அனில் ரவிபுடி படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்
தெலுங்கில் F2, F3, பகவந்த் கேசரி, சங்கராந்திகி வஸ்துனம், மன சங்கரா வர பிரசாத் காரு உள்ளிட்ட கமர்ஷியல் வெற்றி படங்களை இயக்கி பெயர் பெற்று முன்னனி இயக்குனராக வலம் வருபவர் அனில் ரவிபுடி. தற்போது வெங்கடேஷ் கூட்டணியில் மீண்டும் இவர் ஒரு படத்தை இயக்கும் பணி நடக்கிறது. இப்படம் 2027ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.
இதில் வெங்கடேஷ் உடன் இணைந்து தெலுங்கு சினிமாவில் இளம் நாயகன் ஆன நந்தமுரி கல்யாண் ராம் நடிக்கவுள்ளார். வெங்கடேஷிற்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் மற்றும் நந்தமுரி கல்யாண் ராமிற்கு ஜோடியாக இளம் நாயகியான கிர்த்தி ஷெட்டி நடிக்கவுள்ளனர் என கூறப்படுகிறது. இப்போது இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் இணைந்துள்ளாராம். அதோடு மூன்று பாடல்களை இசையமைத்து தந்துள்ளார் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. அனில் ரவிபுடி, ஜி.வி.பிரகாஷ் இருவரும் முதல்முறையாக இந்த படத்திற்காக இணைந்துள்ளனர்.