உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / செக்ஸ் எஜூகேஷன் ஆபிசராக சந்தீப் கிஷன் நடித்துள்ள வெப்தொடர் ஜூலை 2ல் ரிலீஸ்

செக்ஸ் எஜூகேஷன் ஆபிசராக சந்தீப் கிஷன் நடித்துள்ள வெப்தொடர் ஜூலை 2ல் ரிலீஸ்

சந்தீப் கிஷன் சினிமாவில் பிசியாக இருக்கிறார். விஜய் மகன் ஜேசன் இயக்கும் 'சிக்மா', தெலுங்கில் பவர்பேட்டா, வைப் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் நடித்து முடித்துள்ள 'சூப்பர் சுப்பு' என்ற தெலுங்கு வெப் தொடர் வருகிற ஜூலை 2ம் தேதி நெட் பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இந்த தொடர் கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு செக்ஸ் எஜுகேஷன் (பாலியல் கல்வி) நடத்த வரும் ஒரு ஆசிரியரை பற்றியது. அந்த ஆசிரியராக சந்தீப் நடிக்கிறார்.

மாலிக் ராம், ரமேஷ் எலிகெட்டி மற்றும் சிவானி தோபால் ஆகியோர் எழுதியுள்ள இந்தத் தொடரை ராஜீவ் சிலகா மற்றும் பரத் லட்சுமிபதி தயாரித்துள்ளனர். சிலகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தத் தொடரில் கெட் அப் ஸ்ரீனு, மானசா சௌத்ரி, ஜீவன், மற்றும் பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தொடரைப் பற்றி இயக்குநர் மாலிக் ராம் கூறும்போது, “சுப்பிரமணியம் சில்லுகுரி ராவ் (சுப்பு) என்ற நேர்மையான இளைஞரின் வாழ்க்கையை காட்டுகிறது இந்த தொடர். மாகிபூர் என்ற கிராமத்தில் செக்ஸ் எஜூகேஷன் ஆபிசராக வேலை கிடைத்ததும் அவரது வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது. அனுபவமின்றி பாடத்திட்டத்தையும், கிராம மக்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும் என்ற சூழலில் அங்கு செல்கிறார் சுப்பு. ஆனால் ஆர்வம், குழப்பம் மற்றும் நான்கு சுவர்களுக்குள் உரையாடல் என சிக்கிக் கொள்கிறார்.

சுப்புவுக்கு இந்த குறுகிய காலப் பணி, வாழ்க்கையை மாற்றும் அனுபவமாக மாறுகிறது. நகைச்சுவையாகவும், உணர்வுப்பூர்வமாகவும் ஒரு கதையைச் சொல்ல விரும்பினோம். அதே நேரத்தில், பாலியல் கல்வி குறித்த உரையாடல்கள் மறைத்து பேசாமல், இயல்பாகப் பார்க்க வேண்டும் என்பதையும் நோக்கமாகக் கொண்டோம். அதற்கான சிறந்த வழி நகைச்சுவைதான். ஏனெனில், சிரிப்பு உடனடியாகத் தயக்கத்தை உடைத்துவிடுகிறது. இந்தத் தொடர் குடும்ப உறவுகள், தலைமுறை இடைவெளிகள் மற்றும் மனித உறவுகளை பற்றியும் பேசுகிறது” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !