Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

4


PUBLISHED ON : மே 22, 2026 12:15 AM

Follow on Google

PUBLISHED ON : மே 22, 2026 12:15 AM

4


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்: நாங்கள், அற்ப தேர்தல் வெற்றி, தோல்வியை கண்டு துவண்டு போக மாட்டோம். ஆள் மாற்றத்துக்கும், ஆட்சி மாற்றத்திற்கும் வந்தவர்கள் அல்ல நாங்கள்; அடிப்படை அமைப்பையே மாற்ற வந்தவர்கள். உள்ளாட்சி தேர்தல், வரும் 2029 லோக்சபா தேர்தலிலும், நாங்கள் தனித்து களம் காண்போம்.

டவுட் தனபாலு: அது சரி... 8 சதவீதமா இருந்த உங்க கட்சியின் ஓட்டு வங்கி, இந்த சட்டசபை தேர்தலில், 4 சதவீதமா சரிஞ்சிடுச்சு... உள்ளாட்சி தேர்தல், லோக்சபா தேர்தலிலும் தனித்து களம் கண்டு, இதை இன்னும் கீழே கொண்டு போகாம விட மாட்டேன்னு சபதம் ஏதும் போட்டிருக்கீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!

மா.கம்யூ., கட்சி மாநில செயலர் சண்முகம்: அ.திமு.க., மற்றும் தி.மு.க.,விற்கு எதிராகத் தான், த.வெ.க.,விற்கு மக்கள் ஓட்டு போட்டுள்ளனர். த.வெ.க., அமைச்சரவையில், அ.தி.மு.க.,வின் வேலுமணி அணியை சேர்த்து கொள்வது என்பது, மக்கள் தீர்ப்புக்கு எதிரானது. அந்த நிலைக்கு த.வெ.க., செல்லாது என நம்புகிறோம். அ.தி.மு.க., ஆதரவை அவர்கள் பெற்றால், எங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய நேரிடும்.

டவுட் தனபாலு: உங்க கட்சியின் ரெண்டு எம்.எல்.ஏ.,க்கள், தி.மு.க., கூட்டணியில் நின்னு ஜெயிச்சிருக்காங்களே... அவங்க , விஜய் எதிர்ப்பு ஓட்டுகளால தான் ஜெயிச்சிருக்காங்க... அப்படியிருந்தும், விஜய் அரசுக்கு நீங்க ஆதரவு தருவது மக்கள் தீர்ப்புக்கு எதிரானது இல்லையா என்ற, 'டவுட்' வருதே!

தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி: கடந்த லோக்சபா தேர்தலில், 23 தொகுதிகளில் பா.ஜ., போட்டியிட்டது. அந்த தொகுதிகளில் பதிவான மொத்த ஓட்டுகள், 2.50 கோடி. அதில், பா.ஜ., பெற்ற ஓட்டுகள், 49.18 லட்சம்; இதன் சராசரி, 19.62 சதவீதம். இந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., 27 இடங்கள், தாமரை சின்னத்தில் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட ஆறு என, மொத்தம் 33 தொகுதிகளில் போட்டியிட்டோம். அந்த தொகுதிகளில், மொத்தம் பதிவான 66.03 லட்சம் ஓட்டுகளில், பா.ஜ.,வுக்கு 14.67 லட்சம் ஓட்டுகள் கிடைத்தன; இதன் சராசரி, 22.22 சதவீதம். அதாவது, 2024 லோக்சபா தேர்தலை விட, இந்த தேர்தலில் பா.ஜ., அதிக ஓட்டுகளை வாங்கி உள்ளது.

டவுட் தனபாலு: ஜனநாயகத்துல ஒரு ஓட்டில் தோற்றாலும் தோல்வி, தோல்வி தான்... 33 தொகுதிகள்ல போட்டியிட்டு, ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஜெயிச்சிட்டு, இந்த மாதிரி புள்ளி விபரங்களை அடுக்கி, உங்களுக்கு நீங்களே ஆறுதல் தேடிக்கிறீங்க என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap