உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திருச்செந்தூரை தொடர்ந்து ஷீரடியில் விஜய் வழிபாடு

திருச்செந்தூரை தொடர்ந்து ஷீரடியில் விஜய் வழிபாடு

நடிகரும், தவெக., தலைவருமான விஜய் நடந்து முடிந்து தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து தனது வேட்பாளர்களுடன் களம் கண்டார். தேர்தல் முடிவுகள் வரும் மே 4 அன்று வர உள்ளது. இடைப்பட்ட இடைவெளியில் விஜய் ஆன்மிக பயணமாக சென்று வருகிறார்.

நேற்று திடீரென அதிகாலை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்ற விஜய், பட்டு வேட்டி சட்டை அணிந்து திருச்செந்தூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். மேலும் எதிரிகளை வீழ்த்தி தேர்தல் முடிவுகள் சாதகமாக அமைய வேண்டி, தமிழக வெற்றி கழகம் சார்பில், சத்ரு சம்ஹார யாகமும் நடைபெற்றது.



இந்நிலையில் இன்று(ஏப்., 29) சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மகாராஷ்டிராவில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்றார் விஜய். அங்கு அவருக்கு கோயில் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஷீரடி சாய்பாபாவை வழிபட்டார். தேர்தலில் வெற்றி பெற வேண்டி இந்த வழிபாடு நடந்ததாக கூறப்படுகிறது.

தனது தாயார் ஷோபா சந்திரசேகரின் நீண்டகால ஆசையை நிறைவேற்றும் வகையில், விஜய் கொரட்டூர் வெங்கடேஷ்வரா நகரில் 'சாயி மந்திர்' என்ற பெயரில் சாய்பாபாவுக்குக் கோயில் ஒன்றைக் கட்டி கடந்த 2024 ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !