உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 8 வருடங்களாக வெளியாகாமல் இருக்கும் 'குயின்' ரீமேக்

8 வருடங்களாக வெளியாகாமல் இருக்கும் 'குயின்' ரீமேக்


ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கங்கனா ரணாவத்திற்குத் திருப்புமுனையாக அமைந்த படம் 'குயின்'. 2013ல் வெளிவந்த அந்தப் படத்தைத் தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யத் திட்டமிட்டு 2017ல் ஆரம்பித்தார்கள்.

தமிழில் 'பாரிஸ் பாரிஸ்', தெலுங்கில் 'தட் இஸ் மகாலட்சுமி', கன்னடத்தில் 'பட்டர் பிளை', மலையாளத்தில் 'ஜாம் ஜாம்' என ஆரம்பமானது. தமிழ் ரீமேக்கை நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்க காஜல் அகர்வால், எல்லி அவ்ரம் மற்றும் பலர் நடித்தார்கள். 2018 ஜுன் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. அதன் டீசர் அந்த வருடத்தின் டிசம்பர் மாதத்தில் வெளியானது.

ஆனால், படத்திற்கு 'ஏ' சான்றிதழ் தரப்பட்டதன் காரணமாக பட வெளியீடு சிக்கலில் சிக்கி எட்டு வருடங்கள் ஆகியும் வெளிவராமல் இருக்கிறது. கோவிட் காலத்தில் நான்கு மொழிப் படங்களையும் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிட முயற்சித்தார்கள். அதன்பின் தயாரிப்பாளர்கள், பைனான்சியர்கள் பிரச்னை என மேலும் தள்ளிப் போய் இன்னமும் வராமல் இருக்கிறது.

'குயின் 2' படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பையே நடத்தி முடித்துவிட்டார்கள். அது வருவதற்குள்ளாக தென்னிந்திய மொழியில் ரீமேக் செய்யப்பட்ட முதல் பாகம் வருமா என்பதை சம்பந்தப்பட்டவர்கள்தான் தெரிவிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !