உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தான் நடித்த படத்தின் டைட்டிலிலேயே 8 ஆண்டு கழித்து மீண்டும் நடிக்கும் மஞ்சு வாரியர்

தான் நடித்த படத்தின் டைட்டிலிலேயே 8 ஆண்டு கழித்து மீண்டும் நடிக்கும் மஞ்சு வாரியர்


பாலிவுட்டில் தயாரிப்பாளரும் இயக்குனருமான கரண் ஜோகர், தர்மா புரொடக்ஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். தென்னிந்திய படங்களின் மீது அதிக ஆர்வமும் கவனமும் கொண்ட இவர், தற்போது முதன்முறையாக மலையாளத்தில் ஒரு படத்தை தயாரிப்பதன் மூலம் தென்னிந்திய திரையுலகில் அடி எடுத்து வைக்கிறார். அந்த வகையில் பிரித்விராஜ், மஞ்சு வாரியர் இருவரும் இணைந்து நடிக்க 'ஒடியன் : ஏஜ் ஆப் இல்யூஷன்' என்கிற படத்தை தயாரிக்கிறார். இது பான் இந்தியா படமாக உருவாக இருக்கிறது. மம்முட்டி நடித்த 'பிரம்மயுகம்' படத்தை இயக்கிய ராகுல் சதாசிவன் இப்படத்தை இயக்குகிறார்.

ஒடியன் என்பது கேரளாவின் நாட்டுப்புறக் கதைகளில் வரும், விலங்காக உருமாறும் சக்தி கொண்ட ஒரு மாயாஜால கதாபாத்திரத்தைக் குறிக்கும். இதில் ஆச்சரியம் என்னவென்றால், கடந்த 2018ல் மோகன்லால் நடிப்பில் ஸ்ரீகுமார் மேனன் என்பவர் இயக்கத்தில் இதே டைட்டிலில் 'ஒடியன்' என்கிற படம் வெளியானது. தற்போது 8 ஆண்டுகள் கழித்து அதே டைட்டிலில் மலையாளத்தில் இந்த படம் வேறொரு இயக்குனர் டைரக்ஷனில் உருவாக இருக்கிறது. அதைவிட ஆச்சர்யம் என்றாலும், 2018ல் வெளியான ஒடியன் படத்திலும் நடிகை மஞ்சு வாரியர் தான் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !