தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு


PUBLISHED ON : செப் 09, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 09, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தி.மு.க., அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி: அமெரிக்காவில், நம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தினமும் கையெழுத்தாகும் தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களின் பட்டியலை பார்த்து வயிற்றெரிச்சல் படும் பழனிசாமி, அதை திசை திருப்ப ஏதேதோ பேசுகிறார். அவருக்கு வந்திருக்கும் பொறாமை நோய்க்கு, எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.

டவுட் தனபாலு: உங்களுக்கு பின் கட்சிக்கு வந்தவங்களும், அ.தி.மு.க.,வுல இருந்து வந்த பலரும் அமைச்சர்களா பவனி வர்றாங்களே... அண்ணாதுரை காலத்து அரசியல்வாதியான உங்களுக்கு எந்த பதவியும் கிடைக்காததுல, யார் மீதும் பொறாமையே வரலையா என்ற, 'டவுட்' வருதே!

பா.ஜ., தேசிய தலைவர் நட்டா: அனைத்து கட்சிகளிலும் வாரிசுகள் அல்லது குறிப்பிட்ட ஒரு பிரிவினர் மட்டுமே தலைமை பதவிக்கு வர முடியும். மோடியை போல சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்களும், நாட்டின் பிரதமராக வரும் ஒரே கட்சி, பா.ஜ., மட்டுமே. பா.ஜ.,வில் அனைவருக்கும் சம உரிமையும், வாய்ப்பும் உள்ளது.

டவுட் தனபாலு: அதுவும் சரி தான்... காங்., - தி.மு.க., - ம.தி.மு.க., - ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாதி, டி.ஆர்.எஸ்., தெலுங்கு தேசம்னு நாடு முழுக்க எந்த கட்சியை எடுத்துக்கிட்டாலும், வாரிசு அரசியல் தான் கோலோச்சுது... அந்த வகையில், பா.ஜ., ஒரு வித்தியாசமான கட்சி தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!

பத்திரிகை செய்தி: பள்ளிக்கல்வி துறையில் அடிக்கடி சர்ச்சைகள் ஏற்படுகின்றன. இதனால், அமைச்சர் மகேஷுக்கு துறையை மாற்றிக் கொடுக்கும் முடிவுக்கு முதல்வர் தரப்பினர் வந்துள்ளனர். வரும், 14ம் தேதி, முதல்வர் தமிழகம் திரும்புகிறார். அதன் பின், அமைச்சரவை மாற்றம் இருக்கலாம்.

டவுட் தனபாலு: இதே, ஜெயலலிதா ஆட்சியாக மட்டும் இருந்திருந்தால், பள்ளிக்கல்வி துறையில் தொடரும் சர்ச்சைகளுக்கு, 10 அமைச்சர்களை மாத்தியிருப்பாங்க... தி.மு.க., அரசில் மட்டும் தான், தப்பு செய்றவங்களை துறை மாற்றி விடும் அபத்தங்கள் எல்லாம் நடக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us