உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அல்லு அர்ஜூன் படத்திற்கும் மாஸான டைட்டில் டீசர் வெளியிடும் லோகேஷ்

அல்லு அர்ஜூன் படத்திற்கும் மாஸான டைட்டில் டீசர் வெளியிடும் லோகேஷ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கப்போகும் AA23 படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய தகவல்களின்படி, இப்படத்தின் டைட்டில் டீசருக்கு தேவையான காட்சிகளை படமாக்கி முடித்து விட்டதாகக் கூறப்படுகிறது.

விக்ரம், லியோ, கூலி போன்ற படங்களுக்கு மாஸான அறிவிப்பு வீடியோக்களை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ், இப்படத்திற்கும் தனது பாணியில் ஒரு அதிரடியான டீசரை வெளியிட திட்டமிட்டுள்ளார். இது அல்லு அர்ஜூனின் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ தீம் வீடியோ இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்டது.

புஷ்பா படங்களைத் தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸின் கீழ் வருமா அல்லது தனித் திரைப்படமா என்ற விவாதம் சமூக வலைத்தளங்களில் பலமாக ஓடிக்கொண்டிருக்கிறது. எனினும், லோகேஷ் தனது சமீபத்திய பேட்டியில், அல்லு அர்ஜூன் படத்தை முடித்த பிறகே கைதி 2, விக்ரம் 2 மற்றும் ரோலக்ஸ் பட வேலைகளைத் தொடரப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அல்லு அர்ஜூன் தற்போது அட்லி இயக்கும் ராக்கா படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அதன் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடைய உள்ளதால், AA23 திரைப்படத்தின் படப்பிடிப்பு 2027 பொங்கலுக்கு பிறகு தொடங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !