உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காஷ்மீர் பள்ளிக்கு ஒரு கோடி நிதி வழங்கிய அக்ஷய் குமார்

காஷ்மீர் பள்ளிக்கு ஒரு கோடி நிதி வழங்கிய அக்ஷய் குமார்


பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் சமீபத்தில் இந்திய எல்​லை பாது​காப்​பு படை​ அழைப்​பின் பேரில், காஷ்மீரில் இருக்கும் எல்​லை பகு​திக்கு சென்றார். அங்கு ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்தியவர் அதன் பிறகு அங்​குள்ள எல்​லை கட்​டுப்​பாட்​டு கோடு அருகே, குரேஸ் பள்​ளத்​தாக்​கின் நெரோ துலைல் கிராமத்​துக்​கு சென்​றார். அங்​குள்ள அரசு பள்ளி ஒன்றை பார்வையிட்ட அவர் அடிப்படை வசதி கூட இல்லாத அந்த பள்ளியை கண்டு கண் கலங்கினார். அந்தப் பள்ளிக்கு ஒரு கோடி ரூபாய் நிதி அளிப்பதாக அங்கேயே அறிவித்தார்.

அதன்​படி அவர் அளித்த நிதி​யை கொண்​டு, அந்த பள்​ளி​யின் உள்​கட்​டமைப்பை மேம்படுத்​தி​ இருக்கின்றனர். புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டடத்திற்கு அக்ஷய் குமாரின் தந்தை ஹரி ஓம் பாட்டியாவின் நினை​வாக, 'ஹரி ஓம் பாட்​டியா கல்வி வளாகம்' என்று பெயர் சூட்டியுள்​ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !