அஜித் அணி மீண்டும் அசத்தல் : பெல்ஜியம் ரேஸில் 2வது இடம்
பெல்ஜியத்தில் நடந்த கார் ரேஸ் போட்டியில் நடிகர் அஜித் குமாரின் அணி 2வது இடம் பிடித்து அசத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். சினிமாவை தாண்டி கடந்த ஓராண்டுக்கு மேலாக கார் ரேஸ் போட்டிகளிலும் அசத்தி வருகிறார். அஜித்குமார் ரேஸிங் என்ற அணியை உருவாக்கி பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வருகிறார். துபாய் 24H போட்டியில் 3வது இடத்தையும், இத்தாலியில் நடந்த போட்டியில் 2வது இடத்தையும் பெற்று அசத்தினார்.
இந்நிலையில் பெல்ஜியத்தில் நடந்த 12H Spa-Francorchamps பந்தயத்தில் அஜித் குமார் அணி 2-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது. போட்டியில் வெற்றி பெற்றதும் அஜித் நமது நாட்டு மூவர்ண கொடியை ஏந்தியபடி வந்து கோப்பையை பெற்றுக் கொண்டார்.
ரேஸில் அஜித் வெற்றி பெற்றதற்காக ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள் வைரலாகின. அஜித் கார் ஓட்டும் வீடியோக்கள், அவரது அணியினர் வெற்றி பெற்றது, அதை அஜித் கொண்டாடிய நிகழ்வுகள் வைரலாகி வருகின்றன.