உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ருக்மணி வசந்த் கவர்ச்சி படங்களை வெளியிட்ட இருவர் பிடிபட்டனர்

ருக்மணி வசந்த் கவர்ச்சி படங்களை வெளியிட்ட இருவர் பிடிபட்டனர்


தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை ருக்மணி வசந்த். 'காந்தாரா சாப்டர் 1' படம் மூலம் புகழ்பெற்றார். தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக 'மதராஸி', விஜய் சேதுபதியுடன் 'ஏஸ்' படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் பிகினி உடையில் கடற்கரையில் இருக்கும் புகைப்படங்கள் வைரலானது. ஆனால் இந்த கவர்ச்சி படங்கள் பரவலாக்கப்பட்டது. இதுகுறித்து ருக்மணி வசந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் ''எனது பிகினி புகைப்படங்களை பார்த்து நானும் அதிர்ச்சியடைந்தேன். இது முழுக்க ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. ஏஐ மூலம் நல்ல விஷயங்களை பரப்புங்கள். இதுபோன்ற கீழ்த்தரமான வேலைகளில் ஈடுபடாதீர்கள்'' என மோசடி நபர்களை ருக்மணி வசந்த் எச்சரித்தார். அத்துடன் சைபர் கிரைம் போலீசிலும் புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று ஐதராபாத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது ருக்மணி வசந்த் படத்தை வெளியிட்டது அவர்கள்தான் என்பது உறுதியானது. இது தொடர்ந்து இன்று இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !