உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / என் தந்தையையும் சட்டையை கழற்ற வைத்தார் சல்மான் கான் ; நடிகர் வருண் தவான் தமாஷ் பேச்சு

என் தந்தையையும் சட்டையை கழற்ற வைத்தார் சல்மான் கான் ; நடிகர் வருண் தவான் தமாஷ் பேச்சு


பாலிவுட்டின் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவர் வருண் தவான். பிரபல இயக்குனர் டேவிட் தவானின் மகனான இவர் நடிப்பில் தற்போது 'ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை' என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் இதன் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சல்மான் கான் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய வருண் தவான், “சல்மான் கானுடன் அதிக நேரம் நீங்கள் செலவழித்தால் நீங்களும் சல்மான் கான் மாதிரி உங்களை நினைக்க ஆரம்பித்து விடுவீர்கள்” என்று கூறினார்.

“என் தந்தையும் கூட அப்படித்தான் ஒரு கட்டத்தில் மாறினார். என் தந்தை சல்மான் கானுடன் இணைந்து பல படங்களில் பணியாற்றியவர். அந்த சமயத்தில் சல்மான் கான் சட்டை இல்லாமல் வெற்று உடம்புடன் நடமாடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இதை அருகில் இருந்து பார்த்த என் தந்தையும் கொஞ்ச நாட்களில் வீட்டிலும் சரி, படப்பிடிப்பு தளத்திலும் சரி சட்டை இல்லாமல் நடக்க ஆரம்பித்து விட்டார். இதை பார்த்து படக்குழுவினரும் எங்கள் குடும்பத்தினரும் மிகவும் ஆச்சர்யப்பட்டோம்.. அந்த அளவுக்கு அவருடைய ஸ்டைலும் கவர்ச்சியும் சுற்றி இருப்பவர்களையும் மாற்றிவிடும்” என்று புகழாரம் சூட்டினார். வருண் தவான். அவரது இந்த பேச்சு அரங்கத்தில் உள்ளவர்களை வாய்விட்டு சிரிக்க வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !