Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

2


PUBLISHED ON : மே 11, 2026 01:33 AM

Follow on Google

PUBLISHED ON : மே 11, 2026 01:33 AM

2


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை: சித்தாந்த எதிரி என பா.ஜ.,வை விமர்சித்த தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய், தான் ஆட்சி அமைக்க தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கேட்க போவதில்லை என்கிறார். அப்படியானால், அவரால் அரசியல் எதிரியாக சித்தரிக்கப்பட்ட தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்று, அவர்களால் வெற்றி பெற்ற காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை தன் ஆதரவு பட்டியலில் சேர்த்து கொண்டதன், 'லாஜிக்' என்ன... ஆதரவளித்த ராகுலையும், ஆதரவு பெற்ற விஜயையும் இணைக்கும் பாசக்கயிறு எதுவாக இருக்கும்?



டவுட் தனபாலு: கிட்டத்தட்ட 5௯ வருஷங்களாக தமிழகத்தில் எதிரும் புதிருமாக அரசியல் செய்த அ.தி.மு.க., - தி.மு.க.,வே, பதவிக்காக கூட்டணி அமைக்கும் அளவுக்கு போகலையா... அதே, 'பதவி' என்ற பாசக்கயிறு தான் ராகுலையும் விஜயையும் இணைச்சிருக்கு என்பதில், 'டவுட்'டே இல்லை!

பத்திரிகை செய்தி: தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசனின் தேர்தல் வியூக வகுப்பு நிறுவன உயர் அதிகாரி, உளவுத்துறை அதிகாரி, முதல்வரின் உதவியாளர் ஆகிய மூவரும், தங்களுக்குள், 'சிண்டிகேட்' அமைத்துள்ளனர். இவர்கள், தி.மு.க., ஆட்சிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருவதாக, ஒரே மாதிரியான அறிக்கையை ஐந்தாண்டுகளாக ஸ்டாலினுக்கு வழங்கி ஏமாற்றியுள்ளனர். இதுவே, தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டதாக, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.

டவுட் தனபாலு: கடந்த 2021 சட்டசபை தேர்தலில் நிறைய வாக்குறுதிகளை வாரி விட்டு, ஜெயித்து ஆட்சி அமைத்ததும், அவற்றை எல்லாம் நிறைவேற்றாம தமிழக மக்களை தி.மு.க.,வினர் ஏமாத்தினாங்க... பதிலுக்கு, ஸ்டாலின் கூடவே இருந்தவங்க, அவரை ஏமாத்திட்டாங்க என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது!

பா.ஜ., செய்தி தொடர்பாளர் செஷாத் பூனாவாலா: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை, கேரள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாராட்டியுள்ளார். வெற்றி பெற்றதாலேயே எஸ்.ஐ.ஆர்., பணியை காங்., பாராட்டி உள்ளது. ஆனால், இந்த கருத்தை அவரின் தலைவர் ராகுல் ஏற்க மறுக்கிறார். இது, காங்கிரசின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது.

டவுட் தனபாலு: அது மட்டுமா... பா.ஜ., வெற்றி பெற்ற மாநிலங்களில் எல்லாம், ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பா.ஜ.,வினர் மோசடி பண்ணிட்டாங்கன்னும் ராகுல் அடிக்கடி குற்றம் சாட்டுவாரே... கேரளாவிலும் காங்கிரசார் அதேபோல மோசடி பண்ணிட்டாங்கன்னு சொன்னா ராகுல் ஏத்துக்குவாரா என்ற, 'டவுட்' தான் வருது! --

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap