உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சர்தார் 2 : செப்டம்பர் 10 ரிலீஸ்

சர்தார் 2 : செப்டம்பர் 10 ரிலீஸ்

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், கார்த்தி, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், எஸ்ஜே சூர்யா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ள படம் 'சர்தார் 2'.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் ஜூன் மாதம் முடிவடைந்தது. இப்படம் கடந்த வருடமே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், என்ன காரணத்தாலே படம் வெளியீடு அப்படியே தள்ளிப் போனது.

கார்த்தி நடித்து இந்த வருடப் பொங்கலுக்கு வெளிவந்த 'வா வாத்தியார்' படம் படுதோல்வி அடைந்தது. இதனால், 'சர்தார் 2' படத்தையும் உடனே வெளியிடவில்லை.

தற்போது செப்டம்பர் 10ம் தேதியன்று படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்கள். அதற்கே இன்னும் மூன்று மாதங்கள் உள்ளது.

இப்படத்தின் முதல் பாகமான 'சர்தார்' படம் 2022ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !