ஆதிக் ரவிச்சந்திரன், ஐஸ்வர்யா தம்பதிக்கு ஆண் குழந்தை
ADDED : 4 hours ago
ஜி.வி.பிரகாஷ் நடித்த ‛திரிஷா இல்லன்னா நயன்தாரா', சிம்பு நடித்த ‛அஅஅ', விஷாலின் ‛மார்க் ஆண்டனி', அஜித் நடித்த ‛குட் பேட் அக்லி' போன்ற படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். அடுத்தும் அஜித் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இதற்கான பணிகள் நீண்டகாலமாகவே நடந்து வருகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டும் இன்னும் வெளியாகவில்லை.
நடிகர் பிரபு மகள் ஐஸ்வர்யாவுக்கும், ஆதிக்கிற்கும் 2023ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில், இந்த தம்பதியினருக்கு சில நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அன்னை இல்லத்துக்கு புது வரவாக வந்துள்ள குழந்தைக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
ஆதிக் ரவிச்சந்திரன் தந்தை ரவியும் சினிமாவில் உதவி, இணை இயக்குனராக பணியாற்றியவர். அந்தவகையில் குழந்தையின் தாத்தாக்கள் இருவருமே திரைத்துறையை சேர்ந்தவர்கள் ஆவர்.