sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

/

மீனம்

/

மீனம்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

மேஷம்

மேஷம்

மீனம்

மீனம்

ராகு கேது பெயர்ச்சி பலன் : மீனம்
22 ஆக 2020 to 16 மார் 2022

முந்தய ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

rasi

மீனம்ராசிக்கு நான்கில் இருக்கும் ராகு  3ல் மாறுகிறார். அசாத்திய தைரியம் உண்டாகும். பிடிவாத குணத்துடன் செயல்பட்டாலும், முக்கிய முடிவுகளை எடுத்து சாதனை புரிவீர்கள். இக்கட்டான நேரத்தில் கூட உங்கள் நடவடிக்கை வெற்றியில் முடியும்.  மாற்று மதத்தினரின் உதவி கிடைக்கும். ஆபத்து காலத்தில் நண்பர்களுக்கு உதவுவீர்கள். அவ்வப்போது தத்துவ சிந்தனை மனதில் பிறக்கும். பொதுநல சேவை, ஆன்மிகப் பணிகளில் முன்நிற்பீர்கள். எதிரிகள் உங்களோடு மோதி பலம் இழப்பர். கடன் பிரச்னை குறையும். மொத்தத்தில் இந்த பெயர்ச்சியால் நன்மை அதிகரிக்கும்.

குடும்பம்: ராகு 3ல் அமர்வதால் சகோதரி வீட்டுப் பிரச்னையை தீர்க்க உதவுவீர்கள். பெற்றோருடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். தந்தையின் உடல்நலனில் அக்கறை தேவை. தாயார்வழி உறவினர்களோடு இருந்த பிரச்னை மறையும். தந்தைவழி உறவினர் உங்களிடம் உதவி கேட்டு வருவர்.  

தொழில்: தொழிலதிபர்கள் தொழிலாளர்களுடன் நிதான அணுகுமுறையை பின்பற்றுவது நல்லது. ரியல் எஸ்டேட் துறையினர் முன்னேற்றம் காண்பர். காவல், தடயவியல் துறையினர் சாதனை படைப்பர். உங்களின் இயற்கை குணமான நீதி, நேர்மையால் சுற்றியுள்ளவர்களால் பிரச்னை ஏற்படலாம். கேது 9ம் இடத்திற்கு வரவிருப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். அயல்நாட்டுப் பணிக்காக காத்திருப்போருக்கு வாய்ப்பு தேடி வரும். சிலர் பணி காரணமாக குடும்பத்தை பிரியும் நிலை வரும். அரசுப் பணியாளர்கள் எதிர்பாராத இடமாற்றத்தை சந்திப்பர்.  

நிதி நிலை : பூர்வீக சொத்தில் இழப்பு ஏற்படலாம். ஆனால் சுயவருமானத்தால் சொத்து சேரும். குரு, சனிப்பெயர்ச்சியால் நிதிநிலை உயரும். பிள்ளைகளின் நலனுக்காக சேமிப்பில் ஈடுபடுவீர்கள்.

மாணவர்கள்:  ராகுவால் ஆற்றல் அதிகரிக்கும். ஞாபக மறதியை போக்க பயிற்சி தேவை. இயற்பியல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் துறையினர் நல்ல முன்னேற்றம் காண்பர்.

பெண்கள் : வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவர். குடும்ப பிரச்னையை வெளியே சொல்வதால் மதிப்பு குறையும். சகோதரவழியில் பிரச்னை தோன்றலாம். புகுந்த வீட்டு பிரச்னைக்கு கணவரோடு இணைந்து செயல்பட்டால் தீர்வு கிடைக்கும்.

உடல்நலம்: காது, கழுத்து, தோள்பட்டையில் சிறுபிரச்னைகள் ஏற்படலாம். சிலர் காது, மூக்கு, தொண்டையில் அறுவை சிகிச்சை செய்ய நேரலாம். குருவின் பார்வை ராகு மீது விழுவதால் பிரச்னை குறையும்.

பரிகாரம்:
* தினமும் வராஹியம்மனை வழிபடுதல்
* வெள்ளியன்று அபிராமிஅந்தாதி படித்தல்
* ஏழைகளுக்கு அன்னம், ஆடை தானம்

Advertisement

Advertisement Tariff

மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us