனமாக இருப்பதும் அவசியம். நிர்வாகத்தின் விருப்பப்படி செயல்படுவதால் நெருக்கடி இல்லாமல் போகும். அரசு பணியில் இருப்பவர்கள் மேலதிகாரியின் ஆலோசனையின்படி செயல்படுவது நன்மையாகும். ஒரு சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். பெண்கள் குருவின் பார்வைகள் உங்கள் நிலையை உயர்த்தும். படிப்பு, வேலை, திருமணம் என்ற கனவு நனவாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். மாங்கல்ய ஸ்தானத்தில் ராகு, குடும்ப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் எல்லாவற்றையும் அனுசரித்துச் செல்வது நன்மையளிக்கும். இல்லையெனில் குடும்பத்தில் பிரச்னைகள் உண்டாகும். கணவரின் உடல்நிலையின் மீது அக்கறை எடுப்பது நன்மையாகும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும்.கல்விபடிப்பின் மீது ஆர்வம் இருந்தாலும் அலட்சியமும் சோம்பலும் உங்களுக்கு எதிராகும் என்பதால் இக்காலத்தில் படிப்பில் அக்கறை கொள்வது நன்மையாகும். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும்.உடல்நிலை குரு விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும், அஷ்டம ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதும்  உடல்நிலையில் சங்கடத்தை ஏற்படுத்தும், மருத்துவச் செலவை உண்டாக்கும் என்பதால்  கவனமாக இருப்பது நன்மையாகும். விபத்து ஏற்படவும் வாய்ப்பிருப்பதால் வாகனப் பயணத்தில் இக்காலத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.குடும்பம் கணவன் மனைவி இடையே ஒற்றுமை இருக்கும் என்றாலும் குடும்பத்திற்குள் மூன்றாவது நபர் தலையிடுவதை தவிர்ப்பது நன்மையாகும். கடன் வாங்கியாவது வசதி வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்வீர்கள். புதிய வீட்டில் பால் காய்ச்சுவீர்கள். பிள்ளைகளின் உயர் கல்வி கனவை நனவாக்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்.பரிகாரம்: சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது நன்மை தரும். ஆயில்யம்.. செலவு அதிகரிக்கும்; வித்யா காரகனான புத பகவானை நட்சத்திர அதிபதியாகவும், மனக்காரகன் சந்திரனை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் திட்டமிட்டும், சாதுரியமாகவும் செயல்படக்கூடியவர்கள். பார்வைக்கு மென்மையானவராக தெரிந்தாலும் எடுத்த வேலையை முடிப்பதில் வல்லவராக இருப்பீர்கள். உங்களுக்கு பாக்கியங்களை தரக்கூடிய குரு பகவான் மே11 முதல் 12ம் இடத்தில் விரய குருவாக சஞ்சரிக்கிறார். உங்களுக்கு அவரே பாக்கியாதிபதி என்பதால் எதிர்பார்க்கும் நன்மை வழங்கி அதன் வழியே செலவுகளை மேற்கொள்ளும் நிலையை உண்டாக்குவார். வாழ்வில் உயர்வு பெற பாக்கிய ஸ்தானம் வலு பெற வேண்டும். பாக்கிய ஸ்தானாதிபதி நல்ல நிலையில் இருக்க வேண்டும். பாக்கியாதிபதியான குரு அவருக்கு நான்காம் வீட்டில் சஞ்சரிக்கும் போது வருமானத்தை வழங்கி அதில் இருந்து செலவுகளை ஏற்படுத்துவார். இக்காலத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி யாவும் ஆதாயம் தரும். குடும்ப நலன் கருதி பல்வேறு செயல்களில் ஈடுபடுவீர்கள். இடம், வீடு, வாகனம் வாங்குதல், பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக செலவு செய்தல் என்ற நிலை உண்டாகும். அக்.8 முதல் நவ.18 வரை உங்கள் ராசிக்குள் உச்சமாக சஞ்சரிப்பவர், வசதி வாய்ப்பை அதிகரிப்பார். திருமணம், குழந்தை பாக்கியம் என்ற கனவை நனவாக்குவார்.பார்வைகளின் பலன்குரு சஞ்சரிக்கும் இடத்தை விட அவர் பார்க்கும் இடங்களை பலப்படுத்துவார் என்பது விதி. இக்காலத்தில் உங்கள் ராசிக்கு 4, 6, 8 ம் இடங்களுக்கு குரு பார்வை உண்டாவதால், உடல் பாதிப்பு விலகி ஆரோக்கியம் மேம்படும். குடும்பம், நட்பு என்ற வட்டத்தில் மீண்டும் உங்களை இணைத்துக் கொள்வீர்கள். சிலர் புதிதாக நிலம், வாகனம் வாங்குவர். வீட்டை பழுது பார்த்து புதுப்பிப்பீர்கள். அசையா சொத்துகள் உங்கள் பெயரில் அமையும். எதிர்ப்பு, பகைவர் தொல்லை விலகி நிம்மதி அடைவீர்கள். இதுவரையில் சந்தித்த பிரச்னைகள் உங்களை விட்டு விலகும். வாழ்வில் புதிய நம்பிக்கை உண்டாகும். தொழில் மீண்டும் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும். வம்பு, வழக்கு, சண்டை, சச்சரவுகள் நீங்கி சாதகம் நிலவும்.  சனி சஞ்சாரம் 2026 மார்ச் 6 வரை சனி 8ல் சஞ்சரிப்பதால் உடல் பாதிப்பு, விபத்து, அவமானம் ஏற்படும். எந்த ஒன்றிலும் நிம்மதி என்பது இல்லாமல் போகும். அரசியல்வாதிகளுக்கு கவுரவ குறைச்சல் உண்டாகும். பணியாளர்களுக்கு விரும்பாத மாற்றம் ஏற்படலாம். சிலருக்கு வெளியூரில் வாழும் நிலை உண்டாகும். மார்ச் 6 க்கு மேல் சனி பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில் முன்னேற்றம் பெறும். எதிர்பார்த்த வருமானம் வரும். இதுவரை அனுபவித்த சங்கடங்கள் மாறும். ராகு, கேது சஞ்சாரம்  8ல் ராகு, 2ல் கேது  சஞ்சரிப்பதால் எதிர்பார்ப்பு இழுபறியாகும். வரவில் தடை உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை உருவாகும். கவுரவம், அந்தஸ்து, செல்வாக்கில் பின்னடைவு உண்டாகும். உடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். ஒன்று போய் ஒன்று என நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.சூரிய சஞ்சாரம் ஏப்.14 – ஜூன் 16, செப். 17 – அக். 17, டிச. 16 – 2026  ஜன.14 காலங்களில் தன் 3,6,10,11 ம் இட சஞ்சாரத்தால் செல்வாக்கை உயர்த்துவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். வழக்கில் சாதகமான நிலையை உருவாக்குவார். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி, லாபத்தை வழங்குவார். உங்களுக்கு இருக்கும் சங்கடங்களை இல்லாமல் செய்வார்.செவ்வாய் சஞ்சாரம்ஜூலை 30 – செப்.14, டிச.6 – 2026 ஜன.14 காலங்களில் 3, 6ம் இட சஞ்சாரத்தால் சங்கட நிலையில் இருக்கும் உங்களைப் பாதுகாப்பார். நீங்கள் எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார். செல்வாக்கை அதிகரிப்பார். வாழ்வை வளமாக்குவார். தொழிலில் இருந்த தடைகளை நீக்குவார்.பொதுப்பலன் ஜூன் 6 முதல் ஜூலை 6 வரை குரு அஸ்தமனம் அடைவதால் அவர் வழங்க வேண்டிய பலன்களை வழங்க முடியாமல் போகும். அக்.8 முதல் நவ.18 வரை உங்கள் ராசிக்குள் உச்சம் அடையும் காலத்தில் நீங்கள் நினைத்த வேலைகள் நடந்தேறும். அவருடைய பார்வைக்குரிய இடங்கள் சுபப்பலன்களை வழங்கும் என்பதுடன் சூரியன், செவ்வாய் சஞ்சாரமும் உங்கள் நிலையை உயர்த்தும்.தொழில் தொழிலில் கூடுதல் அக்கறை தேவை. எந்தவொரு வேலையாக இருந்தாலும் அதை உங்கள் மேற்பார்வையில் செய்வது அவசியம். புதிய முயற்சியோ, செய்துவரும் தொழிலை விரிவு செய்ய புதிய முதலீடோ இக்காலத்தில் வேண்டாம். பணியாளர்களை அனுசரித்துச் செல்வதும் அவர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை வழங்குவதும் நன்மை தரும். மினரல் வாட்டர், பால் பண்ணை, எக்ஸ்போர்ட், நிதி நிறுவனம், ரியல் எஸ்டேட், வேளாண்மை, ஹார்ட்வேர், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர், பங்கு வர்த்தகம் வளர்ச்சி அடையும்.பணியாளர்கள்இக்காலத்தில் செய்து வரும் வேலையில் கவனமாக இருப்பதும், நிர்வாகத்தை அனுசரித்துச் செல்வதும் நன்மை தரும். பணியாளர்கள் தவறான வழியில் செயல்பட ஆரம்பித்தால் மெமோ, இடமாற்றம்  ஏற்படும்.பெண்கள்உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். நீங்கள் சந்தித்து வந்த சங்கடங்களில் இருந்து விடுபடுவீர்கள். படிப்பு, வேலை, திருமணம் என்ற கனவு நனவாகும். கணவரின் ஆலோசனையை ஏற்று எந்த ஒன்றிலும் அதன்படி செயல்படுவது நன்மை தரும். கல்வி படிப்பின் மீது அக்கறை உண்டாகும் என்றாலும், தவறான நண்பர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகும். இக்காலத்தில் படிப்பில் அக்கறை கொள்வது அவசியம். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.உடல்நிலைஉடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். சிலருக்கு என்ன நோய் என்பதைத் தெரிந்து கொள்ளவே பல மருத்துவர்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். தொற்று, பரம்பரை நோய் என் மருத்துவச் செலவும் தொடரும். சிலர் விபத்தையும் சந்திக்க நேரலாம். குடும்பம் தன் குடும்பம் தன் பிள்ளைகள் என அளந்து வாழ்வதால் வேறு பிரச்னைகள் உண்டாகாது.  தம்பதியர் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதால் மூன்றாவது நபரால் குடும்பத்திற்குள் பிரச்னை உருவாகாது. இக்காலத்தில் கடன்பட்டாவது வீடு, வாகனம் என வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

மகம்.. நினைப்பது நடந்தேறும்; ஞான மோட்சக்காரகன் கேது பகவானை நட்சத்திர அதிபதியாகவும், ஆத்ம காரகன் சூரியனை ராசி நாதனாகவும் கொண்ட நீங்கள், நீதி, நியாயம், நேர்மை தவறாதவர்கள். பார்வைக்கு எளியவராக தெரிந்தாலும் செயலில் துணிச்சலை வெளிப்படுத்துவீர்கள். உங்களுக்கு பூர்வ புண்ணியாதிபதியான குரு பகவான், அவருக்கு சப்தம ஸ்தானமான மிதுனத்தில் மே11 முதல் லாப குருவாக சஞ்சரிக்கிறார். 11ம் வீட்டில் சஞ்சரிக்கும் குரு பகவான், நினைத்த காரியங்களை நினைத்தபடி நடத்தி வைப்பார். தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். பதவி உயர்விற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு அந்தஸ்து உயரும். புதிய தொழில் தொடங்க முயற்சி செய்பவர்களுக்கு இக்காலத்தில் அதற்குரிய வாய்ப்பு கிடைக்கும். புதிய வீடு, சொத்து வாங்கும் நிலை உண்டாகும். அக்.8 முதல் நவ.18 வரை உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர் திடீர் செலவுகளை அதிகரிப்பார். தொழில், வேலையில் நெருக்கடி உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும்.  சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். மற்ற காலங்களில் உங்கள் முயற்சி வெற்றியாகும்.பார்வைகளின் பலன்குருபகவான், தான் சஞ்சரிக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்களை வளப்படுத்துவார் என்பது பொது விதி. இக்காலத்தில் உங்கள் ராசிக்கு 3, 5, 7 ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால் இதுநாள் வரை இருந்த நெருக்கடிகள், தடைகள் விலகும். முயற்சிகள் வெற்றியாகும். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்கள் பலம் கூடும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்க முடியும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வேலையில் உண்டான மறைமுக எதிர்ப்பு விலகும். தொழில்  முன்னேற்றம் அடையும். திருமண வயதினருக்கு பொருத்தமான வரன் வரும். வேலை நிமித்தமாக பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவர். கருத்து வேறுபாடு ஏற்பட்டு டைவர்ஸ் செய்ய நினைத்தவர்கள் மனம் மாறுவர். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். கூட்டுத்தொழில் லாபம் அடையும். சொந்த வீடு, வாகனம் என்ற வசதியும் இக்காலத்தில் ஏற்படும்.சனி சஞ்சாரம்2026 மார்ச் 6 வரை சனி சப்தம ஸ்தானமான 7ல் சஞ்சரிப்பதால் உடல் பாதிப்பு ஏற்படும்.  வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். சுய கவுரவம் பாதிக்கப்படலாம். நன்றாகப் பழகியவர்களும் உங்களுக்கு எதிராக மாறலாம் என்றாலும், மிதுன குருவின் பார்வை 7ம் இடத்திற்கு உண்டாவதால் சனியால் உண்டாகும் பாதிப்பு மறையும். 2026 மார்ச் 6முதல் சனி 8ம் இடத்தில் அஷ்டமச்சனியாக சஞ்சரிப்பதால் எந்த ஒன்றிலும் நிம்மதி இல்லாத நிலை உருவாகும். வருமானம் குறையும். வேலையில் பிரச்னை அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். உடல்நிலையில் பாதிப்பு, விபத்து என மருத்துவச் செலவு அதிகரிக்கும். ராகு, கேது சஞ்சாரம் 7ல் ராகு சஞ்சரிப்பதால் வாழ்வில் தடுமாற்றம் உண்டாகும். தவறான நபர்களின் பழக்கம் ஏற்பட்டு அதனால் அவமானத்திற்கு ஆளாக நேரும். சிலருக்கு சட்ட சிக்கலும், பொருளாதார இழப்பும் ஏற்படலாம். மிதுன குருவின் பார்வை ஏழாம் இடத்திற்கு இருக்கும் வரை ராகுவால் உண்டாகும் பலன்கள் மாறும்.  இந்த நேரத்தில் ஜென்ம ராசிக்குள் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் போராட்ட நிலை ஏற்படும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை இல்லாமல் போகும். வழக்கமாக நடைபெற்ற வேலைகளில் கூட தடைகள் ஏற்படும். பொருளாதார நெருக்கடி அதிகரிக்கும்.சூரிய சஞ்சாரம் மே15 – ஜூலை16, அக்.18 – நவ.16, 2026 ஜன.14 – பிப்.21 காலங்களில் 10, 11, 3, 6 ம் இடங்களில் சஞ்சரிப்பதால் எதிர்பார்ப்பு நிறைவேறும். முன்னேற்றம் உண்டாகும். தொழில்,வியாபாரம் லாபம் அடையும். பணியாளர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வம்பு, வழக்குகள் முடிவிற்கு வரும். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும்.செவ்வாய் சஞ்சாரம்செப்.14 – அக்.27, 2026 ஜன.14 – பிப்.21 காலங்களில் 3, 6 ம் இடங்களில் சஞ்சரிப்பதால் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். தடைபட்டு வந்த வேலைகள் நடந்தேறும். உடல்நிலை சீராகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். செல்வாக்கு உயரும். எதிரிகள் பலம் இழப்பர்.பொதுப்பலன்லாப குருவின் காலம் முன்னேற்றமான காலமாகும். எல்லாவிதமான நன்மைகளையும் அடைவீர்கள். நீங்கள் எடுத்த வேலைகள் நடந்தேறும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். சொத்து சேர்க்கை உண்டாகும். ஜூன் 6 முதல் ஜூலை 6 வரை குரு பகவான் அஸ்தமனம் அடைவதால் இக்காலத்தில் அவர் வழங்க வேண்டிய பலன்களை வழங்க முடியாமல் போகும். ஜென்ம ராசிக்குள் கேது சஞ்சரிப்பதால் நெருக்கடிக்கு ஆளாக நேரும். என்றாலும் செவ்வாய், சூரியன் சஞ்சாரம் உங்களைப் பாதுகாக்கும்.தொழில் லாப ஸ்தானம் பலம் அடைவதால்  தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் கூடும். தொழில் வளர்ச்சிக்காக வாங்கிய கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். போக்குவரத்து, கம்ப்யூட்டர், எலக்ட்ரிக்கல், கால்நடை, இயந்திரம், மருத்துவம், ஏற்றுமதி, இறக்குமதி, ரியல் எஸ்டேட், வேளாண்மை, ஹார்டுவேர் தொழில்கள் லாபம் தரும்.பணியாளர்கள்வேலையில் இருந்த நெருக்கடி விலகும். உங்களின் திறமைக்கும் தகுதிக்கும் மரியாதை உண்டாகும். நிர்வாகத்தால் பாராட்டப்படுவீர்கள். அரசுப்பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். ஜென்ம ராசிக்குள் கேது சஞ்சரிப்பதால் ஆசைகளுக்கு இடம் கொடுக்காமல், தவறான வழியில் செல்லாமல், நேர்மையாக செயல்படுவது அவசியம்.பெண்கள்பூர்வ புண்ணியம், களத்திர ஸ்தானத்திற்கு குருபார்வை உண்டாவதால் குடும்பத்தில் சுபிட்ச நிலை இருக்கும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். திருமண வயதினருக்கு திருமணம் நிகழும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடல்நிலை சீராகும். பொருளாதாரம் உயரும். பொன், பொருள் சேரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். படிப்பு, வேலை வாய்ப்பு கனவுகள் நனவாகும்.கல்விபடிப்பில் பின் தங்கிய நிலை மாறும். ஐந்தாம் இடத்திற்கு குரு பார்வை உண்டாவதால் தேர்வில் அதிக மதிப்பெண் வரும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும். சிலர் வெளி மாநிலம், வெளிநாடு என மேற்கல்விக்காக செல்வர். உடல்நிலைசப்தம சனி, ராகுவிற்கு குருபார்வை உண்டானாலும், ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் கேது, அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகும் சனி உடல் பாதிப்பை உண்டாக்குவர். தொற்றுநோய், பரம்பரை நோய், விபத்துக்களை ஏற்படுத்தலாம் என்பதால் இக்காலத்தில் கவனமாக இருப்பது நல்லது. குடும்பம் லாபகுருவும் அவரது பார்வைகளும், சூரியன், செவ்வாய் சஞ்சார நிலை உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும்.  நீண்ட நாள் கனவு நனவாகும். இடம், வீடு, வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர்.பரிகாரம்: விநாயகரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.பூரம்.. அதிர்ஷ்டக்காரகன் சுக்கிர பகவானை நட்சத்திர அதிபதியாகவும், ஆத்ம காரகன் சூரியனை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள், நினைத்ததை சாதிக்கக் கூடியவர்கள். எடுத்த வேலையை முடிப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர்கள். உறவுகள் மத்தியிலும், வெளியிலும் எப்போதும் செல்வாக்குடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, மங்களக்காரகனான குருபகவான் மே11 முதல் லாப ஸ்தானமான 11ம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இக்காலத்தில் நீங்கள் எதிர்பார்த்த நன்மை, உடல்நிலையில் முன்னேற்றம், மனதில் மகிழ்ச்சி உண்டாகும். நீங்கள் நினைத்த ஒவ்வொன்றும் நினைத்தபடியே நடந்து முன்னேற்றம் காண்பீர்கள். வேலைவாய்ப்பு, பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். நண்பர், உறவினர் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். சிலருக்கு சொத்து வாங்கும் யோகம், மணவாழ்வில் முறிவு ஏற்பட்டவர்களுக்கு புதிய துணை அமையும். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். கோயில் தரிசனம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.பார்வைகளின் பலன் குருபகவான்  சஞ்சரிக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்களைப் சுபப்படுத்துவார் என்பது பொதுவிதி. இக்காலத்தில் உங்கள் ராசிக்கு 3, 5, 7 ம் இடங்களுக்கு குரு பார்வை உண்டாவதால் இதுவரை சோதனைகளை சந்தித்தவர்களுக்கு சாதனை புரியும் வாய்ப்பு உண்டாகும். சகோதர, சகோதரிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். உங்களுக்குள் துணிச்சலும், எதையும் சாதிக்கும் வலிமையும் உண்டாகும். நோய்கள் விலகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகள் வழியே பெருமை சேரும். அவர்களின் எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் உங்களை விட்டு விலகும். உங்களின் புத்திக் கூர்மை பளிச்சிடும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். உங்களை நம்புபவர்களை நல்வழியில் நடத்துவீர்கள். திருமணத்தடை விலகி மணவாழ்வு கைகூடும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். நண்பரால் ஆதாயம் உண்டாகும். உடலும் மனமும் பொலிவு பெறும். தடைபட்ட வேலைகள் நடைபெற ஆரம்பிக்கும்.சனி சஞ்சாரம்மிதுன ராசியில் குரு சஞ்சரிக்கும் நேரத்தில் சனிபகவான் உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் உங்களுக்கு பாதக பலன்கள் ஏற்படும் என்றாலும், குருவின் பார்வை 7ம் இட சனிக்கு உண்டாவதால் சனி வழங்கும் பாதிப்பு குறையும். 2026 மார்ச் 6 முதல் சனி 8ம் இடத்தில் அஷ்டமச்சனியாக சஞ்சரிக்கும் காலத்தில் நெருக்கடிகள் அதிகரிக்கும். சுமூகமாக நடைபெற்ற வேலைகளில் தடை, பிரச்னை ஏற்படும். உடல் பாதிப்பு ஏற்படும். வருமானத்தில் பிரச்னை, வேலையில் நெருக்கடி, கடன் தொல்லை, குடும்பத்தில் குழப்பம் என நிம்மதியற்ற நிலை உருவாகும்.ராகு, கேது சஞ்சாரம்ராகு 7ம் இடத்தில்  சஞ்சரிப்பதால் குடும்பம், தொழில், வேலை, வியாபாரம், ஆரோக்யம், ஒழுக்கம் என எல்லாவற்றிலும் சோதனை உண்டாகும். மிதுன குருவின் பார்வை ராகுவிற்கு இருக்கும் வரை ராகு வழங்கும் பாதகப் பலன்கள் உங்களை நெருங்காது. ஜென்ம ராசிக்குள் கேது சஞ்சரிப்பதால் செயலில் கவனம் தேவை. குறுக்கு வழியில் சம்பாதிக்க நினைப்பதும், தவறானவர் நட்பும் உங்கள் நிலையை மாற்றி விடும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை குறையும். வழக்கமாக செய்யும் வேலைகளில் தடை, பிரச்னை தோன்றும். பணியாளர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும்.சூரிய சஞ்சாரம் மே15 – ஜூலை16, அக்.18 – நவ.16, 2026 ஜன.14 – பிப்.21 காலங்களில் 10, 11, 3, 6 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியன் நெருக்கடிகளை இல்லாமல் செய்வார். நன்மைகளை அதிகரிப்பார். கடன்களை அடைக்க முடியாமல் அவதிப்பட்ட நிலையை மாற்றுவார். வியாபாரம், தொழிலில் லாபத்தை அதிகரிப்பார். பணியாளர்களுக்கு நிம்மதியை உண்டாக்குவார். வழக்கில் வெற்றி வழங்குவார். உடல்நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார்.செவ்வாய் சஞ்சாரம்செப். 14 – அக். 27, ஜன. 14 – பிப். 21 காலங்களில் 3, 6 ம் இடங்களில் சஞ்சரிப்பவர் சோர்ந்து கிடந்த உங்களைச் சுறுசுறுப்பாக்குவார். நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவார். எடுக்கும் முயற்சிகளை லாபமாக்குவார். ஆரோக்யத்தை மேம்படுத்துவார். நினைத்த வேலைகளை நடத்தி ஆதாயம் காண வைப்பார். எதிர்ப்புகளால் ஏற்பட்ட நெருக்கடிகளை இல்லாமல் செய்வார். வழக்கில் சாதகமான நிலையை உண்டாக்குவார்.பொதுப்பலன்மிதுனத்தில் குரு சஞ்சரிக்கும் காலமும், கடகத்தில் குரு வக்ரமடையும் காலமும் உங்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். முயற்சிகள் வெற்றியாகும். எடுக்கும் வேலைகள் லாபமாகும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். சொத்து சேர்க்கை உண்டாகும். ஜூன் 6 முதல் ஜூலை 6 வரை குரு பகவான் அஸ்தமனம் அடைவதால் இக்காலத்தில் அவர் வழங்க வேண்டிய பலன்களை வழங்க முடியாமல் போகும். ஜென்ம ராசிக்குள் கேது பகவான் சஞ்சரிப்பதால் சோதனைகளுக்கு ஆளாக வேண்டிவரும் என்றாலும், சூரியன், செவ்வாய் சஞ்சாரம் உங்களுக்கு நன்மைகளை அள்ளித்தரும்.தொழில் லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரித்து தைரியமாக செயல்படும் நிலயும், லாபத்தை அடையக்கூடிய நிலையையும் உண்டாக்குவதால் முடங்கிய தொழில்களும் இக்காலத்தில் முன்னேற்றம் பெறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். ஆடை ஆபரணம், ஜூவல்லரி, அழகு சாதனம், வாகன விற்பனை, கம்ப்யூட்டர், எலக்ட்ரிக்கல், மருத்துவம், ஏற்றுமதி இறக்குமதி, ரியல் எஸ்டேட், வேளாண்மை தொழில்கள் முன்னேற்றம் பெறும். பணியாளர்கள் லாப குருவால் மனக்கவலை விலகும். வேலை பார்க்கும் இடத்தில் உங்கள் திறமைக்கு மதிப்புண்டாகும். புதிய சலுகைகள் கிடைப்பதுடன், ஊதியமும் அதிகரிக்கும். சிலர் வேலைக்காக வெளிநாட்டிற்கு செல்வீர்கள். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த மாற்றமும், உயர்வும் உண்டாகும். ஜென்ம ராசிக்குள் கேது, மார்ச் 6 முதல் 8ல் சனி சஞ்சரிக்க உள்ளதால் தவறுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நன்மையாகும். அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவோருக்கு வேலையில் சிக்கல், மெமோ, இடமாற்றம், சஸ்பெண்ட் ஏற்படலாம்.பெண்கள் மிதுன குருவின் காலம் பெண்களுக்கு மேன்மையான காலம். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என கனவுகள் நனவாகும். குடும்பத்தில் வளமும், கணவன் மனைவிக்குள் ஒற்றுமையும் சிறக்கும். உடல் பாதிப்பு விலகும். பொருளாதாரம் உயரும். பொன், பொருள் சேரும். மார்ச் 6 முதல் மாங்கல்ய ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்கப் போவதால் கணவரின் நலனில் அக்கறை கொள்வது நல்லது. கல்வி படிப்பில் இருந்த தடைகள் விலகும். தவறான நட்புகளின் பிடியில் இருந்து விடுபட்டு ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பீர்கள். குருபார்வையால் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் வரும். விரும்பிய கல்லுாரியில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.உடல்நிலை ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் கேது, அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகும் சனியும் உங்கள் உடல் நிலையில் பாதிப்பை உண்டாக்குவர். சிலருக்கு என்ன நோய் என்பதை தெரிந்து கொள்ளவே அதிக நாட்கள் ஆகும். தொற்று, பரம்பரை நோய்கள், விபத்தை சந்திக்கலாம். குடும்பம் மிதுன குருவும், அவரது பார்வையும் குடும்பத்தில் இருந்த குறைகளை நீக்கும். அந்தஸ்து, கவுரவம், செல்வாக்கு உயரும். கணவன், மனைவிக்குள் புரிதல் உண்டாகும். ஒற்றுமை பலப்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். இடம் வீடு வாகனம் என்ற கனவு நனவாகும்.  பிள்ளைகளால் பெருமை உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடந்தேறும்.பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மை உண்டாகும். நினைத்தது நிறைவேறும்.உத்திரம்.. செல்வாக்கு உயரும்; ஆத்ம காரகனான சூரியனை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும், 1ம் பாதமான சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனே ராசி நாதனாகவும், 2,3,4ம் பாதங்களான கன்னியில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும் உள்ளனர்.உத்திரம் 1 ம் பாதத்தினருக்கு, மே11 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து, வாழ்வில் நன்மை உண்டாக்கப் போகிறார். செல்வம், செல்வாக்கை அதிகரிக்கப் போகிறார். வீடு, வாகனம், பட்டம், பதவி என வளமாக்கப் போகிறார். நீங்கள் இழந்தவற்றை மீண்டும் உங்களிடம்  சேர்க்கப் போகிறார். இதுவரை இருந்த நெருக்கடிகளை போக்கி, தடைபட்ட வேலைகளை நடத்தித் தருவார். எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தும், உடல்நிலையில் முன்னேற்றம், மன நிலையில் மகிழ்ச்சியை தருவார். 2,3,4 ம் பாதத்தினருக்கு ஜீவன ஸ்தானமான 10ம் இடத்தில் சஞ்சரித்து, தொழில் புரிவோருக்கு உழைப்பை அதிகரிப்பார். பணியாளர்களுக்கு பொறுப்பை உணர்த்துவார். வியாபாரிகளுக்கு அக்கறையை உண்டாக்குவார். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றத்தை ஏற்படுத்துவார். இதன் காரணமாகத் தான் ‘பத்தாமிட குரு பதவியைப் பறிப்பார்’ என நம் முன்னோர்கள் சொல்லி வைத்தனர். என்றாலும் நேர்மையானவர்களையும், உண்மையாக உழைப்பவர்களையும் குரு சோதனைக்கு ஆளாக்க மாட்டார். பார்வைகளின் பலன் குரு, தான் சஞ்சரிக்கும் இடத்தை விடவும் பார்க்கும் இடங்களை சுபப்படுத்துவார் என்பது பொதுவிதி. 1ம் பாதத்தினருக்கு தன் 5,7,9 ம் பார்வைகளை 3,5,7 ம் இடங்களுக்கு மே11 முதல் குரு வழங்குவதால் வாழ்வில் இருந்த சங்கடங்கள், நெருக்கடிகள் விலகும். எடுக்கும் முயற்சிகள் லாபமாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். திருமண வயதினருக்கு  மணமாலை ஏறும். வேலையின் காரணமாகவோ, கருத்து வேறுபாட்டின் காரணமாகவோ பிரிந்த தம்பதி சேருவர்.  செய்து வரும் தொழில் முன்னேற்றமடையும். வருமானம் உயரும். 2,3,4 ம் பாதத்தினருக்கு, 2,4,6 ம் இடங்களுக்கு மே11 முதல் குருபார்வை உண்டாவதால் குடும்பத்தில் இருந்த குழப்பம், பிரச்னைகள் விலகி  நிம்மதி உண்டாகும். எதிர்பார்த்த பணம் வரும். பொருளாதார நிலை உயரும். புதிய இடம், வாகனம் வாங்கும் கனவு நனவாகும். உடல் பாதிப்புகள் விலகும். வேலைத் தேடியவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். தொழில், வியாபாரம், வேலையில் ஏற்பட்ட போட்டி, எதிர்ப்பு விலகும். நோய் நொடி அகலும். இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றி உண்டாகும். வியாபாரத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்குவரும். சனி சஞ்சாரம்1 ம் பாதத்தினருக்கு 2026 மார்ச்6 வரை 7ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியால், குடும்பத்தில் குழப்பம், நட்புகளிடம் பகை, உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். ஆனாலும் மிதுன குருவின் பார்வை 7ம் இடத்து சனிக்கு உண்டாவதால் பாதிப்புகள் குறையும். 2026 மார்ச் 6 முதல் சனி 8 ம் இடத்தில் அஷ்டமச் சனியாக சஞ்சரிக்கும் காலத்தில் நெருக்கடி அதிகரிக்கும். உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். நிம்மதியற்ற நிலை உருவாகும். கடன், அவமானம், விபத்து என்ற நெருக்கடியும் சிலருக்கு ஏற்படும். பணியில் நெருக்கடி அதிகரிக்கும். 2,3,4 ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை சத்ரு ஜெய ஸ்தான சனியால் செல்வாக்கு உயரும். நினைப்பது நடக்கும். எந்த ஒன்றிலும் எதிர்ப்பில்லாத நிலை உருவாகும். வழக்கில் வெற்றியுண்டாகும். மார்ச் 6 க்கு மேல் தம்பதிக்குள் கருத்து வேறுபாடு, குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை. கூட்டுத்தொழிலில் நெருக்கடி. நண்பருக்குள் பிரச்னை, தவறான நபர்களின் சேர்க்கையால் பண இழப்பு, அலைச்சல், அவமானம் ஏற்படும்.ராகு, கேது சஞ்சாரம் 1 ம் பாதத்தினருக்கு 7ல் ராகு, கேது ஜென்ம ராசிக்குள் கேது சஞ்சரிப்பதால், குழப்பம் அதிகரிக்கும். தேவையற்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும். எடுக்கும் முயற்சிகள் இழுபறியாகும். குடும்பம், தொழில், வேலை, வியாபாரம், ஆரோக்யம் என அனைத்திலும் நெருக்கடி ஏற்படும். 2,3,4 ம் பாதத்தினருக்கு 6ல் ராகு, 12ல் கேது  சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த குழப்பம், போராட்டம், நெருக்கடிகள் முடிவிற்கு வரும்.  முயற்சிகள் வெற்றியாகும். நினைத்த வேலைகள் நடந்தேறும். உடல்நிலை சீராகும். செல்வாக்கு உயரும். வழக்கு வெற்றியாகும்.சூரிய சஞ்சாரம் 1ம் பாதத்தினருக்கு மே 15 – ஜூலை 16, அக். 18 – நவ. 16, ஜன 14 – பிப். 21 காலங்களிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு  ஜூன் 15 – ஆக.16, நவ.17 – டிச.15, பிப்.13 – மார்ச் 14 காலங்களிலும் தன் 10, 11, 3, 6 ம் இட சஞ்சாரங்களால் உங்களைப் பாதுகாப்பார். தொழில், வியாபாரம், வேலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார். உடல்நிலை, மன நிலையில் இருந்த சங்கடங்களை அகற்றுவார். செல்வாக்கை உயர்த்துவார். வழக்கில் வெற்றியை உண்டாக்குவார்.செவ்வாய் சஞ்சாரம்1ம் பாதத்தினருக்கு செப். 14 – அக். 27, ஜன. 14 – பிப். 21 காலங்களிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு, அக். 10 – டிச. 6, பிப். 21 – ஏப். 1 காலங்களிலும் தன் 3, 6 ம் இட சஞ்சாரங்களால் தைரியத்தை அதிகரிப்பார். துணிச்சலுடன் செயல்பட வைப்பார். எதிர்பார்த்த முன்னேற்றத்தை உண்டாக்குவார். நேரம், காலத்தினால் அடங்கிக் கிடந்த உங்கள் நிலையை மாற்றுவார். உடல்நலத்தை மேம்படுத்துவார். நினைத்த வேலைகளை நடத்தி ஆதாயம் காண வைப்பார். செல்வாக்கை உயர்த்துவார்.பொதுப்பலன்குருபகவான் சஞ்சாரத்தில் ஜூன் 6 முதல் ஜூலை 6 வரை அஸ்தமனம் அடைவதால் இக்காலத்தில் அவர் வழங்க வேண்டிய பலன்களை வழங்க முடியாமல் போகும். அக்.8 முதல் நவ.8 வரை கடகத்தில் உச்சமடையும் காலத்தில் 2,3,4 ம் பாதத்தினருக்கு யோகப் பலன் உண்டாகும். ஆறாமிட ராகு நினைத்ததை நடத்தி வைப்பார். குருபார்வைகளும், சூரிய, செவ்வாய் சஞ்சாரங்களும் 4 பாதத்தினருக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.தொழில் தொழில் மீது அக்கறை உண்டாகும். சிலர் தொழிலை விரிவு செய்வீர்கள். முடங்கிய தொழில்களை மீண்டும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சியும் இக்காலத்தில் வெற்றியாகும். பங்கு வர்த்தகம், ஆன்லைன் பிசினஸ், ஏற்றுமதி இறக்குமதி, நிதிநிறுவனம், ஆட்டோ மொபைல்ஸ், ரெடிமேட்ஸ், ஜூவல்லரி, அழகு சாதனம், வாகன விற்பனை, கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், டிரான்ஸ்போர்ட், பப்ளிகேஷன்ஸ் துறையினர் முன்னேற்றம் காண்பர். பணியாளர்கள்பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட சங்கடம், நெருக்கடி விலகும். உங்களின் திறமை வெளிப்படும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சிலர் பார்க்கும் வேலையை விட்டு விட்டு வேறு இடத்திற்கு மாறுவர். பணியாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.பெண்கள் குருபகவானின் பார்வை உங்கள் நிலையை உயர்த்தும். படிப்பு, வேலை, திருமணம் என்ற கனவு நனவாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உடல் பாதிப்பு மறையும். பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மனதில் நிம்மதி உண்டாகும்.கல்வி படிப்பின் மீது ஆர்வம் அதிகரிக்கும். பொதுத்தேர்வு, போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். வெற்றி உண்டாகும். விரும்பும் கல்லுாரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.உடல்நிலை அதிகபட்ச உழைப்பாலும், அலட்சிய புத்தியாலும் உடல் பாதிப்பு இருந்து கொண்டிருக்கும். பரம்பரை நோய், தொற்று நோய், நரம்புக் கோளாறு, சுவாசப் பிரச்னையால் சிரமப்படலாம். சிலர் விபத்தையும் சந்திக்க நேரிடலாம்.குடும்பம் குரு பகவானின் சஞ்சார நிலை, பார்வைகள் குடும்பத்தில் சுபிட்சத்தை ஏற்படுத்தும். பொருளாதார நிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். பொன், பொருள் வீடு, வாசல், வண்டி, வாகனம் என கனவு நனவாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். நீண்டநாள் கனவு நிறைவேறும். பரிகாரம்: அதிகாலையில் நீராடி சூரியனை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.

உத்திரம்.. செல்வாக்கு உயரும்; ஆத்ம காரகனான சூரியனை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும், 1ம் பாதமான சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனே ராசி நாதனாகவும், 2,3,4ம் பாதங்களான கன்னியில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும் உள்ளனர்.உத்திரம் 1 ம் பாதத்தினருக்கு, மே11 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து, வாழ்வில் நன்மை உண்டாக்கப் போகிறார். செல்வம், செல்வாக்கை அதிகரிக்கப் போகிறார். வீடு, வாகனம், பட்டம், பதவி என வளமாக்கப் போகிறார். நீங்கள் இழந்தவற்றை மீண்டும் உங்களிடம்  சேர்க்கப் போகிறார். இதுவரை இருந்த நெருக்கடிகளை போக்கி, தடைபட்ட வேலைகளை நடத்தித் தருவார். எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தும், உடல்நிலையில் முன்னேற்றம், மன நிலையில் மகிழ்ச்சியை தருவார். 2,3,4 ம் பாதத்தினருக்கு ஜீவன ஸ்தானமான 10ம் இடத்தில் சஞ்சரித்து, தொழில் புரிவோருக்கு உழைப்பை அதிகரிப்பார். பணியாளர்களுக்கு பொறுப்பை உணர்த்துவார். வியாபாரிகளுக்கு அக்கறையை உண்டாக்குவார். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றத்தை ஏற்படுத்துவார். இதன் காரணமாகத் தான் ‘பத்தாமிட குரு பதவியைப் பறிப்பார்’ என நம் முன்னோர்கள் சொல்லி வைத்தனர். என்றாலும் நேர்மையானவர்களையும், உண்மையாக உழைப்பவர்களையும் குரு சோதனைக்கு ஆளாக்க மாட்டார். பார்வைகளின் பலன் குரு, தான் சஞ்சரிக்கும் இடத்தை விடவும் பார்க்கும் இடங்களை சுபப்படுத்துவார் என்பது பொதுவிதி. 1ம் பாதத்தினருக்கு தன் 5,7,9 ம் பார்வைகளை 3,5,7 ம் இடங்களுக்கு மே11 முதல் குரு வழங்குவதால் வாழ்வில் இருந்த சங்கடங்கள், நெருக்கடிகள் விலகும். எடுக்கும் முயற்சிகள் லாபமாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். திருமண வயதினருக்கு  மணமாலை ஏறும். வேலையின் காரணமாகவோ, கருத்து வேறுபாட்டின் காரணமாகவோ பிரிந்த தம்பதி சேருவர்.  செய்து வரும் தொழில் முன்னேற்றமடையும். வருமானம் உயரும். 2,3,4 ம் பாதத்தினருக்கு, 2,4,6 ம் இடங்களுக்கு மே11 முதல் குருபார்வை உண்டாவதால் குடும்பத்தில் இருந்த குழப்பம், பிரச்னைகள் விலகி  நிம்மதி உண்டாகும். எதிர்பார்த்த பணம் வரும். பொருளாதார நிலை உயரும். புதிய இடம், வாகனம் வாங்கும் கனவு நனவாகும். உடல் பாதிப்புகள் விலகும். வேலைத் தேடியவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். தொழில், வியாபாரம், வேலையில் ஏற்பட்ட போட்டி, எதிர்ப்பு விலகும். நோய் நொடி அகலும். இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றி உண்டாகும். வியாபாரத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்குவரும். சனி சஞ்சாரம்1 ம் பாதத்தினருக்கு 2026 மார்ச்6 வரை 7ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியால், குடும்பத்தில் குழப்பம், நட்புகளிடம் பகை, உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். ஆனாலும் மிதுன குருவின் பார்வை 7ம் இடத்து சனிக்கு உண்டாவதால் பாதிப்புகள் குறையும். 2026 மார்ச் 6 முதல் சனி 8 ம் இடத்தில் அஷ்டமச் சனியாக சஞ்சரிக்கும் காலத்தில் நெருக்கடி அதிகரிக்கும். உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். நிம்மதியற்ற நிலை உருவாகும். கடன், அவமானம், விபத்து என்ற நெருக்கடியும் சிலருக்கு ஏற்படும். பணியில் நெருக்கடி அதிகரிக்கும். 2,3,4 ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை சத்ரு ஜெய ஸ்தான சனியால் செல்வாக்கு உயரும். நினைப்பது நடக்கும். எந்த ஒன்றிலும் எதிர்ப்பில்லாத நிலை உருவாகும். வழக்கில் வெற்றியுண்டாகும். மார்ச் 6 க்கு மேல் தம்பதிக்குள் கருத்து வேறுபாடு, குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை. கூட்டுத்தொழிலில் நெருக்கடி. நண்பருக்குள் பிரச்னை, தவறான நபர்களின் சேர்க்கையால் பண இழப்பு, அலைச்சல், அவமானம் ஏற்படும்.ராகு, கேது சஞ்சாரம் 1 ம் பாதத்தினருக்கு 7ல் ராகு, கேது ஜென்ம ராசிக்குள் கேது சஞ்சரிப்பதால், குழப்பம் அதிகரிக்கும். தேவையற்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும். எடுக்கும் முயற்சிகள் இழுபறியாகும். குடும்பம், தொழில், வேலை, வியாபாரம், ஆரோக்யம் என அனைத்திலும் நெருக்கடி ஏற்படும். 2,3,4 ம் பாதத்தினருக்கு 6ல் ராகு, 12ல் கேது  சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த குழப்பம், போராட்டம், நெருக்கடிகள் முடிவிற்கு வரும்.  முயற்சிகள் வெற்றியாகும். நினைத்த வேலைகள் நடந்தேறும். உடல்நிலை சீராகும். செல்வாக்கு உயரும். வழக்கு வெற்றியாகும்.சூரிய சஞ்சாரம் 1ம் பாதத்தினருக்கு மே 15 – ஜூலை 16, அக். 18 – நவ. 16, ஜன 14 – பிப். 21 காலங்களிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு  ஜூன் 15 – ஆக.16, நவ.17 – டிச.15, பிப்.13 – மார்ச் 14 காலங்களிலும் தன் 10, 11, 3, 6 ம் இட சஞ்சாரங்களால் உங்களைப் பாதுகாப்பார். தொழில், வியாபாரம், வேலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார். உடல்நிலை, மன நிலையில் இருந்த சங்கடங்களை அகற்றுவார். செல்வாக்கை உயர்த்துவார். வழக்கில் வெற்றியை உண்டாக்குவார்.செவ்வாய் சஞ்சாரம்1ம் பாதத்தினருக்கு செப். 14 – அக். 27, ஜன. 14 – பிப். 21 காலங்களிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு, அக். 10 – டிச. 6, பிப். 21 – ஏப். 1 காலங்களிலும் தன் 3, 6 ம் இட சஞ்சாரங்களால் தைரியத்தை அதிகரிப்பார். துணிச்சலுடன் செயல்பட வைப்பார். எதிர்பார்த்த முன்னேற்றத்தை உண்டாக்குவார். நேரம், காலத்தினால் அடங்கிக் கிடந்த உங்கள் நிலையை மாற்றுவார். உடல்நலத்தை மேம்படுத்துவார். நினைத்த வேலைகளை நடத்தி ஆதாயம் காண வைப்பார். செல்வாக்கை உயர்த்துவார்.பொதுப்பலன்குருபகவான் சஞ்சாரத்தில் ஜூன் 6 முதல் ஜூலை 6 வரை அஸ்தமனம் அடைவதால் இக்காலத்தில் அவர் வழங்க வேண்டிய பலன்களை வழங்க முடியாமல் போகும். அக்.8 முதல் நவ.8 வரை கடகத்தில் உச்சமடையும் காலத்தில் 2,3,4 ம் பாதத்தினருக்கு யோகப் பலன் உண்டாகும். ஆறாமிட ராகு நினைத்ததை நடத்தி வைப்பார். குருபார்வைகளும், சூரிய, செவ்வாய் சஞ்சாரங்களும் 4 பாதத்தினருக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.தொழில் தொழில் மீது அக்கறை உண்டாகும். சிலர் தொழிலை விரிவு செய்வீர்கள். முடங்கிய தொழில்களை மீண்டும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சியும் இக்காலத்தில் வெற்றியாகும். பங்கு வர்த்தகம், ஆன்லைன் பிசினஸ், ஏற்றுமதி இறக்குமதி, நிதிநிறுவனம், ஆட்டோ மொபைல்ஸ், ரெடிமேட்ஸ், ஜூவல்லரி, அழகு சாதனம், வாகன விற்பனை, கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், டிரான்ஸ்போர்ட், பப்ளிகேஷன்ஸ் துறையினர் முன்னேற்றம் காண்பர். பணியாளர்கள்பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட சங்கடம், நெருக்கடி விலகும். உங்களின் திறமை வெளிப்படும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சிலர் பார்க்கும் வேலையை விட்டு விட்டு வேறு இடத்திற்கு மாறுவர். பணியாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.பெண்கள் குருபகவானின் பார்வை உங்கள் நிலையை உயர்த்தும். படிப்பு, வேலை, திருமணம் என்ற கனவு நனவாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உடல் பாதிப்பு மறையும். பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மனதில் நிம்மதி உண்டாகும்.கல்வி படிப்பின் மீது ஆர்வம் அதிகரிக்கும். பொதுத்தேர்வு, போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். வெற்றி உண்டாகும். விரும்பும் கல்லுாரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.உடல்நிலை அதிகபட்ச உழைப்பாலும், அலட்சிய புத்தியாலும் உடல் பாதிப்பு இருந்து கொண்டிருக்கும். பரம்பரை நோய், தொற்று நோய், நரம்புக் கோளாறு, சுவாசப் பிரச்னையால் சிரமப்படலாம். சிலர் விபத்தையும் சந்திக்க நேரிடலாம்.குடும்பம் குரு பகவானின் சஞ்சார நிலை, பார்வைகள் குடும்பத்தில் சுபிட்சத்தை ஏற்படுத்தும். பொருளாதார நிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். பொன், பொருள் வீடு, வாசல், வண்டி, வாகனம் என கனவு நனவாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். நீண்டநாள் கனவு நிறைவேறும். பரிகாரம்: அதிகாலையில் நீராடி சூரியனை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.அஸ்தம்.. நல்லதே நடக்கும்: மனக்காரகனான சந்திரனை நட்சத்திர அதிபதியாகவும், வித்யா காரகனான புதனை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் திட்டமிட்டு செயல்படக் கூடியவர்கள். எந்த ஒன்றிலும் இரண்டு பக்கங்களையும் பார்க்கக் கூடியவர் என்பதால் உங்களால் எப்போதும் நினைத்ததை சாதிக்க முடியும். அதற்குரிய ஆற்றலும் கொண்ட உங்களுக்கு, விவேகம், வித்தை, அந்தஸ்தையும் வழங்கும் குரு மே 11 முதல், ஜீவன ஸ்தானமான 10ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். உங்கள் ராசிக்கு 10 ம் இடம் என்பது, உங்கள் ராசிநாதனின் ஆட்சி வீடு என்பதால் அவரது 10ம் இட சஞ்சாரம் பற்றி பயப்படத் தேவையில்லை. அதற்கும் மேலாக ஏழாம் வீடான நட்பு ஸ்தானத்தின் அதிபதி குரு என்பதால் உங்களுக்கு பாதிப்பை உண்டாக்க மாட்டார். 10 ம் இட குருவால் புதிய பதவி, தொழிலைக் கையில் எடுப்பீர்கள். தற்போது பார்த்து வரும் பணியை விட உயர்வான பணிக்கு மாற்றம் பெறுவீர்கள். தற்போதுள்ள இடத்தில்தான் மாற்றம் இருக்குமே தவிர அது உங்களுக்கு உயர்வானதாகவே இருக்கும்.பார்வைகளின் பலன் குரு, தான் சஞ்சரிக்கும் இடத்தைவிட, பார்க்கும் இடங்களை வளப்படுத்துவார் என்பது பொது விதி. இக்காலத்தில் உங்கள் ராசிக்கு 2,4,6 ம் இடங்களுக்கு குருப் பார்வை உண்டாகிறது. 2 ம் இடம் என்பது தன, குடும்ப, வாக்கு, நேத்திர ஸ்தானம் மட்டுமல்ல புகழை வெளிப்படுத்தும் இடமும் ஆகும். 4 ம் இடம் என்பது மாதுர் மற்றும் சுகம், வாகன ஸ்தானமாகும். 6 ம் இடம் என்பது ருண ரோக சத்ரு ஸ்தானமாகும். இந்த இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால் சுபநிகழ்ச்சி நடக்கும். செல்வாக்கு உயரும். மனதில் இருந்த சங்கடம் விலகும். பல வழியிலும் வருமானம் வர ஆரம்பிக்கும். இதுவரை இருந்த சங்கடம் விலகும். மனதில் இருந்த குழப்பங்கள் மறையும். வாழ்வில் முன்னேற்றப் பாதை தெரியும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் உண்டாகும். தாயாரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தாய் வழி உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும். கல்வியில் மேன்மை உண்டாகும். புதையல் கிடைத்ததுபோல் திடீர் யோகம் உண்டாகும். உடலில் இருந்த சங்கடம் விலகும். தீராத நோய்கள் தீரும். ஆரோக்யம் உண்டாகும். விரோதிகளால் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். வம்பு வழக்குகள் சாதகமாகும். வரவேண்டிய பணம் வரும். மனதில் மகிழ்ச்சி நிலைக்கும்.சனி சஞ்சாரம் 2026 மார்ச் 6 வரை சத்ரு ஜெய ஸ்தானமான 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியால் நினைத்ததை சாதிப்பீர்கள். எடுத்த வேலைகளை முடிப்பீர்கள். செல்வாக்கு உயரும். நினைப்பது நடந்தேறும். எந்த ஒன்றிலும் எதிர்ப்பும், போட்டியும் இல்லாத நிலை உருவாகும். உடல் பாதிப்புகள் விலகும். இழுபறி  வழக்குகள்  வெற்றியாகும். மார்ச் 6 முதல் 7 ம் இடத்தில் கண்டச் சனியாக சஞ்சரிப்பதால்  தம்பதிக்குள் கருத்து வேறுபாடு உண்டாகும். பொதுவாகவே களத்திரக்காரகன் உங்கள் ராசியில் நீச்சமடைபவர் என்பதால் இக்காலத்தில் துணையை அனுசரித்துச் செல்வது நல்லது. கூட்டுத் தொழிலில் நெருக்கடி ஏற்படும். நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடு உண்டாவதுடன் தவறான நட்பு ஏற்படும். அவர்களால் பண இழப்பு, அலைச்சல், அவமானம்,  நிம்மதியற்ற நிலை ஏற்படும்.ராகு, கேது சஞ்சாரம் 6ம் இட ராகுவால் உங்களின் நிலை உயரும். எடுத்த வேலையை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். முயற்சி வெற்றி பெறும்.  அரசியல், தொழில், வேலையில் இருந்த எதிர்ப்பு விலகும். செல்வாக்கு உயரும். உடல்நிலை சீராகும். வழக்கு வெற்றியாகும். மனதில் புதிய நம்பிக்கை உண்டாகும். 12ம் இட கேதுவால் செலவு அதிகரிக்கும். சிலர் இடம், நிலம், தங்கம் வாங்குவர். கல்வி, வேலை, தொழில் என சிலர் சொந்த ஊரை விட்டு வெளியூர் செல்வர்.சூரிய சஞ்சாரம் ஜூன் 15 – ஆக. 16, நவ. 17 – டிச. 15, பிப். 13 – மார்ச் 14 காலங்களில் தன் 10, 11, 3, 6 ம் இட சஞ்சாரங்களால் முன்னேற்றத்தை உண்டாக்குவார். வியாபாரம், தொழில், வேலையில் செல்வாக்கை ஏற்படுத்துவார். அரசுவழி முயற்சிகளில் வெற்றி அளிப்பார். அரசியல்வாதிகளின் கனவை நனவாக்குவார். பணப்புழக்கத்தை அதிகரிப்பார். உடல்நிலையில் இருந்த சங்கடத்தை போக்குவார். வழக்கில் வெற்றியை உண்டாக்குவார்.செவ்வாய் சஞ்சாரம்அக்.10 – டிச. 6, பிப்.21 – ஏப்.1 காலங்களிலும் தன் 3, 6 ம் இடங்களில் சஞ்சரிப்பதால் தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். புதிய நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்யம் மேம்படும். வழக்கு சாதகமாகும்.பொதுப்பலன்10 ம் இட குருவின் பார்வைகளும், 6 ம் இட சனி, ராகு சஞ்சாரமும் உங்கள் நிலையை உயர்த்தும். அக்.8 முதல் நவ.8 வரை 11ம் இடமான கடகத்தில் உச்சமடையும் காலத்தில் யோகப் பலன் அதிகரிக்கும். சூரிய, செவ்வாய் சஞ்சாரம் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.தொழில் தொழில் ஸ்தானத்தில் குரு, 6ம் இட ராகு, சனி சஞ்சரிக்கும் இக்காலத்தில் தொழில்மீது அக்கறை உண்டாகும். சிலர் தொழிலை விரிவு செய்வீர்கள். போட்டிகள் விலகும்.புதிய தொழில் முயற்சி வெற்றியாகும். கல்வி, நிதிநிறுவனம், நோட்டுப் புத்தகம் தயாரிப்பு, பங்கு வர்த்தகம், ஆன்லைன் பிசினஸ், ஒப்பந்தம்,  ஏற்றுமதி இறக்குமதி, ஜவுளி, குடிநீர், வேளாண்மை, ஜூவல்லரி, கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், டிரான்ஸ்போர்ட், பப்ளிகேஷன்ஸ், திரைப்படம், சின்னத்திரை, வலைதளம் தொழில்கள் முன்னேற்றமடையும்.பணியாளர்கள் அரசு பணியாளர்களுக்கு தடைபட்டு வந்த பதவி உயர்வு கிடைக்கும். வழக்கு விவகாரம் முடிவிற்கு வரும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் காண்பர். சிலர் பார்க்கும் வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்குச் செல்வீர்கள்.பெண்கள் சுக ஸ்தானமும், குடும்ப ஸ்தானமும் பலம் பெறுவதால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் பாதிப்பு விலகும். வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். தம்பதிகளுக்குள் இணக்கம் உண்டாகும்.கல்வி வித்யாகாரகன் வீட்டில் ஞானகாரகன் சஞ்சரிப்பதுடன் 2, 4 ம் இடங்களும் சுபம் பெறுவதால் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பொது, போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பும் கல்லுாரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் சேர்வீர்கள்.உடல்நிலை சுக ஸ்தானம் சுபிட்சம் பெறுவதாலும், ருண, ரோக ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதாலும் ஆரோக்யம் மேம்படும். உடலில் இருந்த சங்கடங்கள் விலகும். நீண்ட நாளாக தொடர்ந்த  மருத்துவச் செலவு குறையும்.குடும்பம் குடும்ப ஸ்தானம் சுபிட்சம் பெறுவதால் நெருக்கடி, பிரச்னை விலகும். பொருளாதார நிலை உயரும். தம்பதி ஒற்றுமை சிறக்கும். பொன், பொருள் சேரும். வீடு, வண்டி, வாகனம் என்ற கனவு நனவாகும். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.சித்திரை.. விருப்பம் நிறைவேறும்: ரத்தக்காரகன், யுத்தக்காரகனான செவ்வாயை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும், 1,2 ம் பாதங்களான கன்னியில் பிறந்தவர்களுக்கு புதன் ராசி நாதனாகவும், 3,4 ம் பாதங்களான துலாத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசி நாதனாகவும் உள்ளனர். சித்திரை 1,2 ம் பாதத்தினருக்கு, மே11 முதல் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரித்து, தொழிலிலும், வியாபாரத்திலும் அக்கறையை அதிகரிப்பார். பணியில் எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படுத்துவார். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சியை வெற்றியாக்குவார். முயற்சிக்கேற்ற ஆதாயம் அளிப்பார். 3,4 ம் பாதத்தினருக்கு பாக்ய ஸ்தானமான 9 ம் இடத்தில் சஞ்சரித்து, உங்கள் கனவுகளை நனவாக்குவார். பட்டம், பதவி, அந்தஸ்து, செல்வாக்கை உண்டாக்குவார். பொன் பொருள் சேர்க்கையுடன், வீடு, மனை, வாகனம் என வசதி வாய்ப்புகளை அதிகரிப்பார். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகளை விலக்குவார். சிலருக்கு குழந்தை பாக்கியத்தை அருள்வார். தடைபட்ட வேலைகளை நடத்தி வைப்பார். பணி, தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவார். எடுக்கும் வேலைகளை லாபமாக்குவார். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றத்தை  வழங்குவார். தொழில், வியாபாரத்தின் காரணமாக இருக்கும் இடத்தை விட்டு வெளியூரில் வசிக்க வேண்டிய நிலையை சிலருக்கு உண்டாக்குவார்.பார்வைகளின் பலன் குரு, தான் சஞ்சரிக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்களை வளப்படுத்துவார் என்பது பொது விதி. 1,2 ம் பாதத்தினருக்கு தன் 5,7,9 ம் பார்வைகளை 2,4,6 ம் இடங்களுக்கு வழங்குவதால், குடும்பத்தில் நெருக்கடி விலகும். வருமானத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். செல்வாக்கு உயரும். வருமானம் பல வழிகளில் வர ஆரம்பிக்கும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் உண்டாகும். தாயாரின் உடல்நலனில் முன்னேற்றம் ஏற்படும். கல்வியில் மேன்மை உண்டாகும்.  நோய்கள் தீரும். விரோதிகளால் ஏற்பட்ட சங்கடம்  நீங்கும். வம்பு, வழக்குகள் சாதகமாகும். 3,4 ம் பாதத்தினருக்கு, 1,3,5 ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால் நெருக்கடிகள் இல்லாமல் போகும். இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் உங்கள் நிலை மாறும். செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். வழக்கில் இருந்த சொத்துகள் கைக்கு வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். இளைஞர்களுக்கு காதல் தோன்றும். சகோதர, சகோதரிகளின் ஆதரவு உண்டு. வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். வேலையில் எதிர்பார்த்த உயர்வு ஏற்படும்.சனி சஞ்சாரம்1,2 ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியால், செல்வாக்கு உயரும். நோய் விலகும். எதிர்ப்புகள் மறையும். நினைத்ததை சாதிக்கவும், எடுத்த வேலைகளை முடிக்கவும் முடியும். மார்ச் 6 முதல் 7ம் இடத்தில் கண்டச்சனியாக சஞ்சரிக்கும் காலத்தில் தவறானவர்களின் நட்பு ஏற்படும். வாழ்க்கை தடுமாறும். தம்பதிக்குள் கருத்து வேறுபாடு, குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். கூட்டுத் தொழிலில் நெருக்கடியும், நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடும் தோன்றும். 3,4ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை பூர்வ, புண்ணிய, புத்திர ஸ்தான சனியால், குடும்பத்தில் பிரச்னைகளும் போராட்டமுமாக இருக்கும். பிள்ளைகளால் நெருக்கடி, அவமானம் உண்டாகும். பூர்வீக சொத்தில் பிரச்னை உண்டாகி உறவுகளுக்கும் உங்களுக்கும் இடைவெளி உண்டாகும். உயர் கல்வி முயற்சியில் தடைகளும், வியாபாரம், தொழிலில் எதிர்பார்ப்பு நிறைவேறாத நிலையும் ஏற்படும். மனம் குழப்பம் அடையும். மார்ச் 6 முதல் உங்களுக்கிருந்த நெருக்கடி இல்லாமல் போகும். உடல் நிலை, மனநிலை சீராகும். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். சொத்து விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட எதிர்ப்பு, போட்டி இருந்த இடம் தெரியாமல் போகும். நினைத்ததை சாதிக்கக்கூடிய நிலை உண்டாகும். வெளி வட்டாரத்தில்  செல்வாக்கு உயரும்.ராகு, கேது சஞ்சாரம் 1,2 ம் பாதத்தினருக்கு ராகு 6 ல், கேது 12 ல் சஞ்சரிப்பதால் வாழ்வில் ஏற்பட்ட நெருக்கடி, அவமானம், போராட்டம் விலகும். ஒரு பக்கம் செலவு அதிகரித்தாலும் மறுபக்கம் அதற்கேற்ற வருமானம் வரும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு விலகும். விலகிச் சென்ற நண்பர்கள் மீண்டும் தேடி வருவர். உடல்நிலை சீராகும். வழக்குகள் சாதகமாகும். 3,4ம் பாதத்தினருக்கு ராகு 5 ல், கேது 11 ல் சஞ்சரிப்பதால், குடும்பத்தில் பிரச்னைகளும், உறவினருக்குள் பகையும், சொத்து விவகாரத்தில் சண்டை சச்சரவுகளும், பிள்ளைகளால் அவமானமும் ஏற்படும். அதே நேரத்தில் வருமானம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றமடையும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். தேவை பூர்த்தியாகும்.சூரிய சஞ்சாரம் 1,2 ம் பாதத்தினருக்கு ஜூன் 15 – ஆக.16, நவ.17 – டிச.15, பிப்.13 – மார்ச் 14 காலங்களிலும், 3,4 ம் பாதத்தினருக்கு ஜூலை 17 – செப்.16, டிச.16 – ஜன.14, மார்ச்15 – ஏப்.13 காலங்களிலும் தன் 10, 11, 3, 6 ம் இட சஞ்சாரங்களால் தொழிலில் இருந்த தடைகளை நீக்குவார். வருமானத்தை அதிகரிப்பார். புதிய தொழில் தொடங்கும் முயற்சியை நிறைவேற்றி வைப்பார். வேலைக்காக எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார். உடல்நிலையில் இருந்த சங்கடங்களை அகற்றுவார். வழக்கில் வெற்றியை உண்டாக்குவார். செல்வாக்கை அதிகரிப்பார்.செவ்வாய் சஞ்சாரம்1,2 ம் பாதத்தினருக்கு,  அக்.10 – டிச.6, பிப்.21 – ஏப்.1 காலங்களிலும், 3,4 ம் பாதத்தினருக்கு, ஜூன் 8 – ஜூலை 29, டிச.6 – ஜன.14, ஏப்.1 – மே26 காலங்களிலும் 11, 3, 6 ம் இடங்களில் சஞ்சரிப்பதால் வருமானம் உயரும். தொழில் முன்னேற்றம் பெறும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். எதிரி தொல்லை விலகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். உடல்நிலை சீராகும். வழக்கு வெற்றியாகும்.பொதுப்பலன்குரு பகவான் சஞ்சாரத்தில் ஜூன் 6 முதல் ஜூலை 6 வரை அஸ்தமனம் அடைவதால் அவர் வழங்க வேண்டிய பலன்களை வழங்க முடியாமல் போகும். 1,2 ம் பாதத்தினருக்கு10ம் இட குருவின் பார்வைகளும், 6ம் இட சனி, ராகு சஞ்சாரமும், அக்.8 முதல் நவ.8 வரை கடகத்தில் உச்சமடையும் காலத்திலும், 3,4 ம் பாதத்தினருக்கு பாக்ய ஸ்தான குருவும், லாப கேதுவும், யோகப் பலன்களை வழங்குவர். 4ம் பாதத்தினருக்கும் சூரிய, செவ்வாய் சஞ்சாரங்கள் செல்வாக்கை உயர்த்தும். முன்னேற்றத்தை உண்டாக்கும்.தொழில் 1,2 ம் பாதத்தினருக்கு 10ல் குரு, 6ல் ராகு, சனி, 3,4 ம் பாதத்தினருக்கு பாக்ய ஸ்தானத்தில் குரு, லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்கும் இக்காலத்தில் தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். சிலர் தொழிலை வெளியூரிலும் விரிவு செய்வர். தொழிலில் எதிர்பார்த்த லாபம் தரும். வேளாண்மை, வேளாண்மை சார்ந்த பொருட்கள், மினரல் வாட்டர், குளிர்பானம், உணவகம், மருந்தகம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், கல்வி நிறுவனம், நிதிநிறுவனம், ஸ்டேஷனரி, பங்கு வர்த்தகம், ஆன்லைன் பிசினஸ், ஏற்றுமதி இறக்குமதி, கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், பப்ளிகேஷன்ஸ், சின்னத்திரை, வலைதளம் தொழில்கள் நல்ல லாபம் தரும். பணியாளர்கள்பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு உண்டாகும். செல்வாக்கு அதிகரிக்கும். தனியார் நிறுவன  பணியாளர்களுக்கு  எதிர்பார்த்த உயர்வும், ஊதியமும் கிடைக்கும்.பெண்கள் இக்காலம் மிகவும் யோக காலமாகும். படிப்பு, வேலை, திருமணம் என கனவுகள் நனவாகும். பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். சிலருக்கு பதவி உயர்வு, இடமாற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.  உறவினர்களின் ஆதரவு உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்.கல்விகுரு பகவானின் சஞ்சாரத்தால்  படிப்பில் இருந்த தடைகள் விலகும். வெற்றியை நோக்கி நடை போடுவீர்கள். படிப்பின் மீது ஆர்வம் கூடும். பொதுத்தேர்வு போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்வி கனவு நனவாகும்.உடல்நிலை உடலில் பாதிப்புகள் விலக ஆரம்பிக்கும். ஆரோக்கியம் சீராகும். மருத்துவச் செலவு குறையும். பரம்பரை நோய்களும் தொற்று நோய்களும் இயற்கை வைத்தியத்தால் குணமாகும்.குடும்பம் குடும்பத்தில் நெருக்கடி விலகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். கணவன், மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவர். பிள்ளைகளின் நலனில் அக்கறை கூடும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். பொன், பொருள் சேரும். வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். எதிர்கால தேவைக்காக சேமிப்பை உண்டாக்குவீர்கள்.பரிகாரம் : திருத்தணி முருகனை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

சித்திரை.. விருப்பம் நிறைவேறும்: ரத்தக்காரகன், யுத்தக்காரகனான செவ்வாயை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும், 1,2 ம் பாதங்களான கன்னியில் பிறந்தவர்களுக்கு புதன் ராசி நாதனாகவும், 3,4 ம் பாதங்களான துலாத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசி நாதனாகவும் உள்ளனர். சித்திரை 1,2 ம் பாதத்தினருக்கு, மே11 முதல் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரித்து, தொழிலிலும், வியாபாரத்திலும் அக்கறையை அதிகரிப்பார். பணியில் எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படுத்துவார். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சியை வெற்றியாக்குவார். முயற்சிக்கேற்ற ஆதாயம் அளிப்பார். 3,4 ம் பாதத்தினருக்கு பாக்ய ஸ்தானமான 9 ம் இடத்தில் சஞ்சரித்து, உங்கள் கனவுகளை நனவாக்குவார். பட்டம், பதவி, அந்தஸ்து, செல்வாக்கை உண்டாக்குவார். பொன் பொருள் சேர்க்கையுடன், வீடு, மனை, வாகனம் என வசதி வாய்ப்புகளை அதிகரிப்பார். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகளை விலக்குவார். சிலருக்கு குழந்தை பாக்கியத்தை அருள்வார். தடைபட்ட வேலைகளை நடத்தி வைப்பார். பணி, தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவார். எடுக்கும் வேலைகளை லாபமாக்குவார். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றத்தை  வழங்குவார். தொழில், வியாபாரத்தின் காரணமாக இருக்கும் இடத்தை விட்டு வெளியூரில் வசிக்க வேண்டிய நிலையை சிலருக்கு உண்டாக்குவார்.பார்வைகளின் பலன் குரு, தான் சஞ்சரிக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்களை வளப்படுத்துவார் என்பது பொது விதி. 1,2 ம் பாதத்தினருக்கு தன் 5,7,9 ம் பார்வைகளை 2,4,6 ம் இடங்களுக்கு வழங்குவதால், குடும்பத்தில் நெருக்கடி விலகும். வருமானத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். செல்வாக்கு உயரும். வருமானம் பல வழிகளில் வர ஆரம்பிக்கும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் உண்டாகும். தாயாரின் உடல்நலனில் முன்னேற்றம் ஏற்படும். கல்வியில் மேன்மை உண்டாகும்.  நோய்கள் தீரும். விரோதிகளால் ஏற்பட்ட சங்கடம்  நீங்கும். வம்பு, வழக்குகள் சாதகமாகும். 3,4 ம் பாதத்தினருக்கு, 1,3,5 ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால் நெருக்கடிகள் இல்லாமல் போகும். இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் உங்கள் நிலை மாறும். செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். வழக்கில் இருந்த சொத்துகள் கைக்கு வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். இளைஞர்களுக்கு காதல் தோன்றும். சகோதர, சகோதரிகளின் ஆதரவு உண்டு. வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். வேலையில் எதிர்பார்த்த உயர்வு ஏற்படும்.சனி சஞ்சாரம்1,2 ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியால், செல்வாக்கு உயரும். நோய் விலகும். எதிர்ப்புகள் மறையும். நினைத்ததை சாதிக்கவும், எடுத்த வேலைகளை முடிக்கவும் முடியும். மார்ச் 6 முதல் 7ம் இடத்தில் கண்டச்சனியாக சஞ்சரிக்கும் காலத்தில் தவறானவர்களின் நட்பு ஏற்படும். வாழ்க்கை தடுமாறும். தம்பதிக்குள் கருத்து வேறுபாடு, குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். கூட்டுத் தொழிலில் நெருக்கடியும், நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடும் தோன்றும். 3,4ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை பூர்வ, புண்ணிய, புத்திர ஸ்தான சனியால், குடும்பத்தில் பிரச்னைகளும் போராட்டமுமாக இருக்கும். பிள்ளைகளால் நெருக்கடி, அவமானம் உண்டாகும். பூர்வீக சொத்தில் பிரச்னை உண்டாகி உறவுகளுக்கும் உங்களுக்கும் இடைவெளி உண்டாகும். உயர் கல்வி முயற்சியில் தடைகளும், வியாபாரம், தொழிலில் எதிர்பார்ப்பு நிறைவேறாத நிலையும் ஏற்படும். மனம் குழப்பம் அடையும். மார்ச் 6 முதல் உங்களுக்கிருந்த நெருக்கடி இல்லாமல் போகும். உடல் நிலை, மனநிலை சீராகும். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். சொத்து விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட எதிர்ப்பு, போட்டி இருந்த இடம் தெரியாமல் போகும். நினைத்ததை சாதிக்கக்கூடிய நிலை உண்டாகும். வெளி வட்டாரத்தில்  செல்வாக்கு உயரும்.ராகு, கேது சஞ்சாரம் 1,2 ம் பாதத்தினருக்கு ராகு 6 ல், கேது 12 ல் சஞ்சரிப்பதால் வாழ்வில் ஏற்பட்ட நெருக்கடி, அவமானம், போராட்டம் விலகும். ஒரு பக்கம் செலவு அதிகரித்தாலும் மறுபக்கம் அதற்கேற்ற வருமானம் வரும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு விலகும். விலகிச் சென்ற நண்பர்கள் மீண்டும் தேடி வருவர். உடல்நிலை சீராகும். வழக்குகள் சாதகமாகும். 3,4ம் பாதத்தினருக்கு ராகு 5 ல், கேது 11 ல் சஞ்சரிப்பதால், குடும்பத்தில் பிரச்னைகளும், உறவினருக்குள் பகையும், சொத்து விவகாரத்தில் சண்டை சச்சரவுகளும், பிள்ளைகளால் அவமானமும் ஏற்படும். அதே நேரத்தில் வருமானம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றமடையும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். தேவை பூர்த்தியாகும்.சூரிய சஞ்சாரம் 1,2 ம் பாதத்தினருக்கு ஜூன் 15 – ஆக.16, நவ.17 – டிச.15, பிப்.13 – மார்ச் 14 காலங்களிலும், 3,4 ம் பாதத்தினருக்கு ஜூலை 17 – செப்.16, டிச.16 – ஜன.14, மார்ச்15 – ஏப்.13 காலங்களிலும் தன் 10, 11, 3, 6 ம் இட சஞ்சாரங்களால் தொழிலில் இருந்த தடைகளை நீக்குவார். வருமானத்தை அதிகரிப்பார். புதிய தொழில் தொடங்கும் முயற்சியை நிறைவேற்றி வைப்பார். வேலைக்காக எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார். உடல்நிலையில் இருந்த சங்கடங்களை அகற்றுவார். வழக்கில் வெற்றியை உண்டாக்குவார். செல்வாக்கை அதிகரிப்பார்.செவ்வாய் சஞ்சாரம்1,2 ம் பாதத்தினருக்கு,  அக்.10 – டிச.6, பிப்.21 – ஏப்.1 காலங்களிலும், 3,4 ம் பாதத்தினருக்கு, ஜூன் 8 – ஜூலை 29, டிச.6 – ஜன.14, ஏப்.1 – மே26 காலங்களிலும் 11, 3, 6 ம் இடங்களில் சஞ்சரிப்பதால் வருமானம் உயரும். தொழில் முன்னேற்றம் பெறும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். எதிரி தொல்லை விலகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். உடல்நிலை சீராகும். வழக்கு வெற்றியாகும்.பொதுப்பலன்குரு பகவான் சஞ்சாரத்தில் ஜூன் 6 முதல் ஜூலை 6 வரை அஸ்தமனம் அடைவதால் அவர் வழங்க வேண்டிய பலன்களை வழங்க முடியாமல் போகும். 1,2 ம் பாதத்தினருக்கு10ம் இட குருவின் பார்வைகளும், 6ம் இட சனி, ராகு சஞ்சாரமும், அக்.8 முதல் நவ.8 வரை கடகத்தில் உச்சமடையும் காலத்திலும், 3,4 ம் பாதத்தினருக்கு பாக்ய ஸ்தான குருவும், லாப கேதுவும், யோகப் பலன்களை வழங்குவர். 4ம் பாதத்தினருக்கும் சூரிய, செவ்வாய் சஞ்சாரங்கள் செல்வாக்கை உயர்த்தும். முன்னேற்றத்தை உண்டாக்கும்.தொழில் 1,2 ம் பாதத்தினருக்கு 10ல் குரு, 6ல் ராகு, சனி, 3,4 ம் பாதத்தினருக்கு பாக்ய ஸ்தானத்தில் குரு, லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்கும் இக்காலத்தில் தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். சிலர் தொழிலை வெளியூரிலும் விரிவு செய்வர். தொழிலில் எதிர்பார்த்த லாபம் தரும். வேளாண்மை, வேளாண்மை சார்ந்த பொருட்கள், மினரல் வாட்டர், குளிர்பானம், உணவகம், மருந்தகம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், கல்வி நிறுவனம், நிதிநிறுவனம், ஸ்டேஷனரி, பங்கு வர்த்தகம், ஆன்லைன் பிசினஸ், ஏற்றுமதி இறக்குமதி, கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், பப்ளிகேஷன்ஸ், சின்னத்திரை, வலைதளம் தொழில்கள் நல்ல லாபம் தரும். பணியாளர்கள்பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு உண்டாகும். செல்வாக்கு அதிகரிக்கும். தனியார் நிறுவன  பணியாளர்களுக்கு  எதிர்பார்த்த உயர்வும், ஊதியமும் கிடைக்கும்.பெண்கள் இக்காலம் மிகவும் யோக காலமாகும். படிப்பு, வேலை, திருமணம் என கனவுகள் நனவாகும். பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். சிலருக்கு பதவி உயர்வு, இடமாற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.  உறவினர்களின் ஆதரவு உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்.கல்விகுரு பகவானின் சஞ்சாரத்தால்  படிப்பில் இருந்த தடைகள் விலகும். வெற்றியை நோக்கி நடை போடுவீர்கள். படிப்பின் மீது ஆர்வம் கூடும். பொதுத்தேர்வு போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்வி கனவு நனவாகும்.உடல்நிலை உடலில் பாதிப்புகள் விலக ஆரம்பிக்கும். ஆரோக்கியம் சீராகும். மருத்துவச் செலவு குறையும். பரம்பரை நோய்களும் தொற்று நோய்களும் இயற்கை வைத்தியத்தால் குணமாகும்.குடும்பம் குடும்பத்தில் நெருக்கடி விலகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். கணவன், மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவர். பிள்ளைகளின் நலனில் அக்கறை கூடும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். பொன், பொருள் சேரும். வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். எதிர்கால தேவைக்காக சேமிப்பை உண்டாக்குவீர்கள்.பரிகாரம் : திருத்தணி முருகனை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.சுவாதி..குருபார்வை வந்தாச்சுயோகக்காரகனான ராகுவை நட்சத்திர அதிபதியாகவும், அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரனை ராசி நாதனாகவும் கொண்ட நீங்கள், திறம்பட செயல்படக் கூடியவர்கள். நினைத்ததை சாதிப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர்கள். எந்தவொரு வேலையைக் கையில் எடுத்தாலும் அதை முடிக்கும் ஆற்றல் பெற்றவர்களான உங்களுக்கு, தன் பார்வைகளின் வழியாகவே ஜாதகருக்கு சுபப்பலன் வழங்கும் குரு பகவான் மே 11 முதல் பாக்ய ஸ்தானமான 9ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். 9ம் இடம் என்பது பிதுர் ஸ்தானம், பாக்ய ஸ்தானம், தர்ம ஸ்தானமாகும். இந்த இடத்தை வைத்து தான் அரசாங்கத்தால், தந்தையால் அடையக் கூடிய நன்மையைத் தெரிந்து கொள்ளலாம். கிடைக்கப் போகும் பாக்கியம், செய்யப் போகும் புண்ணிய செயல்களை தெரிந்து கொள்ளலாம். 9 ம் இடத்திற்கு வரும் குருபகவான்  உடல்நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். மனதில் தைரியத்தை அதிகரிப்பார். தன்னம்பிக்கையை ஏற்படுத்துவார். பகைவர்களை உங்களிடம் சரணடைய வைப்பார். பிரச்னை என மன வருத்தம் எல்லாம் சூரியனைக் கண்ட பனியாக மறையும். திருமணம் கூடி வரவில்லையே என்ற கவலை தீரும்.  வீட்டில் மங்கள வாத்தியம் கேட்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையால் அந்தஸ்து உயரும். பொன், பொருள் சேரும்.  இருப்பிடத்தை சிலர் மாற்றம் செய்வீர்கள். சிலருக்கு வெளியூர் வாசம் அமையும். அதனால் நன்மையே உண்டாகும். கடல் கடந்து செல்ல நினைத்தவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு பதவி உயர்வு, இடமாற்றம் உண்டாகும். பொதுவில் இக்காலம் தொட்டதெல்லாம் துலங்கும். நினைத்தெல்லாம் நடக்கும்.பார்வைகளின் பலன் குரு தான் சஞ்சரிக்கும் இடத்தை விட, பார்க்கும் இடங்களை வளப்படுத்துவார் என்பது பொது விதி. இக்காலத்தில் உங்கள் ராசிக்கும், 3,5 ம் இடங்களுக்கும் குருபார்வை உண்டாவதால்,உங்களிடம் புதிய நம்பிக்கை உண்டாகும். ஆயுள் பற்றிய அச்சம் விலகும். புகழ், செல்வாக்கு அதிகரிக்கும். நினைத்ததை நடத்திக் கொள்ள முடியும். துணிச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் நிலவிய குழப்பம் முடிவிற்கு வரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். செல்லும் இடமெல்லாம் சிறப்பு உண்டாகும். தொழில் விருத்தியாகும். கடன் அடைபடும். நோய்கள் குணமாகும். அரசியல், எழுத்து, பேச்சு, செயல் எல்லாம் முன்னேற்றம் அடையும். தைரியம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குலதெய்வ வழிபாடு, ஆலய தரிசனம் என மனம் செல்லும். சகல சவுபாக்யங்களும் உண்டாகும்.சனி சஞ்சாரம்  2026 மார்ச் 6 வரை பூர்வ, புண்ணிய, புத்திர ஸ்தானமான 5 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியால், மனம் குழப்பமடையும். அனைத்திலும் இடையூறு, இன்னல்கள் தோன்றும். உங்கள் தகுதிக்கும் கீழானவர்களால் கலகம், பிரச்னை ஏற்படும். பிள்ளைகளால் நெருக்கடி, கணவன் மனைவிக்குள் பிரச்னை. தவறானவர்களின் நட்பால் அவமானம், பூர்வீகச் சொத்தில் பிரச்னை ஏற்படும். உயர் கல்வி முயற்சியில் தடை, வியாபாரம் தொழிலில் எதிர்பார்ப்பு நிறைவேறாத நிலை, கடன் தொல்லை ஏற்படும். மார்ச் 6 முதல் 6 ம் இடத்தில் சத்ரு ஜெய ஸ்தான சனியாக சஞ்சரிப்பதால், உடல் நிலையில், மனநிலையில் ஏற்பட்ட பாதிப்பு மறையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழில், பணி, அரசியல் வாழ்க்கை மேன்மை அடையும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் பலமிழந்து போவர். இழுபறி வழக்கு முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும். அந்தஸ்து உயரும். உங்கள் ஆற்றல் வெளிப்படும். உங்களுக்கிருந்த நெருக்கடிகள் விலகும். ராகு, கேது சஞ்சாரம் 5 ம் இட ராகுவால், எந்த ஒன்றிலும் நிம்மதியில்லா நிலை. தொழிலில் பிரச்சினைகள், உத்தியோகத்தில் சங்கடங்கள், குடும்பத்தில் நெருக்கடிகள், அந்நியரால் அவமானம், பிள்ளைகளால் மன உளைச்சல் என்று எதிர்மறையான பலன்கள் ஏற்படும் என்றாலும், 11 ம் இட கேதுவால், இதுவரை நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் விடிவு காலம் உண்டாகும். என்றோ செய்த முதலீடுகளில் இருந்து லாபம் வரும். செய்து வரும் தொழில் சிறப்படையும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஆனந்தம் என்று உண்டாகும். பொன் பொருள் சேரும். நீங்கள் எதிர்பார்த்து ஏக்கப்பட்டு கொண்டிருந்த ஒவ்வொன்றும் உங்கள் கைக்கு வரும். அலுவலகப் பணியில் ஏற்பட்ட பிரச்சினைகள், வழக்குகள் முடிவிற்குவரும். இக்காலத்தில் ஒரு சாதனையாளராக நீங்கள் நிமிர்ந்து நிற்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும்.சூரிய சஞ்சாரம்  ஜூலை17 - செப்.16, டிச.16 - ஜன.14, மார்ச் 15 - ஏப்.13 காலங்களில் தன் 10, 11, 3, 6 ம் இட சஞ்சாரத்தால் உங்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். அரசுவழி முயற்சிகளை வெற்றியாக்குவார். புதிய தொழில் தொடங்க வைப்பார். வேலை வாய்ப்பை உண்டாக்குவார். பணியாளர்களுக்கு பதவி உயர்வு தருவார். நினைத்ததை நடத்தி வைப்பார். தொழிலில் தடைகளை நீக்குவார். வருமானத்தை அதிகரிப்பார்.செவ்வாய் சஞ்சாரம்ஜூன் 8 - ஜூலை 29, டிச.6 - 2026 ஜன.14, ஏப்.1 - மே 26 காலங்களில் 11, 3, 6 ம் இடங்களில் சஞ்சரிப்பதால் தொட்டதெல்லாம் பொன்னாகும். நினைப்பதெல்லாம் நடந்தேறும். உடல்நிலை முன்னேற்றம் அடையும். உங்களை எதிர்த்தவர்கள் நிலை பலவீனமாகும். செய்து வரும் தொழில் முன்னேற்றமடையும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வழக்கு வெற்றியாகும்.பொதுப்பலன் பாக்ய குருவின் சஞ்சாரமும், அக். 8 முதல் நவ. 8 வரை கடக குருவின் பார்வைகளும், லாப கேதுவும், மார்ச் 6 முதல் 6 ம் இட சனியும், சூரிய, செவ்வாய் சஞ்சாரமும் போட்டி போட்டு உங்களுக்கு யோகப் பலன்களை வழங்குவர்.தொழில்  பாக்ய ஸ்தானத்தில் குரு, லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்கும் இக்காலத்தில் தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். போட்டியாளர்களால் தடைபட்ட வர்த்தகம் வளர்ச்சி அடையும். சிலர் தொழிலை வெளியூரிலும் விரிவு செய்வர். ஏற்றுமதி இறக்குமதி, கம்ப்யூட்டர், டிராவல்ஸ், கமிஷன் ஏஜன்சி, மினரல் வாட்டர், குளிர்பானம், உணவகம், ஆட்டோமொபைல்ஸ், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், பங்கு வர்த்தகம்,  ஆன்லைன் பிசினஸ், எலக்ட்ரானிக்ஸ், அலைபேசி, ஆயத்த ஆடை, நவீன சாதனம், பேன்சி ஸ்டோர், சின்னத்திரை, வலைதளம் தொழில்களில் வருமானம் கூடும்.பணியாளர்கள்பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். செல்வாக்கு அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பார்த்த ஊதியம், சலுகைகள் கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பணியில் இருந்த குற்றச்சாட்டுகளும், வழக்குகளும்  பொய்யானவை என்ற முடிவிற்கு வரும்.பெண்கள்குடும்பத்தில் நெருக்கடி விலகும். கணவன், மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். திருமண வயதினருக்கு நல்ல வரன் அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். பணியில் முன்னேற்றம் உண்டாகும்.கல்வி குரு பகவானின் சஞ்சாரமும், பார்வைகளும் சாதகமாக இருப்பதால் படிப்பில் புகழடையும் காலமாக இக்காலம் இருக்கும். படிப்பின்மீது ஆர்வம் கூடும். பொதுத்தேர்வு போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாடப்பிரிவில் சேர்வீர்கள்.உடல்நிலை உடல் நிலையில் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும், பரம்பரை, தொற்று நோயால் சங்கடம் உண்டாகும். பி.பி, சுகர் போன்றவற்றுக்கு சிகிச்சை தேவைப்படும் என்றாலும் நோய்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.குடும்பம் பாக்கிய குருவும், லாப கேதுவும் நன்மை வழங்க இருப்பதால், குடும்பத்தில் சங்கடம் விலகும். நிம்மதி உருவாகும். பொன், பொருள் சேரும். புதிய வீடு, வாகனம் அமையும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். பிள்ளைகளின் மேற்கல்வி, திருமணம், குழந்தை பேறு என கடமைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். உறவினரிடையே செல்வாக்கு அதிகரிக்கும். சேமிப்பு உயரும். பரிகாரம்: திருப்பதி வெங்கடேசப் பெருமாளை வழிபட வாழ்வில் நன்மை சேரும். விசாகம்.. முயற்சி வெற்றியாகும்: மங்களகாரகனான குருவை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2,3ம் பாதங்களான துலாமில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும், 4ம் பாதமான விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசிநாதனாகவும் உள்ளனர். விசாகம் 1,2,3ம் பாதத்தினருக்கு மே 11 முதல் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, தொழிலில் முன்னேற்றம், பணியில் எதிர்பார்த்த உயர்வு, ஆரோக்கியம், குழந்தை பாக்கியம்,  சமூக அந்தஸ்து, குடும்பத்தில் மகிழ்ச்சி, பணப்புழக்கம், படிப்பில் வெற்றியை வழங்குவார். 4ம் பாதத்தினருக்கு 8ம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, உடல்நலக்குறைவு, உறவினரிடம் விரோதம்,  தொழிலில் தடை, குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவார்.பார்வைகளின் பலன் குரு, தான் சஞ்சரிக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்குவார் என்பது பொது விதி. இக்காலத்தில் 1,2,3ம் பாதத்தினருக்கு தன் 5,7,9 ம் பார்வைகளை ஜென்ம ராசி மற்றும் 3, 5 ம் இடங்களுக்கு வழங்குவதால் இதுவரை இருந்த நெருக்கடி விலகும்.  கனவுகள் இப்போது நனவாகும். செல்வாக்கு உயரும். பொன், பொருள் சேரும். உடல் பாதிப்பு விலகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சகோதர சகோதரிகளின் ஆதரவு கூடும். குலதெய்வம், இஷ்ட தெய்வத்தின் ஆசி உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். 4 ம் பாதத்தினருக்கு, 12, 2, 4 ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால் வீண் செலவு கட்டுப்படும். நெருக்கடி குறையும். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலை தேடி வந்தவர்களுக்கு வேலையும், வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கும். எதிர்பாராத வரவு உண்டாகும். எதிரிகள் விலகிச் செல்வர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். உழைப்பு, அலைச்சல்களின் காரணமாக உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும். சகோதரரால் சங்கடம், நண்பர்களிடம் பகை  உண்டாகும். சனி சஞ்சாரம்1,2,3 ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை 5ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியால், மனம் குழப்பம் அடையும். பிள்ளைகளால் நெருக்கடி, கணவன் மனைவிக்குள் பிரச்னை, தவறானவர்களின் நட்பால் அவமானம், பூர்வீக சொத்தில் வழக்கு ஏற்படும். மார்ச் 6 முதல் 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியால், உடல் பாதிப்புகள் விலகும்.  பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். தொழில், உத்தியோகம் முன்னேற்றமடையும். எதிர்ப்பு விலகும்.  இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும். 4ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை, 4ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியால் உழைப்பு அதிகரிக்கும்.  தாயாரின் உடல்நிலையில் சங்கடம் தோன்றும். தாய்வழி உறவுகளால் சச்சரவுகள் தோன்றும். தவறான நட்பால் வாழ்வில் தடுமாற்றம் ஏற்படும். 2026 மார்ச் 6 முதல் 5ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகும் சனியால், மனதில் இருந்த நிம்மதி போகும். பிள்ளைகளைப் பற்றிய கவலை அதிகரிக்கும். உறவுகளுடன் பகை, உயர்கல்வி முயற்சியில் தடை, பூர்வீக சொத்தில் பிரச்னை ஏற்படும்.ராகு, கேது சஞ்சாரம்1,2,3 ம் பாதத்தினருக்கு ராகு 5 ல், கேது 11 ல் சஞ்சரிப்பதால் மனம் குழப்பமடையும், தொழிலில் பிரச்னை, வேலையில் சங்கடம், குடும்பத்தில் நெருக்கடி, அந்நியரால் அவமானம், பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பொன், பொருள் சேரும்.  அலுவலகப் பணியில் ஏற்பட்ட பிரச்னை, வழக்குகள் முடிவிற்கு வரும். 4ம் பாதத்தினருக்கு ராகு 4 ல், கேது 10 ல் சஞ்சரிப்பதால் சாதாரணமாக முடிய வேண்டிய வேலைகளில் இழுபறி ஏற்படும். உழைப்பு அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற ஆதாயம் இல்லை என்ற நிலை உருவாகும். தொழிலில் தடைகள் உண்டாகும்.  வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடி ஏற்படும். சிலர் இருக்கும் வேலையை விட்டு விட்டு வெளிநாட்டிற்கு செல்வர்.  சூரிய சஞ்சாரம்1,2,3 ம் பாதத்தினருக்கு  ஜூலை 17 – செப்.16, டிச.16 – 2026 ஜன. 14, மார்ச் 15 – ஏப். 13 காலங்களிலும், 4 ம் பாதத்தினருக்கு, ஏப். 14 – மே 14, ஆக. 17 – அக். 10, 2026 ஜன. 15 – பிப். 12 காலங்களிலும் தன் 3, 6, 10, 11 ம் இட சஞ்சாரங்களால் உங்களைப் பாதுகாப்பார். தொழில், வியாபாரம், வேலையில்  முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். மன நிலையில் தெளிவை உண்டாக்குவார். நினைத்த வேலைகளை நடத்தி வைப்பார். அரசுவழியில் ஆதாயத்தை ஏற்படுத்துவார். செல்வாக்கை அதிகரிப்பார். செவ்வாய் சஞ்சாரம்1,2,3 ம்  பாதத்தினருக்கு ஜூன் 8 – ஜூலை 29, டிச. 6 – 2026 ஜன. 14, ஏப். 1 – மே 26 காலங்களிலும், ஜூலை 30 – செப். 14, 2026 ஜன. 14 – பிப். 21 காலங்களிலும் தன் 3, 6, 11 ம் இட சஞ்சாரங்களால் முயற்சியை வெற்றியாக்குவார். செயல்களை லாபமாக்குவார். கனவுகளை நனவாக்குவார். தடைபட்ட வேலைகளை நடத்தி வைப்பார். ஆரோக்கியத்தை அதிகரிப்பார். செல்வாக்கை உயர்த்துவார். வழக்கை வெற்றியாக்குவார்.பொதுப்பலன்1,2,3 ம் பாதத்தினருக்கு பாக்ய குருவின் சஞ்சாரமும், அக்.8 முதல் நவ. 8 வரை கடக குருவின் பார்வைகளும், லாப கேதுவும், மார்ச் 6 முதல் 6 ம் இட சனியும், 4 ம் பாதத்தினருக்கு குருவின் பார்வைகளும், அக். 8 முதல் நவ. 8 வரை கடக குருவும், 4 பாதத்தினருக்கும் சூரியனும், செவ்வாயும் யோகப் பலன்களை வழங்க காத்திருக்கின்றனர்.தொழில் தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். போட்டியாளர்களால் ஏற்பட்ட இடையூறு விலகும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கம்ப்யூட்டர், ஷேர் மார்க்கெட், கமிஷன் ஏஜன்சி, ஜூவல்லரி, ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், வேளாண்மை, ஏற்றுமதி இறக்குமதி, மினரல் வாட்டர், குளிர்பானம், உணவகம், ஆன்லைன் பிசினஸ், எலக்ட்ரானிக்ஸ், அலைபேசி, நவீன சாதனங்கள் தொழில்கள் முன்னேற்றம் பெறும். பணியாளர்கள்பணிபுரியும் இடத்தில் பணிச்சுமை ஏற்பட்டாலும் அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும். திறமைக்கு மதிப்புண்டாகும். எதிர்பார்த்த சலுகை, ஊதியம் கிடைக்கும். சிலர் பார்க்கும் வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்குச் செல்வர். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். பெண்கள் குரு பகவானின் சஞ்சாரம், பார்வைகளால் எதிர்பார்ப்பு பூர்த்தியாக்கும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். படிப்பு, வேலை, திருமணம் என்ற கனவுகள் நனவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன், மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களின் ஏக்கம் தீரும். பொன், பொருள் சேரும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.கல்விமாணவர்களுக்கு இக்காலம் யோக காலமாக அமையும். பொதுத்தேர்வு, போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். தகுதியின் அடிப்படையில் விரும்பிய கல்லுாரியில் விரும்பிய பாடப்பிரிவில் சேர்வீர்கள்.உடல்நிலை1,2,3 ம் பாதத்தினருக்கு உடல் பாதிப்புகள் மருத்துவத்தால் குணமாகும். பரம்பரை நோய்கள், தொற்று நோய்கள், பி.பி, சுவாசக்கோளாறு, சுகர் என அவதிப்பட்ட நிலை மாறும். 4 ம் பாதத்தினருக்கு உடல்நிலையில் ஏதேனும் ஒரு சங்கடம் இருந்து கொண்டிருக்கும். குடும்பம்குருவின் சஞ்சார நிலையும், பார்வைகளும் குடும்ப நெருக்கடிகளை நீக்கும். தம்பதி ஒற்றுமை சிறக்கும். செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும்.  பிள்ளைகளின் படிப்பு, வேலை, திருமணம் என்ற கனவு நனவாகும். புதிய வாகனம், சொத்து சேரும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். சிலர் புதுவீட்டில் பால் காய்ச்சுவர்.பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

விசாகம்.. முயற்சி வெற்றியாகும்: மங்களகாரகனான குருவை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2,3ம் பாதங்களான துலாமில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும், 4ம் பாதமான விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசிநாதனாகவும் உள்ளனர். விசாகம் 1,2,3ம் பாதத்தினருக்கு மே 11 முதல் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, தொழிலில் முன்னேற்றம், பணியில் எதிர்பார்த்த உயர்வு, ஆரோக்கியம், குழந்தை பாக்கியம்,  சமூக அந்தஸ்து, குடும்பத்தில் மகிழ்ச்சி, பணப்புழக்கம், படிப்பில் வெற்றியை வழங்குவார். 4ம் பாதத்தினருக்கு 8ம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, உடல்நலக்குறைவு, உறவினரிடம் விரோதம்,  தொழிலில் தடை, குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவார்.பார்வைகளின் பலன் குரு, தான் சஞ்சரிக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்குவார் என்பது பொது விதி. இக்காலத்தில் 1,2,3ம் பாதத்தினருக்கு தன் 5,7,9 ம் பார்வைகளை ஜென்ம ராசி மற்றும் 3, 5 ம் இடங்களுக்கு வழங்குவதால் இதுவரை இருந்த நெருக்கடி விலகும்.  கனவுகள் இப்போது நனவாகும். செல்வாக்கு உயரும். பொன், பொருள் சேரும். உடல் பாதிப்பு விலகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சகோதர சகோதரிகளின் ஆதரவு கூடும். குலதெய்வம், இஷ்ட தெய்வத்தின் ஆசி உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். 4 ம் பாதத்தினருக்கு, 12, 2, 4 ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால் வீண் செலவு கட்டுப்படும். நெருக்கடி குறையும். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலை தேடி வந்தவர்களுக்கு வேலையும், வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கும். எதிர்பாராத வரவு உண்டாகும். எதிரிகள் விலகிச் செல்வர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். உழைப்பு, அலைச்சல்களின் காரணமாக உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும். சகோதரரால் சங்கடம், நண்பர்களிடம் பகை  உண்டாகும். சனி சஞ்சாரம்1,2,3 ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை 5ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியால், மனம் குழப்பம் அடையும். பிள்ளைகளால் நெருக்கடி, கணவன் மனைவிக்குள் பிரச்னை, தவறானவர்களின் நட்பால் அவமானம், பூர்வீக சொத்தில் வழக்கு ஏற்படும். மார்ச் 6 முதல் 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியால், உடல் பாதிப்புகள் விலகும்.  பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். தொழில், உத்தியோகம் முன்னேற்றமடையும். எதிர்ப்பு விலகும்.  இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும். 4ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை, 4ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியால் உழைப்பு அதிகரிக்கும்.  தாயாரின் உடல்நிலையில் சங்கடம் தோன்றும். தாய்வழி உறவுகளால் சச்சரவுகள் தோன்றும். தவறான நட்பால் வாழ்வில் தடுமாற்றம் ஏற்படும். 2026 மார்ச் 6 முதல் 5ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகும் சனியால், மனதில் இருந்த நிம்மதி போகும். பிள்ளைகளைப் பற்றிய கவலை அதிகரிக்கும். உறவுகளுடன் பகை, உயர்கல்வி முயற்சியில் தடை, பூர்வீக சொத்தில் பிரச்னை ஏற்படும்.ராகு, கேது சஞ்சாரம்1,2,3 ம் பாதத்தினருக்கு ராகு 5 ல், கேது 11 ல் சஞ்சரிப்பதால் மனம் குழப்பமடையும், தொழிலில் பிரச்னை, வேலையில் சங்கடம், குடும்பத்தில் நெருக்கடி, அந்நியரால் அவமானம், பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பொன், பொருள் சேரும்.  அலுவலகப் பணியில் ஏற்பட்ட பிரச்னை, வழக்குகள் முடிவிற்கு வரும். 4ம் பாதத்தினருக்கு ராகு 4 ல், கேது 10 ல் சஞ்சரிப்பதால் சாதாரணமாக முடிய வேண்டிய வேலைகளில் இழுபறி ஏற்படும். உழைப்பு அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற ஆதாயம் இல்லை என்ற நிலை உருவாகும். தொழிலில் தடைகள் உண்டாகும்.  வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடி ஏற்படும். சிலர் இருக்கும் வேலையை விட்டு விட்டு வெளிநாட்டிற்கு செல்வர்.  சூரிய சஞ்சாரம்1,2,3 ம் பாதத்தினருக்கு  ஜூலை 17 – செப்.16, டிச.16 – 2026 ஜன. 14, மார்ச் 15 – ஏப். 13 காலங்களிலும், 4 ம் பாதத்தினருக்கு, ஏப். 14 – மே 14, ஆக. 17 – அக். 10, 2026 ஜன. 15 – பிப். 12 காலங்களிலும் தன் 3, 6, 10, 11 ம் இட சஞ்சாரங்களால் உங்களைப் பாதுகாப்பார். தொழில், வியாபாரம், வேலையில்  முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். மன நிலையில் தெளிவை உண்டாக்குவார். நினைத்த வேலைகளை நடத்தி வைப்பார். அரசுவழியில் ஆதாயத்தை ஏற்படுத்துவார். செல்வாக்கை அதிகரிப்பார். செவ்வாய் சஞ்சாரம்1,2,3 ம்  பாதத்தினருக்கு ஜூன் 8 – ஜூலை 29, டிச. 6 – 2026 ஜன. 14, ஏப். 1 – மே 26 காலங்களிலும், ஜூலை 30 – செப். 14, 2026 ஜன. 14 – பிப். 21 காலங்களிலும் தன் 3, 6, 11 ம் இட சஞ்சாரங்களால் முயற்சியை வெற்றியாக்குவார். செயல்களை லாபமாக்குவார். கனவுகளை நனவாக்குவார். தடைபட்ட வேலைகளை நடத்தி வைப்பார். ஆரோக்கியத்தை அதிகரிப்பார். செல்வாக்கை உயர்த்துவார். வழக்கை வெற்றியாக்குவார்.பொதுப்பலன்1,2,3 ம் பாதத்தினருக்கு பாக்ய குருவின் சஞ்சாரமும், அக்.8 முதல் நவ. 8 வரை கடக குருவின் பார்வைகளும், லாப கேதுவும், மார்ச் 6 முதல் 6 ம் இட சனியும், 4 ம் பாதத்தினருக்கு குருவின் பார்வைகளும், அக். 8 முதல் நவ. 8 வரை கடக குருவும், 4 பாதத்தினருக்கும் சூரியனும், செவ்வாயும் யோகப் பலன்களை வழங்க காத்திருக்கின்றனர்.தொழில் தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். போட்டியாளர்களால் ஏற்பட்ட இடையூறு விலகும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கம்ப்யூட்டர், ஷேர் மார்க்கெட், கமிஷன் ஏஜன்சி, ஜூவல்லரி, ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், வேளாண்மை, ஏற்றுமதி இறக்குமதி, மினரல் வாட்டர், குளிர்பானம், உணவகம், ஆன்லைன் பிசினஸ், எலக்ட்ரானிக்ஸ், அலைபேசி, நவீன சாதனங்கள் தொழில்கள் முன்னேற்றம் பெறும். பணியாளர்கள்பணிபுரியும் இடத்தில் பணிச்சுமை ஏற்பட்டாலும் அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும். திறமைக்கு மதிப்புண்டாகும். எதிர்பார்த்த சலுகை, ஊதியம் கிடைக்கும். சிலர் பார்க்கும் வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்குச் செல்வர். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். பெண்கள் குரு பகவானின் சஞ்சாரம், பார்வைகளால் எதிர்பார்ப்பு பூர்த்தியாக்கும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். படிப்பு, வேலை, திருமணம் என்ற கனவுகள் நனவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன், மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களின் ஏக்கம் தீரும். பொன், பொருள் சேரும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.கல்விமாணவர்களுக்கு இக்காலம் யோக காலமாக அமையும். பொதுத்தேர்வு, போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். தகுதியின் அடிப்படையில் விரும்பிய கல்லுாரியில் விரும்பிய பாடப்பிரிவில் சேர்வீர்கள்.உடல்நிலை1,2,3 ம் பாதத்தினருக்கு உடல் பாதிப்புகள் மருத்துவத்தால் குணமாகும். பரம்பரை நோய்கள், தொற்று நோய்கள், பி.பி, சுவாசக்கோளாறு, சுகர் என அவதிப்பட்ட நிலை மாறும். 4 ம் பாதத்தினருக்கு உடல்நிலையில் ஏதேனும் ஒரு சங்கடம் இருந்து கொண்டிருக்கும். குடும்பம்குருவின் சஞ்சார நிலையும், பார்வைகளும் குடும்ப நெருக்கடிகளை நீக்கும். தம்பதி ஒற்றுமை சிறக்கும். செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும்.  பிள்ளைகளின் படிப்பு, வேலை, திருமணம் என்ற கனவு நனவாகும். புதிய வாகனம், சொத்து சேரும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். சிலர் புதுவீட்டில் பால் காய்ச்சுவர்.பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.அனுஷம்.. விடாமுயற்சி தேவைகர்மக்காரகனான சனியை நட்சத்திர அதிபதியாகவும், சகோதர காரகனான செவ்வாயை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள், கையில் எடுத்த வேலையை வெற்றிகரமாக முடிப்பதில் திறமைசாலிகள். அச்சம் என்பதை அறியாத நீங்கள் மற்றவரால் செய்ய முடியாத செயல்களை செய்வதில் ஆற்றல் மிக்கவராக இருப்பீர்கள். ஒரு முடிவிற்கு நீங்கள் வந்துவிட்டால் அதை எவராலும் மாற்ற முடியாமல் போகும். அத்தகைய வலிமை கொண்ட உங்களுக்கு குரு பகவான் மே11 முதல் 8ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். 8ம் இடம் என்பது ஆயுள் ஸ்தானம், அஷ்டம ஸ்தானம், மறைவு ஸ்தானம் என கூறலாம். 8 ம் வீட்டில் குரு சஞ்சரிக்கும் போதெல்லாம் சங்கடம், நெருக்கடி தோன்றும். செல்வாக்கு குறையும். ராசிக்கு 8 ம் வீட்டில் குரு சஞ்சரிக்கும் காலத்தில், அரசாளும் மன்னனாக இருந்தாலும் அவனது செல்வாக்கு, சொல்வாக்கு எல்லாமும் மறைய வாய்ப்புண்டு. பார்வைகளின் பலன் குரு, தான் சஞ்சரிக்கும் இடத்தை விட, பார்க்கும் இடங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்குவார் என்பது பொது விதி. இக்காலத்தில் உங்கள் ராசிக்கு 12, 2, 4 ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால், பலவகையிலும் செலவுகள் அதிகரிக்கும். அதே நேரத்தில் குழப்பம் இல்லாமல் நிம்மதியாக உறங்கினோம் என்ற நிலை ஏற்படும். சுபச் செலவுகள் ஏற்படும். புதிதாக இடம் வாங்குதல், வீடு வாங்குதல், இருக்கும் வீட்டைப் புதுப்பித்து ரசனைக்கேற்ற விதத்தில் மாற்றுதல் என செலவுகள் ஏற்படும். குடும்பத்தை நிர்வகிப்பதற்கு தேவையான பணம் கிடைக்கும். கடனாக கேட்ட இடத்தில் இருந்தும் பணம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பயணத்தின் வழியே நன்மை உண்டாகும். பட்டம், பதவி என அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். தாய் வழியில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். தாயாரின் உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகும். கல்வியில் ஏற்பட்ட தடைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சையால் குணமாகும். சிலர் கோயில் வேண்டுதலை நிறைவேற்றுவர். உழைப்பும், அதில் சங்கடம் அதிகரித்தாலும் உங்கள் மனம் அதையெல்லாம் ஒரு பொருட்டாக எண்ணாது. சனி சஞ்சாரம்  2026 மார்ச் 6 வரை சுக ஸ்தானமான 4ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியால், வேலைப்பளு கூடும். ஒவ்வொரு வேலையையும் போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும். மனதில் தேவையில்லாத சிந்தனை உண்டாகும். தவறானவர்களின் தொடர்பு ஏற்பட்டு சிலரின் வாழ்க்கை தடம் புரளும். தாய்வழியில் பிரச்னைகள் உருவெடுக்கும். தாயாரின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். பணியாளர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம், வேலையில் நெருக்கடி ஏற்படும். மார்ச் 6 முதல் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5 ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகும் சனியால் நிம்மதியற்ற நிலை இருக்கும். உறவுகளுக்கும் உங்களுக்குமிடையே பிரச்னை அதிகரிக்கும். குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள முயற்சித்தும் முடியாமல் போகும். பிள்ளைகளின் செயல்பாடு உங்களைப் பெரிய அளவில் பாதிக்கும். அவர்களைப் பற்றிய கவலை உண்டாகும். பூர்வீக சொத்து விவகாரம் பெரிதாகி வம்பு, வழக்கு என்று செல்லும். உயர்கல்விக்காக மேற்கொள்ளும் முயற்சியில் தடைகள் தோன்றும்.ராகு, கேது சஞ்சாரம் சுகஸ்தானமான 4ம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதால் உழைப்பு அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற வருமானம் இல்லாமல் போகும். புதிய நட்புகளால் தடுமாற்றமும் தடமாற்றமும் ஏற்படும். ஜீவன ஸ்தானமான 10ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் தொழிலில் அதிக அக்கறை செலுத்த வேண்டியதாக இருக்கும். போட்டியாளரால் வியாபாரத்தில் பின்னடைவு ஏற்படும். பணியாளர்களுக்கு மேலதிகாரிகளால் நெருக்கடி ஏற்படும். சிலருக்கு மெமோ, இடமாற்றம் ஏற்படும்.சூரிய சஞ்சாரம்  ஏப்.14 – மே 14, ஆக. 17 – அக். 10, 2026 ஜன. 15 – பிப். 12 காலங்கள் உங்கள் நெருக்கடிகள் எல்லாம் நீங்கி யோகம் உண்டாகும் காலமாகும். சூரியனின் 3, 6, 10, 11ம் இட சஞ்சாரத்தால் உங்கள் நிலை உயரும். நினைத்த வேலைகள் நடந்தேறும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். பணியில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். உடல்நிலையில் தெளிவு ஏற்படும். செல்வாக்கு உயரும். வருமானம் அதிகரிக்கும்.செவ்வாய் சஞ்சாரம்ஜூலை 30 – செப். 14, 2026 ஜன. 14 – பிப். 21 காலங்களில் தன்  சஞ்சாரத்தால் உங்கள் நிலையை உயர்த்துவார். வருமானத்தை அதிகரிப்பார். உடல்நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். வம்பு, வழக்குகளில் இருந்து விடுவிப்பார். வியாபாரத்தில் முன்னேற்றம், லாபத்தை ஏற்படுத்துவார்.பொதுப்பலன் குரு பகவான் 8ம் இடத்தில் சஞ்சரித்தாலும், ஜூன் 6 முதல் ஜூலை 8 வரை அவர் அஸ்தமனம் அடைவதால் பாதிப்பு இல்லாமல் போகும். அக். 8 முதல் நவ. 8 வரை கடகத்தில் சஞ்சரிக்கும்  குருவும், குரு பார்வைகளும், சூரியனும், செவ்வாயும்  யோகப் பலன்களை வழங்குவர்.தொழில் தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், மார்க்கெட்டிங், உணவகம், ரசாயனம், மருந்தகம், ஆயில் ஸ்டோர், கமிஷன் ஏஜன்சி, பிரிக்‌ஸ்,  இயந்திரத் தொழிற்சாலைகள், கம்ப்யூட்டர், பங்குச்சந்தை, ஆன்லைன், வேளாண்மைத் தொழில்களில் ஆதாயம் கூடும்.பணியாளர்கள் அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். தனியார் நிறுவன பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகளும் ஊதிய உயர்வும் கிடைத்து முன்னேற்றம் ஏற்படும். சிலர் இருக்கும் வேலையை விட்டு விட்டு வெளிநாட்டு வாய்ப்பை தேடிச் செல்வர்.பெண்கள் குரு பார்வைகள் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன், மனைவிக்குள் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். ஒற்றுமை உண்டாகும். வாழ்க்கைக்குரிய அடிப்படை வசதி அமையும். சுயதொழில் லாபம் தரும். வேலையில் எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். பொன், பொருள் சேரும்.கல்வி இக்காலத்தில் படிப்பின் மீது கூடுதல் அக்கறையை செலுத்துவது அவசியம். ஆசிரியர்கள் ஆலோசனை நன்மை தரும். தவறான நட்புகளை கைவிட்டு படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவதால் உயர்கல்வி கனவு நனவாகும்.உடல்நிலை சுக ஸ்தானத்தில் ராகு, அஷ்டம ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் உடல் பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். பரம்பரை நோய் தொற்றுநோய்களின் தாக்கம் அதிகரிக்கும். மருத்துவச் செலவு கூடும். இக்காலத்தில் உடல் நிலையில் கவனமாக இருப்பது நல்லது. குடும்பம் குரு பார்வையால் குழப்பம் விலகும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய சொத்து, வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளின் மீது அக்கறை உண்டாகும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். பொன், பொருள் சேரும். மதிப்பு உயரும்.பரிகாரம்: தர்பாரண்யேஸ்வரரை வழிபட சங்கடம் எல்லாம் பறந்தோடும். கேட்டை.. குருபார்வையால் நன்மைஅறிவுகாரகனான புதனை நட்சத்திர அதிபதியாகவும், பூமிகாரகனான செவ்வாயை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள், பார்ப்பதற்கு சாதுவாக இருந்தாலும் எடுத்த வேலையை முடிப்பதில் உறுதியானவர்கள். உங்கள் அறிவாற்றலால் உயர்வான இடத்தை எட்டிப் பிடிக்கக் கூடியவர்கள். செல்வாக்கோடு வாழ்ந்திடக் கூடியவர்கள். அத்தகைய ஆற்றல் கொண்ட உங்களுக்கு விவேகம், வித்தை, அந்தஸ்திற்கு காரகனான குரு மே 11 முதல் அஷ்டம ஸ்தானமான 8ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். குரு உங்களுக்கு 2ம் இடமான தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்திற்கும், 5ம் இடமான பூர்வ புண்ணிய, புத்திர ஸ்தானத்திற்கும் அதிபதியாவார். அத்தகைய குருபகவான் 8ம் இடமான மறைவு ஸ்தானத்திற்குள் செல்வதால் உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் கேள்விக்குறியாகும். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். வரவு, செலவில் எதிர்பாராத நெருக்கடி உண்டாகும். நினைத்த காரியங்களை நடத்த முடியாமல் போகும். பூர்வீக சொத்தில் வில்லங்கம் ஏற்படும். பிள்ளைகளால் நெருக்கடி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் இடைவெளி ஏற்படும். அந்நிய நபர்களால் குடும்பத்திற்குள் குழப்பம் உண்டாகும். உடலில் நோய் பாதிப்பு ஏற்படும். தாராளமாக செலவு செய்த நிலை மாறி அவசிய செலவிற்கும் கடன் வாங்கும் நிலை ஏற்படும். இவை எல்லாம் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் உண்டாகும் பலன்களாகும்.பார்வைகளின் பலன் குரு, தான் சஞ்சரிக்கும் இடத்தை விட, பார்க்கும் இடங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்குவார். அவரது பார்வை எந்த இடத்திற்கு உண்டாகிறதோ அந்த பாவம் சுபத்துவம் அடையும் என்பது பொதுவிதி. இக்காலத்தில் உங்கள் ராசிக்கு 12, 2, 4 ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால், வரவேண்டிய பணம் கைக்கு வரும். விற்பனை ஆகாமல் இருந்த இடங்கள் நல்ல விலைக்கு விற்பனையாகும். கடன் தொல்லை, வழக்குகள் தீரும். பொருளாதாரம் உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். கணவன், மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். வேலையின் காரணமாக பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர். மன வேற்றுமையின் காரணமாக பிரிந்தவர்களும் மீண்டும் ஒன்றாவர்.  ஆரோக்கியத்தில் ஏற்பட்ட குறைபாடு சரியாகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். வேலைக்காக வெளிநாட்டிற்கு செல்லக் கூடிய யோகம் சிலருக்கு ஏற்படும். சிலர் சொந்த வீடு வாங்கி குடியேறுவர். சனி சஞ்சாரம்  2026 மார்ச் 6 வரை, சுக ஸ்தானமான 4ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியால், உழைப்பு அதிகரிக்கும். அதற்கேற்ப ஆதாயம் இல்லாமல் போகும். தாயாரின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். தவறானவர்களின் தொடர்பு ஏற்பட்டு சிலரின் வாழ்க்கைத் தடம் புரளும். மார்ச் 6 முதல் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5 ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகும் சனியால், உங்கள் வேலைகளில் குழப்பம் உண்டாகும். மனதில் தேவையற்ற சிந்தனை உண்டாகும். உறவுகளுக்கும் உங்களுக்குமிடையே பிரச்னை அதிகரிக்கும். பிள்ளைகளைப் பற்றிய கவலை உண்டாகும். பூர்வீக சொத்தில் வம்பு, வழக்கு என்று உண்டாகும்.ராகு, கேது சஞ்சாரம்சுக ஸ்தானமான 4ம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதால், மனம் அலை பாயும். தவறான நபர்களின் நட்பால் வாழ்க்கை தடுமாறும். பணிபுரியும் இடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். ஜீவன ஸ்தானமான 10ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் தொழிலில் தடைகள் அதிகரிக்கும். முதலீட்டிற்கேற்ற வருமானம் இல்லாமல் போகும். வேலை பார்க்கும் இடத்தில் நெருக்கடி ஏற்படும்.சூரிய சஞ்சாரம்  ஏப். 14 – மே 14, ஆக.17 – அக்.10, 2026 ஜன. 15 – பிப். 12 காலங்கள் சூரியன் உங்களுக்கு யோகப் பலன்களை வழங்கும் காலமாகும். தன் 3, 6, 10, 11ம் இட சஞ்சாரத்தால் உங்களுக்கிருந்த நெருக்கடியை இல்லாமல் செய்வார். தன்னம்பிக்கையை அதிகரிப்பார். செல்வாக்கை உயர்த்துவார். உடல் பாதிப்புகளை நீக்குவார். தொழில், வியாபாரம், தொழில், வேலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். பொருளாதார நிலையை உயர்த்துவார்.செவ்வாய் சஞ்சாரம் ஜூலை 30 – செப். 14, 2026 ஜன. 14 – பிப். 21 காலங்களில் தன்  சஞ்சாரங்களால் நெருக்கடிகளில் இருந்து உங்களைப் பாதுகாப்பார். எடுத்த வேலைகளை முடித்து ஆதாயம் காண வைப்பார். அரசியல்வாதிகளின் செல்வாக்கை உயர்த்துவார். தொண்டர்கள் ஆதரவாக செயல்படுவர்.  வம்பு, வழக்கில் இருந்து விடுவிப்பார். பொதுப்பலன் குரு 8ம் இடத்தில் சஞ்சரித்தாலும், உங்கள் நட்சத்திராதிபதியின் ஆட்சி, வீடு என்பதால் பெருமளவில் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த மாட்டார். ஜூன் 6 முதல் ஜூலை 8 வரை அவர் அஸ்தமனம் அடைவதால் இக்காலத்தில் பாதிப்பு இல்லாமல் போகும். அக்.8 முதல் நவ.8 வரை கடகத்தில் சஞ்சரிக்கும் காலத்திலும், ஆண்டு முழுவதும் அவரது பார்வைகளும், சூரியனும், செவ்வாயும் உங்களுக்கு நன்மைகளை அதிகரிப்பர்.தொழில் 10ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். முயற்சிக்கேற்ற ஆதாயம் உண்டாகும். நிதி நிறுவனம். ஷேர் மார்க்கட், ஆன்லைன் வர்த்தகம், கமிஷன் ஏஜன்சி, இண்டஸ்ட்ரீஸ், கம்ப்யூட்டர், ஸ்டேஷனரி, ரியல் எஸ்டேட், பில்டர்ஸ். உணவகம், ரசாயனம், மருந்தகம், ஆயில் ஸ்டோர், வேளாண்மைப் பொருட்கள், உணவு பொருட்கள். மளிகை லாபம் தரும்.பணியாளர்கள் ஜீவன ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத நெருக்கடி ஏற்படும். அரசு பணியாளர்களுக்கு பிரச்னைகள் உண்டாகும். இக்காலத்தில் தவறுகள் செய்யாமல், நேர்மையாக செயல்படுவதும், பொறுப்புணர்ந்து வேலை பார்ப்பதும் மட்டுமே உங்களுக்கு நன்மையளிக்கும்.பெண்கள் மாங்கல்ய ஸ்தானமான 8ம் இடத்தில் குரு சஞ்சரித்தாலும், அவரது பார்வைகள் குடும்ப, சுக ஸ்தானங்களுக்கு உண்டாவதால், பிறந்த குடும்பத்திலும் புகுந்த குடும்பத்திலும் நிம்மதி இருக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு உண்டாகும். படிப்பு, வேலை என்ற கனவு நனவாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். கணவரின் ஆதரவு அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.கல்வி வாக்கு ஸ்தானத்திற்கு குருவின் பார்வை உண்டாவதால் படிப்பில் ஆர்வம் உண்டாகும். உயர் கல்வி கனவு நனவாகும்.உடல்நிலை சுக ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் உடல் நிலையில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். மருத்துவச் செலவு கூடும்.குடும்பம் குருவின் பார்வைகள் சாதகமாக இருப்பதால் குடும்ப நலனில் அக்கறை கூடும். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். தன் குடும்பம் என்ற எண்ணம் ஏற்படும். பொன், பொருள் சேர்க்கையில் அக்கறை உண்டாகும். கடன் வாங்கியாவது புதிய இடம், வீடு, வாகனம் வாங்குவீர்கள். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். சமூக அந்தஸ்து உயரும்.பரிகாரம்: சோமநாதேஸ்வரரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

மூலம்..நீங்க தான் நம்பர் 1ஞான மோட்சக் காரகனான கேதுவை நட்சத்திர அதிபதியாகவும், ஞானக் காரகனான குருவை ராசிநாதனாகவும் கொண்டவர் நீங்கள். உலக அறிவையும் வாழ்வின் அர்த்தங்களையும் புரிந்து பிறருக்கு வழிகாட்டுவதில் முதலிடம் வகிப்பீர்கள். பெரிய ஆன்மிகவாதியாக நீங்கள் இல்லாமல் போனாலும் பாவ புண்ணியத்தை அறிந்து அதை உணர்த்தி வருபவராக இருப்பீர்கள். உங்கள் ராசிநாதனான குரு பகவான், மே11 முதல் சப்தம ஸ்தானமான 7 ம் இடத்தில் சஞ்சரிப்பதுடன் தன் 7ம் பார்வையால் உங்கள் ராசியையும் பார்க்கப் போகிறார். குரு பகவான் பார்வை ராசிக்கு கிடைத்திடும் காலம் மிகப் பெரிய யோக காலமாகும். அவரது பார்வையால் உங்களுக்கிருந்த  நெருக்கடி, பிரச்னை, அவமானம், சோதனை எல்லாமும் இருந்த இடம் தெரியாமல் போகும். குரு பார்க்க கோடி புண்ணியம் என இதன் காரணமாகவே சொல்லி வைத்தனர். செல்வாக்கு உயரும். அந்தஸ்து மிக்கவர்களோடு நட்பு உண்டாகும். கணவன், மனைவிக்குள் இருந்த இடைவெளி நீங்கும். நேற்று வரை இருந்த சங்கடமான நிலை இனி இல்லாமல் போகும். தொழில் முன்னேற்றமடையும். வேலை பார்க்கும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். வேலை தேடியவர்களுக்கு வேலை கிடைக்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்கள் ஏக்கம் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீடு, வாகனம், சொத்து வசதிகள் அவரவர் ஜாதகத்தின் யோகத்தைப் பொறுத்து அதிகரிக்கும். உடல் நிலையிலும் முன்னேற்றம் தோன்றும். நீங்கள் தான் நம்பர் 1 ஆக திகழ்வீர்கள். ஏழாம் இடத்திற்கு வரும் குரு பகவான் ஏற்றமான பலன்களை வழங்குவார். பார்வைகளின் பலன் குரு சஞ்சரிக்கும் இடத்தை விட, பார்க்கும் இடங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்குவார். அவரது பார்வைகள் எந்த இடத்திற்கு உண்டாகிறதோ அந்த பாவகம் சுபத்துவம் அடையும் என்பது பொதுவிதி. இக்காலத்தில் உங்கள் ராசி, 11, 3 ம் இடங்களுக்கும் குருபார்வை உண்டாவதால், வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். சொத்துகளில் உண்டான வில்லங்கம்  முடிவிற்கு வரும். பல வழிகளிலும் பணம் வரும். புதிய சொத்து சேரும். சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும். அதனால் புதிய உற்சாகம் தோன்றும். தைரியம் தன்னம்பிக்கை கூடும். புதிய வலிமையோடு நடை போடுவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். திருமண வயதினருக்கு வரன் வரும். சாதாரணமாக உங்களை எண்ணியவர்கள் எல்லாம் உங்கள் திறமைகளையும் பெருமைகளையும் உணர்வர். எந்தவொரு சங்கடமும் உங்களை நெருங்காமல் போகும். நீங்கள் எடுக்கும் செயல்களில் வெற்றியுண்டாகும். தொழில் விருத்தியாகும். பணியாளர்களுக்கு மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். யோகமும் போகமுமாக வாழ்க்கை முன்னேற்றம் அடையும். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் தோன்றும். இளைய சகோதர, சகோதரிகளால் நன்மை அதிகரிக்கும். வேலை வாய்ப்பிற்காக முயற்சித்தவர்களுக்கு வேலை அமையும். மற்றவரால் செய்ய முடியாத செயல்களைச் செய்து அதில் வெற்றி அடைவீர்கள்.சனி சஞ்சாரம்2026 மார்ச் 6 வரை, சகாய ஸ்தானமான 3ம் இடத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் சனியால், உங்களுக்குள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதுவரை இருந்த சங்கடம் இனி இல்லாமல் போகும். பொருளாதாரம் உயரும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். செய்து வரும் தொழில் சிறப்படையும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷமும் செழிப்பும் உண்டாகும். தொல்லை கொடுத்தவர்கள் இருந்த இடம் தெரியாமல் விலகிச் செல்வர். மார்ச் 6 முதல் சுக ஸ்தானமான 4ம் இடத்தில் அர்த்தாஷ்டம சனியாக சஞ்சரிப்பார்.  இடையூறு, அலைக்கழிப்பு, குடும்பத்தில் வீண் விரோதம், ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை, இருப்பிடத்தை மாற்ற  வேண்டிய சூழல், தாயின் உடல் பாதிப்பு, தாய்வழி உறவுகளுடன் விரோதம், வீடு, வாகனத்தால் தொல்லை, எதிரி தொல்லை, வியாபாரத்தில் நஷ்டம், பிரச்னை, வீண் செலவுகள் ஏற்படும்.ராகு, கேது சஞ்சாரம்முயற்சி ஸ்தானமான 3ம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதால், இக்காலம் உங்களுக்கு யோக காலமாகும். நினைப்பது நடக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். பாக்கிய ஸ்தானமான 9ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால், இறையருள் கிட்டும். பெரியோரின் ஆதரவு உண்டாகும். புதிய சொத்து சேரும். வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள்.சூரிய சஞ்சாரம் மே 15 – ஜூன் 14, செப். 17 – நவ. 16, 2026 பிப். 13 – மார்ச் 14 காலங்களில் சூரியனால் யோகப் பலன்கள் உண்டாகும். தன் 3,6,10,11ம் இட சஞ்சாரத்தால் செல்வாக்கை உயர்த்துவார். நீங்கள் நினைத்த வேலைகளை நடத்தி வைப்பார். உடல் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். தொழில், வியாபாரத்தில் லாபத்தை ஏற்படுத்துவார். பொருளாதார நிலையை உயர்த்துவார். செவ்வாய் சஞ்சாரம்செப்.14 – அக்.27, 2026 பிப். 21 – ஏப். 1 காலங்களில் தன் 11, 3 ம் இட  சஞ்சாரங்களால் வரவுகளை அதிகரிப்பார். நஷ்டத்தில் இயங்கிய தொழில்களில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். எடுத்த வேலைகளை முடித்து ஆதாயம் காண வைப்பார்.பொதுப்பலன் 7 ம் இடத்தில் குரு, 3ல் ராகு, சனி என்ற சஞ்சாரநிலை கனவுகளை நனவாக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். ஜூன் 6 முதல் ஜூலை 8 வரை குரு அஸ்தமனம் அடையும் காலத்திலும், அக். 8 முதல் நவ. 8 வரை கடகத்தில் சஞ்சரிக்கும் காலத்திலும் அவர் வழங்கும் யோகப் பலன்களில் மாற்றம் ஏற்படும் என்றாலும் அவரது பார்வைகளும், சூரியனும், செவ்வாயும் நன்மைகளை அதிகரிப்பர்.தொழில் குருவின் சஞ்சாரமும், பார்வைகளும், சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவும் தொழில் துறையில் உங்களுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். முடங்கிய தொழில் கூட இக்காலத்தில் முன்னேற்றம் பெறும். பைனான்ஸ், ஜுவல்லரி, எக்ஸ்போர்ட், ஸ்டேஷனரி, ஷேர் மார்க்கெட், ஆன்லைன் வர்த்தகம், கம்ப்யூட்டர், ஐ.டி தொழில்களில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள்பணியாளர்களுக்கு யோகமான காலமாக இருக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லை திறமைக்கேற்ற பதவி இல்லை என வருந்திய நிலை மாறும். நீண்ட நாள் கனவு நனவாகும். எதிர்பார்த்த பொறுப்பு, ஊதிய உயர்வும் கிடைக்கும். வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். பெண்கள் இக்காலம் செல்வாக்கு உயரும் காலமாக இருக்கும். எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவீர்கள். படிப்பு, வேலை, திருமணம் என்ற கனவு நனவாகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மதிப்புண்டாகும். விலகிய உறவுகள் இக்காலத்தில் உங்கள் உதவிக்காக வருவர். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தை வழிநடத்தும் சக்தி உண்டாகும். வாழ்க்கைத் துணையின் உதவியால் முயற்சி வெற்றி பெறும். சொத்து, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும்.கல்விஉங்கள் ராசிக்கு குருபார்வை உண்டாவதால் மனம் தெளிவாகும். சரியான பாதையில் நடை போடுவீர்கள். படிப்பின் மீது ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பீர்கள். பொதுத் தேர்விலும் போட்டித் தேர்வுகளிலும் வெற்றி உண்டாகும். உயர்கல்வி கனவு நனவாகும்.உடல்நிலைகுரு பார்வையால் அனைத்து வித நன்மையும் கிடைக்கும். உடல் பாதிப்பு இல்லாமல் போகும். மருத்துவச் செலவு குறையும். தொற்று நோய், இதய நோய், சுவாசக் கோளாறு விலகும். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போல் நோய்கள் விலகிச் செல்லும்.குடும்பம்ஏழாம் இடத்தில் குரு, குருவின் பார்வை ராசிக்கு, சகாய ஸ்தானத்தில் ராகு என்ற நிலையால்  உங்களுக்கு கனவாக இருந்த ஒவ்வொன்றும் கைவசமாகும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.பரிகாரம் : குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபட வாழ்க்கை வளமாகும்.பூராடம்..நினைப்பது நடக்கும்அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரனை நட்சத்திர அதிபதியாகவும், தனகாரகனான குருவை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள், எதிலும் திட்டமிட்டு செயல்படக் கூடியவர்கள். எது உங்களுக்குத் தேவையோ அதில் மட்டுமே அக்கறை காட்டக் கூடியவர்கள். வெளியில் பார்ப்பதற்கு கண்டிப்பானவர்கள் போல் தெரிந்தாலும் மனதளவில் எப்போதும் குழந்தையாகவே இருப்பவர்கள் நீங்கள். ஞானக்காரகனான குரு பகவான் மே 11 முதல் 7 ம் இடத்தில் சஞ்சரிப்பதுடன், 7 ம் பார்வையால் உங்கள் ராசியையும் பார்க்கப் போகிறார். குரு ராசியைப் பார்ப்பது பெரும் யோகமாகும். 12 ஆண்டுகளுக்குப் பிறகு சப்தமப் பார்வையாக உங்கள் ராசியைப் பார்க்கும் குரு, செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து, அதிர்ஷ்டங்களை அள்ளித் தரப் போகிறார். கடந்த காலத்தில் ஏற்பட்ட நெருக்கடி இல்லாமல் போகும். இடம், வீடு வாங்குதல், குடும்பத்தில் சுபநிகழ்ச்சி, பொன் பொருள் சேர்க்கை என வாழ்க்கை வளமாகும். பொருளாதார நெருக்கடியால் தவித்தவர்களுக்கு எதிர்பாராத வாய்ப்பு உருவாகும். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். உடல் பாதிப்பு குணமாகும். வம்பு வழக்கு என்றிருந்த நிலை மாறும். குடும்ப சொத்தில் வரவேண்டிய பங்கு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் உண்டாகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.  இக்காலத்தை உங்களுக்கு பொற்காலம் என்றே சொல்லலாம். அரசு துறையினருக்கு தடைபட்ட பதவி உயர்வு இக்காலத்தில் கிடைக்கும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். கடல் கடந்து சென்று ஆதாயம் காணும் நிலை சிலருக்கு உண்டாகும். எதிர்ப்பு என்பது இனி இல்லாமல் போகும். எதை நீங்கள் நினைக்கிறீர்களோ அதை உங்களால் அடைய முடியும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். எந்த இடத்திலும் முதன்மையானவராக இருப்பீர்கள்.பார்வைகளின் பலன் குரு தான் சஞ்சரிக்கும் இடத்தை விட, பார்க்கும் இடங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்குவார். அவரது பார்வைகள் எந்த இடத்திற்கு உண்டாகிறதோ அந்த பாவம் சுபத்துவம் அடையும் என்பது பொது விதி. உங்கள் ராசிக்கும், 11, 3 ம் இடங்கள் மீது குரு பார்வை உண்டாவதால், புதிய நம்பிக்கை உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும். சேமிப்பு உயரும். உடல், மனதில் உற்சாகம் உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். முடங்கிக் கிடந்த தொழில் முன்னேற்றம் பெறும். தைரியமுடன் செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். பணியாளர்களுக்கு வரவேண்டிய பணம் வரும். பழைய முதலீடுகளில் இருந்து வட்டியுடன் பணம் வரும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வருவாய் அதிகரிக்கும். எதிர்பாலினரின் நட்பும், அவர்களால் ஆதாயமும் ஏற்படும். பட்டம், பதவி தேடி வரும்.  சனி சஞ்சாரம்  2026 மார்ச் 6 வரை, 3ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியால் முயற்சிகள் வெற்றியாகும். செயல்கள் லாபமாகும். நெருக்கடிக்கு ஆளாக்கிய சங்கடங்கள் இல்லாமல் போகும். தைரியமுடன் செயல்படுவீர்கள். பொருளாதார நிலை உயரும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.  மார்ச் 6 முதல் சுக ஸ்தானமான 4 ம் இடத்தில் சஞ்சரிப்பவர், மனதை அலை பாய வைப்பார். தவறானவர்களின் நட்பை ஏற்படுத்துவார். வியாபாரம், தொழிலில் உழைப்பை அதிகரிப்பார். உழைப்பிற்கேற்ற ஆதாயம் இல்லை என்ற வருத்தத்தை ஏற்படுத்துவார். வேலைகளில் இடையூறு, அலைக்கழிப்பு, குடும்பத்தில் பிரச்னை, வசிக்கும் இடத்தை மாற்றும் சூழல்,  தாயின் உடல்நிலை பாதிப்பு என சிரமங்களை ஏற்படுத்துவார்.ராகு, கேது சஞ்சாரம் 3 ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் உங்கள் திறமை வெளிப்படும். சாதிக்க முடியாதவற்றை சாதிப்பீர்கள். நினைப்பதை நடத்தி முடிப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். 9 ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால், தொழிலில் அதிக கவனம் தேவைப்படும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். பெரியோரின் ஆதரவு உண்டாகும். சொத்து சேரும். சிலர் புதிய வீடு கட்டி குடியேறுவர். கோயில் வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள்.சூரிய சஞ்சாரம் மே 15 – ஜூன் 14, செப்.17 – நவ.16, பிப்.13 – மார்ச் 14 காலங்களில் சூரியனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் இக்காலங்களில் செல்வாக்கு வெளிப்படும். நினைத்த வேலைகள் நடந்தேறும். உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும்.செவ்வாய் சஞ்சாரம் செப்.14 – அக். 27, பிப். 21 – ஏப்.1 காலங்களில் செவ்வாயின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால்  வரவு அதிகரிக்கும். வியாபாரம் லாபம் தரும். நஷ்டத்தில் இயங்கிய தொழில்கள் முன்னேற்றம் அடையும் எடுத்த வேலைகள் நடந்தேறும். ஆதாயம் அதிகரிக்கும்.பொதுப்பலன்  குரு, ராகு, சனி சஞ்சார நிலைகள் சாதகமாக இருப்பதால் இக்காலத்தில் கனவுகள் நனவாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். ஜூன் 6 முதல் ஜூலை 8 வரை குரு அஸ்தமனம் அடையும் காலத்திலும், அக்.8 முதல் நவ.8 வரை கடகத்தில் சஞ்சரிக்கும் காலத்திலும் குரு பகவான் வழங்கும் யோகப் பலன்களில் மாற்றம் ஏற்படும் என்றாலும், அவருடைய பார்வைகளுடன், சூரியன், செவ்வாய் சஞ்சார நிலைகளும் உங்களை உயர்த்தும்.தொழில்தொழில் முன்னேற்றமடையும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். விற்பனை அதிகரிக்கும். புதிய முயற்சி வெற்றியாகும். அழகு சாதனம், கவரிங், பேன்சி ஸ்டோர், ஆடை ஆபரணம், வாகன விற்பனை, உதிரி பாகங்கள், ஸ்டேஷனரி, ஆன்லைன் வர்த்தகம், ஷேர் மார்க்கெட், கம்ப்யூட்டர், நிதிநிறுவனம், சினிமா, பதிப்பகம், வலைதளம் தொழில்கள் வளர்ச்சி அடையும்.பணியாளர்கள்வேலையில் இருந்த நெருக்கடி விலகும். நீண்ட நாளாக எதிர்பார்த்த சலுகை, ஊதிய உயர்வு கிடைக்கும். நிர்வாகத்தில் நல்ல பெயர் ஏற்படும். வேலைக்காக கடல் கடந்து செல்ல மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறும்.  அரசு பணியாளர்,  உயர் பதவியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். பதவி உயர்வு கிடைக்கும். பெண்கள் குருபார்வை கோடி புண்ணியம் என்பதை உணர்வீர்கள். கனவுகள் நனவாகும். நீண்டநாள் ஆசை பூர்த்தியாகும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். படிப்பு, வேலை, திருமணம் என கனவுகள் நனவாகும். குடும்பத்தில் செல்வாக்கு உயரும். புகுந்த வீட்டினர் உங்களைக் கொண்டாடுவர். வேலை பார்க்கும் இடத்தில் உங்களின் நிலை உயரும். எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். கணவரின் அன்பு கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய சொத்து வாகனம் வாங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும்.கல்வி குரு பார்வையால் படிப்பில் அக்கறை கூடும். ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பீர்கள். பொதுத் தேர்விலும் போட்டித் தேர்வுகளிலும் வெற்றி உண்டாகும். உயர்கல்வி கனவு நனவாகும்.உடல்நிலை தைரிய, வீரிய ஸ்தானத்தில் ராகு, ராசிக்கும் 3 ம் இடத்திற்கும் குருவின் பார்வை இருப்பதால் உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். இதுவரை இருந்த பாதிப்புகள் மருத்துவத்தால் குணமாகும். குடும்பம் ஏழாமிட குருவும், மூன்றாமிட ராகுவும் உங்கள் நிலையை உயர்த்துவர். குடும்பத்தில் சுபிட்சமான நிலையை உண்டாக்குவர். தம்பதிக்குள் ஒற்றுமை ஏற்படும். வசதி வாய்ப்பை ஏற்படுத்துவர். செல்வாக்கை உண்டாக்குவர்.  குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். குழந்தைப் பேறு கிடைக்கும். பரிகாரம்: காளிகாம்பாளை வழிபட வாழ்க்கை வளமாகும்.உத்திராடம்.. எச்சரிக்கை அவசியம்; ஆத்ம காரகனான சூரியனை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும் 1ம் பாதமான தனுசுவில் பிறந்தவர்களுக்கு குரு ராசிநாதனாகவும், 2, 3, 4 ம் பாதங்களான மகரத்தில் பிறந்தவர்களுக்கு சனி ராசி நாதனாகவும் உள்ளனர். 1 ம் பாதத்தினருக்கு மே 11 முதல் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து, நீண்டநாள் கனவுகளை நனவாக்குவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். திருமணத் தடை விலகும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சிகளை வெற்றியாக்குவார். சொத்து, சுகம், செல்வம், செல்வாக்கோடு வாழ வைப்பார். 2, 3, 4 ம் பாதத்தினருக்கு 6 ம் இடத்தில் சஞ்சரித்து வாழ்வில் பிரச்னைகளை ஏற்படுத்துவார். உடல் பாதிப்பை உண்டாக்குவார். செலவுகளையும் அதிகரிப்பார். உற்சாகத்தை குறைப்பார். எதிலும் நாட்டம் இல்லாத நிலையை உருவாக்குவார். தொழிலில் பின்னடைவை ஏற்படுத்துவார். எதிரி தொல்லையை அதிகரிப்பார். மனக் கஷ்டத்தோடு பணக்கஷ்டத்தையும் உருவாக்குவார். வாழ்க்கைத் துணையுடன் இடைவெளியை உண்டாக்குவார். உறவினர்களை உங்களுக்கு எதிராக மாற்றுவார்.பார்வைகளின் பலன் குரு, தான் சஞ்சரிக்கும் இடத்தை விட, பார்க்கும் இடங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்குவார். அவருடைய பார்வைகள் எந்த இடத்திற்கு உண்டாகிறதோ அந்த பாவகம் சுபத்துவம் அடையும் என்பது பொதுவிதி. 1 ம் பாதத்தினருக்கு தன் 5,7,9 ம் பார்வைகளை 1, 3, 11 ம் இடங்களுக்கு வழங்குவதால் எதிர்பார்த்த மாற்றங்கள் ஏற்படும். குடும்பம், தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். வேலையில் உண்டான பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரம் முன்னேற்றம் பெறும். உடல்நிலை சீராகும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். 2,3,4 ம் பாதத்தினருக்கு, 10, 12, 2 ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால் தொழில் முன்னேற்றம் பெறும். தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். வரவை விட செலவு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.சனி சஞ்சாரம்1 ம் பாதத்தினருக்கு, 2026 மார்ச் 6 வரை, 3 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி முயற்சிகளை வெற்றியாக்குவார். செயல்களை லாபமாக்குவார். பொருளாதார நிலையை உயர்த்துவார் உடல்நிலையை மேம்படுத்துவார். மார்ச் 6 முதல் சுக ஸ்தானமான 4 ம் இடத்தில் சஞ்சரிப்பவர், வேலைப் பளுவை அதிகரிப்பார். தொழில் வியாபாரத்தில் நெருக்கடியை உண்டாக்குவார். எடுக்கும் வேலைகளில் இடையூறு, அலைக்கழிப்பு, குடும்பத்தில் பிரச்னைகளை உண்டாக்குவார். 2,3,4 ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை பாதச்சனியாக சஞ்சரிப்பவர், குடும்பத்தில் குழப்பம், வரவு செலவில் நெருக்கடியை ஏற்படுத்துவார். மிதுன குருவின் பார்வை 2ம் இடத்திற்கு உண்டாவதால் சனியால் ஏற்படும் பாதிப்பு விலகும். மார்ச் 6 முதல் சகாய ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். செல்வாக்கு உயரும். எந்த ஒன்றையும் சாதிக்கும் பலம் ஏற்படும். ராகு, கேது சஞ்சாரம்1 ம் பாதத்தினருக்கு ராகு 3 ல், கேது 9 ம்  இடத்தில் சஞ்சரிப்பதால் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை உண்டாகும். தொழிலில் அக்கறை உண்டாகும். பெரியோரின் ஆதரவு உண்டாகும். புதிய சொத்து சேரும். வேண்டுதல் நிறைவேறும். 2,3,4 ம் பாதத்தினருக்கு, ராகு 2 ல், கேது 8 ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் பிரச்னை அதிகரிக்கும். கணவன், மனைவிக்குள் இடைவெளி, பிரிவினை ஏற்படும். தவறானவர்களின் தொடர்பு, சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபாடு சிலருக்கு ஏற்படும். அவமானத்தை சந்திக்க நேரும். உடல் பாதிப்பும் மருத்துவச் செலவும் உண்டாகும்.சூரிய சஞ்சாரம்1 ம் பாதத்தினருக்கு,  மே 15 – ஜூன் 14, செப். 17 – நவ. 16, 2026 பிப். 13 – மார்ச் 14 காலங்களிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு, ஜூன் 16 – ஜூலை 16, அக். 18 – டிச. 15,  2026 மார்ச் 15 – ஏப். 13 காலங்களிலும் சூரியனின் சஞ்சாரம்  சாதகமாக இருப்பதால்  உங்கள் நிலை உயரும். நெருக்கடி விலகும். அரசு வழி முயற்சிகள் சாதகமாகும். சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த பணம் வரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். அரசியல் வாதிகள், அரசு பணியாளர்களின் நிலை உயரும். உடல்நிலை சீராகும்.செவ்வாய் சஞ்சாரம்1ம் பாதத்தினருக்கு, செப். 14 – அக். 27, 2026 பிப். 21 – ஏப். 1 காலங்களிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு, அக். 27 – டிச. 6, 2026 ஏப். 1 – மே 26 காலங்களிலும் செவ்வாயின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பணப் பற்றாக்குறை விலகும். வியாபாரம், தொழில் லாபமடையும். வர வேண்டிய பணம் வரும். புதிய சொத்து சேரும். எடுத்த வேலைகள் நடந்தேறும்.  தன்னம்பிக்கை, செல்வாக்கு அதிகரிக்கும்.பொதுப்பலன்1 ம் பாதத்தினருக்கு குரு, ராகு, சனி சஞ்சார நிலைகள் சாதகமாக இருப்பதால் நினைப்பது நடந்தேறும். 2,3,4 ம் பாதத்தினருக்கு ஜூன் 6 முதல் ஜூலை 8 வரை குரு அஸ்தமனம் அடையும் காலத்திலும், அக். 8 முதல் நவ. 8 வரை கடகத்தில் சஞ்சரிக்கும் காலத்திலும் குரு நன்மை வழங்குவார். 2026 மார்ச் 6 முதல் சனியும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். 4 பாதத்தினருக்கும் குருவின் பார்வைகளும் சூரியன், செவ்வாய் சஞ்சார நிலைகளும் சாதகத்தை உண்டாக்கும்.தொழில்தொழில்மீது அக்கறை அதிகரிக்கும். தொழிலை விரிவு செய்ய முயற்சிப்பீர்கள். ஜுவல்லரி, உணவு தானியம், அழகு சாதனம், கவரிங், பேன்சி ஸ்டோர், வாகன விற்பனை, உதிரி பாகங்கள், ஸ்டேஷனரி, ஆன்லைன் வர்த்தகம், ஷேர் மார்க்கெட், கம்ப்யூட்டர், சின்னத்திரை, வலைதளம், பதிப்பகம் தொழில்கள் வளர்ச்சி அடையும்.பணியாளர்கள்பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உங்கள் திறமைக்குரிய மரியாதை உண்டாகும். நீண்ட நாளாக எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். புதிய பொறுப்புகள் கைக்கு வரும். அரசு பணியாளர்களுக்கு அதிகாரியின் ஆதரவு உண்டாகும். பணியில் ஏற்பட்ட வழக்கு முடிவிற்கு வரும். எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும்.பெண்கள் குரு பகவானின் பார்வைகளால் குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். குழந்தைப் பேறு கிடைக்கும். கணவரின் அன்பால் பொன் பொருள் சேரும். சுய தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உண்டாகும்.கல்விபடிப்பில் ஆர்வம் கூடும். பொது, போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும். சிலர் மேற்கல்விக்காக வெளி மாநிலம், வெளிநாடு செல்வர். உடல்நிலை1 ம் பாதத்தினருக்கு உடல் பாதிப்பு மருத்துவத்தால் குணமாகும். மருத்துவச் செலவு குறையும். 2,3,4 ம் பாதத்தினருக்கு அஷ்டம ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் நோய்கள் வெளிப்படும்.  சிலருக்கு விபத்தும் ஏற்படும். மருத்துவச் செலவு அதிகரிக்கும்.குடும்பம் தம்பதி ஒற்றுமை உண்டாகும். குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். தன் குடும்பம் தன் பிள்ளைகள் என்ற எண்ணம் உண்டாகும். பஇடம் வீடு வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். சமூக அந்தஸ்து உயரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை கூடும். சுபநிகழ்ச்சி நடக்கும். சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவர்.பரிகாரம்: கிருஷ்ணரை வழிபட சங்கடம் விலகி நன்மை உண்டாகும்.

உத்திராடம்.. எச்சரிக்கை அவசியம்; ஆத்ம காரகனான சூரியனை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும் 1ம் பாதமான தனுசுவில் பிறந்தவர்களுக்கு குரு ராசிநாதனாகவும், 2, 3, 4 ம் பாதங்களான மகரத்தில் பிறந்தவர்களுக்கு சனி ராசி நாதனாகவும் உள்ளனர். 1 ம் பாதத்தினருக்கு மே 11 முதல் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து, நீண்டநாள் கனவுகளை நனவாக்குவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். திருமணத் தடை விலகும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சிகளை வெற்றியாக்குவார். சொத்து, சுகம், செல்வம், செல்வாக்கோடு வாழ வைப்பார். 2, 3, 4 ம் பாதத்தினருக்கு 6 ம் இடத்தில் சஞ்சரித்து வாழ்வில் பிரச்னைகளை ஏற்படுத்துவார். உடல் பாதிப்பை உண்டாக்குவார். செலவுகளையும் அதிகரிப்பார். உற்சாகத்தை குறைப்பார். எதிலும் நாட்டம் இல்லாத நிலையை உருவாக்குவார். தொழிலில் பின்னடைவை ஏற்படுத்துவார். எதிரி தொல்லையை அதிகரிப்பார். மனக் கஷ்டத்தோடு பணக்கஷ்டத்தையும் உருவாக்குவார். வாழ்க்கைத் துணையுடன் இடைவெளியை உண்டாக்குவார். உறவினர்களை உங்களுக்கு எதிராக மாற்றுவார்.பார்வைகளின் பலன் குரு, தான் சஞ்சரிக்கும் இடத்தை விட, பார்க்கும் இடங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்குவார். அவருடைய பார்வைகள் எந்த இடத்திற்கு உண்டாகிறதோ அந்த பாவகம் சுபத்துவம் அடையும் என்பது பொதுவிதி. 1 ம் பாதத்தினருக்கு தன் 5,7,9 ம் பார்வைகளை 1, 3, 11 ம் இடங்களுக்கு வழங்குவதால் எதிர்பார்த்த மாற்றங்கள் ஏற்படும். குடும்பம், தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். வேலையில் உண்டான பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரம் முன்னேற்றம் பெறும். உடல்நிலை சீராகும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். 2,3,4 ம் பாதத்தினருக்கு, 10, 12, 2 ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால் தொழில் முன்னேற்றம் பெறும். தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். வரவை விட செலவு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.சனி சஞ்சாரம்1 ம் பாதத்தினருக்கு, 2026 மார்ச் 6 வரை, 3 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி முயற்சிகளை வெற்றியாக்குவார். செயல்களை லாபமாக்குவார். பொருளாதார நிலையை உயர்த்துவார் உடல்நிலையை மேம்படுத்துவார். மார்ச் 6 முதல் சுக ஸ்தானமான 4 ம் இடத்தில் சஞ்சரிப்பவர், வேலைப் பளுவை அதிகரிப்பார். தொழில் வியாபாரத்தில் நெருக்கடியை உண்டாக்குவார். எடுக்கும் வேலைகளில் இடையூறு, அலைக்கழிப்பு, குடும்பத்தில் பிரச்னைகளை உண்டாக்குவார். 2,3,4 ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை பாதச்சனியாக சஞ்சரிப்பவர், குடும்பத்தில் குழப்பம், வரவு செலவில் நெருக்கடியை ஏற்படுத்துவார். மிதுன குருவின் பார்வை 2ம் இடத்திற்கு உண்டாவதால் சனியால் ஏற்படும் பாதிப்பு விலகும். மார்ச் 6 முதல் சகாய ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். செல்வாக்கு உயரும். எந்த ஒன்றையும் சாதிக்கும் பலம் ஏற்படும். ராகு, கேது சஞ்சாரம்1 ம் பாதத்தினருக்கு ராகு 3 ல், கேது 9 ம்  இடத்தில் சஞ்சரிப்பதால் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை உண்டாகும். தொழிலில் அக்கறை உண்டாகும். பெரியோரின் ஆதரவு உண்டாகும். புதிய சொத்து சேரும். வேண்டுதல் நிறைவேறும். 2,3,4 ம் பாதத்தினருக்கு, ராகு 2 ல், கேது 8 ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் பிரச்னை அதிகரிக்கும். கணவன், மனைவிக்குள் இடைவெளி, பிரிவினை ஏற்படும். தவறானவர்களின் தொடர்பு, சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபாடு சிலருக்கு ஏற்படும். அவமானத்தை சந்திக்க நேரும். உடல் பாதிப்பும் மருத்துவச் செலவும் உண்டாகும்.சூரிய சஞ்சாரம்1 ம் பாதத்தினருக்கு,  மே 15 – ஜூன் 14, செப். 17 – நவ. 16, 2026 பிப். 13 – மார்ச் 14 காலங்களிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு, ஜூன் 16 – ஜூலை 16, அக். 18 – டிச. 15,  2026 மார்ச் 15 – ஏப். 13 காலங்களிலும் சூரியனின் சஞ்சாரம்  சாதகமாக இருப்பதால்  உங்கள் நிலை உயரும். நெருக்கடி விலகும். அரசு வழி முயற்சிகள் சாதகமாகும். சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த பணம் வரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். அரசியல் வாதிகள், அரசு பணியாளர்களின் நிலை உயரும். உடல்நிலை சீராகும்.செவ்வாய் சஞ்சாரம்1ம் பாதத்தினருக்கு, செப். 14 – அக். 27, 2026 பிப். 21 – ஏப். 1 காலங்களிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு, அக். 27 – டிச. 6, 2026 ஏப். 1 – மே 26 காலங்களிலும் செவ்வாயின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பணப் பற்றாக்குறை விலகும். வியாபாரம், தொழில் லாபமடையும். வர வேண்டிய பணம் வரும். புதிய சொத்து சேரும். எடுத்த வேலைகள் நடந்தேறும்.  தன்னம்பிக்கை, செல்வாக்கு அதிகரிக்கும்.பொதுப்பலன்1 ம் பாதத்தினருக்கு குரு, ராகு, சனி சஞ்சார நிலைகள் சாதகமாக இருப்பதால் நினைப்பது நடந்தேறும். 2,3,4 ம் பாதத்தினருக்கு ஜூன் 6 முதல் ஜூலை 8 வரை குரு அஸ்தமனம் அடையும் காலத்திலும், அக். 8 முதல் நவ. 8 வரை கடகத்தில் சஞ்சரிக்கும் காலத்திலும் குரு நன்மை வழங்குவார். 2026 மார்ச் 6 முதல் சனியும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். 4 பாதத்தினருக்கும் குருவின் பார்வைகளும் சூரியன், செவ்வாய் சஞ்சார நிலைகளும் சாதகத்தை உண்டாக்கும்.தொழில்தொழில்மீது அக்கறை அதிகரிக்கும். தொழிலை விரிவு செய்ய முயற்சிப்பீர்கள். ஜுவல்லரி, உணவு தானியம், அழகு சாதனம், கவரிங், பேன்சி ஸ்டோர், வாகன விற்பனை, உதிரி பாகங்கள், ஸ்டேஷனரி, ஆன்லைன் வர்த்தகம், ஷேர் மார்க்கெட், கம்ப்யூட்டர், சின்னத்திரை, வலைதளம், பதிப்பகம் தொழில்கள் வளர்ச்சி அடையும்.பணியாளர்கள்பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உங்கள் திறமைக்குரிய மரியாதை உண்டாகும். நீண்ட நாளாக எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். புதிய பொறுப்புகள் கைக்கு வரும். அரசு பணியாளர்களுக்கு அதிகாரியின் ஆதரவு உண்டாகும். பணியில் ஏற்பட்ட வழக்கு முடிவிற்கு வரும். எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும்.பெண்கள் குரு பகவானின் பார்வைகளால் குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். குழந்தைப் பேறு கிடைக்கும். கணவரின் அன்பால் பொன் பொருள் சேரும். சுய தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உண்டாகும்.கல்விபடிப்பில் ஆர்வம் கூடும். பொது, போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும். சிலர் மேற்கல்விக்காக வெளி மாநிலம், வெளிநாடு செல்வர். உடல்நிலை1 ம் பாதத்தினருக்கு உடல் பாதிப்பு மருத்துவத்தால் குணமாகும். மருத்துவச் செலவு குறையும். 2,3,4 ம் பாதத்தினருக்கு அஷ்டம ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் நோய்கள் வெளிப்படும்.  சிலருக்கு விபத்தும் ஏற்படும். மருத்துவச் செலவு அதிகரிக்கும்.குடும்பம் தம்பதி ஒற்றுமை உண்டாகும். குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். தன் குடும்பம் தன் பிள்ளைகள் என்ற எண்ணம் உண்டாகும். பஇடம் வீடு வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். சமூக அந்தஸ்து உயரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை கூடும். சுபநிகழ்ச்சி நடக்கும். சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவர்.பரிகாரம்: கிருஷ்ணரை வழிபட சங்கடம் விலகி நன்மை உண்டாகும்.திருவோணம்..வளமுடன் வாழ்வீர்கள்மனக்காரகனான சந்திரனை நட்சத்திர அதிபதியாகவும், கர்மக் காரகனான சனியை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் நினைப்பதை சாதிப்பீர்கள். பிறரின் வெற்றியை முறையை அறிந்து அதைப் பின்பற்ற முயல்வீர்கள். உங்கள் முன்னேற்றத்திற்காக எந்த எல்லைக்கும் செல்வதற்கு தயங்காத நீங்கள், சாதுவாக இருந்தாலும் மனதில் உறுதி மிக்கவர். இதுவரை 5 ம் இடத்தில் சஞ்சரித்து யோகப் பலன் வழங்கிய குரு பகவான், மே 11 முதல் மறைவு ஸ்தானமான 6ம் இடத்தில் சஞ்சரித்து பலன் வழங்க உள்ளார். சுப கிரகமான குரு மறைவு பெறுவதால் சுபிட்சம் மறையும். நன்மை விலகும். ஆறாமிடத்தில் குரு சஞ்சரிக்கும் காலத்தில் சோதனை ஏற்படும். உடல் பாதிப்பு உண்டாகும். முழங்கால், வயிறு, கருப்பை, மாதவிடாய்க் கோளாறு, அஜீரணம், சிறுநீரக பாதிப்பு தலை துாக்கலாம். பணவரவில் தடை உண்டாகும். நண்பர்களும் எதிரியாக மாறும் நிலை ஏற்படும். தொழிலில் முதலீடு அதிகரிக்கும் என்றாலும் அதற்கேற்ற வருமானம் இல்லாமல் போகும். கடன் தொல்லையால் மனம் கலங்கும். வரவை விட செலவு அதிகரிக்கும். மனம் எதையோ இழந்தது போல் எதிலும் நாட்டம் கொள்ளாது. எந்த இடத்திற்குச் சென்றாலும் போட்டியாளர்கள் உண்டாவர். தம்பதிக்குள்  அடிக்கடி கருத்து வேறுபாடு வரும். உறவினர், நண்பர்கள் பகையாவர். புதிய நண்பர்கள் சேர்க்கை அமையும் என்றாலும் அவர்களும் சுயநலக்காரராக இருப்பர். குறுக்கு வழியில் செல்ல எண்ணம் வரும். அதனால் அவமானம் உண்டாகும். தொழில், வேலை தொடர்பாக சிலர்  வழக்குகளை சந்திக்க நேரும்.பார்வைகளின் பலன் குரு, தான் சஞ்சரிக்கும் இடத்தை விட, பார்க்கும் இடங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்குவார். அவரது பார்வைகள் எந்த இடத்திற்கு உண்டாகிறதோ அந்த பாவகம் சுபத்துவம் அடையும் என்பது பொது விதி. இக்காலத்தில் 10ம் இடமான ஜீவன ஸ்தானம், 12ம் இடமான விரய ஸ்தானம், 2 ம் இடமான தன, குடும்ப, வாக்கு ஸ்தானங்களுக்கு குரு பார்வை உண்டாவதால், தொழில் முன்னேற்றம் அடையும். வேலையில்  ஏற்பட்ட சிக்கல், வழக்கு என்பதில் இருந்து விடுதலை உண்டாகும். தொழிலில் தடைகள் விலகும். அரசியல்வாதிகளுக்கு பட்டம், பதவி என யோகம் உண்டாகும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். நிலம் வாங்குதல் வீடு கட்டுதல் என வாழ்வு மேம்படும். தொழிலைப் புதுப்பிக்கும் பணி நடந்தேறும். புதிய வாகனம் அமையும். அலைச்சல் அதிகரிக்கும். உடல் பாதிப்பு ஏற்படும். பொன், பொருளை விற்று சுபநிகழ்ச்சி நடத்தும் நிலை உண்டாகும். வாழ்க்கைத் துணையை அனுசரித்தால்தான் வாழ்க்கை நடந்தேறும். படுக்கை அறையில் நிம்மதி இருக்கும். அரசு விவகாரத்தில் இக்காலத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. திருமணம் நடத்தும் யோகம் உண்டாகும். சிலர் சொந்தமாக வீடு கட்டி அதில் குடியேறுவர்.சனி சஞ்சாரம்  2026 மார்ச் 6 வரை பாதச்சனியாக சஞ்சரிக்கும் சனி பகவான், பொருளாதார நெருக்கடி, நட்புகளிடையே பகை, குடும்பத்தில் பிரச்னை, எதிர்பார்ப்பில் இழுபறிகளை ஏற்படுத்துவார் மிதுன குருவின் பார்வை சனிக்கு உண்டாவதால் சனியால் ஏற்படும் பாதிப்பு நெருங்காமல் போகும். 2026 மார்ச் 6 முதல் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி,  ஏழரை ஆண்டாக இருந்த நெருக்கடிகளில் இருந்து விடுவிப்பார். மனதில் தைரியம் அதிகரிக்கும். உடல்நிலை சீராகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். செல்வாக்கு உயரும்.ராகு, கேது சஞ்சாரம்இக்காலத்தில் ராகு 2 ம் இடத்தில் சஞ்சரிப்பதால், வரவு செலவில் நெருக்கடி ஏற்படும். குடும்பத்தில் பிரச்னைகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்குள் இடைவெளி, பிரிவினை ஏற்படும். மிதுன குருவின் பார்வை ராகுவிற்கு உண்டாவதால் பாதிப்பு நெருங்காது. 8 ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் உடல் பாதிப்பு, வியாபாரம், தொழில், வேலையில்  பிரச்னை, அவமானம், சட்டச் சிக்கல்கள், வழக்கு, விபத்து, நிம்மதியற்ற நிலை ஏற்படும்.சூரிய சஞ்சாரம்  ஜூன் 16 – ஜூலை 16, அக். 18 – டிச. 15, 2026 மார்ச் 15 – ஏப். 13 காலங்களில் சூரியனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால்  நினைத்தது நடந்தேறும். தடைபட்ட முயற்சி வெற்றியாகும். உடல்நிலை சீராகும். வழக்கு வெற்றியாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். பணவரவு அதிகரிக்கும்.செவ்வாய் சஞ்சாரம்அக். 27 – டிச. 6, 2026 ஏப். 1 – மே 26 காலங்களில் செவ்வாயின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். எதிர்பார்த்த பணம் வரும். நவீன பொருட்கள் சேரும். செல்வாக்கு உயரும்.பொதுப்பலன்  குரு பகவான் தன் பார்வைகளாலும், ஜூன் 6 முதல் ஜூலை 8 வரை அஸ்தமன காலத்திலும், அக். 8 முதல் நவ. 8 வரை கடகத்தில் சஞ்சரிக்கும் போதும் நன்மையை உண்டாக்குவார். 2026 மார்ச் 6 முதல் சனியும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். சூரியன், செவ்வாய் சஞ்சார நிலைகளும் உங்களைப் பாதுகாக்கும்.தொழில் ஜீவன ஸ்தானத்திற்கும், தன ஸ்தானத்திற்கும் குருபார்வைகள் கிடைப்பதால் தொழில் வளர்ச்சி அடையும். லாபம் உண்டாகும். பேக்டரி, வாகன உற்பத்தி, உதிரிபாக உற்பத்தி, வாகன விற்பனை, ஆட்டோ மொபைல்ஸ், டிராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், இன்ஜினியரிங், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம், ஆடை ஆபரணம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், வேளாண்மை, வேளாண்மைச் சார்ந்த தொழில்கள் அதிக லாபம் தரும். பணியாளர்கள்பணிபுரியும் இடத்தில் நிர்வாகம், சக ஊழியர்களை அனுசரிப்பது அவசியம். உங்களுக்கு எதிராக சிலர் மறைமுகமாக செயல்படுவர் என்பதால் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. அரசு பணியாளர்களுக்கு மறைமுகத் தொல்லை அதிகரிக்கும். மெமோ, வழக்கு என சந்திக்க நேரிடும். உங்களுக்கும் கீழானவர்களால் அவமானம் ஏற்பட வாய்ப்புண்டு. பெண்கள் மறைவு ஸ்தானங்களில் குரு, கேது சஞ்சரிப்பதால் உடல்நிலையில் கவனம் தேவை. கருப்பைக் கோளாறு, அல்சர், அஜீரணக் கோளாறு சிலருக்கு ஏற்படும். மாங்கல்ய ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் கணவரின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். உங்களை அவமானப்படுத்தும் முயற்சியில் சிலர் ஈடுபடலாம் என்பதால் எதிர்பாலினரிடம் இருந்து விலகி இருங்கள். வேலை பார்க்கும் இடத்தில் கவனக்குறைவிற்கு இடம் கொடுக்காமலும், ஆசைக்கு ஆட்படாமலும் இருப்பது மிக அவசியம். எந்த ஒன்றாக இருந்தாலும் கணவரிடம் கலந்து பேசி முடிவெடுப்பது நல்லது. குருபார்வையால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.கல்விவாக்கு ஸ்தானத்திற்கு குருபார்வை உண்டாவதால் படிப்பில் அக்கறை உண்டாகும். பொது, போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும்.உடல்நிலை  அஷ்டம ஸ்தானத்தில் கேது, ஆறாமிடத்தில் குரு சஞ்சரிப்பதால் உடல் நிலையில் எதிர்பாராத பாதிப்பு ஏற்படும், வாகன விபத்து, தீ விபத்து சிலருக்கு ஏற்படும். மறைந்திருந்த தொற்றுநோய் வெளிப்படும். அஜீரணம், அல்சர், ஒவ்வாமை, மூச்சுத்திணறல் என மருத்துவச் செலவு ஏற்படும். மருத்துவம் செய்தும் பலனில்லை என்ற நிலையும் சிலருக்கு வரலாம். குடும்பம் குடும்ப ஸ்தானத்திற்கு குருப்பார்வை உண்டாவதால் தம்பதிக்குள் பிரச்னை விலகும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். புதிய முயற்சிகளில் எச்சரிக்கை தேவை. புதிய இடம் வாங்கும் போது சட்ட சிக்கல்களை ஆராய்ந்து பார்ப்பது நல்லது. பரிகாரம்; பைரவரை வழிபட பயம் போகும். நன்மை உண்டாகும்.அவிட்டம்.. குருபார்வையால் நன்மை!தைரிய வீரிய பராக்கிரமக்காரனான செவ்வாயை நட்சத்திர அதிபதியாகக் கொண்டிருந்தாலும், 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மகரம் ராசியாகும். 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு கும்பம் ராசியாகும். இரண்டு ராசியினருக்கும் கர்மக் காரகனான சனி பகவானே ராசிநாதன் என்பதால், சனி, செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நீங்கள்.  நீங்கள் கொஞ்சமும் எதிர்பார்த்திராத மாற்றம் வாழ்வில் ஏற்படும். திடீரென கற்பனைக்கு அப்பாற்பட்ட இடத்திலும் கோலோச்சுவீர்கள். திடீரென முற்றும் துறந்த நிலைக்கும் மாறி விடுவீர்கள். சனி, செவ்வாய் சேர்க்கை பெற்றவர்கள் கர்ம வினைகளுடன் பிறந்தவர்கள் என்பதால் காலத்தின் போக்கில் செல்லக் கூடியவர்களாக உங்களில் பலர் இருப்பர்.  1,2 ம் பாதத்தினருக்கு மே 11 முதல் குரு பகவான் சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரித்து, எதிர்ப்புகளை அதிகரிப்பார். எங்கும் போட்டி எதிலும் பிரச்னை என்ற நிலையை உருவாக்குவார். நன்றாகப் பழகி வந்தவர்களும் விலகிச் செல்லக்கூடிய அளவிற்கு பகையை ஏற்படுத்துவார். உடல் பாதிப்புகளை அதிகரிப்பார். வம்பு, வழக்குகள் என சங்கடப்படுத்துவார். மனதில் நிம்மதி இல்லாத நிலையை உருவாக்குவார். 3, 4 ம் பாதத்தினருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5 ம் இடத்தில் சஞ்சரிப்பவர், இதுவரை இருந்த நிலையில் மாற்றத்தை உண்டாக்குவார். மகிழ்ச்சியை ஏற்படுத்துவார். உங்களுக்கு லாபாதிபதியும், குடும்பாதிபதியுமான குருபகவான் 5 ம் இடத்தில் சஞ்சரிக்கும் இக்காலத்தில் திருமணம் நடந்தேறும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கும், பிரிந்தவர்களுக்கும் மறுமணம் நடக்கும். புதிய நட்பு உருவாகும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். குழந்தைகளைப் பற்றிய சிந்தனை உண்டாகும். அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். இதுவரை இருந்த கட்டுப்பாடுகள் இனி மாறும். கோயில் கோயிலாகச் சென்று வருவீர்கள். உங்கள் வாழ்வில் புதிய பாதை தெரியும். வருமானம் அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புதிய முயற்சி வெற்றியாகும்.பார்வைகளின் பலன் தான் சஞ்சரிக்கும் இடத்தை விட, பார்க்கும் இடங்களுக்கு முன்னேற்றத்தை குரு உண்டாக்குவார். அவருடைய பார்வைகள் எந்த இடத்திற்கு உண்டாகிறதோ அந்த பாவகம் சுபத்துவம் அடையும் என்பது பொது விதி. இக்காலத்தில் 1,2 ம் பாதத்தினருக்கு, தன் 5,7,9 ம் பார்வைகளை 10, 12, 2 ம் இடங்களுக்கு வழங்குவதால், தொழில் முன்னேற்றம் பெறும்.  வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பணியில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். விரயச் செலவு அதிகரிக்கும். புதிய இடம், வீடு, வாகனம் என வாங்குவதால் கையிருப்பு கரையும். நிம்மதியான உறக்கம், மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். 3, 4 ம் பாதத்தினருக்கு, 9, 11, உங்கள் ராசியை குரு பார்ப்பதால், தெய்வ அருள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு ஏற்படும். நீண்டநாளாக எண்ணியிருந்த கோயில்களுக்கு செல்வீர்கள். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். முடங்கிய தொழில்களை மீண்டும் கையில் எடுப்பீர்கள். வரவு அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். மனதில் இருந்த குழப்பம் விலகி தெளிவடைவீர்கள். சனி சஞ்சாரம் 1,2 ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை 2 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், குடும்பத்திற்குள் குழப்பம், பண வரவில் தடை, வார்த்தைகளால் சங்கடத்தை ஏற்படுத்துவார் என்றாலும் மிதுன குருவின் பார்வையால் பாதிப்பு உங்களை நெருங்காமல் போகும். மார்ச் 6 முதல் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி முயற்சிகளை வெற்றியாக்குவார். மனதில் தைரியத்தை அதிகரிப்பார். உடல்நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். குடும்பத்தில் நிம்மதியை ஏற்படுத்துவார். 3, 4 ம் பாதத்தினருக்கு, ஜென்ம ராசிக்குள் சஞ்சரிப்பவர், எழ முடியாத அளவிற்கு உங்களைக் கட்டிப் போடுவார்.  நிம்மதியற்ற நிலையை உண்டாக்குவார். தொழிலை முடக்குவார். நண்பரிடம் இருந்து பிரிப்பார். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு வரலாம். மிதுன குருவின் பார்வையால் இவற்றில் எல்லாம் மாற்றம் ஏற்படும். 2026 மார்ச் 6 முதல் பாதச்சனியாக சஞ்சரிப்பவர் நெருக்கடிகளில் இருந்து உங்களை விடுவிப்பார்.ராகு, கேது சஞ்சாரம் 1, 2 ம் பாதத்தினருக்கு, ராகு 2 ம் இடத்தில் சஞ்சரிப்பதால், நெருக்கடி அதிகரிக்கும். குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். வரவு, செலவில் நெருக்கடி ஏற்படும். கணவன், மனைவிக்குள் இடைவெளி ஏற்படும்.  ஆனாலும் மிதுன குருவின் பார்வை ராகுவிற்கு உண்டாவதால் பாதிப்பு குறையும். 8 ம் இட கேதுவால் குறுக்கு வழியில் மனம் செல்லும். அதனால் சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும்.  நோய் நொடி வரலாம். வியாபாரம், தொழில், வேலையில்  பிரச்னை, அவமானம்,  வழக்குகள் ஏற்படும். 3, 4 ம் பாதத்தினருக்கு ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகு ஆசைகளை அதிகரிப்பார். சிலருக்கு அலைச்சலை ஏற்படுத்துவார். வருமானத்தை தேட வைப்பார். மிதுன குரு உங்கள் கவுரவத்தை பாதுகாப்பார். நல்லவர்களுடன் சேர வைப்பார். 7 ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேது கணவன், மனைவிக்குள் பிரச்னையை ஏற்படுத்துவார். கூட்டுத்தொழிலில் பிளவை உண்டாக்குவார்.சூரிய சஞ்சாரம் 1,2 ம் பாதத்தினருக்கு, ஜூன் 16 – ஜூலை 16, அக். 18 – டிச. 15, 2026 மார்ச் 15 – ஏப். 13 காலங்களிலும், 3,4 ம் பாதத்தினருக்கு, ஜூலை 17 – ஆக. 16, நவ. 17 – 2026 ஜன 14 காலங்களிலும் சூரியனின் சஞ்சாரம்  சாதகமாக இருப்பதால் அரசு வழி முயற்சிகள் சாதகமாகும். வழக்குகள் வெற்றியாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும். கடல் கடந்து வேலைக்காக செல்லும் வாய்ப்பு வரும்.  நினைத்தது நடந்தேறும். உடல்நிலை சீராகும். வியாபாரம் முன்னேற்றம் பெறும். பணவரவு அதிகரிக்கும்.செவ்வாய் சஞ்சாரம்1,2 ம் பாதத்தினருக்கு, அக். 27 – டிச. 6, 2026 ஏப். 1 – மே 26 காலங்களிலும், 3,4 ம் பாதத்தினருக்கு, டிச. 6 – 2026 ஜன. 14 காலத்திலும் செவ்வாயின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். தடைபட்ட வேலை நடந்தேறும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். பொதுப்பலன்  1,2 ம் பாதத்தினருக்கு, குரு பகவான் தன் பார்வைகளாலும், ஜூன் 6 முதல் ஜூலை 8 வரை அஸ்தமன காலத்திலும், அக். 8 முதல் நவ. 8 வரை கடகத்தில் சஞ்சரிக்கும் போதும் நன்மைகளை உண்டாக்குவார். 2026 மார்ச் 6 முதல் சனியும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். 3,4 ம் பாதத்தினருக்கு 5 ம் இட குருவும், அவருடைய பார்வைகளும் சூரியன், செவ்வாய் சஞ்சார நிலைகளும் யோகப்பலன்களை வழங்கும்.தொழில் தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். தொழிலை விரிவு செய்யும் முயற்சி வெற்றியாகும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வேளாண்மை, ரியல் எஸ்டேட், மெடிக்கல், கெமிக்கல், உணவகம், ரசாயனம், ஆயில் ஸ்டோர், இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி, ஆட்டோ மொபைல்ஸ், டிராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், ஏற்றுமதி இறக்குமதி, ஆன்லைன் வர்த்தகம் லாபம் தரும்.பணியாளர்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். மேல் அதிகாரிகளின் ஆதரவால் எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். ஒரு சிலர் இருக்கும் வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு முயற்சிப்பதுடன் கடல் கடந்தும் வேலைக்காக செல்வீர்கள்.பெண்கள் குருவின் பார்வைகள் சாதகமாக இருப்பதால் படிப்பு, வேலை, திருமணம் என்ற கனவு நனவாகும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மறுமணம் நடந்தேறும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பொன், பொருள் சேரும்.கல்வி இக்காலத்தில் குருபார்வை சாதகமாக இருப்பதால் படிப்பில் அக்கறை அதிகரிக்கும். பொது,  போட்டித் தேர்விலும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும். ஒரு சிலர் படிப்பிற்காக கடல் கடந்தும் செல்வீர்கள்.உடல்நிலை  1,2 ம் பாதத்தினருக்கு, அஷ்டம கேதுவும், ஆறாமிட குருவும்  நோய்களை உண்டாக்குவர். வாகன விபத்து, தீ விபத்து என ஒரு சிலருக்கு ஏற்படும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். 3,4 ம் பாதத்தினருக்கு பாதிப்புகள் விலகும். ஆரோக்கியம் சீராகும். சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள்.குடும்பம்குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். தம்பதிகளுக்கு ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளின் மீது அக்கறை கூடும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்குவீர்கள். உறவினர் மத்தியில் மரியாதை அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.பரிகாரம்: திருச்செந்துார் முருகனை வழிபட சங்கடங்கள் நீங்கும்.

அவிட்டம்.. குருபார்வையால் நன்மை!தைரிய வீரிய பராக்கிரமக்காரனான செவ்வாயை நட்சத்திர அதிபதியாகக் கொண்டிருந்தாலும், 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மகரம் ராசியாகும். 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு கும்பம் ராசியாகும். இரண்டு ராசியினருக்கும் கர்மக் காரகனான சனி பகவானே ராசிநாதன் என்பதால், சனி, செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நீங்கள்.  நீங்கள் கொஞ்சமும் எதிர்பார்த்திராத மாற்றம் வாழ்வில் ஏற்படும். திடீரென கற்பனைக்கு அப்பாற்பட்ட இடத்திலும் கோலோச்சுவீர்கள். திடீரென முற்றும் துறந்த நிலைக்கும் மாறி விடுவீர்கள். சனி, செவ்வாய் சேர்க்கை பெற்றவர்கள் கர்ம வினைகளுடன் பிறந்தவர்கள் என்பதால் காலத்தின் போக்கில் செல்லக் கூடியவர்களாக உங்களில் பலர் இருப்பர்.  1,2 ம் பாதத்தினருக்கு மே 11 முதல் குரு பகவான் சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரித்து, எதிர்ப்புகளை அதிகரிப்பார். எங்கும் போட்டி எதிலும் பிரச்னை என்ற நிலையை உருவாக்குவார். நன்றாகப் பழகி வந்தவர்களும் விலகிச் செல்லக்கூடிய அளவிற்கு பகையை ஏற்படுத்துவார். உடல் பாதிப்புகளை அதிகரிப்பார். வம்பு, வழக்குகள் என சங்கடப்படுத்துவார். மனதில் நிம்மதி இல்லாத நிலையை உருவாக்குவார். 3, 4 ம் பாதத்தினருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5 ம் இடத்தில் சஞ்சரிப்பவர், இதுவரை இருந்த நிலையில் மாற்றத்தை உண்டாக்குவார். மகிழ்ச்சியை ஏற்படுத்துவார். உங்களுக்கு லாபாதிபதியும், குடும்பாதிபதியுமான குருபகவான் 5 ம் இடத்தில் சஞ்சரிக்கும் இக்காலத்தில் திருமணம் நடந்தேறும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கும், பிரிந்தவர்களுக்கும் மறுமணம் நடக்கும். புதிய நட்பு உருவாகும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். குழந்தைகளைப் பற்றிய சிந்தனை உண்டாகும். அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். இதுவரை இருந்த கட்டுப்பாடுகள் இனி மாறும். கோயில் கோயிலாகச் சென்று வருவீர்கள். உங்கள் வாழ்வில் புதிய பாதை தெரியும். வருமானம் அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புதிய முயற்சி வெற்றியாகும்.பார்வைகளின் பலன் தான் சஞ்சரிக்கும் இடத்தை விட, பார்க்கும் இடங்களுக்கு முன்னேற்றத்தை குரு உண்டாக்குவார். அவருடைய பார்வைகள் எந்த இடத்திற்கு உண்டாகிறதோ அந்த பாவகம் சுபத்துவம் அடையும் என்பது பொது விதி. இக்காலத்தில் 1,2 ம் பாதத்தினருக்கு, தன் 5,7,9 ம் பார்வைகளை 10, 12, 2 ம் இடங்களுக்கு வழங்குவதால், தொழில் முன்னேற்றம் பெறும்.  வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பணியில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். விரயச் செலவு அதிகரிக்கும். புதிய இடம், வீடு, வாகனம் என வாங்குவதால் கையிருப்பு கரையும். நிம்மதியான உறக்கம், மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். 3, 4 ம் பாதத்தினருக்கு, 9, 11, உங்கள் ராசியை குரு பார்ப்பதால், தெய்வ அருள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு ஏற்படும். நீண்டநாளாக எண்ணியிருந்த கோயில்களுக்கு செல்வீர்கள். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். முடங்கிய தொழில்களை மீண்டும் கையில் எடுப்பீர்கள். வரவு அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். மனதில் இருந்த குழப்பம் விலகி தெளிவடைவீர்கள். சனி சஞ்சாரம் 1,2 ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை 2 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், குடும்பத்திற்குள் குழப்பம், பண வரவில் தடை, வார்த்தைகளால் சங்கடத்தை ஏற்படுத்துவார் என்றாலும் மிதுன குருவின் பார்வையால் பாதிப்பு உங்களை நெருங்காமல் போகும். மார்ச் 6 முதல் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி முயற்சிகளை வெற்றியாக்குவார். மனதில் தைரியத்தை அதிகரிப்பார். உடல்நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். குடும்பத்தில் நிம்மதியை ஏற்படுத்துவார். 3, 4 ம் பாதத்தினருக்கு, ஜென்ம ராசிக்குள் சஞ்சரிப்பவர், எழ முடியாத அளவிற்கு உங்களைக் கட்டிப் போடுவார்.  நிம்மதியற்ற நிலையை உண்டாக்குவார். தொழிலை முடக்குவார். நண்பரிடம் இருந்து பிரிப்பார். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு வரலாம். மிதுன குருவின் பார்வையால் இவற்றில் எல்லாம் மாற்றம் ஏற்படும். 2026 மார்ச் 6 முதல் பாதச்சனியாக சஞ்சரிப்பவர் நெருக்கடிகளில் இருந்து உங்களை விடுவிப்பார்.ராகு, கேது சஞ்சாரம் 1, 2 ம் பாதத்தினருக்கு, ராகு 2 ம் இடத்தில் சஞ்சரிப்பதால், நெருக்கடி அதிகரிக்கும். குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். வரவு, செலவில் நெருக்கடி ஏற்படும். கணவன், மனைவிக்குள் இடைவெளி ஏற்படும்.  ஆனாலும் மிதுன குருவின் பார்வை ராகுவிற்கு உண்டாவதால் பாதிப்பு குறையும். 8 ம் இட கேதுவால் குறுக்கு வழியில் மனம் செல்லும். அதனால் சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும்.  நோய் நொடி வரலாம். வியாபாரம், தொழில், வேலையில்  பிரச்னை, அவமானம்,  வழக்குகள் ஏற்படும். 3, 4 ம் பாதத்தினருக்கு ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகு ஆசைகளை அதிகரிப்பார். சிலருக்கு அலைச்சலை ஏற்படுத்துவார். வருமானத்தை தேட வைப்பார். மிதுன குரு உங்கள் கவுரவத்தை பாதுகாப்பார். நல்லவர்களுடன் சேர வைப்பார். 7 ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேது கணவன், மனைவிக்குள் பிரச்னையை ஏற்படுத்துவார். கூட்டுத்தொழிலில் பிளவை உண்டாக்குவார்.சூரிய சஞ்சாரம் 1,2 ம் பாதத்தினருக்கு, ஜூன் 16 – ஜூலை 16, அக். 18 – டிச. 15, 2026 மார்ச் 15 – ஏப். 13 காலங்களிலும், 3,4 ம் பாதத்தினருக்கு, ஜூலை 17 – ஆக. 16, நவ. 17 – 2026 ஜன 14 காலங்களிலும் சூரியனின் சஞ்சாரம்  சாதகமாக இருப்பதால் அரசு வழி முயற்சிகள் சாதகமாகும். வழக்குகள் வெற்றியாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும். கடல் கடந்து வேலைக்காக செல்லும் வாய்ப்பு வரும்.  நினைத்தது நடந்தேறும். உடல்நிலை சீராகும். வியாபாரம் முன்னேற்றம் பெறும். பணவரவு அதிகரிக்கும்.செவ்வாய் சஞ்சாரம்1,2 ம் பாதத்தினருக்கு, அக். 27 – டிச. 6, 2026 ஏப். 1 – மே 26 காலங்களிலும், 3,4 ம் பாதத்தினருக்கு, டிச. 6 – 2026 ஜன. 14 காலத்திலும் செவ்வாயின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். தடைபட்ட வேலை நடந்தேறும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். பொதுப்பலன்  1,2 ம் பாதத்தினருக்கு, குரு பகவான் தன் பார்வைகளாலும், ஜூன் 6 முதல் ஜூலை 8 வரை அஸ்தமன காலத்திலும், அக். 8 முதல் நவ. 8 வரை கடகத்தில் சஞ்சரிக்கும் போதும் நன்மைகளை உண்டாக்குவார். 2026 மார்ச் 6 முதல் சனியும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். 3,4 ம் பாதத்தினருக்கு 5 ம் இட குருவும், அவருடைய பார்வைகளும் சூரியன், செவ்வாய் சஞ்சார நிலைகளும் யோகப்பலன்களை வழங்கும்.தொழில் தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். தொழிலை விரிவு செய்யும் முயற்சி வெற்றியாகும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வேளாண்மை, ரியல் எஸ்டேட், மெடிக்கல், கெமிக்கல், உணவகம், ரசாயனம், ஆயில் ஸ்டோர், இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி, ஆட்டோ மொபைல்ஸ், டிராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், ஏற்றுமதி இறக்குமதி, ஆன்லைன் வர்த்தகம் லாபம் தரும்.பணியாளர்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். மேல் அதிகாரிகளின் ஆதரவால் எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். ஒரு சிலர் இருக்கும் வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு முயற்சிப்பதுடன் கடல் கடந்தும் வேலைக்காக செல்வீர்கள்.பெண்கள் குருவின் பார்வைகள் சாதகமாக இருப்பதால் படிப்பு, வேலை, திருமணம் என்ற கனவு நனவாகும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மறுமணம் நடந்தேறும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பொன், பொருள் சேரும்.கல்வி இக்காலத்தில் குருபார்வை சாதகமாக இருப்பதால் படிப்பில் அக்கறை அதிகரிக்கும். பொது,  போட்டித் தேர்விலும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும். ஒரு சிலர் படிப்பிற்காக கடல் கடந்தும் செல்வீர்கள்.உடல்நிலை  1,2 ம் பாதத்தினருக்கு, அஷ்டம கேதுவும், ஆறாமிட குருவும்  நோய்களை உண்டாக்குவர். வாகன விபத்து, தீ விபத்து என ஒரு சிலருக்கு ஏற்படும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். 3,4 ம் பாதத்தினருக்கு பாதிப்புகள் விலகும். ஆரோக்கியம் சீராகும். சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள்.குடும்பம்குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். தம்பதிகளுக்கு ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளின் மீது அக்கறை கூடும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்குவீர்கள். உறவினர் மத்தியில் மரியாதை அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.பரிகாரம்: திருச்செந்துார் முருகனை வழிபட சங்கடங்கள் நீங்கும்.சதயம்.. நல்ல நேரம் வந்தாச்சு யோகக்காரகனான ராகுவை நட்சத்திர அதிபதியாகவும், ஆயுள் காரகனான சனியை ராசி நாதனாகவும் கொண்ட நீங்கள் எடுத்த வேலைகளை முடிப்பதில் சாமர்த்தியசாலிகள். பிறரால் செய்ய முடியாத காரியங்களை செய்து ஆதாயம் காண்பவர்கள். எப்போதும் செல்வாக்கோடு வாழ்ந்து வரும் உங்களுக்கு, மே11ல் நடைபெற இருக்கும் குருப்பெயர்ச்சி மிகப் பெரிய யோகங்களை தரப் போகிறது. உங்கள் ராசிக்கு தனாதிபதியும், லாபாதிபதியுமான குரு பகவான்,  5ம் இடத்தில் சஞ்சரிக்கும் காலம் நீங்கள் நினைத்ததை சாதிக்கும் காலமாகும். உங்கள் செல்வாக்கு பன்மடங்கு உயரும். நீண்ட நாளாக எதிர்பார்த்த பதவி, பொறுப்பு  தேடி வரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். வேலையில் இருந்த வழக்குகள் முடிவிற்கு வரும். தடைபட்டு வந்த பணி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். கணவன், மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும். உடல் பாதிப்புகள் விலகும். சோர்வாக இருந்த உங்களுக்குள் சுறுசுறுப்பு அதிகரிக்கும். தடைபட்ட காரியங்கள் ஒவ்வொன்றும் முடிவிற்கு வரும். தொழில் முன்னேற்றம் அடையும். கேட்ட இடத்தில் இருந்து கேட்ட உதவி கிடைக்கும். திருமண வயதில்  இருப்பவர்களுக்கு திருமணம் முடியும். இருப்பிடத்தை உங்கள் ரசனைக்கேற்ற விதத்தில் மாற்றியமைப்பீர்கள். வீட்டில் நவீன பொருட்களின் சேர்க்கை உண்டாகும். புனித தலங்களுக்கு செல்லும் பாக்கியம் சிலருக்கு உண்டாகும். புதிய வீடு, மனை வாங்குவீர்கள். அதற்கான உதவிகளும் கிடைக்கும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியவர்களின் ஏக்கம் தீரும். சிலருக்கு ஆண் குழந்தை பிறக்கும்.பார்வைகளின் பலன் குரு, தான் சஞ்சரிக்கும் இடத்தை விட, பார்க்கும் இடங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்குவார். அவருடைய பார்வைகள் எந்த இடத்திற்கு உண்டாகிறதோ அந்த பாவகம் சுபத்துவம் அடையும் என்பது பொது விதி. இக்காலத்தில் 9 ம் வீடான பாக்ய ஸ்தானத்தையும், 11 ம் வீடான லாப ஸ்தானத்தையும் 9 ம் பார்வையால் உங்கள் ராசியையும் பார்ப்பதால், உங்கள் நிலையில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். நீங்கள் பிறந்ததன் பலனை இக்காலத்தில் அடைவீர்கள். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். எதிர்பார்த்த புகழ், பெருமை உண்டாகும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். பொன், பொருள் சேரும். பொருளாதார நிலை உயரும். எதிர்பார்ப்பு இல்லாமல் செய்த செயல்களில் இப்போது லாபம் கிடைக்கும். வேலைகள் யாவும் நினைத்தபடியே நடக்கும். அரசாங்க உதவியும் ஆதரவும் உண்டாகும். விலகி இருந்த நண்பர்கள், உறவினர்கள் உங்களுடன் சேருவர். புதிய சொத்துகள் வாங்கும் நிலை உண்டாகும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு ஏற்படும். துணையை இழந்தவர்களுக்கு புதிய துணை அமையும். கருத்து வேறுபாட்டால் பிரிந்தவர்கள் ஒன்று சேருவர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் இருந்த தடைகள் விலகும். தந்தை வழியில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். தந்தையின் உடல் நிலையில் ஆரோக்கியம் தோன்றும். ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டாகும். சிலர் புதிய கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்வீர்கள். வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். அரசுப் பணிக்காக தேர்வு எழுதுபவர்களுக்கு வெற்றி உண்டாகும். பழைய பிரச்னைகள் எல்லாம் முடிவிற்கு வரும். வழக்குகளில் இருந்த இழுபறி நீங்கி வெற்றியுண்டாகும். திருமணத்தில் தடை விலகும். வாழ்க்கைத் துணையால் அந்தஸ்து உயரும். சொந்தமாக வீடு நிலம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.சனி சஞ்சாரம்2026 மார்ச் 6 வரை ஜென்ம சனியாக சஞ்சரிப்பவர் சோதனை, வேதனைகளையும் அதிகரிப்பார். வாழ்க்கைத் துணையுடன் பிரச்னைகளை உண்டாக்குவார். நட்புகளுடன் இணக்கமற்ற நிலை உண்டாகும். மிதுன குருவின் பார்வை இந்நிலைகளை மாற்றும். 2026 மார்ச் 6 முதல் பாதச்சனியாக சஞ்சரிப்பவர் இதுவரை இருந்த நெருக்கடியில் இருந்து உங்களை விடுவிப்பார். வசதி வாய்ப்புகளை அதிகரிப்பார்.ராகு, கேது சஞ்சாரம்இக்காலத்தில் ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகு, வசதி வாய்ப்புகளைத் தேட வைப்பார். கிடைக்காத ஒவ்வொன்றின் மீதும் ஆசைகளை அதிகரிப்பார். சட்டத்திற்கு புறம்பான செயல்களிலும் ஈடுபட வைப்பார். ஒழுக்கம், பண்பாடு, நேர்மை என்பதற்கு எதிர்மறையாக செயல்பட வைப்பார் என்றாலும், மிதுன குரு உங்கள் கவுரவத்தை பாதுகாப்பார். 7 ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் உங்களுக்குள் புதிய சிந்தனை உண்டாகும். குடும்பத்தில் நெருக்கடி அதிகரிக்கும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமையில்லாத நிலை ஏற்படும். கூட்டுத்தொழிலில் பிரச்னைகள் அதிகரிக்கும். இருக்கும் இடத்தை விட்டு வெளியூர் செல்ல வேண்டிய நிலை  ஏற்படும்.சூரிய சஞ்சாரம்ஜூலை 17 – ஆக. 16, நவ. 17 – 2026 ஜன 14 காலங்களில் சூரியனின் சஞ்சாரம்  சாதகமாக இருப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் லாபமாகும். பொருளாதார நெருக்கடி விலகும். உடல்நிலை சீராகும். அரசு வழி முயற்சி சாதகமாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். நினைத்த வேலைகள் நடந்தேறும். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும்.செவ்வாய் சஞ்சாரம் டிச. 6 – 2026 ஜன.14 காலத்தில்  செவ்வாயின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்கள் செல்வாக்கு உயரும்.பொதுப்பலன்  5 ம் இட குருவும், அவருடைய பார்வைகளும் சூரியன், செவ்வாய் சஞ்சார நிலைகளும் உங்களுக்கு யோகப் பலன்களை வழங்கும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.தொழில் குருவின் சஞ்சாரமும், பார்வைகளும் சாதகமாக இருப்பதால் தொழிலில் இருந்த நெருக்கடிகள் விலகும். நஷ்டத்தில் இயங்கி நலிவடைந்த தொழில்கள் மீண்டும் வளர்ச்சி அடையும். லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், ரசாயனம், இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி, ஆட்டோ மொபைல்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ், பேக்டரி, டிராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம், ஜூவல்லரி, திரைப்படம், சின்னத்திரை, வேளாண்மை, வேளாண்மைச் சார்ந்த பொருட்கள், உணவு தானியம்,  உணவகம், கேட்டரிங், பிரிக்ஸ், எம் சாண்ட், மெடிக்கல் ஆகிய துறைகளில் லாபம் உண்டாகும்.பணியாளர்கள்ராசிக்கு குரு பார்வை உண்டாவதுடன், லாப ஸ்தானமும் பலப்படுவதால் பணியாளர்களுக்கு இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும்.  நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த சலுகை, ஊதியம் கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். அரசு பணியாளர்களுக்கு இழுபறியாக இருந்த வழக்கு விவகாரம் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும்.பெண்கள் ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகு ஆசைகளை அதிகரித்தாலும், சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது வாழ்க்கைத் துணையுடன் இணக்கமற்ற நிலையை உண்டாக்கினாலும், குருப் பார்வை ராசிக்கு கிடைப்பதால் கவுரவ எண்ணத்துடன் செயல்படுவீர்கள். குடும்ப பொறுப்பு அதிகரிக்கும். கணவருடன் இணக்கம் உண்டாகும். இளம் பெண்களுக்கு படிப்பு, வேலை, திருமணம் என்ற கனவுகள் நனவாகும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கும் பிரிந்தவர்களுக்கும் மறுமணம் நடந்தேறும். குழந்தைப்பேறு கிடைக்கும்.  பொருளாதார நிலை உயரும். வேலையில் முன்னேற்றம் உண்டாகும்.கல்வி ஐந்தாமிடத்தில் சஞ்சரிக்கும் குருவும், ராசிக்கு உண்டாகும் அவருடைய பார்வையும் படிப்பில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். பொது, போட்டித் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும். சிலர் படிப்பிற்காக வெளி மாநிலம், வெளிநாடு  செல்வீர்கள்.உடல்நிலைஉடல்நிலை பாதிப்பு விலகும். பரம்பரை, தொற்று நோய்களால் உண்டான சங்கடங்கள் விலகும். ஆரோக்கியம் சீராகும்.குடும்பம் ராசிக்கு குருபார்வை கிடைப்பதுடன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால்குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். தம்பதி ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளின் மீது அக்கறை கூடும். புதிய இடம், வீடு, வாகனம், நவீன பொருட்கள் வாங்குவீர்கள். பொன், பொருள் சேரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். சேமிப்பு உயரும். குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள்.பரிகாரம் : ஆஞ்சநேயரை வழிபட சங்கடம் நீங்கி நன்மை நடக்கும்.பூரட்டாதி.. முயற்சி வெற்றி தரும்ஞானக்காரகனான குருவை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு கர்மக்காரகனான சனி ராசிநாதனாகவும், 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு குருவே ராசிநாதனாகவும்  உள்ளார். 1,2,3 ம் பாதத்தினருக்கு மே 11 முதல் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரித்து, குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலையையும், சுபிட்சத்தையும் உண்டாக்குவார். தொழிலில் முன்னேற்றம், எதிர்பார்த்த வருமானம், பொன் பொருள் சேர்க்கை, பிள்ளைகளால் பெருமையை உண்டாக்குவார். குழந்தைப்பேற்றை தருவார். படிப்பில் முன்னேற்றம், பட்டம், பதவி என பெருமை சேர்ப்பார். பூர்வீகச் சொத்தில் இருந்து பிரச்னைகளைத் தீர்த்து வைப்பார். உறவினர் மத்தியில் செல்வாக்கை அதிகரிப்பார். இக்காலம் உங்களுக்கு மிகப் பெரிய யோக காலமாக அமையும். நினைப்பதெல்லாம் நடந்தேறும். கடந்த கால நெருக்கடி விலகும். 4 ம் பாதத்தினருக்கு, சுக ஸ்தானமான 4 ம் இடத்தில் சஞ்சரித்து தொழிலில் பின்னடைவை ஏற்படுத்துவார். வருமானத்தில் நெருக்கடியை உண்டாக்குவார். உழைப்பை அதிகரிப்பார். எடுக்கும் முயற்சிகளில் இழுபறியை ஏற்படுத்துவார். எந்த ஒன்றிலும் கடுமையாக முயற்சி செய்தால் மட்டுமே ஆதாயம் என்ற நிலைக்கு ஆளாக்குவார். பணியாளர்களுக்கு அலைச்சலை அதிகரிப்பார். உறங்குவதற்கு நேரமில்லை சாப்பிடுவதற்கு நேரமில்லை என்ற நிலையினை உண்டாக்குவார். உறவினருடன் இடைவெளியை ஏற்படுத்துவார். நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இக்காலத்தில் மாறும். நன்றாக பழகி வந்தவர்களும் உங்களை விட்டு விலகிச் செல்லும் நிலை உண்டாகும்.பார்வைகளின் பலன் குரு, தான் சஞ்சரிக்கும் இடத்தை விட, பார்க்கும் இடங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்குவார். அவருடைய பார்வைகள் எந்த இடத்திற்கு உண்டாகிறதோ அந்த பாவகம் சுபத்துவம் அடையும் என்பது பொது விதி, இக்காலத்தில், 1,2,3 ம் பாதத்தினருக்கு, தன் 5,7,9 ம் பார்வைகளை 9,11, மற்றும் ராசிக்கும் வழங்குவதால் நெருக்கடிகள் விலகும். செல்வாக்கு உயரும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி முடிவிற்கு வரும். நீண்ட நாள் கனவு நனவாகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். உடல்நிலை பாதிப்பு விலகும். திருமண வயதினருக்கு வரன் வரும். பொன், பொருள் சேரும். 4 ம் பாதத்தினருக்கு, 8,10,12 ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால், உடல் பாதிப்புகள் விலகும். உங்களுக்கு எதிராக சிலர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடையும். மறைந்திருந்த செல்வாக்கு வெளிப்படும்.  துணிச்சலாக செயல்படுவீர்கள். தொழில் முன்னேற்றம் அடையும். பணியில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக மேற்கொண்ட முயற்சிகள் நிறைவேறும். குடும்பத்தில் செலவு அதிகரிக்கும். வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளால் கையிருப்பு கரையும். சிலர் செல்வாக்கை காட்ட நிறைய செலவு செய்வர். சனி சஞ்சாரம் 1,2,3 ம் பாதத்தினருக்கு, 2026 மார்ச் 6 வரை ஜென்ம ராசிக்குள் சஞ்சரிப்பவர். குடும்பம், தொழில், பணியில் நெருக்கடியை அதிகரிப்பார். வருமானத்தில் தடை, முயற்சியில் இடையூறை ஏற்படுத்துவார். வாழ்க்கைத் துணையுடன் இடைவெளியை உண்டாக்குவார். நட்புகளுடன் பகையை ஏற்படுத்துவார். ஆனாலும் மிதுன குருவின் பார்வை இந்நிலைகளை மாற்றும். 2026 மார்ச் 6 முதல் பாதச்சனியாக சஞ்சரிப்பவர், ஐந்து ஆண்டாக நீங்கள் அனுபவித்து வந்த போராட்ட நிலைக்கு முடிவு கட்டுவார். நெருக்கடியில் இருந்து உங்களை விடுவிப்பார். வசதி வாய்ப்பை அதிகரிப்பார். 4 ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை விரய சனியாக சஞ்சரித்து செலவுகளை அதிகரிப்பார். எதிர்பாராத செலவுகளால்  திணறடிப்பார். ஆனாலும் மிதுன குருவின் பார்வையால்  ஓரளவு  நெருக்கடி நீங்கும். மனதில் இருந்த குழப்பம் விலகும். 2026 மார்ச் 6 முதல் ஜென்ம சனியாக சஞ்சரிப்பவர் உடல்நிலையில் சங்கடத்தை ஏற்படுத்துவார். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் பிரச்னைகளை உண்டாக்குவார். புதிய நபர்களால் குடும்பத்திற்குள் குழப்பம் வரலாம். தொழில், வேலையில் அக்கறையை அதிகரிப்பார். ராகு, கேது சஞ்சாரம்1,2,3 ம் பாதத்தினருக்கு ராகு ஜென்ம ராசிக்குள், கேது 7 ல் சஞ்சரிப்பதால் மனதில் ஆசை அதிகரிக்கும். வசதி வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வதற்காக சிலர் தவறான வழியில் செல்வர். தவறான நட்பிற்கு ஆளாவதுடன் அவர்களால் உங்கள் பெயரும் கெடும். சிலருக்கு சட்ட சிக்கல்கள் உண்டாகும். தகுதிக்கு கீழானவர்களின் நட்பு சிலருக்கு ஏற்படும். அதனால் வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் பிரச்னை உண்டாகும். 4ம் பாதத்தினருக்கு ராகு 12 ல், கேது 6 ல் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த நெருக்கடி விலகும். நிம்மதியான உறக்கமும் சந்தோஷமும் ஏற்படும். நோய்கள் விலகும். எதிரி தொல்லை விலகும். செல்வாக்கு அதிகரிக்கும். வம்பு வழக்கில் சாதகம் ஏற்படும்.சூரிய சஞ்சாரம்1,2,3 ம் பாதத்தினருக்கு, ஜூலை 17 – ஆக. 16, நவ. 17 – 2026 ஜன 14 காலங்களிலும், 4 ம் பாதத்தினருக்கு, மே 15 – ஜூன் 14, ஆக. 17 – செப். 16, டிச. 16 – 2026 பிப். 12 காலங்களிலும் சூரியன் தன் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிப்பதால் முயற்சி வெற்றி பெறும். உடல்நிலை சீராகும். அரசு வழியில் ஆதாயம் வரும். தொழில் தொடங்கும் முயற்சியை வெற்றி பெறும்.  நினைத்தது நடக்கும். வியாபாரம், தொழிலில் ஆதாயம் ஏற்படும். பணப்புழக்கம் கூடும். செவ்வாய் சஞ்சாரம் 1,2,3 ம் பாதத்தினருக்கு டிச. 6 – 2026  ஜன. 14 காலத்திலும், 4 ம் பாதத்தினருக்கு, ஜூன் 8 – ஜூலை 30, 2026 ஜன. 14 – பிப். 21 காலங்களிலும் செவ்வாயின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் நினைத்த வேலைகள் நடந்தேறும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். செல்வாக்கு உயரும்.பொதுப்பலன் 1,2,3 ம் பாதத்தினருக்கு, 5 ம் இட குருவும், அவருடைய பார்வைகளும், 4 ம் பாதத்தினருக்கு, 6 ம் இட கேதுவும், குருவின் பார்வைகளும், 4 பாதத்தினருக்கும், சூரியன், செவ்வாய் சஞ்சார நிலைகளும் யோகப் பலனை வழங்கும். கனவு நனவாகும். விருப்பம் நிறைவேறும்.  குடும்பம், தொழில், வேலையில் முன்னேற்றம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.தொழில்  தொழிலில் இருந்த தடைகள் விலகும். முடங்கிய தொழில்கள் வளர்ச்சி பெறும். இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி, ஆட்டோ மொபைல்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ், பேக்டரி, டிராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், எக்ஸ்போர்ட், பைனான்ஸ், ஆன்லைன் வர்த்தகம், ஜூவல்லரி, வேளாண் சார்ந்த பொருட்கள், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ் தொழில்கள் லாபம் அடையும்.பணியாளர்கள் அரசு பணியாளர்களுக்கு நெருக்கடி விலகும். மேலதிகாரியின் ஆதரவு உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு  நெருக்கடி மறையும். நிர்வாகத்தினரிடம் மதிப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகை, ஊதிய உயர்வு கிடைக்கும்.பெண்கள் குரு பகவானின் சஞ்சாரமும்  பார்வைகளும் சாதகமாக இருப்பதால் நினைப்பது நடந்தேறும். படிப்பு, வேலை, திருமணக் கனவுகள் நனவாகும். கணவரின் அன்பு அதிகரிக்கும். கணவனை இழந்த, பிரிந்தவர்களுக்கு மறுமணம் நடக்கும். குடும்பத்தில் மரியாதை அதிகரிக்கும். வேலை பார்க்கும் இடத்தில் இருந்த நெருக்கடி மறையும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கல்வி படிப்பில் இருந்த தடை விலகும். படிப்பின் மீது அக்கறை அதிகரிக்கும். ஆசியரியர்களின் ஆலோசனையை ஏற்பீர்கள். பொது, போட்டித் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும்.உடல்நிலை  உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தவர்களும் இக்காலத்தில் ஆரோக்கியமாக நடைபோடுவீர்கள்.குடும்பம் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை, நெருக்கடி மறையும். தம்பதி ஒற்றுமை அதிகரிக்கும் பிள்ளைகளின் நலனில் அக்கறை கூடும். வீடு, வாகனம் என கனவுகள் நனவாகும். சமூக அந்தஸ்து உயரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும்.  சுபநிகழ்ச்சிகள்  நடந்தேறும்.பரிகாரம்; ஆலங்குடி குருபகவானை அர்ச்சனை செய்ய நன்மை உண்டாகும்.

பூரட்டாதி.. முயற்சி வெற்றி தரும்ஞானக்காரகனான குருவை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு கர்மக்காரகனான சனி ராசிநாதனாகவும், 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு குருவே ராசிநாதனாகவும்  உள்ளார். 1,2,3 ம் பாதத்தினருக்கு மே 11 முதல் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரித்து, குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலையையும், சுபிட்சத்தையும் உண்டாக்குவார். தொழிலில் முன்னேற்றம், எதிர்பார்த்த வருமானம், பொன் பொருள் சேர்க்கை, பிள்ளைகளால் பெருமையை உண்டாக்குவார். குழந்தைப்பேற்றை தருவார். படிப்பில் முன்னேற்றம், பட்டம், பதவி என பெருமை சேர்ப்பார். பூர்வீகச் சொத்தில் இருந்து பிரச்னைகளைத் தீர்த்து வைப்பார். உறவினர் மத்தியில் செல்வாக்கை அதிகரிப்பார். இக்காலம் உங்களுக்கு மிகப் பெரிய யோக காலமாக அமையும். நினைப்பதெல்லாம் நடந்தேறும். கடந்த கால நெருக்கடி விலகும். 4 ம் பாதத்தினருக்கு, சுக ஸ்தானமான 4 ம் இடத்தில் சஞ்சரித்து தொழிலில் பின்னடைவை ஏற்படுத்துவார். வருமானத்தில் நெருக்கடியை உண்டாக்குவார். உழைப்பை அதிகரிப்பார். எடுக்கும் முயற்சிகளில் இழுபறியை ஏற்படுத்துவார். எந்த ஒன்றிலும் கடுமையாக முயற்சி செய்தால் மட்டுமே ஆதாயம் என்ற நிலைக்கு ஆளாக்குவார். பணியாளர்களுக்கு அலைச்சலை அதிகரிப்பார். உறங்குவதற்கு நேரமில்லை சாப்பிடுவதற்கு நேரமில்லை என்ற நிலையினை உண்டாக்குவார். உறவினருடன் இடைவெளியை ஏற்படுத்துவார். நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இக்காலத்தில் மாறும். நன்றாக பழகி வந்தவர்களும் உங்களை விட்டு விலகிச் செல்லும் நிலை உண்டாகும்.பார்வைகளின் பலன் குரு, தான் சஞ்சரிக்கும் இடத்தை விட, பார்க்கும் இடங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்குவார். அவருடைய பார்வைகள் எந்த இடத்திற்கு உண்டாகிறதோ அந்த பாவகம் சுபத்துவம் அடையும் என்பது பொது விதி, இக்காலத்தில், 1,2,3 ம் பாதத்தினருக்கு, தன் 5,7,9 ம் பார்வைகளை 9,11, மற்றும் ராசிக்கும் வழங்குவதால் நெருக்கடிகள் விலகும். செல்வாக்கு உயரும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி முடிவிற்கு வரும். நீண்ட நாள் கனவு நனவாகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். உடல்நிலை பாதிப்பு விலகும். திருமண வயதினருக்கு வரன் வரும். பொன், பொருள் சேரும். 4 ம் பாதத்தினருக்கு, 8,10,12 ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால், உடல் பாதிப்புகள் விலகும். உங்களுக்கு எதிராக சிலர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடையும். மறைந்திருந்த செல்வாக்கு வெளிப்படும்.  துணிச்சலாக செயல்படுவீர்கள். தொழில் முன்னேற்றம் அடையும். பணியில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக மேற்கொண்ட முயற்சிகள் நிறைவேறும். குடும்பத்தில் செலவு அதிகரிக்கும். வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளால் கையிருப்பு கரையும். சிலர் செல்வாக்கை காட்ட நிறைய செலவு செய்வர். சனி சஞ்சாரம் 1,2,3 ம் பாதத்தினருக்கு, 2026 மார்ச் 6 வரை ஜென்ம ராசிக்குள் சஞ்சரிப்பவர். குடும்பம், தொழில், பணியில் நெருக்கடியை அதிகரிப்பார். வருமானத்தில் தடை, முயற்சியில் இடையூறை ஏற்படுத்துவார். வாழ்க்கைத் துணையுடன் இடைவெளியை உண்டாக்குவார். நட்புகளுடன் பகையை ஏற்படுத்துவார். ஆனாலும் மிதுன குருவின் பார்வை இந்நிலைகளை மாற்றும். 2026 மார்ச் 6 முதல் பாதச்சனியாக சஞ்சரிப்பவர், ஐந்து ஆண்டாக நீங்கள் அனுபவித்து வந்த போராட்ட நிலைக்கு முடிவு கட்டுவார். நெருக்கடியில் இருந்து உங்களை விடுவிப்பார். வசதி வாய்ப்பை அதிகரிப்பார். 4 ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை விரய சனியாக சஞ்சரித்து செலவுகளை அதிகரிப்பார். எதிர்பாராத செலவுகளால்  திணறடிப்பார். ஆனாலும் மிதுன குருவின் பார்வையால்  ஓரளவு  நெருக்கடி நீங்கும். மனதில் இருந்த குழப்பம் விலகும். 2026 மார்ச் 6 முதல் ஜென்ம சனியாக சஞ்சரிப்பவர் உடல்நிலையில் சங்கடத்தை ஏற்படுத்துவார். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் பிரச்னைகளை உண்டாக்குவார். புதிய நபர்களால் குடும்பத்திற்குள் குழப்பம் வரலாம். தொழில், வேலையில் அக்கறையை அதிகரிப்பார். ராகு, கேது சஞ்சாரம்1,2,3 ம் பாதத்தினருக்கு ராகு ஜென்ம ராசிக்குள், கேது 7 ல் சஞ்சரிப்பதால் மனதில் ஆசை அதிகரிக்கும். வசதி வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வதற்காக சிலர் தவறான வழியில் செல்வர். தவறான நட்பிற்கு ஆளாவதுடன் அவர்களால் உங்கள் பெயரும் கெடும். சிலருக்கு சட்ட சிக்கல்கள் உண்டாகும். தகுதிக்கு கீழானவர்களின் நட்பு சிலருக்கு ஏற்படும். அதனால் வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் பிரச்னை உண்டாகும். 4ம் பாதத்தினருக்கு ராகு 12 ல், கேது 6 ல் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த நெருக்கடி விலகும். நிம்மதியான உறக்கமும் சந்தோஷமும் ஏற்படும். நோய்கள் விலகும். எதிரி தொல்லை விலகும். செல்வாக்கு அதிகரிக்கும். வம்பு வழக்கில் சாதகம் ஏற்படும்.சூரிய சஞ்சாரம்1,2,3 ம் பாதத்தினருக்கு, ஜூலை 17 – ஆக. 16, நவ. 17 – 2026 ஜன 14 காலங்களிலும், 4 ம் பாதத்தினருக்கு, மே 15 – ஜூன் 14, ஆக. 17 – செப். 16, டிச. 16 – 2026 பிப். 12 காலங்களிலும் சூரியன் தன் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிப்பதால் முயற்சி வெற்றி பெறும். உடல்நிலை சீராகும். அரசு வழியில் ஆதாயம் வரும். தொழில் தொடங்கும் முயற்சியை வெற்றி பெறும்.  நினைத்தது நடக்கும். வியாபாரம், தொழிலில் ஆதாயம் ஏற்படும். பணப்புழக்கம் கூடும். செவ்வாய் சஞ்சாரம் 1,2,3 ம் பாதத்தினருக்கு டிச. 6 – 2026  ஜன. 14 காலத்திலும், 4 ம் பாதத்தினருக்கு, ஜூன் 8 – ஜூலை 30, 2026 ஜன. 14 – பிப். 21 காலங்களிலும் செவ்வாயின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் நினைத்த வேலைகள் நடந்தேறும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். செல்வாக்கு உயரும்.பொதுப்பலன் 1,2,3 ம் பாதத்தினருக்கு, 5 ம் இட குருவும், அவருடைய பார்வைகளும், 4 ம் பாதத்தினருக்கு, 6 ம் இட கேதுவும், குருவின் பார்வைகளும், 4 பாதத்தினருக்கும், சூரியன், செவ்வாய் சஞ்சார நிலைகளும் யோகப் பலனை வழங்கும். கனவு நனவாகும். விருப்பம் நிறைவேறும்.  குடும்பம், தொழில், வேலையில் முன்னேற்றம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.தொழில்  தொழிலில் இருந்த தடைகள் விலகும். முடங்கிய தொழில்கள் வளர்ச்சி பெறும். இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி, ஆட்டோ மொபைல்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ், பேக்டரி, டிராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், எக்ஸ்போர்ட், பைனான்ஸ், ஆன்லைன் வர்த்தகம், ஜூவல்லரி, வேளாண் சார்ந்த பொருட்கள், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ் தொழில்கள் லாபம் அடையும்.பணியாளர்கள் அரசு பணியாளர்களுக்கு நெருக்கடி விலகும். மேலதிகாரியின் ஆதரவு உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு  நெருக்கடி மறையும். நிர்வாகத்தினரிடம் மதிப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகை, ஊதிய உயர்வு கிடைக்கும்.பெண்கள் குரு பகவானின் சஞ்சாரமும்  பார்வைகளும் சாதகமாக இருப்பதால் நினைப்பது நடந்தேறும். படிப்பு, வேலை, திருமணக் கனவுகள் நனவாகும். கணவரின் அன்பு அதிகரிக்கும். கணவனை இழந்த, பிரிந்தவர்களுக்கு மறுமணம் நடக்கும். குடும்பத்தில் மரியாதை அதிகரிக்கும். வேலை பார்க்கும் இடத்தில் இருந்த நெருக்கடி மறையும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கல்வி படிப்பில் இருந்த தடை விலகும். படிப்பின் மீது அக்கறை அதிகரிக்கும். ஆசியரியர்களின் ஆலோசனையை ஏற்பீர்கள். பொது, போட்டித் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும்.உடல்நிலை  உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தவர்களும் இக்காலத்தில் ஆரோக்கியமாக நடைபோடுவீர்கள்.குடும்பம் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை, நெருக்கடி மறையும். தம்பதி ஒற்றுமை அதிகரிக்கும் பிள்ளைகளின் நலனில் அக்கறை கூடும். வீடு, வாகனம் என கனவுகள் நனவாகும். சமூக அந்தஸ்து உயரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும்.  சுபநிகழ்ச்சிகள்  நடந்தேறும்.பரிகாரம்; ஆலங்குடி குருபகவானை அர்ச்சனை செய்ய நன்மை உண்டாகும்.உத்திரட்டாதி.. வழக்கில் வெற்றிகர்மக்காரகனான சனி பகவானை நட்சத்திர அதிபதியாகவும், தன, புத்திரர் காரகனான குருவை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள், முன்னேற்றத்தை நோக்கி நடைபோடக் கூடியவர்கள். முடிவிற்கு நீங்கள் வந்துவிட்டால் அதை எவராலும் மாற்ற முடியாது. சாதாரண இடத்தில் பிறந்தாலும் உங்கள் வாழ்க்கை வளர்ச்சியை நோக்கியதாக இருக்கும். மற்றவர்களுக்கு வழிகாட்டக் கூடியவராக திகழ்வீர்கள். மே11ல் நடக்கும் குருப்பெயர்ச்சி எப்படி இருக்கும் என்ற கேள்வி  இருக்கும். அதற்கு காரணம் 3 ம் இடத்தில் சஞ்சரித்த குரு உங்களுக்கு ஏற்படுத்திய படிப்பினை தான். 4 ம் இடத்தில் குரு  சஞ்சரிக்கும் போது யாராக இருந்தாலும் அவருக்கு இடமாற்றம் ஏற்படும் என்பது விதி. தேவையற்ற ஆசை, சஞ்சலம் உண்டாகும். விருப்பப்பட்ட வாகனங்களை இக்காலத்தில் வாங்க வைப்பார். தாயாரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு வீட்டை நவீனமாக மாற்றும் வாய்ப்பு கிடைக்கும். தாய்வழியில் சொத்து கிடைக்கும். தாய் மாமனின் ஆதரவால் நன்மை அதிகரிக்கும். நோய்கள் தீரும்.  பார்வைகளின் பலன் குரு, தான் சஞ்சரிக்கும் இடத்தை விட, பார்க்கும் இடங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்குவார். அவரது பார்வைகள் எந்த இடத்திற்கு உண்டாகிறதோ அந்த பாவகம் சுபத்துவம் அடையும் என்பது பொது விதி.  8 ம் வீடான அஷ்டம ஸ்தானத்தையும், 10 ம் வீடான தொழில் ஸ்தானத்தையும், 12 ம் வீடான விரய ஸ்தானத்தையும் பார்ப்பதால், முதலில் உங்கள் ஆயுள் பலம் பெறும். நோய்கள் மறையும். அவமானத்துடன் வாழ்ந்த நிலையில் மாற்றம் உண்டாகும். வெற்றி அடைவதற்கான வாய்ப்பு கிடைக்கும். தொழிலும் குடும்பமும் நிலை பெறும்.  அனைத்து பிரச்னைகளையும் சமாளிக்கும் சக்தி உண்டாகும். முடங்கிய தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். எதிராக செயல்பட்டவர்களை அடக்கி ஆளும் நிலை உண்டாகும். சிலருக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் வளர்ச்சி அடையும். திறமை வெளிப்படும். செயலில் வேகமும் விவேகம் நிறைந்திருக்கும். மனதில்  குழப்பம் தீர்ந்து தெளிவான நிலை உண்டாகும். வருமானம் பல வழிகளிலும் வரும். பொது வாழ்வில் ஈடுபட்டு  புகழ் உண்டாகும். வாழ்க்கைத் தரம் உயரும். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். கருத்து வேறுபாட்டால் பிரிந்தவர்கள் மீண்டும் இணைவர்.  சுப விரயம் ஏற்படும். சேமிப்பை வைத்து இடம், வீடு, வாகனம் வாங்குவீர்கள்.  சுபநிகழ்வுகள் நடக்கும். சிலர் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்வர். காணாமல் போன பொருள் திரும்ப வரும். கைவிட்டுப் போன சொத்து மீண்டும் கைவசமாகும். மனைவி ஓரிடம் கணவன் ஓரிடம் என வாழ்ந்த நிலை மாறி இருவரும் ஒன்றாக, மகிழ்ச்சியாக வாழும் நிலை உண்டாகும். மனதில் குழப்பம் தீரும். நிம்மதியான உறக்கம் வரும்.சனி சஞ்சாரம்2026 மார்ச் 6 வரை விரய சனியாக சஞ்சரிப்பவர் செலவுகளை அதிகரிப்பார். கையில் இருக்கும் பணம் தண்ணீராக செலவாகும். வீடு, வாகனம், மருத்துவம், படிப்பு, ஆடம்பர பொருட்கள் என கையிருப்பு கரையும். மிதுன குருவின் பார்வையால் செலவுகள் கட்டுப்படும். மார்ச் 6 முதல் ஜென்ம சனியாக சஞ்சரிப்பவர் செயல்களில் தடைகளை ஏற்படுத்துவார். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் இடைவெளியை உண்டாக்குவார். தொழில், வேலையில்  அக்கறையை அதிகரிப்பார். ராகு, கேது சஞ்சாரம்ராகு 12 ல், கேது 6 ல் சஞ்சரிப்பதால், ஒரு பக்கம் செலவு அதிகரித்தாலும் மறு பக்கம் நிம்மதி இருக்கும். கவலை இன்றி உறங்குவீர்கள். மனம் சந்தோஷமடையும்.  நோய்களின் தீவிரம் குறையும். ஆரோக்யமாக செயல்படுவீர்கள். எதிர்ப்பு விலகும். வழக்கில் வெற்றி உண்டாகும்.சூரிய சஞ்சாரம்  மே 15  – ஜூன் 14, ஆக. 17  – செப். 16, டிச. 16  – 2026 பிப். 12 காலங்களில் சூரியன் தன் 3,6,10,11 ம் இட சஞ்சாரங்களால்  உங்கள் நிலையை உயர்த்துவார். எடுக்கும் முயற்சிகளை லாபமாக்குவார். அரசு வழியில் ஆதாயத்தை உண்டாக்குவார். புதிய தொழில் தொடங்கும் முயற்சியை வெற்றியாக்குவார். நினைத்ததை நடத்தி வைப்பார்.செவ்வாய் சஞ்சாரம்ஜூன் 8  – ஜூலை 30, 2026 ஜன. 14  – பிப். 21 காலத்தில் செவ்வாயின் 6,11 ம் இட சஞ்சாரத்தால் எடுத்த வேலைகளில் வெற்றிகளை வழங்குவார். நினைத்த வேலைகளை நடத்தி வைப்பார். வருமானத்தை அதிகரிப்பார். வியாபாரம், தொழிலில் முன்னேற்றம் தருவார்.பொதுப்பலன்குருவின் பார்வைகளும், 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவும், சூரியன், செவ்வாய் சஞ்சார நிலைகளும் உங்கள் செல்வாக்கை உயர்த்தும். குடும்பம், தொழில், வேலையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும்.தொழில் ஜீவன ஸ்தானத்திற்கு குருபார்வை உண்டாவதால்  தொழில் முன்னேற்றமடையும். முயற்சிக்கேற்ற ஆதாயம் உண்டாகும். நிதி நிறுவனம், பேக்டரி, வாகன உற்பத்தி, ஆட்டோ மொபைல்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ், டிராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், எக்ஸ்போர்ட், ஹார்டுவேர், ஜீவல்லரி, ரியல் எஸ்டேட், பதிப்பகம், அச்சகம், கல்வி சார்ந்த தொழில்கள், ஆன்லைன் வர்த்தகம் முன்னேற்றம் பெறும். பணியாளர்கள் அரசு பணியாளர்களின் நிலை உயரும். வேலையில் இருந்த வழக்கு, நெருக்கடி முடிவிற்கு வரும். தடைபட்டிருந்த பதவி உயர்வும், விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு புதிய நம்பிக்கை உண்டாகும். வேலை பார்க்கும் இடத்தில் மதிப்பு உயரும்.  எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சிலர் பார்க்கும் வேலையை விட்டு விட்டு கடல் கடந்து செல்வர். பெண்கள்உடலில் இருந்த குறைபாடுகள் விலகும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். படிப்பு, வேலை, திருமணக் கனவு நனவாகும். அஷ்டம ஸ்தானத்தை குரு பார்ப்பதால் மாங்கல்யம் பலம் பெறும். கருத்து வேறுபாட்டாலும், வேலையின் காரணமாகவும் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவர். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகளின் நலனில் அக்கறை கூடும். புதிய வீடு, வாகனம் வாங்குவீர்கள். பொன், பொருள் சேரும்.கல்விபடிப்பின் மீது ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு உங்களை உற்சாகப்படுத்தும். பொதுத் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். மேற்கல்வி முயற்சி வெற்றி பெறும். உடல்நிலைஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் கேதுவும், 8 ம் இடத்தைப் பார்க்கும் குருவும் படுத்த படுக்கையாக இருப்பவரையும் எழுந்து நடமாட வைப்பர். உடல் பாதிப்புகள் விலகி ஆரோக்கியம் மேம்படும். குடும்பம் குருபகவானின் பார்வைகளும், 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவும் குடும்பத்தில் நிம்மதியை உண்டாக்குவர். குரு பகவானின் பார்வை விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி,  ராகுவிற்கு உண்டாவதால் செலவுகள் கட்டுப்படும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். உடல்நிலை சீராகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். புதிய சொத்து சேரும். பிள்ளைகளுக்காக எடுக்கும் முயற்சி வெற்றியாகும். சிலர் புதிய வீடு கட்டி பால்காய்ச்சுவர். பரிகாரம்: மகாலிங்கேஸ்வரரை வழிபட வாழ்வில் வளம் கூடும். நன்மை உண்டாகும்.ரேவதி.. பிசினசில் டாப்பர் வித்யாகாரகனான புத பகவானை நட்சத்திர அதிபதியாகவும், ஞானக் காரகனான குருவை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள், திட்டமிட்டு செயல்படக் கூடியவர்கள். செல்வாக்கு, அந்தஸ்து, முன்னேற்றம் என்பதை நோக்கியே உங்கள் பயணம் இருந்து கொண்டிருக்கும். மென்மையாகவே ஒவ்வொன்றையும் சாதிக்கும் சக்தி கொண்டவர்கள் நீங்கள். விரும்பியதை வசப்படுத்திடக் கூடிய ஆற்றல் பெற்ற உங்களுக்கு மே 11 முதல் உங்கள் ராசிநாதன் குருபகவான் உங்கள் நட்சத்திரநாதன் புதனின் ஆட்சி வீடான மிதுனத்தில் சஞ்சரிக்கப் போகிறார். உங்கள் ராசிக்குள் புதன் நீச்சம் அடைந்தாலும், குரு பகவான் எங்கு சஞ்சரிக்கிறாரோ அந்த இடத்திற்குரிய பலன்களை வழங்க வேண்டியவராகிறார். குரு பகவானின் 4ம் இட சஞ்சாரத்தால் வாழ்க்கைக்குரிய அடிப்படை வசதிகளை அடையக்கூடிய காலமாக இக்காலம் இருக்கும். நீண்ட நாளாக ஆசைப்பட்ட ஒவ்வொன்றையும் இக்காலத்தில் அடைவீர்கள். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் சேரும். பொது வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். தாயாரின் உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.  ஆசைபட்ட ஒவ்வொன்றையும் அடைவதற்காக கடும் முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி அடைவீர்கள். இக்காலம் உழைப்பால் முன்னேற்றம் அடையக்கூடிய காலமாக இருக்கும். சிலருக்கு வசிக்கும் இடத்தை விட்டு வேறு இடத்திற்கு செல்லும் நிலை ஏற்படும்.பார்வைகளின் பலன் குரு, தான் சஞ்சரிக்கும் இடத்தை விட, பார்க்கும் இடங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்குவார். அவருடைய பார்வைகள் எந்த இடத்திற்கு உண்டாகிறதோ அந்த பாவகம் சுபத்துவம் அடையும் என்பது பொது விதி. இக்காலத்தில் 8,10,12 ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால், தொழில் அமோகமாக வளர்ச்சி அடையும். வேலை பார்க்கும் இடத்தில் உங்களுக்கேற்பட்ட பிரச்னைகள் நீங்கி மீண்டும் செல்வாக்குடன் பணியில் அமர்த்தப்படுவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். இதுவரை பட்ட சங்கடம், அவமானம் எல்லாம் இல்லாமல் போகும். வாட்டி வதைத்த நோய்கள் குணமாகும். நீங்கள் நினைக்கும் ஒவ்வொரு வேலைகளையும் திறமையாக நடத்தி அதில் லாபம் காண்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். தொழில், வியாபாரம், வேலை, வாழ்க்கை சூழலால் இருக்கும் இடத்தை விட்டு வேறு ஊரில் சிலர் குடியேறுவர். புதிய இடம், வீடு, வாகனம் என நீண்ட நாள் கனவு நனவாகும். நிம்மதியான உறக்கம் இக்காலத்தில் ஏற்படும். செலவு அதிகரித்தாலும் அதனால் உங்கள் மனதில் சந்தோஷம் இருக்கும். பூர்வீக சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை இக்காலத்தில் முடிவிற்கு வரும். சிலர் பூர்வீக இடத்தில் வீடு கட்டி குடியேறுவர்.  தடைபட்ட முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். வருவாய் அதிகரிக்கும். இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் உங்கள் நிலை மாறும்.சனி சஞ்சாரம் 2026 மார்ச் 6 வரை 12 ம் வீட்டில் சஞ்சரிப்பவர் பல வழிகளிலும் செலவை ஏற்படுத்துவார். அவசரத் தேவைக்காக கடன் வாங்க வைப்பார் என்றாலும், மிதுன குருவின் பார்வையால் செலவுகள் யாவும் சுபச்செலவாக மாறும். 2026 மார்ச் 6 முதல் ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் சனி, உடல்நிலையில் சங்கடத்தை ஏற்படுத்துவார். எடுக்கும் முயற்சிகளில் தடைகளை ஏற்படுத்துவார். நண்பர்களுடன் கருத்து வேறுபாட்டை உண்டாக்குவார். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் இடைவெளியை அதிகரிப்பார். தொழில், வேலையில்  நெருக்கடியை உண்டாக்குவார்.ராகு, கேது சஞ்சாரம்12 ல் ராகு, 6 ல் கேது சஞ்சரிப்பதால், நீண்டநாள் பிரச்னைகள் முடிவிற்கு வரும். குடும்பத்தில் இருந்த குழப்பம் தீரும். தவறானவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வர். இனி நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றியாகும். உடல் பாதிப்பு விலக ஆரம்பிக்கும். வேலை, தொழிலில் ஏற்பட்ட இடையூறு, போட்டிகள் எல்லாம் விலகும். இழுபறியாக இருந்த வழக்குகளில் வெற்றி உண்டாகும். செல்வாக்கு உயரும்.சூரிய சஞ்சாரம்  மே 15 – ஜூன் 14, ஆக. 17 – செப். 16, டிச. 16 – 2026 பிப். 12 காலங்களில் சூரியன் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிப்பதால் உங்களுக்கிருந்த நெருக்கடிகள் சூரியனைக் கண்ட பனி போல் விலகும். நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். உடல்நிலை சீராகும். தொழில், உத்தியோகம், குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். அரசு வழியில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.செவ்வாய் சஞ்சாரம்ஜூன் 8 – ஜூலை 30, 2026 ஜன. 14 – பிப். 21 காலத்தில் செவ்வாயின் 6,11 ம் இட சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். நோய்களில் இருந்து குணமடைவீர்கள். விரும்பிய இடத்தை வாங்குவீர்கள். பணம், புகழ், செல்வாக்கு, அந்தஸ்து என்ற திருப்தியுடன் வாழ்வீர்கள்.பொதுப்பலன் குருப் பார்வைகளும், 6 ம் இட கேதுவும், சூரியன், செவ்வாய் சஞ்சார நிலைகளும் சாதகமாக இருப்பதால் இக்காலம் உங்களுக்கு யோக காலமாக இருக்கும். தடைபட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். பொருளாதாரம் சீராகும். பழைய கடன்களை அடைப்பீர்கள். புதிய சொத்து சேரும்.தொழில் எந்த ஒன்றிலும் தனித்துவத்துடன் செயல்பட்டு வரும் உங்களுக்கு, தொழிலில் அக்கறை அதிகரிக்கும். பிசினசில் டாப்பராக திகழ்வீ்ர்கள். சிலர் புதிய தொழில் தொடங்குவர். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். ஷேர் மார்க்கெட், நிதி நிறுவனம், ஜுவல்லரி, எக்ஸ்போர்ட், கல்வி ஸ்தாபனம், ஆன்மிக பொருட்கள், ஸ்டேஷனரி, ஆன்லைன் வர்த்தகம், பதிப்பகம், தொலைக்காட்சி, யூடியூப், ஸ்பேர் பார்ட்ஸ், கல்வி சார்ந்த பொருட்கள், பேக்டரி, வேளாண்மை, ஒப்பந்தத் தொழில்கள் வளர்ச்சி அடையும்.பணியாளர்கள்தொழில் ஸ்தானம் பலம் அடைவதால் பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நிர்வாகமும் உங்களை மதித்து சலுகை, ஊதியத்தை வழங்கும். அரசு பணியாளர்களுக்கு தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும்.பெண்கள் போராட்டங்களையே சந்தித்து வந்த உங்களுக்கு இக்காலம் யோக காலமாகும். நினைத்தது நடந்தேறும். உடலில் பாதிப்புகள் விலகும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். தொல்லைகள் தந்த உறவினர்கள் விலகிச் செல்வர். படிப்பு, வேலை, திருமணக் கனவு நனவாகும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். சுயதொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.கல்வி வித்யா காரகனின் ராசிக்குள் ஞானக்காரகனும் உங்கள் ராசிநாதனுமான குரு சஞ்சரிப்பதால், படிப்பில் இருந்த தடைகள் விலகும்.உங்கள் திறமை வெளிப்படும். பொதுத் தேர்விலும், போட்டித் தேர்விலும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். கல்லுாரிக் கனவு நனவாகும்.உடல்நிலை கேதுவின் சஞ்சாரமும், குருப்பார்வையும் நோயால் அவதிப்பட்ட நிலையை மாற்றும். பார்க்காத டாக்டர் இல்லை, போகாத ஆஸ்பிட்டல் இல்லை என விரக்தி அடைந்தவர்களின் நிலை இப்போது மாறும். உடல்நிலை பாதிப்புகள் குணமாகும்.குடும்பம்நெருக்கடியான நிலையில் இருந்து விடுதலை அடைவீர்கள். இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வந்ததுபோல் உங்கள் குடும்ப நிலை மாறும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். ஒற்றுமை அதிகரிக்கும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். உறவினர் மத்தியில் அந்தஸ்து உயரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை கூடும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். நீண்ட நாள் கனவு நனவாகும்.பரிகாரம்: லட்சுமி நாராயணரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.


ShareTweetShareShare

Advertisement

Advertisement Tariff

Advertisement


    • Dinamalar Events


    Dinamalar