/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
சொத்துவரி ஒழுங்குமுறை சட்டம் வருமா?
/
சொத்துவரி ஒழுங்குமுறை சட்டம் வருமா?
PUBLISHED ON : செப் 14, 2025 12:00 AM

கே.எஸ்.தியாகராஜ்
பாண்டியன், காரைக்குடி யில் இருந்து எழுதுகிறார்: மதுரை மாநகராட்சி யில்
கட்டடங்களுக்கு சொத்துவரி விதிப்பில் முறைகேடு நடந்துள்ளதை அடுத்து,
அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
உள்ளாட்சி
தேர்தலில் வெற்றி பெற்று, மக்கள் பிரதிநிதிகளாக பதவியில் அமரும்
அரசியல்வாதிகளுக்கு பணம் சம்பாதிக்கும் கற்பக விருட்சமாக இருப்பது இரண்டு
விஷயம்.
ஒன்று, வீடு கட்ட அனுமதி அளிப்பது; இரண்டு, கட்டிய வீட்டுக்கு சொத்து வரி நிர்ணயம் செய்வது!
வீடு கட்ட வேண்டும் என்றால், உள்ளாட்சி அமைப்பிடம் தடை இல்லா சான்று பெற
வேண்டும். அதற்காக, வீடு கட்ட நினைப்போர், தங்கள் பகுதி உள்ளாட்சி
தலைவரிடம் கோரிக்கை வைப்பர். தலைவர் மற்றும் செயலர் குறிப்பிட்ட தொகையை
லஞ்சமாக பெற்ற பின், வீடு கட்ட அனுமதி வழங்குவர்.
பணம் கொடுக்க
மறுத்தால் ஏதாவது காரணம் சொல்லி, அனுமதி மறுக்கப்படுகிறது. அப்படியே லஞ்சம்
கொடுத்து அனுமதி வாங்கி வீடு கட்டினால், அந்த வீட்டுக்கு சொத்து வரி
இவ்வளவு என்று தீர்மானிக்க வேண்டும்.
வீட்டு உரிமையாளர்களிடம் குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக பெற்று, வரித்தொகையை குறைத்து மதிப்பிடுகின்றனர்.
இப்படி மக்கள், மக்கள் பிரதிநிதி, அரசு ஊழியர் என மூவரும் சேர்ந்து அரசை
ஏமாற்றுகின்றனர். இதை தடுக்க வேண்டுமெனில், சொத்து வரி ஒழுங்குமுறை
சட்டத்தை அரசு கொண்டு வர வேண்டும்.
ஊராட்சி, நகராட்சி,
பேரூராட்சி, மாநகராட்சி என்ற நான்கு வகை உள்ளாட்சி அமைப்புகளுக்கு
ஏற்றவாறு, அந்தந்த ஊர்களின் கட்டமைப்பு வசதிகளை கருத்தில் வைத்து, சதுர
அடிக்கு குறைந்தபட்ச வரியை நிர்ணயம் செய்து, வரி விதிப்பை ஒழுங்குபடுத்தி,
புதிய சட்டத்தை தாக்கல் செய்து, அதை அரசிதழில் வெளியிட வேண்டும்.
மேலும், 10 ஆண்டிற்கு ஒருமுறை தான் வரிகளை மாற்றி அமைக்க வேண்டும்.
வரிவிதிப்பு மாற்றி அமைக்கும் போது, மக்களிடம் கருத்து கேட்க வேண்டும்.
அத்துடன், இந்த வரி விதிப்பு ஒழுங்காக, நேர்மையாக செயல்படுகிறதா என்பதை
கண்காணிக்க, நேர்மையான அதிகாரிகள் கொண்ட பறக்கும் படைகள் அமைக்க வேண்டும்.
மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க, சொத்து வரி ஒழுங்குமுறை ஆணையம் ஒன்றை
ஏற்படுத்த வேண்டும். அப் போதுதான், மக்கள் ஆதாரத்துடன் தெரிவிக் கும்
குறைகளை ஆணையம் விசாரித்து நடவடிக்கை எடுக்கும். இப்படி செய்தால்
மக்களுக்கும், அரசுக்கும் எந்த இழப்பும் இருக்காது.
இதை, தமிழக அரசு செய்யுமா?
ஊராட்சி துறை செயல்படுவது எப்போது?
பி.மரியா போஸ், பெருமாட்டு நல்லுார், கூடுவாஞ்சேரியில் இருந்து எழுதுகிறார்: பெருமாட்டுநல்லுார் ஊராட்சி, 12வது வார்டில் வசிக்கிறேன். என் தந்தை இந்திய விமானப் படையில், 30 ஆண்டுகள் சேவை செய்து ஓய்வு பெற்றவர்.
கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி, திடீரென பெய்த மழையால், சாலையில் தேங்கிய மழைநீரில் வழுக்கி விழுந்தார்; இதில், இடுப்பு எலும்பு முறிந்தது. ஏற்கனவே, வயது மூப்பின் காரணமாக உடல் நலக் குறைவுடன் இருந்தவருக்கு, எலும்பு முறிவும் சேர்ந்து கொள்ள மிகவும் வேதனைப்பட்டார்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சையின்போது, 'ஹார்ட் அரஸ்ட்'டில் உயிரிழந்தார்.
மழை பெய்தாலே, குண்டும் குழியுமான சாலைகளில் மழைநீர் தேங்கி, அதில் வழுக்கி விழுந்து மரணங்கள் நிகழ்வது தொடர்கதையாக உள்ளது.
இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று தமிழக முதல்வர் பெருமை பேசுகிறார்.
ஆனால், இன்னும் மழைநீர், கழிவுநீர் முறை யாக வடிவதற்கு சரியான வசதிகள் இல்லை. ஒரு துாறல் விழுந்தால்கூட, சாலைகளில் மழைநீர் தேங்கி விடுகிறது.
என் தந்தையைப் போன்ற முதியவர்கள் அதில் வழுக்கி விழுந்து காயமடைவதுடன், உயிர்இழப்புகளும் ஏற்படுகின்றன. இதில் அருகில் மின் கம்பம் இருந்து, அது சரியாக பராமரிக்கப்படவில்லை என்றால், தண்ணீ ரில் மின்சாரம் பாய்ந்து மனிதர்கள் முதல் ஆடு, மாடுகள் வரை உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
உள்ளாட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கே இதற்கெல்லாம் காரணம்!
ஒவ்வொரு மழைக்காலத் திலும் இது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது; அரசும் பட்ஜெட் போடும்போது, 'அத்தனை ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளோம், இத்தனை ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளோம்' என்று கூறுகின்றனரே தவிர, மழைநீர் வடிவதாக இல்லை.
நான் வசிக்கும் ராஜாஜி நகர், அன்னை ருக்மணி மூன்றாவது தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாலை கள் குண்டும் குழியுமாக இருக்கின்றன. மழைக்காலம் வந்தாலே, சாலையில் தண்ணீர் தேங்கி, நடக்கவே பயமாக இருக்கிறது.
இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இன்னும் எத்தனை உயிர்களை பெருமாட்டுநல்லுார் ஊராட்சி காவு வாங்கும்?
சாலைகள் என்பது வெறும் வாகன போக்குவரத்துக்கான பாதைகள் மட்டுமல்ல; அவை, உயிர்களின் பாதுகாப்புக்கான அடிப்படை என்பதை ஊராட்சிகள் உணர்ந்து, சாலைகளை முறையாக பராமரிக்க வேண்டும். அப்போது தான் மழைக்காலத்தில் ஏற்படும் உயிர் இ ழப்புக ளை தடுக்க முடியும்!
தரவரிசையில் பின்தங்கியது ஏன்?
பழ.சுந்தரமூர்த்தி, கோவை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பல்கலைகள், பொறியியல் கல்லுாரிகள், கலை அறிவியல் கல்லுாரிகள் மற்றும் மருத்துவக் கல்லுாரிகள் என, தனித்தனியே பட்டியல் வெளியிட்டு இருந்தது, தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பான, என்.ஐ.ஆர்.எப்.,!
இதில், மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., ஒட்டுமொத்த தரவரிசை பட்டியலில், தொடர்ந்து ஏழாவது முறையாக முதல் இடத்தில் உள்ளது. அதுமட்டுமல்ல, பிரதமர் மோடியின், 'விக்சித் பாரத் 2047'யை நோக்கி தன் பயணத்தை துவக்கியுள்ளது, சென்னை ஐ.ஐ.டி.,!
அடுத்து, தனியார் கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள் தரவரிசை பட்டியலில் இடம் பிடித்தன. அதே நேரம், அண்ணா பல்கலை, பாரதியார், மதுரை காமராஜர், மனோன்மணியம் சுந்தரனார், பாரதிதாசன், சென்னை பல்கலை, தமிழ்நாடு வேளாண் பல்கலை, கோவை அரசு கலைக் கல்லுாரி, கும்பகோணம் அரசு கல்லுாரி போன்ற தமிழ அரசின் அனைத்து கல்வி நிறுவனங்களும் பின்தங்கிய இடங்களை பெற்றுள்ளன.
மாநில கல்விக் கொள்கையை கடைப் பிடிக்கும் கல்வி நிறுவனங்களின் தரம் பின்தங்கிஉள்ளது.
இதில், 'உலகத்திலேயே திராவிட மாடல் கல்விக் கொள்கை தான் சிறந்தது. தமிழக அரசுப் பள்ளிகளில் படித்ததால் தான், உலக அளவில் தமிழர்கள் சாதிக்கின்றனர். திராவிட மாடல் போல், கல்வி மாடலை உலகிற்கே அறிமுகப்படுத்தியவர்கள் நாங்கள்...' என்று வெற்றுப் பெருமை பேசுகிறது தி.மு.க.,
இனிமேலாவது, மாணவர்கள் என்ன படிக்க வேண்டும் என்பதை, அரசியல்வாதிகள் தீர் மானிக்காதீர்கள். அதை பெற்றோரும், மாணவர்களும், கல்வியாளர்களும் தீர்மானிக்கட்டும்!