உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'இருமுடி' படத்தின் டப்பிங் பணியைத் தொடங்கிய ரவிதேஜா

'இருமுடி' படத்தின் டப்பிங் பணியைத் தொடங்கிய ரவிதேஜா

தெலுங்கில் நடிகர் ரவி தேஜா நடிப்பில் அடுத்து வெளியாகும் விதமாக தயாராகி வரும் படம் 'இருமுடி'. தந்தை மகள் பாசத்தை மையமாகக் கொண்டு, அதே சமயம் ஆக் ஷன் பின்னணியில் உருவாகி வரும் இந்தப் படத்தை இயக்குநர் சிவா நிர்வான இயக்கி வருகிறார். பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்க, ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்திற்கான டப்பிங் பணிகளைத் தற்போது ரவிதேஜா தொடங்கியுள்ளார். இதில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள பேபி நட்சத்திராவும் இந்த டப்பிங் பணிகளில் தற்போது கலந்து கொண்டுள்ளார். இருவரும் டப்பிங் ஸ்டுடியோவில் இணைந்து பேசும் வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !