Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு


PUBLISHED ON : ஜூலை 23, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 23, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தி.மு.க., - எம்.பி., கனிமொழி: 'வட மாநிலங்களில் நடக்கும் பெண் உரிமைக்கான போராட்டங்களில் கூட, ஈ.வெ.ராமசாமியின் படத்தை கையில் துாக்கி பிடிக்கும் நிலை இருக்கிறது. அதனால், பா.ஜ.,வுக்கு தான் நாம் நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் தொடர்ந்து நம்மை எதிர்க்க வேண்டும். அவர்கள் தொடர்ந்து எதிர்க்க, எதிர்க்கத் தான், அடுத்த தலைமுறையினர் மனதில், ஈ.வெ.ராமசாமியை விதைக்க முடியும்.

டவுட் தனபாலு: பார்த்தீங்களா... ஒரு காலத்துல தமிழகத்தில் பா.ஜ., இல்லவே இல்லன்னு சொன்ன தி.மு.க., இன்றைக்கு அவங்க எதிர்ப்பில் தான் நாங்க வளர முடியும்னு சொல்ற அளவுக்கு நிலைமை மாறிடுச்சே... இதுல இருந்தே, தமிழகத்தில் பா.ஜ., பலமாகிட்டு வருவது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!



அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி: தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், அம்மா உணவகங்கள் சரியாக செயல்படவில்லை. சென்னையில், 407 உணவகங்கள் இருந்த நிலையில், 19 உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. மூன்றாண்டு களாக முதல்வர் ஸ்டாலின் ஏன் ஆய்வு செய்யவில்லை. அந்த உணவகத்துக்கு மக்களிடம் வரவேற்பு உள்ளதால், வேறு வழியின்றி ஆய்வு செய்வதாக நாடகமாடுகிறார்.

டவுட் தனபாலு: தி.மு.க., ஆட்சியில் விலைவாசி எல்லாம் ஏறிடுச்சு... இதனால, மக்கள் மலிவு விலை உணவகங்களை நோக்கி படையெடுத்து வருவாங்க... அதற்கேற்ப, அவற்றை தரம் உயர்த்தினா, சட்டசபை தேர்தல்ல சாதகமா இருக்கும்னு, ஆளுங்கட்சியினர் பார்வை அம்மா உணவகங்கள் பக்கம் திரும்பியுள்ளதோ என்ற, 'டவுட்' தான் வருது!



தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை: 'வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன், தி.மு.க.,விடம் ஆட்சி அதிகாரம் குறித்து பேச வேண்டும்' என, கார்த்தி சிதம்பரம் பேசியது அவரது சொந்த கருத்து. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி குறித்து, அகில இந்திய காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும்.

டவுட் தனபாலு: ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தந்தாலும், எம்.பி.,யாக இருக்கும் கார்த்தி அமைச்சராக போறதில்லை... எம்.எல்.ஏ.,வா இருக்கிறவங்களுக்கு தான் அந்த வாய்ப்பு கிடைக்கும்... அந்த வகையில், உங்களுக்கும் சேர்த்து தான், கார்த்தி பேசிட்டு இருக்காரு என்பதில், 'டவுட்'டே இல்லை!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us