சிவராஜ்குமார், அபிஷந்த் ஜீவிந்த் நடிக்கும் பட தலைப்பு 'பிக்காசோ'
'டூரிஸ்ட் பேமிலி' படத்தின் மூலம் இயக்குநராக கவனம் பெற்ற அபிஷந்த் ஜீவிந்த் அடுத்து 'வித் லவ்' படத்தின் மூலம் நடிகராகவும் கவனிக்க வைத்தார். அவரது 3வது படத்தில் அவர் கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமாருடன் நடிக்கிறார். இந்த படத்திற்கு தற்போது 'பிக்காசோ' என்று டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
டிராமா கம்பெனி சார்பில் ஏ.பாலமுருகன் தயாரிக்கும் இப்படத்தின் மூலம் கவுதம் சிவராமன் இயக்குநராக அறிமுகமாகிறார். இரண்டு வெவ்வேறு தலைமுறைகளை சேர்ந்த இரு நடிகர்களின் திரை இணைவாக படம் தனித்துவம் பெறுகிறது. லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். பிரகதீஷ் பிரபு ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தில் ஷிவானி நாகரம் கதாநாயகியாக நடிக்கிறார். யோகலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரபல பாடகர் கானா வினோத் இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.