sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

குருபெயர்ச்சி பலன்கள்

/

மீனம்

/

மீனம்

குருபெயர்ச்சி பலன்கள்

மேஷம்

மேஷம்

மீனம்

மீனம்

குருப்பெயர்ச்சி பலன்கள் : மீனம்
19 ஆக 2017 to 11 செப் 2018

முந்தய குருபெயர்ச்சி பலன்கள்

rasi

மீனம்அமைதியின் இருப்பிடமாக திகழும் மீன ராசி அன்பர்களே!

குருபகவான் ராசிக்கு 8-ம் இடத்திற்கு அடியெடுத்து வைப்பது சிறப்பான நிலை அல்ல. இதனால் மன வேதனையும் நிலையற்ற தன்மை உண்டாகும்.

குரு சாதகமற்று இருந்தாலும் அவரது 7-ம் இடத்து பார்வை சாதகமாக உள்ளது. 2018
பிப்.14ல் 9-ம் இடமான விருச்சிக ராசிக்கு குரு மாறுகிறார். அதன் பின்னர் புயலுக்குப் பின் அமைதி வருவது போல, வாழ்வில் நிம்மதி காண்பீர்கள். நினைத்தது நிறைவேறும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு.
ராகு 5-ம் இடமான கடகத்தில் இருப்பதால்  மனதில்  இனம் புரியாத குழப்பம் உருவாகலாம்.  கேது  11-ம் இடமான மகரத்தில் இருப்பதால் உடல்நிலை சீராக இருக்கும்.

சனிபகவான் 9-ம் இடத்தில் இருப்பதால்  எதிரி தொல்லை தலைதூக்கலாம். பிறருக்கு
கட்டுப்படும் நிலை உருவாகலாம். 2017 டிச.19-ல் சனி, தனுசு ராசிக்கு மாறிய பின்னர் அவப்பெயர் ஏற்படலாம். பெண்கள் வகையில் இடையூறு குறுக்கிடலாம்.

இனி காலவாரியாக விரிவான பலனை காணலாம். 2017 செப்டம்பர் – 2018 ஜனவரி
கேதுவின் பலத்தால் பணப்புழக்கம் சீராக இருக்கும். குருபகவான், சனிபகவான்
சாதகமற்று இருப்பதால் பெரியோர் ஆலோசனையை ஏற்பது நல்லது.  கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு வரலாம்.   திருமணம் போன்ற சுபவிஷயத்தில் தாமதம் உண்டாகும்.  உறவினர் வகையில் பிரச்னை குறுக்கிடலாம். குருபகவானின் 7-ம் இடத்து பார்வை மூலம் ஓரளவு நன்மை கிடைக்கும். உடல்நிலை சீராக இருக்கும்.

தொழில், வியாபார விஷயமாக அடிக்கடி வெளியூர் செல்ல நேரிடும்.   அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்காது. குருபகவானின் பார்வை பலத்தால் நன்மை காணலாம்.

பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.  பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்.  இடமாற்ற பீதி  வரலாம். அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது.  

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற அதிக முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும்.  அரசியல்வாதிகள் பலன் கருதாமல் பாடுபட நேரிடும். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பது நல்லது. ஆசிரியரின் ஆலோசனையை ஏற்பது அவசியம். விவசாயிகள் உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்க பெறுவர். கால்நடை வளர்ப்பின் மூலம் ஓரளவு வருமானம் கிடைக்கும்.  புதிய சொத்து முயற்சியின் பேரில் வாங்கலாம்.

பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். அக்கம்பக்கத்தாரிடம் வீண்
வாக்குவாதம் வேண்டாம்.  வேலைக்கு செல்லும் பெண்கள் பணிச்சுமைக்கு ஆளாவர்.
2018 பிப்ரவரி – செப்டம்பர் குடும்பத்தில் தேவை அனைத்தும் பூர்த்தியாகும். தடைபட்ட
திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். உறவினர் வருகையால் நன்மை உண்டாகும். ஏப்.9 முதல் அக்.3- வரை எதிலும் பொறுமை தேவைப்படும்.

தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். வெளியூர் பயணம் மூலம் ஆதாயம் கிடைக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும். அரசு வகையில் சலுகை கிடைக்கும். ஏப்.9க்கு பிறகு தடைகள் குறுக்கிடும்.

பணியாளர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும்.  எதிர்பார்த்த கோரிக்கை நிறைவேறும்.  குருபகவானின்  வக்கிர காலத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.  புகழ், பாராட்டு கிடைக்க பெறுவர்.  ஏப்.9க்கு விடாமுயற்சி அவசியம். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். ஏப்.9- முதல் அக்.3 வரை நிதானமுடன் செயல்படுவது நல்லது.  

மாணவர்கள் படிப்பில் ஆர்வமுடன் ஈடுபடுவர். போட்டியில் வெற்றி கிடைக்கும். விவசாயிகளுக்கு  மானாவாரி பயிர்களில் விளைச்சல் பெருகும்.  

பெண்களால் குடும்பம் சிறப்படையும். குடும்பத்தாரின் அன்பு கிடைக்கும்.குருவின் 9-ம் இடத்து பார்வை மூலம் சுப நிகழ்ச்சி நடந்தேறும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். குருவின் வக்கிர காலமாகிய  ஏப்.9 முதல் அக்.3 வரை பொறுமை காப்பது நல்லது.

பரிகாரம்:
*  வியாழனன்று குருபகவானுக்கு அர்ச்சனை
*  தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு
*  வெள்ளிக்கிழமையில் லட்சுமிக்கு நெய் தீபம்

Advertisement

Advertisement Tariff

மேலும் குருப்பெயர்ச்சி பலன்கள் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us