உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விரைவில் எனக்கு அம்மாவாக நடிப்பாய்: ; ஹீரோயினை பயமுறுத்திய சல்மான் கான்!

விரைவில் எனக்கு அம்மாவாக நடிப்பாய்: ; ஹீரோயினை பயமுறுத்திய சல்மான் கான்!


பாலிவுட்டில் 2000 துவக்கத்தில் இருந்து கிட்டத்தட்ட 10 வருடங்கள் முன்னணி நடிகை வரிசையில் இடம்பெற்றவர் நடிகை தியா மிர்சா. இவர் தமிழில் வெளியான 'என் சுவாச காற்றே' என்கிற படத்தில் தான் ஒரு டான்சராக அறிமுகமானார் என்பது ஆச்சரிய தகவல். இந்த நிலையில் தற்போது இவர் நடிகர் சன்னி தியோலுடன் இணைந்து 'இக்கா' (Ikka) என்கிற படத்தில் நடித்துள்ளார். ஜூலை 10ம் தேதி இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸில் வெளியாக இருக்கிறது.

கதாநாயகியாக நடிக்கத் துவங்கிய காலகட்டத்தில், சல்மான் கானுடன் இணைந்து கிட்டத்தட்ட ஐந்து படங்களுக்கு மேல் நடித்த தியா மிர்சா, தற்போது 'இக்கா' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோது, சல்மான் கானுடன் ஏற்பட்ட வித்தியாசமான அனுபவம் குறித்து கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, ஒருமுறை படப்பிடிப்பு தளத்தில், சல்மான் கான் என்னிடம் 'இன்னும் சில வருடங்களில் நீ எனக்கு அம்மாவாக நடிக்கப் போகிறாய்' என்று கூறினார். எனக்கு அது அதிர்ச்சியாகவும், அதே சமயம் ஆச்சரியமாகவும் இருந்தது. அதிர்ச்சிக்குக் காரணம், அந்த சமயத்தில் அந்தப் படத்தில் சல்மான் கானுக்கு அம்மாவாக நடித்த நடிகை அப்போதுதான் குழந்தை பெற்றிருந்தார். அப்படிப்பட்ட இளம் வயது பெண், சல்மான் கானுக்கு அம்மாவாக நடிக்கும்போது சல்மான் கான் சொன்ன வார்த்தைகள் எனக்குச் கொஞ்சம் பயத்தை ஏற்படுத்தின. அதே சமயம் அவை வேடிக்கையாகவும் இருந்தன. நல்லவேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !