உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'கருப்பு' : பட்ஜெட், வியாபாரம், வசூல், லாபம்

'கருப்பு' : பட்ஜெட், வியாபாரம், வசூல், லாபம்


டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சாய் அபயங்கர் இசையமைப்பில், சூர்யா, திரிஷா, ஆர்ஜே பாலாஜி மற்றும் பலர் நடிப்பில் மே 15ம் தேதி வெளியான படம் 'கருப்பு'. கடைசி நேர பைனான்ஸ் சிக்கல் காரணமாக அறிவித்தபடி மே 14 வெளியாகாமல் மறுநாள் மே 15 தான் படம் வௌவிந்தது. இருந்தாலும் அந்த ஆரம்ப கட்ட சிக்கல் படத்தின் வசூலுக்கு எந்தவிதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. படம் அமோக வரவேற்பைப் பெற்று 340 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

சூர்யா நடித்து இதுவரை வெளிவந்த படங்களில் அதிக வசூலைக் குவித்த படம், அதிக லாபத்தைக் கொடுத்த படம் என்ற பெருமையைப் பெற்றது.

இப்படம் சுமார் 130 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டதாக ஒரு தகவல். படத்திற்கான பட்ஜெட் திட்டமிட்டதை விட அதிகமானதாகவும் தகவல் உண்டு. ஒரு கட்டத்தில் பட்ஜெட்டைக் குறைப்பதற்காக சில சிக்கனத்தையும் கடை பிடித்துள்ளார்கள். அது ஓடிடியில் படம் வெளிவந்த பிறகு கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் வெட்டவெளிச்சத்திற்கு வந்தது.

இப்படத்தின் தியேட்டர் வினியோக உரிமை 70 கோடிக்கு விற்கப்பட்டது என்கிறார்கள். இதில் மற்ற மாநில வினியோக உரிமையும் அடக்கம். ஓடிடி, சாட்டிலைட் டிவி உரிமை, ஆடியோ உரிமை மூலம் மட்டும் சுமார் 40 கோடி கிடைத்துள்ளதாகச் சொல்கிறார்கள். இந்த 40 கோடி ரூபாய் தயாரிப்பாளர் கைக்கு நேரடியாகப் போய்விடும்.

தயாரிப்பு நிறுவனம் கடைசியாக அறிவித்தபடி படத்தின் மொத்த வசூல் 340 கோடி. அதில் பங்குத் தொகையாக மட்டும் சுமார் 165 கோடி வந்திருக்கும். அதில் படத்தின் வியாபாரத் தொகையான 70 கோடியைக் கழித்தால் மீதி 95 கோடி ரூபாய்.

அதில் ஜிஎஸ்டி, இதர செலவுகள் ஆகியவற்றைக் கழித்தால் குறைந்த பட்சம் 50 முதல் 60 கோடி வரையில் 'கருப்பு' படத்திற்கான லாபம் வந்திருக்கும்.

குறிப்பு - இந்த விவரங்கள் கோலிவுட் வட்டாரங்களிலிருந்து திரட்டியவை. அதிகாரப்பூர்வத் தகவல் அல்ல.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !