Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்/மீனம்

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

மேஷம்

மேஷம்

மீனம்

மீனம்

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் : மீனம்
11 ஏப் 2018

முந்தைய தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

rasi

மீனம்உண்மையின் இலக்கணமாக திகழும் மீன ராசி அன்பர்களே!

கேது சாதகமாக இருக்கும் நிலையில் புத்தாண்டு பிறக்கிறது. குரு 8-ம் இடத்தில் இருப்பது சிறப்பான நிலை அல்ல. ஆனால் அவரது 7-ம் இடத்து பார்வை சாதகமாக உள்ளது.  இடையூறுகள் குறுக்கிட்டாலும் குருபார்வையால் முறியடிப்பீர்கள். எதிரியிடம் பணிந்து நின்றாலும் முடிவில் வெற்றி உங்கள் பக்கம் தான். 2018 அக். 5ல் அவர்  9-ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறுவது உயர்வான நிலை. குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. 2019 பிப். 10ல் உங்கள் ராசிக்கு 10-ம் இடமான தனுசு ராசிக்கு மாறிய பின் நன்மை தர இயலாது.

ராகு 5-ம் இடமான கடகத்தில் இருப்பது சிறப்பானதல்ல. 2019 பிப். 13ல் ராகு 4-ம் இடமான மிதுனத்திற்கு மாறுகிறார். இதனால் வீண் அலைச்சல், பிரச்னை உருவாகலாம்.  11-ம் இடமான மகரத்தில் இருக்கும் கேதுவால் பணபலம், உடல்நலம் உண்டாகும்.  அவர் 2019 பிப். 13ல் 10-ம் இடமான தனுசு ராசிக்கு செல்வது நல்லதல்ல.

சனிபகவான் 10-ம் இடத்தில் உள்ளதால் தொழிலில்  பின்னடைவு ஏற்படலாம். அவரது பார்வை பலத்தால் ஓரளவு நன்மை உண்டாகும்.  

2018 ஏப்ரல் –  செப்டம்பர் கேதுவின் பலத்தால்  பொருளாதார வளத்தில் குறைவிருக்காது.
மற்ற கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருப்பதால் பெரியோர் ஆலோசனையை பின்பற்றுவது நல்லது. சமூகத்தில் மதிப்பு சீராகவே இருக்கும். குடும்பத்தின் தேவை ஓரளவு பூர்த்தியாகும். கணவன், மனைவி இடையே பொறுமையும், விட்டுக் கொடுக்கும் தன்மையும் தேவை.

பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் சீரான முன்னேற்றம் காணலாம்.  வியாபார விஷயமாக அடிக்கடி வெளியூர் செல்ல நேரிடும். அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்காது.  

கலைஞர்கள் புதிய ஒப்பந்தத்திற்காக அதிக முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் புதிய பொறுப்பு கிடைக்க பெறலாம்.

மாணவர்கள் சிரத்தையுடன் படிப்பது நல்லது. ஆசிரியரின் ஆலோசனை நல்ல வழியை காட்டும்.

விவசாயிகள்  புதிய சொத்து முயற்சியின் பேரில் வாங்கலாம். கேதுவால் வழக்கு விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும். பெண்கள் சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். அக்கம் பக்கத்தாரிடம் வீண் வாக்குவாதம் வேண்டாம்.  சகோதரிகள் ஆதரவுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் ஆடம்பர செலவை குறைக்கவும்.

2018 அக்டோபர் – 2019 ஏப்ரல் குருவால் பணபலம், உடல்நலம் உண்டாகும். எடுத்த முயற்சி வெற்றிகரமாக முடியும். குடும்பத்தின் தேவை பூர்த்தியாகும்.
தடைபட்ட சுபநிகழ்ச்சிகள்  இனிதே கைகூடும். பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். 2019 பிப். 10க்கு பிறகு பொறுமையும், விட்டுக் கொடுக்கும் தன்மையும் தேவை.

பணியாளர்கள் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவர். அரசு ஊழியர்களுக்கு பணியிடத்தில் இருந்த பிரச்னை மறையும். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி எளிதில் கிடைக்கும்.
கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேறும். பிப்.10க்கு பிறகு  பொறுமை தேவைப்படும். வேலைப்பளு அதிகரிக்கும்.

தொழில், வியாபாரம் வளர்ச்சிமுகமாக இருக்கும். வெளியூர் பயணம் மூலம் ஆதாயம் கிடைக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம்  முன்னேற்றம் அடையும். அரசின் சலுகை கிடைக்கும். பிப்.13க்கு பிறகு  அலைச்சல் அதிகரிக்கும்.  கலைஞர்கள்  புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். புகழ், பாராட்டுக்கு குறைவிருக்காது.  அரசியல்வாதிகள், சமுகநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.  பிப்.13க்கு பிறகு விடாமுயற்சி தேவைப்படும்.

மாணவர்கள்  ஆசிரியரின் ஆலோசனையால்  முன்னேற்றம் காணலாம். போட்டி பந்தயத்தில்  வெற்றி கிடைக்கும்.

விவசாயிகளுக்கு மானாவாரி பயிர்களின் மூலம் விளைச்சல் பெருகும். கால்நடைவளர்ப்பில் அதிக வருவாயை எதிர்பார்க்கலாம். புதிய சொத்து முயற்சியின் பேரில் வாங்கலாம்.  பிப்.13க்கு பிறகு  வழக்கு, விவகாரத்தில் முடிவு சுமாராக இருக்கும்.

பெண்களுக்கு கணவன் மற்றும் குடும்பத்தாரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். குருபலத்தால் சுப நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். பிப்.13க்கு பிறகு வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும். பொறுமையுடன் விட்டுக் கொடுப்பது நல்லது.  

பரிகாரம்:
* வியாழனன்று குருவுக்கு முல்லைப்பூ மாலை
* சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு நெய்தீபம்
* ஞாயிறன்று ராகுகாலத்தில் சரபேஸ்வரர் வழிபாடு 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement

Advertisement Tariff

மேலும் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் :

Advertisement

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap