தமிழக அரசின் திரைப்படப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா நியமனம்
சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் புதிய தலைவராக, பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக ஓவியர் ட்ராட்ஸ்கி மருது இந்தப் பொறுப்பை வகித்து வந்த நிலையில், தற்போது அவருக்குப் பதிலாகத் தமிழக அரசு மனோஜ் பரமஹம்சாவை நியமித்துள்ளது.
கடந்த 2009ல் வெளியான 'ஈரம்' படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமான இவர், அதன் பிறகு 'விண்ணைத்தாண்டி வருவாயா, நண்பன், பீஸ்ட், லியோ, ஓஜி (They Call Him OG)' என தென்னிந்திய அளவில் பிரபல ஹீரோக்களின் படங்களில் பணியாற்றியுள்ளார்.
குறிப்பாக விஜய் நடித்த 'நண்பன், பீஸ்ட், லியோ' ஆகிய படங்களில் இவர் பணியாற்றி அவருடன் நல்ல நட்பில் இருப்பதால், அவருக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளதாக மற்ற அரசியல் கட்சிகளிடம் இருந்து ஒரு விமர்சனம் எழுந்துள்ளது. இத்தனைக்கும் இவர் இதே திரைப்படக் கல்லூரியின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.