ராம்கோபால் வர்மா இயக்கும் 'போலீஸ் கம்பெனி': என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டின் வாழ்க்கை கதை
ADDED : 22 hours ago
பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா அதிரடியான ஆக்சன் படங்களை இயக்கி தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை பெற்றவர் நாகார்ஜூனா, விவேக் ஓபராய் போன்ற ஹீரோக்களின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர். ஆனால் கடந்த சில வருடங்களாகவே அவர் இயக்கிய படங்கள் எதுவுமே அவரது பெயர் சொல்லும்படியாக அமையவில்லை. இந்த நிலையில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு 'போலீஸ் கம்பெனி' என்கிற படத்தை இயக்க உள்ளார் ராம்கோபால் வர்மா.
இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஹர்ஷவர்தன் ராணே கதாநாயகனாக நடிக்கிறார். மும்பையின் முன்னாள் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் தயா நாயக் என்பவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. அவரது போலீஸ் பணியின்போது நடந்த அதிரடியான மற்றும் முக்கியமான நிகழ்வுகளை பிரதிபலிக்கும் வகையில் இப்படம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.