உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எதிர்காலத்தை கணிக்கும் திறன் கொண்டவராக நடிக்கும் கயல் ஆனந்தி

எதிர்காலத்தை கணிக்கும் திறன் கொண்டவராக நடிக்கும் கயல் ஆனந்தி


இயக்குனர் சரணிடம் உதவியாளராக பணியாற்றிய காமராஜ் மனோன்மணி என்பவர் இயக்குனராக அறிமுகமாகும் படம் 'சொடக்கு'. இந்த படத்தின் வசனத்தை இயக்குனர் சரண் எழுதியிருக்கிறார். நட்டி நட்ராஜ், விதார்த், கயல் ஆனந்தி, ரட்சிதா மகாலட்சுமி ஆகியோர் இதில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் மலேசியாவிலேயே நடைபெற்றுள்ளது.

கடந்த மாத இறுதியில் இதன் இசை வெளியீட்டு விழாவும் மலேசியாவில் தான் நடைபெற்றது. இந்த படத்தில் கயல் ஆனந்தி ஒரு சமையல் கலைஞராக அதே சமயம் எதிர்காலத்தை கணிக்கும் திறன் கொண்டவராக நடித்துள்ளார். நட்டி ஒரு மனநல மருத்துவராக நடித்திருக்கிறார். மலேசியாவில் வசிக்கும் தமிழர்களின் பின்னணியில் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !