Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/மாத ராசி பலன்/கடகம்

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

கடகம்

கடகம்

மாத ராசி பலன் : கடகம்
12 ஏப் 2024

முந்தைய மாத ராசி பலன்

rasi

கடகம்புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு எந்த ஒன்றையும் திட்டமிட்டு செய்து அதில் வெற்றி பெறக்கூடிய சக்தி இயல்பாகவே இருக்கும். பிறக்கும் சித்திரை மாதம் உங்கள் வாழ்க்கையில் யோகமான மாதமாக அமைய இருக்கிறது. இதுநாள் வரையில் நீங்கள் அடைந்த சங்கடங்கள் ஒவ்வொன்றாக இக்காலத்தில் விலகப் போகிறது. உங்கள் தன, குடும்பாதிபதி ஜீவன ஸ்தானத்தில் மாதம் முழுவதும் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரம், உத்தியோகம் போன்றவற்றில் இருந்த நெருக்கடிகள் விலகும். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். மாதத்தின் முற்பகுதியில் குருபகவான் உங்களுக்கு நெருக்கடிகளை உண்டாக்கினாலும் மே 1 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் நிலையை உயர்த்திட இருக்கிறார். வருவாயை வழங்கிட இருக்கிறார். இனி தைரியம், தன்னம்பிக்கை எல்லாம் உங்களுக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தோரின் கனவு நனவாகும். திருமண வயதினருக்கு வரன் வந்து சேரும். மொத்தத்தில் இந்த மாதத்தில் இருந்து உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகப் போகிறது. இருந்தாலும் அஷ்டம ஸ்தானத்தில் சனிபகவான் சஞ்சரித்து வருவதால் உடல் நிலையில் எப்பொழுதும் கவனம் செலுத்தி வருவது நன்மையை உண்டாக்கும். கவுரவம், மரியாதை போன்றவற்றில் பாதகம் உண்டாக வாய்ப்பிருப்பதால் எந்த ஒரு தவறான வழியிலும் செல்லாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்னைகள் விலக ஆரம்பிக்கும். வாழ்க்கைத்துணை உங்களைப் புரிந்து கொண்டு செயல்பட ஆரம்பிப்பார். பெண்களுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். சுக்கிர பகவானின் அருளால் கனவுகள் பூர்த்தியாகும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். வேலைவாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். விவசாயிகள் விவசாயப்பணிகளில் கவனமாக இருக்க வேண்டும். அரசியல்வாதிகளுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும். பணியாளர்களின் நிலை உயரும் மாணவர்களின் விருப்பம் பூர்த்தியாகும்.
சந்திராஷ்டமம்: மே 4.
அதிர்ஷ்ட நாள்: ஏப்.20,21,29,30, மே 2,3,11,12
பரிகாரம்: பிரதோஷத்தன்று சிவபெருமானை வழிபட இன்னல் தீரும்.

பூசம்: உடலுக்கும் மனதிற்கும் காரகனான சந்திரன், கர்மகாரகனான சனிபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்துக் கொள்ளக் கூடிய வல்லமை இருக்கும். பிறக்கும் சித்திரை மாதம் உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்ட மாதமாக இருக்கும். மூன்றாம் இடத்தில் சஞ்சரித்து வரும் கேது பகவானால் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் தொழிலில் இருந்த தடைகள் விலகும். உபயோகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும். பணியாளர்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். மாதத்தின் பிற்பகுதியில் குருபகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். இதுவரையில் இருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். வழக்குகள் உங்களுக்கு வெற்றியாகும். அதிர்ஷ்டக் காரகனான சுக்கிரன் மாதத்தின் முற்பகுதியில் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். பெண்களுக்கு இந்த மாதம் விருப்பங்கள் பூர்த்தியாகும் மாதமாக இருக்கும். சுய தொழில் செய்பவர்களின் நிலை உயரும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய பொறுப்பு வந்து சேரும். திருமண வயதினருக்கு நல்ல வரன் அமையும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு, எதிர்பார்த்த பதவி வரும். விவசாயிகள் இந்த மாதம் விளைச்சலில் கவனம் செலுத்த வேண்டும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.  மாணவர்களின் மேற்படிப்பு கனவு நனவாகும்.
சந்திராஷ்டமம்: மே 4,5
அதிர்ஷ்ட நாள்: ஏப். 17,20,26,29, மே 2,8,11
பரிகாரம்: சனிக்கிழமை தோறும் அனுமனை வழிபட வாழ்க்கை வளமாகும்.

ஆயில்யம்: மனக்காரகன், உடல் காரகனான சந்திரன், வித்யா காரகனான புதனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு அறிவாற்றலும், மற்றவர்களை வழிநடத்தும் திறனும், திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி அடையும் சக்தியும் எப்போதும் இருக்கும். பிறக்கும் சித்திரை மாதம் உங்கள் வாழ்க்கையில் யோகத்தை உண்டாக்கும் மாதமாக இருக்கும். உங்கள் நட்சத்திரநாதன் மாதத்தின் பிற்பகுதியில் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் புதிய சொத்து வாங்குதல், புதிய ஒப்பந்தங்கள் என்று கையெழுத்திடுவீர்கள். தொழில்  ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் அரசுவழி முயற்சிகள் வெற்றி பெறும். வேலைவாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். செய்யும் தொழிலில் இருந்த தடைகள் விலகும். பணியில் முன்னேற்றம் உண்டாகும். விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். தொழிலில் இருந்த போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள். உங்களின் தனித்திறமை வெளிப்படும். தைரியமாக செயல்பட்டு முயற்சியில் வெற்றி அடைவீர்கள். குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்ட மாதமாக இருக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் ஏற்படும். புதிய சொத்து சேரும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். விவசாயிகள் கவனமாக செயல்படுவதால் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். மாணவர்களின் நீண்டநாள் கனவு நிறைவேறும்.
சந்திராஷ்டமம்: மே 5,6
அதிர்ஷ்ட நாள்: ஏப்.14,20,23,29, மே 2,11.
பரிகாரம்: உலகளந்த பெருமாளை வழிபட்டால் வாழ்வு சிறக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap