Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/மாத ராசி பலன்/சிம்மம்

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

சிம்மம்

சிம்மம்

மாத ராசி பலன் : சிம்மம்
13 மே 2026

முந்தைய மாத ராசி பலன்

rasi

சிம்மம்

சிம்மம்: மகம்

எத்தனை சோதனைகள் வந்தாலும் அவற்றை எல்லாம் வென்று காட்டக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். ராசிக்குள் சஞ்சரிக்கும் கேது உங்களுக்கு நிறையவே படிப்பினைகளை ஏற்படுத்துவார். யாரை பெரிதாக நம்பி இருந்தீர்களோ அவர்களே உங்களுக்கு எதிராக மாறுவர். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். உடல் நிலையிலும் ஏதேனும் சிறு சிறு சங்கடம் அவ்வப்போது ஏற்படும். உங்கள் ராசிநாதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எடுத்த வேலை வெற்றியாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு தேடி வரும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை இருக்கும். வேலைக்காக முயற்சி செய்து வருபவர்களுக்கு தகுதியான வேலைக் கிடைக்கும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். புதிய தொழில் தொடங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். இந்த நேரத்தில், அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி உங்களுக்கு சில எச்சரிக்கைகளை வழங்குவார். சிலருக்கு எதிர்பாராத நெருக்கடி பிரச்னை, சங்கடம் என ஏற்படும். அவற்றை எல்லாம் சமாளித்திடக்கூடிய நிலையும் இருக்கும். விவசாயிகள் இந்த மாதத்தில் நிதானமாக செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 9.
அதிர்ஷ்ட நாள்: மே 16, 19, 25, 28. ஜூன் 1, 7, 10.
பரிகாரம்: அரச மரத்தடி விநாயகரை வழிபட சங்கடம் விலகும்.

பூரம்: ஆடம்பரத்தையும் பகட்டையும் விரும்பும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் நன்மையான மாதம். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் வரவு அதிகரிக்கும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். மூடி வைத்திருந்த தொழில்களை மீண்டும் தொடங்கி லாபம் காண்பீர். கையில் பணம் புரளும். மே 26 வரை குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுத்த வேலை எல்லாம் யோகமாகும். வருமானம் அதிகரிக்கும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் வரும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். நண்பர்களால் லாபம் உண்டாகும். தம்பதிக்குள் இணக்கமான நிலை இருக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். மே 26 முதல் விரய ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் செலவுகளில் கவனம் தேவை. முடிந்த வரை கடன் வாங்காமல் இருப்பது நல்லது. உங்கள் பாக்யாதிபதி ஆட்சியாக சஞ்சரிப்பதால் பெரியோரின் ஆதரவு கிடைக்கும். செல்வாக்கும் உயரும். தந்தைவழி உறவுகள் தேடிவந்து உதவி செய்வர். சிலருக்கு புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். சிலர் சொந்த வீட்டில் பால் காய்ச்சுவீர். பெண்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி பிரச்னை சங்கடம் எல்லாம் விலகும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த கல்லுாரியில் இடம் கிடைக்கும். மூத்த குடிமக்கள் உடல்நிலையில் கவனமாக இருப்பது நல்லது. 
சந்திராஷ்டமம்: ஜூன் 10.
அதிர்ஷ்ட நாள்: மே 15, 19, 24, 28. ஜூன் 1, 6, 
பரிகாரம்: மகேஸ்வரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

உத்திரம் 1 ம் பாதம்: எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்தில் முதன்மையாக இருக்க நினைக்கும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் யோகமான மாதம். உங்கள் ராசியாதிபதி சூரியன் கேந்திர பலத்துடன் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருந்த நெருக்கடி விலகும். எடுத்த வேலை லாபம் தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அதிகாரிகள் ஆதரவால் நம்பிக்கை அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைப்பதுடன் புதிய பொறுப்பும் சிலருக்கு பதவியும் கிடைக்கும். வேலைக்காக முயற்சித்து வருபவருக்கு வேலைக் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். உங்கள் லாபாதிபதி புதன் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். மாதத்தின் முற்பகுதியில் சப்தம ஸ்தான ராகுவிற்கும், பிற்பகுதியில் அஷ்டம ஸ்தான சனிக்கும் குரு பார்வைக் கிடைப்பதால் சங்கடம் எல்லாம் விலகும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்துவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் அமைந்து மணநாள் முடிவாகும். பொன் பொருள் சேரும். சந்தோஷமான நிலை இருக்கும். புதிய வாகனம் ஆடம்பர பொருட்கள் என வாங்குவீர். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடிவடையும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். ஜென்ம ராசிக்குள் கேது சஞ்சரிப்பதால் அனைத்திலும் நிதானமும் கவனமும் அவசியம். விவசாயிகள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு இந்த மாதம் யோகமான மாதமாகும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 11.
அதிர்ஷ்ட நாள்: மே 19, 28. ஜூன் 1, 10.
பரிகாரம்
தர்பாரண்யேஸ்வரரை வழிபட துன்பம் விலகும். நன்மை நடக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap