உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆவலுடன் எதிர்பார்த்த 'துரந்தர் தி ரிவெஞ்ச்': இந்த வார ஓடிடி வெளியீடுகள்

ஆவலுடன் எதிர்பார்த்த 'துரந்தர் தி ரிவெஞ்ச்': இந்த வார ஓடிடி வெளியீடுகள்


மிகப் பெரிய வசூலை வாரிக் குவிந்த 'துரந்தர் தி ரிவெஞ்ச்' முதல் காளிதாஸ்-2 வரை என இந்த வாரம் ஓடிடியில் பல படங்கள் ரிலீசாகவுள்ளது.

துரந்தர் தி ரிவெஞ்ச்

பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர்சிங், சாரா அர்ஜுன், மாதவன், அக்சய் கண்ணா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'துரந்தர்'. உளவாளியாகப் பாகிஸ்தான் சென்று பயங்கரவாதிகளைப் பந்தாடும் வகையில் அமைக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் முதல் பாகம் சுமார் 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்த நிலையில், 2ம் பாகமாக 'துரந்தர் தி ரிவெஞ்ச்' படம் கடந்த மாதம் வெளியாகி ரூ.1300க்கு கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படம் இன்று அல்லது நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காளிதாஸ்-2

இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் பரத், அபர்ணதி, பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'காளிதாஸ்-2'. முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் நேற்று முன்தினம் (மே.12ம் தேதி) அமேசான் ப்ரைம், சன் நெக்ஸ்ட், சிம்பிலி சவுத் ஆகிய ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளது.

மிஸ்டர் எக்ஸ்

நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கவுதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் 'மிஸ்டர் எக்ஸ்'. இந்த படத்தை மனு ஆனந்த் இயக்கியுள்ளார். இன்று (மே.14ம் தேதி) ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

கப்

மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் நடிப்பில், மாவட்ட அளவிலான விளையாட்டை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் 'கப்'. இந்த படம் நாளை (மே.15ம் தேதி) மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

ஒரு துரோக சாஹச்சர்யத்தில்

மலையாள இயக்குநர் ரதீஷ் பாலகிருஷ்ணன் பொடுவால் இயக்கத்தில் குஞ்சாக்கோ போபன், திலீஷ் போத்தன், சஜின் கோபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த வெப் தொடர் 'ஒரு துரோக சாஹச்சர்யத்தில்'. இது நாளை (மே.15ம் தேதி) ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

எக்ஸாம்

பிரபல தமிழ் இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் நடிகை துஷாரா விஜயன் நடிப்பில் வெளிவந்த வெப் தொடர் 'எக்ஸாம்'. இதில் அதிதி பாலன், அப்பாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேர்வை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த தொடர் நாளை (மே.15ம் தேதி) அமேசான் ப்ரமை ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

டெர்பி

மலையாள இயக்குநர் சஜில் மாம்பாத் இயக்கத்தில் சாகர் சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள மலையாள திரைப்படம் 'டெர்பி'. இந்த படம் நாளை (மே.15ம் தேதி) அமேசான் ப்ரைம் மற்றும் மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !