உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாதுகாவலர்களையும் மீறி சல்மான்கான் சகோதரர் காரில் ஏறி அமர்ந்த மர்ம நபரால் பரபரப்பு

பாதுகாவலர்களையும் மீறி சல்மான்கான் சகோதரர் காரில் ஏறி அமர்ந்த மர்ம நபரால் பரபரப்பு


பாலிவுட் முன்னணி நடிகரான சல்மான்கானுக்கு அவரது எதிரிகள் தரப்பிலிருந்து சில அச்சுறுத்தல்கள் அவ்வப்போது வெளியாகி வந்தன. இதனைத் தொடர்ந்து அவருக்கு போலீசார் பாதுகாப்பு வழங்கி உள்ளனர். அவரைப் போலவே அவரது சகோதரரான அர்பாஸ் கான் படங்களைத் தயாரித்தும் நடித்தும் வருகிறார். அவரும் தனது பாதுகாப்புக்காக பவுன்சர்களை உடன் வைத்துள்ளார். சமீபத்தில் கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு மும்பை திரும்பிய அர்பாஸ் கான் தனது காரில் ஏறுவதற்காகச் சென்றுள்ளார்.

அப்போது கூட்டத்திலிருந்து திடீரென ஒரு மர்ம நபர் வேகமாக ஓடி வந்து, அவருக்கு முன்னதாக அவரது காரில் ஏறி அமர்ந்து கொண்டார். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அர்பாஸ் கான் அந்த மர்ம நபரின் செயலால் சற்று பயந்து போய்விட்டார். அவருடைய பவுன்சர்கள் அந்த மர்ம நபரை காரில் இருந்து வலுக்கட்டாயமாகத் தூக்கித் தான் கீழே இறக்க வேண்டி இருந்தது. இத்தனை பாதுகாவலர்கள் இருந்தும் சல்மான் கானின் சகோதரருக்கு இப்படி ஒரு மர்ம நபர் ஏற்படுத்திய அச்சுறுத்தல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !