sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

/

தனுசு

/

தனுசு

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

மேஷம்

மேஷம்

தனுசு

தனுசு

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் : தனுசு
15 ஏப் 2022

முந்தய தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

rasi

தனுசுமூலம்: திறமைகளை மூலதனமாக கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் காணும் உங்களுக்கு இந்த புத்தாண்டில் ராசிநாதன் குரு சஞ்சாரத்தால் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். எதிலும் வெற்றியும் சந்தோஷத்தையும் தரும். பணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னைகளில் தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும். துணிச்சலாக முயற்சிகள் மேற்கொண்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.  மேல் அதிகாரிகளால் நன்மை ஏற்படும். குடும்பத்தில் குதுாகலம் உண்டாகும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த இறுக்க நிலை மாறும். பெண்களுக்கு காரியங்களை துணிச்சலாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். அரசியல்துறையினருக்கு பயணங்களால் மகிழ்ச்சியும், ஆதாயமும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற துணிச்சலாக முயற்சிகளை மேற்கொள்வர். எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்க வாய்ப்புண்டு.
பரிகாரம்: வினாயகரை வணங்கி வர மனதில் தைரியம் கூடும்.
.
பூராடம்: உழைப்புக்கு அஞ்சாத உறுதியான மனம் கொண்ட உங்களுக்கு இந்த புத்தாண்டில் எதையும் யோசித்து செய்வது நன்மை தரும். கோபமாக பேசுவதை தவிர்த்து நிதானமாக பேசி செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். எந்த விஷயத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்கள் செல்லும்போதும் வாகனங்களில் செல்லும்போதும் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மன வருத்தம் நீங்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். குடும்பத்தில் ஏதாவது ஒரு வகையில் திடீர் சச்சரவுகள் தோன்றலாம். அதற்கு இடம் கொடுக்காமல் நடந்து கொள்வது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.  பெண்களுக்கு புதிய வேலைகள் சாதகமாக  முடியும். விரும்பிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வர். கலைத்துறையினருக்கு பாராட்டுகள் வரும். வெளிநாடு பயணங்களும் இனிதே அமையும். அரசியல் துறையினருக்கு நீண்ட நாளாக இருந்து வந்த பிரச்னைகள் விலகும். தொண்டர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும்.  மாணவர்களுக்கு திட்டமிட்டு பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் அவசரம் காட்டாமல் நிதானத்தை கடைபிடியுங்கள்.
பரிகாரம்: சுக்கிர பகவானுக்கு தீபம் ஏற்றி வணங்கி வர வெற்றி உண்டாகும்.

உத்திராடம் 1ம் பாதம்: அனுபவ அறிவைக் கொண்டு காரிய வெற்றி பெறும் உங்களுக்கு இந்த புத்தாண்டில் அறிவுத் திறமை கூடும். சில முக்கிய முடிவுகள் என்பதன் மூலம் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னைகள் தீரும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். வீடு மனை ஆகியவற்றை வாங்குவதற்கு இருந்து வந்த தடைகள் நீங்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் தராவிட்டாலும் வருமானத்திற்கு குறைவு இருக்காது. தொழில் விரிவாக்கம் செய்யும் திட்டத்தை தள்ளிப்போடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மற்ற விஷயங்களில் தலையிடாமல் இருப்பது வீண் பிரச்னை வராமல் தடுக்கும். குடும்பத்தில் கணவன்- மனைவிக்கிடையே எதையும் மனம் விட்டு பேசி அதன் பிறகு செய்வது நன்மை தரும். குடும்பத்தில் அமைதி உண்டாக கோபத்தை குறைப்பது நல்லது. பெண்களுக்கு அறிவுப்பூர்வமாக செயல்பட்டு சில முக்கிய முடிவு எடுப்பீர்கள். கலைத்துறையினருக்கு பொருள் வரவில் குறைவு ஏற்பட வாய்ப்பு இல்லை. அரசியல் துறையினருக்கு பிரபலங்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். மாணவர்களுக்கு எதிர் காலத்தை பற்றிய எண்ணம் உண்டாகும். மேல்படிப்பு பற்றிய சிந்தனையில் ஈடுபடுவீர்கள். பிறரது விஷயத்தில் தலையிடாதீர்கள்.
பரிகாரம்: சிவனுக்கு அர்ச்சனை செய்ய வெற்றி உண்டாகும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us