உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அருள்வான் படத்தில் நடிக்க யோசித்தேன் : அருள்நிதி

அருள்வான் படத்தில் நடிக்க யோசித்தேன் : அருள்நிதி

கணேஷ் விநாயன் இயக்கத்தில் அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், காளி வெங்கட் நடித்துள்ள படம் அருள்வான். சென்னையில் நடந்த இந்த பட விழாவில் அருள்நிதி பேசியது, அருள்வான் என்ற தலைப்பில் அருள் என்ற என் பெயர் இருக்கிறது. எனவே நடிக்க யோசித்தேன். இயக்குனரோ பொருத்தமான தலைப்பு என சொல்லி இதில் நடிக்க வைத்தார். முதலில் 5 நாட்கள் கால்ஷீட் கேட்டார். அது 10 நாள் ஆனது. பின்னர் அது 15 நாட்கள் ஆனது. நல்ல கதை என்பதால் கூடுதல் நாட்கள் நடித்தேன்.

நான், ஆரவ், ரம்யா பாண்டியன் இருந்தாலும் கல்விக்காக போராடும் கிருத்திகாவுக்குதான் முக்கியமான கேரக்டர். தனிப்பட்ட முறையில் பல கலெக்டர்கள் திறமை பார்த்து இருக்கிறேன். என் அக்கா கலெக்டர் ஆக ஆசைப்பட்டார், அது நடக்கவில்லை. நான் இதில் கலெக்டராக நடித்தேன் என சொல்லி இருக்கிறேன். இந்த இயக்குனருடன் தகராறு படத்தில் நடித்து இருக்கிறேன். என் சினிமா வாழ்கையிலும் அருள்வான் முக்கியமான படம் என்றார்.

ரம்யா பாண்டியன் பேசுகையில், ‛‛ஆரவ் ரொம்பவே கஷ்டப்பட்டு நடித்தார். நான் கிராமத்து படங்கள் பண்ணமாட்டேன் என்ற முடிவில் இருந்தேன். இந்த கதை அந்த முடிவை மாற்றியது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !