Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : ஏப் 26, 2026 12:41 AM

Follow on Google

PUBLISHED ON : ஏப் 26, 2026 12:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய கம்யூ., கட்சியின் முன்னாள் மாநில செயலர் முத்தரசன்: இந்த தேர்தலில் மக்கள் மிகுந்த ஆர்வத்தோடும், மகிழ்ச்சியோடும் ஓட்டு போட்டு உள்ளனர். இந்த மகிழ்ச்சி, தமிழகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். தமிழகத்தில் நல்லாட்சி தொடர வேண்டும் என் பதற்காகவே, மக்கள் ஆர்வத்துடன் ஓட்டளித்துள்ளனர்.

டவுட் தனபாலு: எதையும் நேர்மறையாக சிந்திக்கணும் என்பதால், இப்படி சொல்றீங்க என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது... அதே நேரம், இப்ப இருக்கிற ஆட்சி வீட்டுக்கு போகணும்னு நினைச்ச மக்கள் கூட, கூட்டம் கூட்டமா வந்து ஓட்டு போட்டிருக்கலாமே என்ற, 'டவுட்' உங்களுக்கு வரலையா?



பத்திரிகை செய்தி: தமிழக சட்டசபை தேர்தலில், தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்தனர். இவர்களில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 123 இடங்களிலும், முதல்வர் ஸ்டாலின், 80 இடங்களிலும், த.வெ.க., தலைவர் நடிகர் விஜய், 14 இடங்களிலும் பேசியுள்ளனர். ஆனால், 178 இடங்களில் பேசி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முதலிடம் பிடித்துள்ளார்.

டவுட் தனபாலு: இப்படி தொண்டை தண்ணீர் வத்த, 178 இடங்களில் பேசியிருக்காரே... இதுல, 10 சதவீதம் அதாவது, 18 இடங்கள்ல வெற்றி கிடைச்சாலே, அது சீமானுக்கு பெரிய ஆறுதலாக இருக்கும்... ஆனா, அது நடக்குமா என்பது தான் இமாலய, 'டவுட்!'





பத்திரிகை செய்தி: பா.ஜ., போட்டியிட்ட, 27 தொகுதிகளில், 18ல் தி.மு.க.,வுடன் நேரடியாக மோதியது. இந்த தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று, கட்சியினருக்கு தி.மு.க., தலைமை உத்தரவிட்டிருந்தது. எனவே, மத்திய அமைச்சர் முருகன் போட்டியிட்ட அவிநாசி, பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிட்ட சாத்துார், பா.ஜ., தேசிய மகளிரணி தலைவி வானதி போட்டியிட்ட கோவை வடக்கு உள்ளிட்ட பல தொகுதிகளில் வாக்காளர்களுக்கு தலா, 2,500 ரூபாய் வரை தி.மு.க.,வினர் பட்டுவாடா செய்துள்ளனர்.

டவுட் தனபாலு: அது சரி... ஒரு கணக்குப்படி, 1 லட்சம் வாக்காளர்களுக்கு, 2,500 வீதம் குடுத்தாலும், 25 கோடி ரூபாய் வருதே... கண்டிப்பா இந்த பணத்தை, தி.மு.க.,வின் அறக்கட்டளையில் இருந்து எடுத்து கொடுத்திருக்க மாட்டாங்க... எல்லாமே, அஞ்சு வருஷ ஆட்சியில் சம்பாதித்த, 'கட்டிங்' பணம்தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap