சினிமாவில் போக்குவரத்து போலீஸ், நிஜத்தில் போக்குவரத்து அமைச்சர்
தமிழ் சினிமாவிலிருந்து மூன்று பேர் முதல்வர் விஜய்யின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளதாக காலையில் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த எண்ணிக்கை தற்போது நான்கு ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆகப் பதவியேற்றுக் கொண்டுள்ள விஜய் தமிழ் பார்த்திபன், சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளவர் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
விஜய் நடித்து வெளிவந்த 'தி கோட்' படத்தில் அவர் போக்குவரத்து போலீஸ் ஆக நடித்துள்ளார். இன்று போக்குவரத்து அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். அப்படத்தில் அவர் நடித்துள்ள காட்சியை இன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.
'தி கோட்' படத்தில் விஜய்யின் கார் எண்ணை டிஎன் சி எம் 2026 என படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு வைத்திருந்தார். தற்போது அந்தப் படத்தில் நடித்த மற்றொருவர் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆகி இருக்கிறார்.
அந்தப் படத்தில் இருந்து இன்னும் என்னவெல்லாம் நிஜத்தில் நடக்கப் போகிறதோ என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.