Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/குருபெயர்ச்சி பலன்கள்/சிம்மம்

குருபெயர்ச்சி பலன்கள்

மேஷம்

மேஷம்

சிம்மம்

சிம்மம்

குருப்பெயர்ச்சி பலன்கள் : சிம்மம்
19 அக் 2019 to 30 அக் 2020

முந்தைய குருபெயர்ச்சி பலன்கள்

rasi

சிம்மம்குருபகவான் உங்கள் ராசிக்கு 5 ம் இடத்துக்கு செல்கிறார். இது மிக சிறப்பான நிலை. குருவால் கோடி நன்மைகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தருவார்.  சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதனால் வாழ்வில் வளம் காணலாம். அவரது 5,7ம் இடத்துப் பார்வைகள் சாதகமாக அமையும்.ஆனால் அவர் 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை அதிசாரம் பெற்று மகர ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. இதனால் நற்பலன் சற்று குறையலாம்.  உறவினர் வகையில் விரோதம் வரலாம். இந்த காலகட்டத்தில் குருவின் 9ம் இடத்துப் பார்வையால் ஓரளவு பிரச்னை குறையும்.  

உங்கள் முயற்சியில் இருந்த தடை அனைத்தும் விலகும். எடுத்த முயற்சி வெற்றிகரமாக முடியும். பணப்புழக்கத்துக்கு குறை இருக்காது. சமூகத்தில் மதிப்பு சிறப்பாக இருக்கும். தேவை அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர பொருள் வாங்குவீர்கள்.  கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். சிலர் புதிய வாகனம் வாங்குவர். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை  திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தடைபடலாம். உறவினர் வகையில் அனுகூலம் இருக்காது. ஆனால் சனிபகவானின் 7ம் இடத்துப் பார்வை சாதகமாக இருப்பதால்  பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பெண்கள் உறுதுணையாக  இருப்பர். 2020 ஆகஸ்ட் 31க்கு பிறகு ராகு அவப்பெயரை உண்டாக்குவார்.  

தொழில், வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை அடைவர்.  பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும்.  பத்திரிகை தொழில், தானிய வியாபாரம், தங்கம், மற்றும் உலோக வியாபாரம் சிறப்பாக இருக்கும். 2020 மார்ச் 28 தேதி முதல் 2020 ஜூலை 7 வரை புதிய தொழிலை தொடங்க உகந்த காலம் அல்ல. அதிக முதலீடும் போட வேண்டாம். பண விஷயத்தில் அக்கறை தேவை. 2020 ஆகஸ்ட் 31க்கு பிறகு சிலர் தரம் தாழ்ந்த  சேர்க்கையால் அவப்பெயர், பண இழப்பை சந்திக்கலாம்.

பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். சிலருக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். உங்கள் திறமை பளிச்சிடும். சகபெண் ஊழியர்களிடம் விரோதம் ஏற்படலாம். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை  அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.
மேலதிகாரிகளிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. அரசு வேலையில் இருப்பவர்கள் அதிக அக்கறையுடன் இருக்கவும். சக ஊழியர்களின் உதவியை நாடாமல் இருப்பது நல்லது. பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் அதிக உழைப்பை சிந்த வேண்டியது இருக்கும்.

கலைஞர்கள் மனம் போல புகழ், பாராட்டு கிடைக்க பெறுவர். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். தொழில் விஷயமாக சிலர் வெளிநாடுகளுக்கு சென்று வருவர். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் நற்பெயரையும், பொருளாதர வளத்தையும் காண்பர். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். 2020 மார்ச் 28  முதல் 2020 ஜூலை 7 வரை கலைஞர்கள் சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும்.

மாணவர்கள் குருவால் நல்ல வளர்ச்சி காண்பர். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். ஆசிரியர்களின் அறிவுரை வளர்ச்சிக்கு துணைநிற்கும். சிலர் ரேங்க் எடுக்கும் நிலைக்கு வருவர். நல்ல நிறுவனத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. 2020 மார்ச் 28  முதல் 2020 ஜூலை 7 வரை அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும்.

விவசாயிகளுக்கு வளம் கொழிக்கும். எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கும். கீரை வகைகள், காய்கறிகள், மஞ்சள், நெல், கோதுமை போன்றவை மூலம் நல்ல மகசூல் வரும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். புதிய சொத்து வாங்கலாம். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை  அதிக செலவு பிடிக்கும் பயிர்களை தவிர்க்கவும். கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் கிடைக்காது.

பெண்கள் உற்சாகமுடன் செயல்படுவர். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம்.  தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகோதரவழியில் உதவி கிடைக்கும். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை பொறுமையும், விட்டுக் கொடுத்து போகவும். ஆடம்பர செலவை தவிர்க்கவும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். வேலைக்கு செல்லும் பெண்கள் அக்கறையுடன் செயல்படவும். உடல் நலம் சீராக இருக்கும். மருத்துவ செலவு குறையும். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் விரைவில் வீடு திரும்புவர். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை பயணத்தின் போது கவனம் தேவை.

பரிகாரம்:
*  ஏகாதசியன்று பெருமாள் வழிபாடு
*  சனியன்று சனீஸ்வரருக்கு எள்தீபம்
*  பிரதோஷத்தன்று நந்தீஸ்வரர் தரிசனம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement Tariff

மேலும் குருப்பெயர்ச்சி பலன்கள் :

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap