உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினி, கமலுக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்

ரஜினி, கமலுக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 4ம் தேதி வெளியானது. தேர்தல் முடிவுகளை பார்த்து விட்டு நடிகர் ரஜினிகாந்த், நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்தனர். முதல்வர் ஆனதற்கும் வாழ்த்து சொன்னார்கள். கடந்த சில நாட்களாக சட்டசபை பணிகள், பதவியேற்பு உள்ளிட்ட விஷயங்களில் அவர் கவனம் செலுத்தியதால் அந்த எக்ஸ் பதிவுக்கு நன்றி தெரிவிக்காமல் இருந்தார்.
இந்நிலையில் இன்று ரஜினி, கமலுக்கு எக்ஸ் பதிவு மூலமாகவே நன்றி தெரிவித்துள்ளார். தனக்கு வாழ்த்து சொன்ன பல்வேறு அரசியல் பதிவுகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக பல சினிமா பிரபலங்களும் விஜயின் வெற்றியை கொண்டாடி வருகிறார்கள். அவர்களுக்கும் விரைவில் வேறு வகையில் நன்றி தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், பல்வேறு சினிமா சங்கங்கள் முதல்வரை சந்திக்க நேரம் கேட்டு வருகின்றன. அவர்களை வரும் நாட்களில் சந்திப்பார் என தெரிகிறது. விஜய் மந்திரி சபையில் நடிகர், இயக்குனர், யுடியூப்பரான ராஜ்மோகன் மந்திரி ஆகியுள்ளார். அவருக்கான துறை இன்னும் ஒதுக்கப்படவில்லை.

விஜய் நண்பரும், துாத்துக்குடி எம்எல்ஏவுமான ஸ்ரீநாத்துக்கு மந்திரி பதவி கிடைக்குமா? அல்லது கட்சியில், அரசில் வேறு பதவி ஒதுக்கப்படுமா என தெரியவில்லை. இதற்கிடையில் தேர்தல் காலத்தில் மற்ற கட்சிகளை ஆதரித்த, மற்ற கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்த சில சினிமா பிரபலங்கள் கூட சில நாட்களாக தமிழக முதல்வர் விஜயை புகழ்ந்து வீடியோ வெளியிட்டு வருவதுகுறிப்பிடத்தக்கது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !