Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

8


PUBLISHED ON : ஏப் 25, 2026 01:22 AM

Follow on Google

PUBLISHED ON : ஏப் 25, 2026 01:22 AM

8


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி: தேர்தல் பிரசாரத்தில் பேசிய அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 'அடுத்த ஜென்மம் கிடைத்தால், தமிழகத்தில் ஏதாவது ஒரு குடும்பத்தில் பிறக்க ஆசைப்படுகிறேன்' என கூறியுள்ளார். அடுத்த ஜென்மத்தில் அவர் பிறந்தாலும், தமிழகத்தில் பிறக்க வேண்டாம். பா.ஜ.,விற்கு கை கட்டி நிற்கும் அவர், குஜராத்தில் பிறக்கட்டும்.

டவுட் தனபாலு: குஜராத்தில், 1998ல் ஆட்சிக்கு வந்த பா.ஜ., 28 ஆண்டுகளை தாண்டி இன்னும் ஆட்சியில் இருக்கு... உங்க கூட்டணி கட்சியான காங்., அங்க எதிர்க்கட்சியாகவே இருக்கு... 'இன்னும் எத்தனை ஜென்மம் ஆனாலும், குஜராத்தில் காங்., ஆட்சியை பிடிக்கவே முடியாது'ன்னு சொல்லாம சொல்றீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!

lll



பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: முதல்வர் ஸ்டாலின், தன் தந்தை கருணாநிதி மறைவு வரை, கூடவே இருந்து கவனித்து கொண்டார். ஆனால், எனக்கு வாய்த்த பிள்ளை அன்புமணியோ நான் உயிரோடு இருக்கும்போதே, நான் செத்து போனதாக நினைத்து அரசியல் செய்கிறார். இதைவிட ஒரு தகப்பனுக்கு பெரிய அவமானம் என்ன இருக்கும். மாம்பழ சின்னம் இனிக்கும் என்று, இனி நம்பாதீர்கள். அதில் துரோகம் எனும் விஷம் ஏறிவிட்டது. அந்த விஷத்தை முறியடிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

டவுட் தனபாலு: மாம்பழத்தில் விஷம் எனும் வண்டை புகுத்தியது யாரு... 'என் குடும்பத்தில் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள்' என, நீங்க செஞ்ச சத்தியத்தை, நீங்களே மீறியதன் பலனை இப்ப அனுபவிக்கிறீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!

lll

தமிழக முதல்வர் ஸ்டாலின்: என், 60 ஆண்டு கால பொது வாழ்க்கையில், என் சக்தியை மீறி உழைத்து இருக்கிறேன்; கொடுத்த பொறுப்புகளில் எல்லாம் நிரூபித்து இருக்கிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளில், எந்த முதல்வரும் செய்யாத அளவிற்கு நிகழ்ச்சிகள், மாவட்ட பயணங்கள், கள ஆய்வு கூட்டங்களில் பங்கேற்று இருக்கிறேன். என் வீட்டில் இருந்ததை விட, மக்களுடனும், கோட்டையிலும் நான் செலவழித்த நேரம் அதிகம். இந்தியா மட்டுமல்ல; தெற்காசியாவின் மாடலாக தமிழகத்தை உயர்த்திக் காட்டுவேன்.

டவுட் தனபாலு: உங்களுக்கு இப்ப, 73 வயசாகுது... 60 வருஷங்களா சக்தியை மீறி உழைக்கிற உங்களுக்கு, அஞ்சு வருஷம் ஓய்வு கொடுக்கலாம்னு நினைச்சு தமிழக வாக்காளர்கள் ஓட்டு போட்டிருந்தால், ஆட்சி மாற்றம் வந்துடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap