துன்புறுத்தல்: நண்பர் மீது நடிகை புகார்
பிரபல கன்னட நடிகை ஜஸ்வர்யா சிந்தோகி. 'மம்மி சேவ் மீ' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார், 'நாகினி' உள்ளிட்ட சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். பிக்பாஸ் கன்னட நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார்.
இந்த நிலையில் ஐஸ்வர்யா சிந்தோகி, சமூக வலைதளங்களில் தனக்குத் தொடர்ந்து வரும் துன்புறுத்தல்கள் குறித்து பெங்களூரு சஞ்சய் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் கொடுத்துள்ள புகாரில் “கடந்த இரண்டு மாதங்களாக சமூக வலைதளங்களில் யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் எனது பெயரில் போலி கணக்குகளை உருவாக்கி, அதன் மூலம் அவதூறான கருத்துகளையும் தன்னை இழிவுபடுத்தும் வகையிலான செய்திகளையும் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். இத்தகைய தரம் தாழ்ந்த செயல்கள் எனது நற்பெயருக்குக் கடுமையான களங்கத்தை ஏற்படுத்துகிறது.
எனக்கு நண்பராக அறிமுகமான மன்னத் நகுல் என்ற நபரே வேறொரு பெயரில் போலி கணக்குகளைத் தொடங்கி இந்த ஆபாச துன்புறுத்தல்களில் ஈடுபட்டு வரலாம் என எனக்கு சந்தேகம் உள்ளது. இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.