
எஸ்.கண்ணையா, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஆட்சியில் அமர்ந்திருப்போர் அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு நலதிட்டமும், கடைசியில் ஊழலில் தான் வந்து நிற்கிறது,
நுாறு நாட்கள் வேலை திட்டமாகட்டும்; ஆதரவற்றோர், முதியோர் உதவித் தொகை, விதவைகள், ஊனமுற்றோர் நலதிட்ட உதவிகள், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், ஜல் ஜீவன் திட்டம், வீடுதோறும் கழிப்பறை கட்டும் திட்டம் என, எந்த திட்டமாக இருந்தாலும், அதில் ஊழலும் மலிந்தே இருக்கிறது.
அவ்வரிசையில், தற்போது மகளிர் உரிமை தொகையும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன், மஹாராஷ்டிராவில், ஆண்கள் சிலர் உட்பட ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களும் மகளிர் உரிமைத் தொகையை பெற்று வந்துள்ளதாக பத்திரிகை களில் செய்தி வெளியானது.
தற்போது, தமிழகத்தில் கோவை மாவட்டம், கிணத்துக்கடவு, கொண்டம்பட்டியைச் சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண்ணின் உரிமை தொகை, உத்தர பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணின் வங்கி கணக்கிற்கு இரண்டு ஆண்டுகளாக சென்று கொண்டிருப்பது, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் அளிக்கப்பட்ட மனு வாயிலாக தெரிய வந்துள்ளதாம்.
மகேஸ்வரி, இரு ஆண்டுகளுக்கு முன், மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்து உ ள்ளார்.
அதுகுறித்த தகவலை எதிர்பார்த்து இரண்டு ஆண்டுகளாக காத்திருந்தவர், எந்த தகவலும் இல்லாததால், சமீபத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் மீண்டும் மனு செய்துள்ளார்.
அம்மனுவை அதிகாரிகள் ஆய்வு செய்த போது தான், கிணத்துக்கடவு மகேஸ்வரிக்கு வழங்கப்பட்ட உரிமை தொகை, இரண்டு ஆண்டுகளாக உ.பி.,யைச் சேர்ந்த சாந்திதேவி என்பவரது வங்கி கணக்குக்கு சென்று கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மகேஸ்வரி மறுபடியும் மனு கொடுக்காமல் இருந்திருந்தால், இந்த தவறு வெளியே வந்திருக்காது.
இச்சம்பவத்தால், மகளிர் உரிமை தொகை பயனாளர்களின் பட்டியலை சரிபார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளதாம்!
மனு செய்தவர் விண்ணப்பத்துடன், ஆதார் எண்ணையும், வங்கி கணக்கு எண்ணையும் நிச்சயம் குறிப்பிட்டிருப்பார். அப்படியும், மகளிர் உரிமை தொகை மாநிலம் விட்டு மாநிலம் தாவியுள்ளது என்றால், அதற்கு காரணம், வங்கி அலுவலர்களின் அலட்சியமே!
மகேஸ்வரி - சாந்திதேவி என்ற பெயர்களுக்கு இடையேயுள்ள வித்தியாசத்தை கூட கண்டு தெளிய இயலாத அலுவலர்களை பணிக்கு வைத்திருக்கும் வங்கி நிர்வாகத்தை என்னவென்று சொல்வது?
இன்னும் இதுபோன்று எத்தனை மகேஸ்வரிகளின் உரிமை தொகை, எந்தெந்த மாநில சாந்திதேவிகளின் வங்கி கணக்கிற்கு சென்று சேர்ந்துள்ளதோ?
இலக்கை நோக்கி முன்னேறும் இந்தியா! கு.அருண், கடலுாரில் இருந்து
அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய்
வாங்க கூடாது என்று அமெரிக்கா கூறியதை நம் நாடு ஏற்றுக் கொள்ளவில்லை.
இதனால், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப் படும் பொருட்களுக்கு, 50 சதவீத வரி விதித்துள்ளார், அமெரிக்க அதிபர் டிரம்ப்.
நாம் என்ன பாகிஸ்தான் போன்று அமெரிக்காவின் அடிமையா? 'உன்னால் முடிந்ததை
பார்த்துக் கொள்' என்பது போல், வரிவிதிப்பால் தற்போது நமக்கு ஏற்பட்டுள்ள
வர்த்தக பாதிப்பை ஈடுகட்ட, 40 நாடுகளுடன் ஏற்றுமதி செய்ய ஒப்பந்தங்கள் போட
தயாராகி விட்டார், பிரதமர் மோடி.
அமெரிக்காவுடன் வர்த்தக
நிறுத்தம் செய்வதால், 4.17 லட்சம் கோடி ரூபாயை இழக்கிறோம். இதை சரிசெய்ய,
40 நாடுகளுடன் அதிக ஏற்றுமதி செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம்.
நிச்சயம், அதில் நமக்கான இலக்கை அடைவோம்.
அதேநேரம், ஒரே நாட்டை நம்பி இருப்பது எந்தளவுக்கு பாதிப்பை உண்டு செய்யும் என்பதை அமெரிக்கா நமக்கு உணர்த்தி விட்டது.
நாம் மீண்டும் தற்சார்பு என்ற கொள்கையின் அடிப்படையில், நமக்கு தேவையான அனைத்தையும் நாமே உற்பத்தி செய்ய வேண்டும்.
இன்று அமெரிக்காவில், 2.9 மில்லியன் இந்தியர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கு இந்தியர்களின் பங்களிப்பு மகத்தானது.
அவர்கள் அனைவரும் நம் நாட்டிற்கு திரும்பி விட முடிவு செய்தால், அமெரிக்கா
மிகப்பெரிய சரிவை சந்திக்கும். இதை டிரம்ப் உணர்ந்ததாலேயே தற்போது, 'மோடி
என் நண்பர்' என்று சமாதான புறாவை பறக்க விட்டு உள்ளார்.
இதையடுத்து, அமெரிக்காவின் வர்த்தகப் போர் முடிவுக்கு வரலாம். எனினும்,
தற்சார்பு என்ற கொள்கையை முன்னிறுத்தியே நம் இலக்கை நோக்கி முன்னேறுவது
காலத்தின் கட்டாயம்!
விஜய்க்கு தடை; சீமானுக்கு
மேடை? சி.ஸ்ரீதேவி, பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரளாவில் இருந்து
அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழக வெற்றிக் கழகத்தை கண்டு பயத்தின்
உச்சத்தில் தி.மு.க., அரசு இருக்கிறது...' என்று கூறியுள்ளார், அக்கட்சி
தலைவர் நடிகர் விஜய்.
ஆட்சியாளர்களின் செயல்களை பார்க்கும் போது விஜய் கூறுவது உண்மை என்று தான் நினைக்க தோன்றுகிறது.
ஏனென்றால், த.வெ.க., வின் முதல் மாநாட்டிற்கு அனுமதி கொடுக்காமல் பல்வேறு காரணங்களை கூறி இழுத்தடித்த பின், அனுமதி கொடுத்தனர்.
தி.மு.க., - அ.தி.மு.க., போன்ற பெரிய கட்சிகள் குவார்ட்டர், கோழி
பிரியாணி, பணம் கொடுத்து தான் கூட்டம் சேர்க்கின்றன. ஆனால், விஜய்
மாநாட்டிற்கு, சொந்த பணத்தை செலவு செய்து லட்சக்கணக்கான ரசிகர்கள்,
தொண்டர்கள் குவிகின்றனர்.
அதனால்தான், 'நடிகரை பார்க்க கூடிய கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது' என்று கூறி மனதை தேற்றிக் கொள்கின்றனர்.
பல்வேறு கட்சிகள் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள்,
மாநாடுகள் எல்லாம் நடத்திக் கொண்டு தான் இருக்கின்றன. அவர் களுக்கு எல்லாம்
விதிக்காத கட்டுப்பாடுகளை த.வெ.க.,வுக்கு மட்டும் விதிப்பதிலிருந்து,
வெறும், இரண்டு வயது கட்சியான த.வெ.க.,வை பார்த்து, 75 வயது தி.மு.க.,
அச்சமடைந்து உ ள்ளது தெளிவாகிறது .
சமீபத்தில் நடந்த திருச்சி
பொதுக்கூட்டத்திற்கு, 'ஐந்து கார்கள் தான் வர வேண்டும், 30 நிமிடம் தான்
பேச வேண்டும், பிரசார வாகனத்தில் விஜய் நிற்க கூடாது, கையசைக்க கூடாது...'
என்று ஏகப்பட்ட கட்டுப்பாடுகளுடன் அனுமதி கொடுத்துள்ளனர்.
இனி
வரும் பொதுக் கூட்டங்களுக்கு, 'கொள்கை தலைவராக கருணாநிதியை ஏற்க வேண்டும்.
நாங்கள் எழுதிக் கொடுப்பதை மட்டும்தான் விஜய் பேச வேண்டும். தொண்டர்கள்,
100 பேர் மட்டும்தான் கூட வேண்டும்' என்பது போன்ற கட்டுப்பாடு களை
விதித்தாலும் ஆச்சரியமில்லை.
விஜய்க்கு இவ்வளவு தொல்லை கொடுக்கும்
ஆட்சியாளர்கள், தடையை மீறி, கள் இறக்கிய நாம் தமிழர் கட்சி
ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் வீரத்தை காட்ட மறந்தது ஏனோ?