Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

1


PUBLISHED ON : மே 23, 2026 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : மே 23, 2026 12:00 AM

1


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்: தி.மு.க., - வி.சி.க., என பல கட்சிகள் மாறி, த.வெ.க.,வில் இணைந்தவர் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. அவர் வி.சி.க.,வில் இருந்து வெளியேறியபோது, அ.தி.மு.க.,வில் சேர நினைத்தார். ஆனால், துணை பொதுச்செயலர் பதவி கேட்டார். அது மறுக்கப்பட்டதால், த.வெ.க.,வில் இணைந்தார்.

டவுட் தனபாலு: உங்க கட்சியில், மூத்த தலைவரா இருந்த செங்கோட்டையனை, எடுத்தேன், கவிழ்த்தேன்னு கட்சியை விட்டு அதிரடியா நீக்குனீங்களே... இன்னைக்கு அவர் த.வெ.க., அரசில் முக்கியமான வருவாய் துறைக்கு அமைச்சராகிட்டாரு... 'நல்லவேளை, உங்க கட்சியில் சேராம போயிட்டேன்'னு ஆதவ் அர்ஜுனா சந்தோஷமா இருப்பார் என்பதில், 'டவுட்'டே இல்லை!

தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி: அரசியலை தாண்டி, பலரும் சமூக வலைதளங்களில் பல செய்திகளை கூறி வருகின்றனர். அதுபோன்ற செய்திகள் வரும் போது, யார் யார் அந்த கருத்துகளை சொல்கின்றனர், அவர்களின் தகுதி என்ன என்பதை சிந்திக்க வேண்டும். சமூக வலைதள செய்திகள் சரியா, தவறா என்று புரிந்து கொள்ளாமல், கண்மூடித்தனமாக நம்பும் போது, அது நமக்கு எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

டவுட் தனபாலு: சமூக வலைதளங்கள்ல வர்ற தகவல்களை நம்பக்கூடாதுன்னு சொல்றீங்களே... ஆனா, 2021 சட்டசபை தேர்தல் அறிக்கையில், நீங்க அச்சிட்டு கொடுத்த பல வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஓட்டு போட்டாங்களே... அவற்றை நிறைவேற்றாம, மக்களை நீங்க ஏமாற்றியது தான், உங்க தோல்விக்கு முக்கிய காரணம் என்பதில், 'டவுட்'டே இல்லை!

தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா: தமிழக மக்கள், சமூக வலைதள மோகத்தில் உள்ளனர். முதல்வர் அலுவலகத்திலேயே இதுபோல் நடப்பது தவறான முன்னுதாரணம். மகளிர் உரிமைத்தொகை 2,500 ரூபாய் வழங்க, முதல்வர் விஜய் அவகாசம் கேட்டுள்ளார். அவரை நம்பி ஓட்டு போட்ட மக்கள் தான், இதுபற்றி யோசிக்க வேண்டும்.

டவுட் தனபாலு: இப்ப, நீங்க தி.மு.க., கூட்டணியில் இருக்கீங்க... 2021 சட்டசபை தேர்தலில், 'மகளிர் உரிமை தொகையா, மாதம் 1,000 ரூபாய் தருவோம்'னு அறிவிச்ச தி.மு.க.,வினர், ஆட்சிக்கு வந்து, 23 மாதங்கள் கழித்து தானே அதை தந்தாங்க... முதல்வராகி ஒரு மாதம் கூட ஆகாத விஜயிடம் உடனே, 2,500 ரூபாயை எடுத்து வைங்கன்னு எதிர்பார்ப்பது நியாயமா என்ற, 'டவுட்' வருதே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap