Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

2


PUBLISHED ON : மே 12, 2026 01:03 AM

Follow on Google

PUBLISHED ON : மே 12, 2026 01:03 AM

2


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: தமிழக சட்டசபை தேர்தலில், 108 இடங்களில் வெற்றி பெற்றும், ஆட்சி அமைக்க முடியாமல் த.வெ.க., திணறியதால், அக்கட்சிக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். இடதுசாரிகள் போல வி.சி.க.,வும் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கிறோம்; வேறு எந்த நிபந்தனையும் இல்லை. தி.மு.க., தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் நீடிக்கிறோம். நாங்கள் எடுத்த முடிவை, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு தெரிவித்து, அவற்றை செயல்படுத்துகிறோம்.

டவுட் தனபாலு: இது என்ன குழப்பமான அரசியல் நிலைப் பாடு... நாளைக்கே, அரசு நிர்வாகத் தில் சிக்கல்கள் வர்றப்ப, கடந்த கால தி.மு.க., ஆட்சியை முதல்வர் விஜய் விமர்சனம் செய் தால், ஆட்சிக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் வாங்கிடுவீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!

****

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: தமிழகத்தில் பொறுப்பேற்று உள்ள புதிய அரசுக்கு வாழ்த்துகள். கடந்த ஐந்தாண்டுகளில், அனைத்து துறைகளிலும், தமிழகத்தை வளப்படுத்தி இருக்கிறோம். தி.மு.க., அரசின் திட்டங்களை, புதிய அரசு தொடர வேண்டும் என்பதே என் தனிப்பட்ட விருப்பம். இதை கவனத்தில் வைத்து, புதிய அரசு செயல்பட வேண்டும்.

டவுட் தனபாலு: நீங்க இப்படி சொல்றீங்க... ஆனா, முதல்வர் விஜய், '10 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையில தமிழகத்தை வச்சுட்டு போயிட்டாங்க... கஜானாவை சுத்தமா துடைச்சு வச்சிருக் காங்க'ன்னு குற்றஞ்சாட்டுறாரே... இதுல எங்க இருந்து உங்க திட்டங்களை அமல்படுத்துவார் என்ற, 'டவுட்'தான் வருது!

*****



தமிழக காங்., - எம்.எல்.ஏ., ராஜேஷ்குமார்: கவர்னரை கண்டித்து, காங்கிரஸ் சார்பில் மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தி.மு.க., வினர் தாக்குதல் நடத்தியது, எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத செயல். வன்முறையும் அச்சுறுத்தலும் ஜனநாயகத்திற்கு எதிரானவை. அரசியல் பண்பாட்டுக்கும் ஜனநாயக மரபுகளுக்கும் எதிரான இந்த சம்பவம் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

டவுட் தனபாலு: அட நீங்க வேற... தி.மு.க.,வுடன் உறவில் இருந்தால், ரத்தின கம்பளம் விரித்து வரவேற்பு தருவாங்க... அதுவே, அவங்களை விட்டு பிரிஞ்சு போயிட்டால், உண்டு இல்லன்னு பண்ணிடுவாங்க... உங்க முன்னாள் தலைவர் இந்திரா மீது மதுரையில் கொலைவெறி தாக்குதல் நடத்திய தி.மு.க.,வினரிடம், ஜனநாயக மரபுகளை எல்லாம் எதிர்பார்க்க முடியுமா என்பது, 'டவுட்'தான்!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap